என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 5 ஜனவரி, 2012

மரியாதையா சிரிச்சுடுங்க! இல்லன்னா........... அழுதுடுவேன்

இதைப் படிச்சாச்சா?
யாரோ பார்க்கிறார்கள்!

*********************************************************************************************************************

'உங்க வீட்டுக்காரர்  நியூ இயருக்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?'


'எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார். அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.'

**************************************************************************************************************

 
'சார்! கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில முதலாவதா வந்தீங்க?'

'என் மனைவி பின்னாடி துரத்திட்டு வர 
மாதிரி நினச்சிகிட்டேன்.'

'சரத் பவார் கன்னத்தில அடிச்சதுக்காக இன்னமும் கோவிச்சிக்கிட்டு இருக்காராமே?'

'அதுக்காக இல்லையாம். அவர  எல்லோரும் சரத் பளார் ன்னு  கூப்பிடராங்கலாம்.'
***************************************************************************************************************

'தலைவரே! நீங்க அந்த நடிகையோட உல்லாசமா இருந்தப்போ வீடியோ புடிச்சவங்களை கையும் களவுமா புடிச்சிட்டீங்கலாமே! என்ன பண்ணீங்க!'

'விடுவனா அவங்களை? சி.டி போட்டதும் முதல் காப்பி எனக்குதான் குடுக்கனுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.'

****************************************************************************************************************************
 
'ஏண்டா! தலைவர்  மீட்டிங்ல பேசறதுக்கு லோக்பால் பத்தி விசாரிச்சிட்டு வரச் சொன்னாரே விசாரிச்சயா  என்ன ஆச்சு?'


'அண்ணே! எல்லா பால்காரன் களையும் கேட்டுட்டேன். எருமைப்பால் பத்தி சொல்றாங்க பசும்பால் பத்தி  சொல்றாங்கஆட்டுப்பால்,  
கழுதைப் பால் ஏன் ஒட்டகப் பால் பத்தியும் 
சொல்றாங்க. ஆனா லோக்பால் பத்தி  
யாருக்குமே தெரியலன்னே.'

**********************************************************************************************************


'நம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம் அதிகம்.'

'எப்படி சொல்ற?'

'ஃபுட்பால்  வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல சேக்கனும்னு சொல்றாரு'.

****************************************************************************************************************************

1 கருத்து:

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895