தானே புயல் தாக்கி பல நாட்கள் ஆகிவிட்டபோதிலும் அதன் தாக்குதலில் இருந்து கடலூர் பாண்டிச்சேரி பகுதிகள் இன்னும் சரியாக மீளவில்லை என்பதை சமீபத்திய பயணத்தின் போது தெரிந்து கொண்டேன். நான் நினைத்ததைவிட அதிகமான நீண்டகால இழப்புகளை ஏற்படுத்தியதை தாமதமாகவே உணர்ந்து கொண்டேன். எந்தவித கட்சி பேதங்களின்றி மீட்பு நடவடிக்கைகள் நடைபெற உதவுவோம். அந்தப் பகுதியில் வசித்தவர்கள் அடைந்த துயரங்களில் ஒரு சில துளிகளை மட்டும் கவிதை ஆக்கி இருக்கிறேன்.
தானேன்னு பேர வச்ச
தந்திரமா வந்த புயலு
தானே போயிடும்னு
தப்பிதமா நினைச்சிட்டோம்.
ஏனோ எங்க கூட
இயற்கை மோதிடிச்சு.
வீணா ஆக்கிடிச்சி
வெறியாட்டம் போட்டுடுச்சி
முந்திரி மரமெல்லாம்
முழுசா சாஞ்சிருச்சு
எந்திருக்க முடியாம
பலாமரம் படுத்துருச்சி.
மந்திரிங்க வந்தாங்க
மாயமா போனாங்க
நொந்து நூலானோம்.
நோய் நொடிக்கு ஆளானோம்.
நோட்டைக் காட்டி நீங்க
நோட்டம் பாத்துக்கிட்டு.
ஒட்டுக் கேட்டுஅப்போ
ஓடித்தான் வந்தீங்க
சீட்டுக் கட்டு போல
சீர் கொலஞ்சி போன
வீட்டுக் கூரைஎல்லாம்
சீர் செய்ய வருவீங்களா?
பேய்போல காத்தடிச்சி
பெருமழையும் பெஞ்சிடிச்சு
நாய்போல பொழப்பும்தான்
நாறித்தான் போயிடிச்சு.
பாய்போட்டு தூங்கிநாங்க
பல நாட்கள் ஆயிடிச்சி.
தாய்போல காப்பாத்த
தவறாமல் வருவீங்களா?
அம்மாவும் வந்தாங்க
ஆறுதலும் சொன்னாங்க
சும்மாவே நூறு பேரு
கூடத்தான் வந்தாங்க
அவங்க வந்த ரோட்டை
அவசரமா போட்டாங்க
எவங்க வருவாங்க
எங்க பக்கம் சரிசெய்ய?
குடிக்க தண்ணி இல்ல
லைட்டு போட கரண்டு இல்ல
வடிக்க கஞ்சி இல்ல
வழிவகையும் தெரிய வில்ல
படிக்க புள்ளைங்க
பள்ளிக்கூடம் போகவில்ல
துடிச்சி கெடக்குறமே
துயரம் தீரலையே!
*********************************************************************************************************************
இதையும் படியுங்க!
மக்கள் துன்பங்களை கவிதையில் உருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குஎளிமையான, பாதிக்கும் வரிகள். இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் ஏழையும் இல்லை பணக்காரனும் இல்லை.
பதிலளிநீக்குமுந்திரி மரமெல்லாம்
பதிலளிநீக்குமுழுசா சாஞ்சிருச்சு
எந்திருக்க முடியாம
பலாமரம் படுத்துருச்சி.
மந்திரிங்க வந்தாங்க
மாயமா போனாங்க
நொந்து நூலானோம்.
நோய் நொடிக்கு ஆளானோம்.
சீட்டுக் கட்டு போல
சீர் கொலஞ்சி போன
வீட்டுக் கூரைஎல்லாம்
சீர் செய்ய வருவீங்களா?
அவங்க வந்த ரோட்டை
அவசரமா போட்டாங்க
எவங்க வருவாங்க
எங்க பக்கம் சரிசெய்ய?
பிச்டீங்க போங்க.. புயல்ல பாதிக்க பட்ட ஒருவனின் எதார்த்தம் உங்கள் வரிகளில்..... அருமை அருமை
வலி ...!
பதிலளிநீக்கு