என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, December 20, 2012

நாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என்ன செய்கிறார்கள்?

   நாளை உலகம் அழியப் போகுதாமே!  கொஞ்ச நாளா பதிவுலகத்துக்கு அல்வா  கிடைச்ச மாதிரி ஆளுக்காளு எழுதி தள்ளறாங்க.நாமளும் இதைப் பத்தி எழுதலைன்னா பதிவுலகத்தை விட்டே நம்மை தள்ளி வச்சுடுவாங்க!
என்ன எழுதலாம்னு தலையைப் பிச்சுகிட்டு யோசிச்சேன்.
  நமக்கு ஒன்னும் தோணல. சரி, இன்னைக்கு பிரபல  பதிவர்கள் என்ன செய்யறாங்கன்னு பாக்கலாம்னு கிளம்பிட்டேன்.
        முதல்ல எங்க ஏரியாவில இருக்கிற மோகன்குமார் வீட்டுக்கு போனேன். இன்னும் வீடு திரும்பலன்னாங்க. சரின்னு நானும் திரும்பிட்டேன். வழியில குப்பை பொறுக்கற பையன்கிட்ட யாரோ பேட்டி எடுத்துகிட்டு இருந்தாங்க! அட! நம்ம மோகன்குமார்தான். "நாளைக்கு உலகம் அழியப் போகுது.எதைப் பத்தியும் கவலைப் படாம இன்னிக்கும் உலகத்தை சுத்தப் படுத்துக்கிட்டிருக்கயே! உனக்கு பயமா இல்லையா!" என்று கேட்டுக் கொண்டிருக்க நான், "மோகன்சார்"  என்று கூப்பிட திரும்பிப் பார்க்காம நான் போனில் கூப்பிடுவதாக நினைத்து  செல் போனை எடுத்து "ஹலோ சார்!   உலகம் அழியதற்கு முன்னே ஒரு பதிவு போடணும்.நாளைக்கு முடிஞ்சா பாக்கலாம்" என்று கடமையே கண்ணாக பேட்டியைத் தொடர்ந்தார்.

  அங்கிருந்து  மாம்பலத்தை க்ராஸ் பண்றப்ப  மின்னல் வரிகள் கணேஷ், மனைவி சரிதாவோட  ரங்கநாதன் தெருவில சுற்றிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்துவிட்டு "முரளி! உலக அழிவுநாள் சிறப்பு தள்ளுபடி போட்டிருக்கானாம். இன்னைக்குத்தான் கடைசி நாளாம். வாங்கியாகனும்னு சரிதாவோட ஆசைய நிறைவேத்தனும் இல்ல?. வரட்டுமா" டாடா காட்டிவிட்டு முன்னால் சென்றுகொண்டிருந்த சரிதாவின் பின்னால் ஓடினார். கணேஷ் சாருக்கு இன்னைக்கு பதிவு ரெடி.

இதுக்கு மேல சுத்த முடியாம வீட்டுக்கு வந்துட்டேன். நெட்டுக்குள்ள நுழைஞ்சு பாத்தப்ப சில ரகசிய தகவல்கள் கிடைச்சது. யார் கிட்டயும் சொல்லாதீங்க!

 • சைதாப்பேட்டையில் ஒரு டீக்கடையில  கேபிள் அண்ணன் டீயை யும் பண்ணையும் க்ளோஸ் அப்ல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாராம்.சாப்பாட்டுக் கடை பதிவில் இது வரப் போகுதாம்.அதுக்கு ரெண்டு மணிநேரம்  முன்னாடி DTH ல பதிவை வெளியிடப் போறாராம். அதனால பதிவுக்கான ஹிட்ஸ் குறையாதுன்னு அடிச்சி சொல்றாராம் உலகம் அழியறதுக்கு முன்னாடி இந்த சாதனையை செய்யனும்னு அடம் பிடிக்கறதா கேள்வி.

 •  வரலாற்றுச் சுவடுகள் என்ன பண்றாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப முயற்சி பண்ணேன்.உலகம் அழியப் போறதால பாதாள அறைக்குள்ள பதுங்கிக் கிட்டிருக்கறதாகவும், "இரண்டாவது முறை அழியும் உலகம்" அப்படிங்கற பதிவுக்கு தகவல்கள் திரட்டிக்கிட்டு இருக்கறதா நம்பத் தகாத வட்டங்கள்ள இருந்து செய்தி வந்தது.


 • திண்டுக்கல் தனபாலன் உலகம் அழியறதுக்கு முன்பு மக்கள் நல்ல விஷயம் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டுமேன்னு திருக்குறள்ல இருந்து ஏராளமான தகவல்கள் திரட்டி நல்ல பதிவு ஒன்னு எழுதி இருப்பதாகவும் கரண்ட் வந்ததும் அதை வெளியிடப் போவதாகவும், ஆனால் உலகம் அழியும் முன் கரண்ட் வருமான்னு சந்தேகத்தில் இருக்கறதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கு. 

 • நம்ம மதுமதி 21.12.2012க்குள்ள TNPSC போட்டித்தேர்வுகளுக்கான பதிவுகளைப் போட்டு நிறையப் பேருக்கு உலகம் அழியறதுக்குள்ள அரசு வேலை வாங்கி கொடுக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காராம்.

 • டாப்  20 போட்டு கலக்கும் ஹாரி, சுஜாதாவோட புத்தகங்களை குவிச்சி வச்சு அதுக்குள்ள நுழைஞ்சி உலகம் அழியறதப் பத்தி சுஜாதா என்ன சொன்னாருன்னு தேடிப் பாத்து ஒரு  அதிர்ச்சி பதிவு போடற ஐடியாவில இருக்கிராம். 

 • பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும், கற்போம் பிரபு கிருஷ்ணா இவங்கல்லாம் ஆட்டோமேட்டிக்கா பதிவு போடறதுக்கும் கம்மென்ட் போடறதுக்குமான கோடிங் தீவிரமா எழுதிக் கிட்டிருக்காங்களாம். உலகம் அழியறதுக்கு முன்னாடி அது உங்களுக்கு கிடைச்சிடும்.

 • அப்புறம் அட்ராசக்க சிபி செந்தில்குமார்   உலகம் அழியறதுக்கு முன் தினமான இன்னைக்கு ஒரே நாள்ல நூறு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி இருக்காராம் . அவர் டேபிள்ள ஃபளாஸ்க்ல காபியும், பேஸ்ட்டும் இருந்தது அதை உறுதிப்படுத்துதாம்.    (தூக்கம் வராம இருக்கறதுக்காக  ராத்திரியெல்லாம் அடிக்கடி காபி குடிச்சிக்கிட்டு டூத் பேஸ்ட் வச்சி பல் தேச்சுகிட்டிருந்தாராம் )

   அது சரி நீ என்ன பண்ணறன்னு கேக்கறீங்க?  பாலகுமாரன்,  உலகம் அழியறதப் பத்தி பல்லி,தேள்,கரப்பன் பூச்சிகளை வைத்து கவிதைகள் எழுதி இருக்காறான்னு  பாத்துக்கிட்டு இருக்கேன். ஒண்ணும் கிடைக்கல. ஏதாவது இருந்தா சீக்கிரம் அனுப்பி வையுங்க பாஸ்.

***************************************************************************************************************
என் பாணியிலான பதிவு அல்ல இது. வித்தியாசத்திற்காக எழுதப்பட்ட  வெறும் கற்பனைதான். நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையேனும் வருத்தப் படுத்துமானால் தெரிவிக்கவும். நீக்கி விடுகிறேன். தொடர்ந்து இது போல் எழுத உத்தேசமில்லை. 
****************************************************************************************************************

58 comments:

 1. இன்னும் நிறைய பேரை விட்டுட்டீங்களே!!!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கே கொஞ்சம் தயக்கமா இருந்தது பாஸ்.

   Delete
 2. ஹா .. ஹா .. அருமை பாஸ் .. கலக்கிட்டிங்க .. இன்னும் நிறைய பேரை கலக்காலாமே ?

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம்பேரை கட் பண்ணிட்டேன்.

   Delete
 3. வித்தியாசமான நகைச்சுவை பதிவு.
  சிரிக்கலாம்.

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா மோகன் குமார் பேட்டியே அருமை முரளி சார்
  இது போல் தொடர்ந்து எழுதுங்க சார் .... யாருமொன்னும் சொல்ல மாட்டங்க... கலக்குங்க

  ReplyDelete
  Replies
  1. தப்பா நினச்சுக்கப் போறாங்கன்னு பயம் இருக்கு.

   Delete
 5. இப்படியும் பதிவு போடலாமா? இருந்தாலும் நன்று

  ReplyDelete
  Replies
  1. சும்மா சார்! ஒரு சேஞ்சுக்குதான்

   Delete
 6. ஹி ஹி நல்லா இருக்கு நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி யோகராஜா

   Delete
 7. யார கரெக்டா ஜட்ஜ் பன்னிருக்கீங்களோ இல்லையோ நம்மளை கரெக்டா ஜட்ஜ் பன்னிருக்கீங்களே.... இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு பாருங்க பதிவு ஒன்னு நம்ம ப்ளாக்கில போஸ்ட் ஆகும் ஹி ஹி ஹி.! :-))

  ReplyDelete
 8. உங்கள் பாணி இது இல்லை என்றாலும்
  சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒரு மாறுதளலுக்காகத்தான்.நன்றி ரமணி சார்!

   Delete
 9. முரளி பெயருக்கு ஏற்றாற் போல பலரை பால்ட் ஆக்கிட்டிங்க.. அதிலும் பாசித், பிரபு செம

  ReplyDelete
 10. நான் எஸ்கேப்டா சாமீ...

  ReplyDelete
  Replies
  1. பதிவு நீளமா இருந்தததால நிறையப் பேர் எஸ்கேப் ஆகிட்டாங்க

   Delete
 11. மோகன்குமார் விண்கல் பூமியைத் தாக்கும் நேரத்துலதான் பைக்கை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துகிட்டு இருப்பாரு, வரும் வழியில் விண்கல்லை போட்டோவும் எடுத்துகிட்டு இருப்பாரு!! இவரோட கடமை உணர்ச்சிக்கு எல்லையே கிடையாது!!


  திண்டுக்கல் தனபாலன் நீங்க சொன்ன அத்தனை பதிவுக்கும் வெளிவந்ததும் பின்னூட்டம் போடாம உலகத்தை அழிய விடமாட்டாரு!! [அதுசரி எங்க சார் என் கடைப் பக்கம் ரெண்டு வாரமா வரக்காணோம், பிளீஸ் எங்கிருந்தாலும் உடனே வரவும்!!]

  \\உலகம் அழியறதுக்கு முன் தினமான இன்னைக்கு ஒரே நாள்ல நூறு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி இருக்காராம் . அவர் டேபிள்ள ஃபளாஸ்க்ல காபியும், பேஸ்ட்டும் இருந்தது அதை உறுதிப்படுத்துதாம். \\ டேபிள் மேல நூறு வாரத்தோட ஆனந்த விகடன் இருந்துருக்குமே பார்க்கலையா?

  ReplyDelete
 12. ஹா ஹா ஹா. எந்த உலகம் அழிஞ்சாலும் பிளாக்கர் உலகம் அழிய நாங்கள் விட மாட்டோம் :-)))

  பிரபு கிருஷ்ணா & அப்துல் பாசித்

  ReplyDelete
  Replies
  1. வேலைய முடிச்சாச்சா! இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.

   Delete
 13. நல்லா இருக்குதுங்க. நாளைக்குப் பொளச்சா, நாளன்னிக்குப் பாக்கலாமுங்க.

  ReplyDelete
 14. ஹஹ நல்லாயிருக்கு எங்களை விட்டுவைத்த வரை சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. முதல்ல பெண்களையும் சேத்துதான் கடைசி நேரத்தில எடுத்திட்டேன்..

   Delete
  2. ஏன் நல்லா தானே இருந்திருக்கும். சரி சமமா நினைங்க.

   Delete
 15. சிரிக்க சிரிக்கச் சொன்னீர்கள் நண்பரே..
  நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் சார்!

   Delete
 16. அடடா! முரளியா இவர்! ஐயமே ! அருமை!

  ReplyDelete
 17. ஹா..ஹா..ஹா... நல்லா இருந்தது... மோகன் சார் காமெடி செம... :)

  ReplyDelete
 18. அட கலக்கலான பதிவு! உலகம் அழியறதுக்கு முன்னாடி படிச்சிட்டேன்! நன்றி!

  ReplyDelete
 19. முரளி ஐயா... சூப்பர்ங்க.
  கலக்கிட்டிங்க போங்க.

  ReplyDelete
  Replies
  1. உங்களையும் தான் லிஸ்ட்ல வச்சுரிந்தேன். பெண்களையெல்லாம் விட்டுட்டேன்.

   Delete
 20. வாவ்.... நல்லாத் தான் கலாய்ச்சு இருக்கீங்க! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார்!

   Delete
 21. உங்க பாணி இல்லைன்னு சொல்லிட்டாலும் உங்களுக்கு லொள்ளு நல்லாவே வருகிறது. நகைச்சுவையா இருந்தது. ரசித்தேன்!

  ReplyDelete
 22. அருமையான நகைச்சுவை...

  ஆளுங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு?

  \\பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும், கற்போம் பிரபு கிருஷ்ணா இவங்கல்லாம் ஆட்டோமேட்டிக்கா பதிவு போடறதுக்கும் கம்மென்ட் போடறதுக்குமான கோடிங் தீவிரமா எழுதிக் கிட்டிருக்காங்களாம். உலகம் அழியறதுக்கு முன்னாடி அது உங்களுக்கு கிடைச்சிடும்.\\

  இது தான் டாப்பு!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அருண்

   Delete
 23. நகைச்சுவை என்றாலும் இதை படித்தவுடன் கொஞ்சமாகவேணும் யோசிக்க வைத்துவிட்டது.கட்டுரை,இல்லாத ஒன்றைச்சொல்லி நம்மை அதைப்பற்றி எழுத வைத்தும்,சிந்திக்கச்செய்தும் விட்டதும் அவர்களது வெற்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். இந்தப் பதிவர்கள் அனைவருமே எனக்குப் பிடித்தவர்கள்

   Delete
 24. //தப்பா நினச்சுக்கப் போறாங்கன்னு பயம் இருக்கு.// பெரிய பயத்துக்கு நடுவுலே இது கொசுறுங்களா சார்... இன்னும் நிறைய பேர காலாசிருக்கலாம்... வருத்தத்திலும் சிரிச்சிருப்பாங்க.!.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா!வருகைக்கு நன்றி ரவி சார்!

   Delete
 25. ஹா..ஹா..சிரிச்சு ரொம்ப நாளாச்சு ..இதைப் படிச்சு வயிறு வலி எடுத்துடுச்சு ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 26. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
  அனைத்தும் ஒரே இணையத்தில்....
  www.tamilkadal.com

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895