என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சச்சின் ஒய்வு சரியா?என்ன செய்ய வேண்டும்?

    இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டிகளில் மட்டும்  ஒய்வு பெறுவதை அறிவித்துவிட்டார். நான் கூட கடந்த மாதத்தில் விலகி விடு சச்சின் என்று கடுமையான கவிதை எழுதி இருந்தேன். ஆனால் அவர் ஒய்வு முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. லட்சக்கணக்கான சச்சின் ரசிகர்களில் நானும் ஒருவன்.அவர் புகழுடன் இருக்கும்போதே ஒய்வு பெற வேண்டும்; கிரிக்கெட் போர்டால் வெளியே அனுப்பும் நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதே என்போன்றவர்களின் எண்ணமாக இருந்தது. இந்திய அணியின் தோல்விக்கு அவர் காரணமாக பேசப்படுவாரோ  என்ற அச்சமே  ரசிகர்கள் அவரது ஓய்வை விரும்பியதற்கு காரணம். 

  ஒரு பக்கம் அவரது ஓய்வை வற்புறுத்தினாலும் இன்னொருபக்கம் இன்னும் ஒரு சதம் அடித்தபின் ஓய்வை அறிவித்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் இப்போது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவர் எடுத்த முடிவு சரியானதுதான் என்றாலும் ஒன்று,டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் இரண்டிலும் ஒய்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஒய்வு பெற்றிருக்கவேண்டும். சமீப காலங்களில் ஒரு நாள் போட்டிகளைவிட டெஸ்ட் போட்டிகளில்தான் அவரது ஆட்டம் அதிகமாக ஏமாற்றமளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது மிகக் கடினமான ஒன்று. ஒரு நாள் போட்டிகளில் அனுபவத்தை பயன்படுத்தி கணிசமான ஓட்டங்கள் எடுத்து விட முடியும்.

   புகழ்பெற்ற வீரர்கள் ஒரு தொடரின் தொடக்கத்திலேயே இந்த தொடரோடு நான் ஒய்வு பெறப் போகிறேன் என்று அறிவிப்பது வழக்கம். அவர் கடைசியாக விளையாடிய ஒரு நாள் தொடரின்போதே ஒய்வு முடிவை அறிவித்திருந்தால் அவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துடன் வழி அனுப்பி வைத்திருப்பார்கள். மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்திருக்கும். 

    டெஸ்ட் போட்டியிலும் அவரால் நீண்ட நாள் விளையாட முடியும் என்று தோன்றவில்லை. அதிலாவது அவர் தொடக்கத்திலேயே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும்.
   
       எப்படி இருப்பினும் அவரது சாதனைகள் தற்போதைக்கு யாராலும் எட்ட முடியாததாக இருக்கிறது என்பது நமக்குப் பெருமைதான். இன்றுவரை பிளாஸ்டிக் பேட்டைக் கொண்டு விளையாடும் பிஞ்சுக் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் சச்சின்தான் கனவு நாயகனாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை. பெயரும் புகழும் பணமும் விருதுகளும் அவரைப்போல வேறு வீரர்கள் சம்பாதித்திருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நாட்டவரும் போற்றும் உயர்குணம் உடையவராகவே களத்தில் இருந்திருக்கிறார். இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது.

     இந்த ஒய்வோடு விளையாட்டுக்கான அவரது பணி முடிந்து விட்டது என்று நான் கருதவில்லை. ஒரு ராஜ்யசபா எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அவர் பொறுப்புடன் செய்யவேண்டிய செயல்கள் பல உள்ளன.
   கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுக்களின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும். கூச்சல், குழப்பம் அமளி இவைதான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளன. இவற்றிற்கிடையே மென்மையாகப் பேசும் சச்சின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.தன் பதவிக் காலத்திற்குள் வாய்ப்பற்றுக் கிடக்கும் கிராமப்புற  இளைஞர்களும் விளையாட்டில் சாதிக்க வாய்ப்பும் கிடைக்கும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். செய்வாரா?

   அல்லது வழக்கமான எம்.பி.க்கள் போல சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளை கழித்து விட்டு செல்வாரா?
 
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.    *******************************************************

சச்சின்  தொடர்பான பிற பதிவுகள்

27 கருத்துகள்:

  1. ஆமாம், அவரின் ஒருநாள் போட்டி ஓய்வு என்பது கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாகத்தான் உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றே எனது மனம் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை அவர் செய்யவேண்டிய முதல் கடமை மற்றைய விளயாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்\\கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுக்களின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும். //

    பதிலளிநீக்கு
  3. How funny we are!!. We chorus "retire now" and when he does, we say Oh! not this format first, should be that format!!!!!!!!!!!. Unbelievable. Don't you think we play more number of ODIs than Tests in a year?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வகையில் இருந்தும் ஒய்வு பெற்றிருக்கவேண்டும்.ஏதாவது ஒன்று என்று முடிவெடுத்தால் டெஸ்ட் ஆக இருப்பது நலம்.

      நீக்கு
  4. சச்சின் ஒருநாள் போட்டியில் விளையாடதன் காரணம் இந்த முறை அவரின் பெயர் ஒருநாள் போட்டியில் இடம் பெறாததால்.அவரின் விளையாட்டுத்திறன் குறைந்து வருவதை பலரும் விமர்சித்து வந்த தருணத்திலேயே எடுத்திருக்க வேண்டிய முடிவு.

    பல தருணங்களில் இந்திய கிரிக்கெட் சச்சின் ஒன்மேர் ஆர்மிதான் என்பதில் சந்தேகமேயில்லை.கால மாறுதலில் புதிய தலைமுறைக்கு சந்தர்ப்பம் கிடைப்பதை வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் பட்டியலை அறிவிக்கும் முன்னே ஓய்வை போர்டுக்கு தெரிவித்து விட்டார்.அதன் பின்னரே அவரைத் தவிர்த்து பட்டியல் வெளிய்டப் பட்டது. ஒருவேளை இந்த முறை சச்சின் இடம் பெறக கூடாது என்று தேர்வுக் கமிட்டியை வற்புறுத்த யாரேனும் முனைந்திருக்கலாம்.அது தெரிந்து முன்னதாகவே முடிவை அறிவித்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

      நீக்கு
  5. சச்சின் ஒரு சகாப்தம்... அவரின் முடிவு மிகப்பெரிய இழப்பு....

    பதிலளிநீக்கு
  6. விளையாட்டுத் துறையினை வளப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. கொஞ்சம் வருத்தமாக இருக்கும்தான். ஆனால் எடுக்கப் பட வேண்டிய முடிவுதான்.

    பதிலளிநீக்கு
  8. தன்னுடைய சுயநலத்துக்காக அணியில் ஒரு இடத்தை இத்தனை நாள் வேஸ்டு பண்ணிய ஆள் இந்திய கிரிக்கெட்டிலேயே இருந்திருக்க முடியாது. இவரது ரெக்கார்டைப் பார்த்தால் மிக நெடிய காலம் மோசமான விளையாட்டை தொடர்ந்து திடீரென ஒரு சதம் அடித்து அதையே அடுத்த ஐம்பது மேட்சுகளுக்கு ஓட்டி வந்திருப்பது தெரியும். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த தியாகியாக இவரைப் பார்க்கத் தோன்றவில்லை, காரணம் பணத்துக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்கும் மனிதர் இவர், மக்கள் நலனையும் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்க வேண்டும், கோல விளம்பரங்களுக்கு ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது. மொத்தத்தில் நல்ல வியாபாரி சுனலக்காரன், சொத்து நன்றாகச் சேர்த்துவிட்டு, மனமே இல்லாமல் இதற்க்கு மேலும் கேவலப் படக் கூடாதுன்னு ஆட்டத்தை நிருத்தியிருக்கார். பெருமைப் படும் விஷயம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய இடத்தை பறிக்கும் வகையில் கிடைக்கும் வாய்ப்பை இளைஞர்கள் பயன் படுத்த தவறிவிட்டனர். அதனால்தான் சச்சின் இவ்வளவு நாள் நீடிக்க முடிந்தது.

      நீக்கு
  9. தகவல் அறிந்தேன் நன்றி.
    இனிய நத்தர் புதுவருட வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. விளையாட்டுத் துறைக்கு நிறையச் செய்வார் என்று நம்புவோம்.

    காலங் கருதி வெளியிட்ட பதிவு. பாராட்டுகள் முரளிதரன்.

    இன்று வெளியிட்ட என் பதிவின் தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. // கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுக்களின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும்.//

    இதைத்தான் நானும் எதிர் பார்கிறேன் முரளி

    பதிலளிநீக்கு
  12. சச்சின் முடிவு நியாயமானதே...
    சமூக சேவைகள் மக்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது

    பதிலளிநீக்கு
  13. 23 ஆண்டுகள் இந்திய கிரிகெட் வரலாற்றை ஆக்ரமித்திருந்த சச்சின் எத்தனை ஓட்டங்களை எடுத்தார் என்று மட்டுமே அனைவரும் பார்கிறார்கள் அவர் எத்தனை பந்துகளை எதிர்கொண்டார் எத்தனை பந்துகளை வீனடித்தார் அவர் சதம் அடித்த எத்தனை போட்டிகளில் இந்தியா தோல்வியைத்தழுவியது என்று யாராவது சொல்கிறார்களா? வரலாற்றை ஒரு முறை திருப்பி பாருங்கள் மிகவும் வேதனையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. நீங்க சொன்ன அந்த ஒரு சதம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது :)..

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895