என்னை கவனிப்பவர்கள்

புதன், 25 ஜனவரி, 2012

தெய்வீகக் காதல்?


                அன்பே!
 
                விடியும் வரையில் விழித்திருந்தே நான்
                கவிதை ஒன்று உனக்கென வரைந்தேன்
                உன்முகம் கண்ட நாள் முதலாய்
                உணவும் எனக்கு இறங்க வில்லை
                இமையும் ஏனோ உறங்க வில்லை
                கயல்விழி கொண்டு எனைநீ பார்த்தால்
                கனவில் மிதப்பேன்; காற்றில் பறப்பேன்;
                காலையும் மாலையும் உனையே நினைப்பேன்.
                மற்றவை அனைத்தும் இனிமேல் மறப்பேன்!
                நீயே பிரம்மன் செதுக்கிய சிற்பம்
                தமனா த்ரிஷா  உன்முன் அற்பம்
                புதுநிலவின் கவர்ச்சியதை  முகமே வெல்லும் 
                பூந்தளிரின் மென்மையை உன் மேனியும் சொல்லும்
                செவ்வாழை பூப்போலே விளங்கும் விரல்கள்
                மாதுளையின் முத்தெனவே மின்னும் பற்கள்
                புது ரோஜா நிறமுந்தன் இதழில்
                பூவாசம் மணக்கும்உன் கார் குழலில்
                இளமானின் அழகு உந்தன் கண்ணில்
                ரகுமானின் இசை உந்தன் குரலில்
                அழகிய கன்னம் ஆரஞ்சு வண்ணம்
                பழகிடத் துடிக்குதடி எந்தன் எண்ணம்
                அள்ளிப் பருகிடவே ஆசை பெருகுதடி
                தள்ளி நிற்காதே மனம் தவித்து உருகுதடி
                உறங்கும் போதும் உந்தன் நினைவு
                விழிக்கும் போதும் உந்தன் கனவு
                இரும்பாய் இருந்தேன் காந்தமாய் கவர்ந்தாய்
                கரும்பாய் இன்று நெஞ்சில் இனித்தாய்
                திரும்பாமல் நீயும் சென்று  விடாதே
                உனக்கென காத்துக் கிடந்தேன் வீதியில்
                படிப்பைக் கூட விட்டேன் பாதியில்
                நீஎனைக் கேட்டால் எதையும் தருவேன்
                உயிரைக் கூட உடனே தருவேன்.
                உனக்கென ஏங்குது எந்தன் இதயம்
                உன் நெஞ்சில் வருமோ காதல் உதயம்
                இன்றே இதைநீ படித்து விடு
                சம்மதம் என்றே சொல்லி விடு


                                        இப்படிக்கு
                            உன்னை உயிருக்குயிராய் காதலிக்கும்
                                    ?????????????????????
                பின்குறிப்பு;
               விருப்பம் இன்றேல் கிழித்துவிடாதே
               குப்பை தொட்டியில் எறிந்துவிடாதே
               மீண்டும் இதைநீ மடித்து விடு
               உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு
**********************************************************************************************************************
இன்னைக்கு காதல் இப்படித்தான் இருக்குதுன்னு சொல்லிக்கிறாங்க! ..ஹிஹிஹிஹி

3 கருத்துகள்:

  1. சம்மதம் சொல்ல நினைக்கிறவங்ககூட பின் குறிப்பை பார்த்த சொல்லாம போய்டுவாங்க போல அருமை

    பதிலளிநீக்கு
  2. நன்றி சசிகலா! அடிக்கடி கருத்திட்டு உற்சாகப் படுத்தியதற்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. //இன்னைக்கு காதல் இப்படித்தான் இருக்குதுன்னு சொல்லிக்கிறாங்க! ..ஹிஹிஹிஹி//

    உண்மைதாங்க முரளி

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895