என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 16 ஜனவரி, 2012

நானும் போனேன்! புத்தகக் கண்காட்சி 2012     சென்னையிலே இருந்துகொண்டு புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? 14.01.2012  அன்று நானும் போயிருந்தேன். தென் சென்னை பகுதியிலிருந்து புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இரு சக்கர வாகனம்,மின்சார ரயில்,பேருந்து என்று பயணம் செய்து கண்காட்சி நடக்கும் இடத்தை அடைய வேண்டி இருந்தது. 
     நல்ல கூட்டம் வந்திருந்தது. திறந்த வெளி அரங்க மேடையில் லேனா தமிழ்வாணனின் மகன் பேசிக் கொண்டிருந்தார்.தமிழ் வாணனின் பேத்தியை (இரண்டு வயது இருக்கும்) வேறு வாழ்த்துக்கூற அழைத்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர். குழந்தை பேச மறுத்தால் பிறகு வேறு முயற்சி செய்யலாம் என்று கூறினார். நல்ல காலம் குழந்தை அழகாகப் பேசியது. (பார்வையாளர்கள் தப்பித்தார்கள்.). வாரிசுகளை முன்னிலைப் படுத்துவதில் எந்தப் பிரபலங்களும் விதிவலக்கல்ல.

   சற்று அருகில் சென்று பார்த்தபோது, அட! நம்ம T. ராஜேந்தர். பக்கத்தில் அவ்வை நடராஜன். அவர்களுடைய  பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தாலும் நேரமாகி விட்டதால் உள்ளே நுழைந்தேன். புத்தக வாசனை மூக்கைத் துளைத்தது. எந்தப் புத்தகங்களை வாங்குவது என்று தெரியாமல் பல கடைகளை பார்த்துக்கொண்டே சென்று ஒரு சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஒரு சுற்று வந்தபின் பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.
       கடை எண் 334 டிஸ்கவரி புக் பேலஸ் இல் நமது கேபிள் சங்கர் வாசகர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் கேபிள் ஐ சமீப காலமாக கலாய்த் துக்கொண்டு வரும் (http://spoofking.blogspot.com)சாம் ஆண்டெர்சன் பற்றி அவரிடமே கேட்டுக்கொண்டிருந்தார். நானும் என்னை பிளாக்கர் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்பினேன். என்றாலும் எனது தன்மானம் தடுத்தது. காரணம்;  Face Book இல் எனது நண்பராய் இருந்த கேபிள் என்னை  friend list  இல் இருந்து எடுத்து விட்டார்.          (நண்பர்களின்  எண்ணிக்கை  5000 த்திற்கும் மேல் போய் விட்டதால் யாரோ ஒருவர் நண்பர்களில் சிலரை தூக்கி விடுங்கள் என்று கூற நண்பர்கள் லிஸ்ட்டில் நான் காணாமல் போனேன்.)  
         அதை விடுவோம். மூன்று மணிநேரம் கடந்து விட்ட நிலையில் 
ஜவஹர்லால் நேரு எழுதிய GLIMPSES OF WORLD HISTORY, சேத்தன் பகத் எழுதிய ONE NIGHT @ THE CALL CENTER, கே.என். ஸ்ரீநிவாஸ் எழுதிய 'கண்டு  பிடித்தது  எப்படி?' விகடன் பிரசுரத்தின் 'அச்ச ரேகை தீர்வு ரேகை', கீதா பிரஸ்ஸின் 'அத்யாத்ம ராமாயணம்' உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
 (அப்பாடா! புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவைப் போட்டுவிட்டேன். )

***********************************************************************************************
இதையும் படிச்சி பாருங்க! கருத்து சொல்லுங்க 


நானும் நானும்  
தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!
ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
யாரோ பார்க்கிறார்கள்!  

3 கருத்துகள்:

  1. அத்யாத்ம ராமாயணம் - அருமையானப் புத்தகம்.
    தென் சென்னையிலிருந்து அத்தனை கஷ்டப்பட்டும் போனீங்களே, அதைச் சொல்லுங்க. உங்கள் புத்தக ஆர்வம் மெச்சத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895