என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, May 22, 2013

சூது கவ்விய ஸ்ரீசாந்த், இல்லை! சீ! சாந்த்


அன்புள்ள ஸ்ரீசாந்த்!
    கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெற்று வருகிறாய். வாழ்த்து சொல்லக் கூடிய சாதனையையா செய்திருக்கிறாய்?  வேதனையுடன் வசைபாடக் கூடிய  சூதினை  அல்லவா செய்திருக்கிறாய்.!

   சூதாட்டம் தற்காலிகமாக வாழ்க்கையை வளப் படுத்தலாம். இறுதியில் நாசம் செய்து விட்டு அல்லவா நகர்ந்து போகும்!.பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான கண்கள் காண்பதெல்லாம் நிசம் என்று நம்பிக் கொண்டிருக்க மண் தூவுவது தெரியாமலேயே கண்ணில் மண்தூவும் உன்னைப் போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம், இப்படிப்பட்ட கிரிக்கெட்டையா ரசிக்கிறோம் என்று வெட்கமாகத்தான் இருக்கிறது.
   பணம் உன் கண்ணை மறைத்ததால் நீ எங்கள் கண்களை மறைக்க  முற்பட்டாயே! நியாம்தானா? அப்படி என்ன உனக்கு சோற்றுக்கே வழி இல்லையா? ஒரு முறை ஹர்பஜன் உன்னை அறைந்தார். அதற்கு பழி வாங்கவோ நீ கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில்  அறைந்தாய்.  உன் சுயநலத்துக்காக ஆட்டத்தையா அடமானம் வைப்பது? தடை விதிக்கப் பட்ட அசாருதீன் ஜடேஜா போன்றவர்களைக் கண்டும் உனக்கு அச்சம் ஏற்படவில்லையா?

   உன்னை நம்பி உன்னை ஒருவர் உன் திறமைக்காக ஏலம் எடுத்த பின் அவர்களுத் தெரியாமல் இன்னொருவருக்கு ஏன் ஏலம் போனாய்.  தொழில்நுட்பக் கண்கள் உன்னைக் கண்டறியும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ குற்றமற்றவன் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும்   உன் பெற்றோர்கள் இந்த செய்தியைக் கேட்டதும் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பார்களா? உன் திறமையை வெளிப்படுத்தி  கூலி பெறுவது நேர்மையான ஆட்டம்.  திறமையை வெளிபடுத்தாமல் இருப்பதற்காக கூலி பெறுவது சூதாட்டம். மேட்ச் பிக்சிங் தானே செய்யக் கூடாது; ஸ்பாட் பிக்சிங் செய்தால் தவறு இல்லை என்று உன்னை யாரேனும் மனம் மாற்றி இருக்கலாம். அதற்கு நீ மயங்கிப் போனது உன்வாழ்க்கைக்கே வேட்டு வைத்து விட்டதே!. இது உன்னுடைய குற்றம் மட்டுமல்ல. விளையாட்டு கோடிகள் புழங்கும் வியாபாரமாக மாறியதும் ஒரு காரணமே. பொருட்களைப்  போல வீரர்களை விற்பதும் வாங்குவது ஏலம் போடுவதுமே  சூதாட்டம் போலத்தானே!

   உன்னைப் போல் இன்னும் பலர் இருக்கலாம்.நீ மாட்டிக் கொண்டாய் அவ்வளவுதான்! மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே! சச்சினைப் பார்! திராவிடைப் பார்த்து கற்றுக் கொள்! என்று சொல்லக்கூட தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்த உண்மை வெளியாகுமா தெரியாது. இன்னும் பல வீரர்களின் அந்நியன் முகங்கள் வெளிப்படலாம்.

   உனக்குத் தெரியும்! தெருவோரா கிரிக்கேட்டிலேயே .பால் மேட்ச் , பெட் மேட்ச் நடக்கும். அதை சூதாட்டத்தின் தொடக்கம்  என்று அறிந்திருக்க முடியாது. 

    இதுவும் நடப்பதுதான். சில நேரங்களில் ஒரு அணியில் ஆட்கள் குறைவாக இருக்கும்போது அதிகமாக உள்ள எதிர் அணியினரின் கூடுதலாக வந்திருக்கும்  ஒரு சிலரை தன் அணியில் விளையாட அழைப்பார்கள். அவர்கள் கூட தான் ஆடும் அணிக்காக உண்மையாகத்தான் விளையாடுவார்கள். தன் சொந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக தான் சொந்த அணி தோல்வி பெறும் நிலையில் இருந்தாலும், தான் விளையாடும் அணியில்  காட்ச விடுவது,  ரன் அவுட் ஆவது போன்ற எந்த செயல்களையும்  செய்ய மாட்டார்கள். தன் அணியில் ஆடும்போது ஏராளமான காட்சுகளை விடுவானே! எதிரணிக்கு ஆடும்போது மட்டும் இப்படிப் சரியாக பிடித்து விடுகிறானே என்று அங்கலாய்த்துக் கொள்வதும் நடப்பதுண்டு. சிறுவர்களாய் இருக்கும்போது இருந்த அந்த நேர்மை பிற்காலத்தில் பணத்துக்காக  மாறிவிடும் போலிருக்கிறது.  உனக்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கும்.


  11 முட்டாள்கள் ஆடுகிறார்கள் 11000 முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்றார் பெர்னாட் ஷா. உண்மையில் பார்க்கும் பல ஆயிரம் பேர்கள்தான் மட்டும்தான் முட்டாள்கள் என்பதை உன்னைப் போன்றவர்கள் எங்களுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள் . உங்களை  பார்க்கும் பிஞ்சு மனங்களிலும் நஞ்சை அல்லவா  விதைக்கிறீர்கள்.

   இவற்றையெல்லாம்  தவிர்க்க அரசாங்கமே சூதாட்டத்தை  அனுமதிக்கலாம்; அரசுக்கு வருமானம் கிடைக்கும்  என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். சூதாட்டம் தவறு எனும்போது அரசாங்கம் அனுமதித்தால் மட்டும் அது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. 

   நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அசட்டு தைரியமும் மாட்டிக் கொண்டாலும் சட்டத்தில் ஒட்டைகளா இல்லை. வெளிவருவதற்கு என்ற எண்ணமும் இத் தவறுகளை செய்யத் உன்னை தூண்டி இருக்கலாம்.  மக்களின் மறதியும் அலட்சியமும் தானே ஊழலின் ஊற்று.

   நீ மீண்டும் வந்து ஆடினாலும் காலரியில் நின்று கைதட்ட நாங்கள் இருக்கும்போது உங்களைப் போன்றவர்களுக்கு என்ன கவலை?

  நேரம், மின்சாரம், மக்களின் நம்பிக்கை இவற்றை வீணாக்கும்  ஐபிஎல் கூடிய விரைவில் கிரிக்கெட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.கோபமும் வருத்தமும் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்ய?

ஸ்ரீசாந்த் உன்னை  சீ!....சாந்த்  என்று அழைக்க வைத்து விட்டாயே!
                        
              கிரிக்கெட்டெனும்ஆட்டத்தை சூது கவ்வ
                    கிறுக்கரென ரசிகர்களை நினைத்து விட்டாய் 
              சருக்கிவிட்டாய்  நேர்மைஎனும் பாதையி லிருந்து 
                  சஞ்சலமே சங்கடமோ துளியும் இன்றி; 
              வெறுக்கட்டும் கிரிகெட்டை இனிமேல் மக்கள்
                    விலைபோனாய் பணத்துக்கு இன்று நீயே 
              சிரிக்கட்டும் உலகம்இனி உன்னைப் பார்த்து 
                     சிந்திப்பாய் எதிர்காலம் கேள்விக் குறியே!
    
                                              இப்படிக்கு  
                   இனிமேல்  கிரிக்கெட்டை வெறுக்க இருக்கும் ரசிகர்கள் 


*****************************************************************************************

41 comments:

 1. எல்லாம் பணம் செய்யும் மாயை தான்...

  /// மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே...! ///

  உத்தமர்கள் நாட்டில் இப்போது அதிகம்...!

  /// இனிமேல் கிரிக்கெட்டை வெறுக்க இருக்கும் ரசிகர்கள் ///

  ஏற்கனவே வெறுத்து விட்ட ரசிகர்கள் பலரும் உள்ளனர்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தனபாலன் சார்

   Delete
 2. கிரிக்கெட் பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது. ஆனாலும் நீங்கள் கேட்டது நச் கேள்விகள்! சூப்பர்!
  த.ம-2

  ReplyDelete
  Replies
  1. நன்றி உஷா! பாக்யாவில் உங்கள் கவிதை படித்தேன்.நன்று.வாழ்த்துக்கள்

   Delete
 3. எனக்கு என்னவோ ஸ்ரீசாந்த் பலிகடா ஆக்கப்பட்டது போல் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கலா. உண்மைகள் வெளிவராமலா போகும்

   Delete
 4. நான் எப்போதும் கிரிக்கெட் பார்ப்பதில்லை... இருந்தாலும் ஸ்ரீசாந்த் செய்திருப்பது மிகவும் தவறு.... தன்னை நம்பி பணம் கொடுத்த வர்த்தகர்களுக்கும் தன் திறமையை நம்பி விளையாட்டைக் காணவந்த கோடிக்கணக்கான ரசிகர்கள்களுக்கும் அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.... நம்பிக்கை துரோகத்தை மட்டும் மன்னிக்கவே கூடாது....

  ReplyDelete
  Replies
  1. ஆம்!ரசிகர்கள் ஆம் இனிமேலாவது திருந்தட்டும்.

   Delete
 5. யாராவது ஒரு புள்ளப்பூச்சி இப்படி சிக்கிட்டா சும்மா குத்து குத்துன்னு குத்தறதுல நம்மாட்களை அடிச்சிக்க முடியாது. நடத்துங்க :-))

  ReplyDelete
  Replies
  1. புள்ள பூச்சி என்று நினைத்துக் கொண்டிருப்பவைதான் என்னென்ன செய்கின்றன.

   Delete
 6. ivanga eppavume ...

  ippadithaan boss..!

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்யறது நம்ம வேடிக்கை பாக்கத்தான் முடியும்.

   Delete
 7. விளையாட்டுக் கூட பெரும் சூதாட்டமாய் மாறினால் என்ன செய்வது அய்யா? இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எல்லாம், தவித்திருக்க, விளையாடுபவர்களோ, பணம் பெற்றுக் கொண்டு தேச துராகம் புரிபவர்களாக அல்லவா இருக்கின்றார்கள். ரசிகர்களை மட்டுமா ஏமாற்றினார்கள். இவர்கள் செய்ததை தேசதுரோக குற்றமாக பார்க்க வேண்டும் அய்யா

  ReplyDelete
  Replies
  1. இந்த பின்னணியில் உள்ளவர்கள் நைவரும் தண்டிக்கப் படவேண்டும்.

   Delete
 8. என்னவோ நடக்குது, மர்மமாய் இருக்குது...... :(

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கூடிய சீக்கிரம் புரிய வைப்பாங்கன்னு நினைக்கிறேன்

   Delete
 9. ஹும்.. தொழிலையும், விளையாட்டையும் பிரித்தறியும் விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது வருத்தத்திற்குரியது. அணிகளின் அதிபர்கள் செய்வது பிஸினஸ் என்றால், அதில் பங்கேற்போர் செய்தது சைடு பிஸினஸ். பங்கேற்போரது பிழையை அணி அதிபர்தான் கேட்க வேண்டும். இங்கே என்னடான்னா இந்தியாவே அதைக் கேட்டுக்கிட்டு இருக்கு!!!! வேற வேலையே இல்லையா நமக்கு!!

  ReplyDelete
  Replies
  1. விளையாட்டு நிபுணகளை விட தொழிலதிபர்கள் அரசியல் வாதிகள் தான் இதன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்க. அதை அவர்கள் வியாபரமாகவும் அரசியலாகவும் செய்கிறார்கள்.அதன் விளைவுதான் சூதாட்டங்கள்

   Delete
 10. கோடிக்கணக்கில் கொள்ளை அடிந்தவர்கள் எல்லாம் ஓடிஒளிந்து கொண்டார்கள்..இலட்சமாய் அடித்தவன் பட்சியாய் மாட்டிக்கொண்டான்..

  ReplyDelete
  Replies
  1. என்ன பண்றது சிக்கிக் கொண்டவன் குற்றவாளி. சிக்காதான் அதிர்ஷ்டசாலி

   Delete
 11. // உன்னைப் போல் இன்னும் பலர் இருக்கலாம்.நீ மாட்டிக் கொண்டாய் அவ்வளவுதான்! மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே! சச்சினைப் பார்! திராவிடைப் பார்த்து கற்றுக் கொள்! என்று சொல்லக்கூட தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்த உண்மை வெளியாகுமா தெரியாது. இன்னும் பல வீரர்களின் அந்நியன் முகங்கள் வெளிப்படலாம்.//சச்சினும் டிராவிட்டும் விலைபோவதா?நிச்சயம் நடக்காது.அப்படி ஒன்று நடந்தால் கிரிக்கெட்டின் அழிவு காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அர்த்தம்.வீரர்களை ஏலத்தில் கோடிகளை கொட்டி எடுத்தால் அவனுக்கு கிரிக்கெட்டை விட பணத்தில் தானே ஆசை அதிகமாய் இருக்கும்.
  பொறுத்திருந்து பாப்போம் ஸ்ரீசாந்த் குற்றவாளியா? என்று

  ReplyDelete
  Replies
  1. ஏலம் விடுவதும் எடுப்பதுமே ஒரு சூதாட்டம் என்பதும் உண்மைதான்

   Delete
 12. //சச்சினும் டிராவிட்டும் விலைபோவதா?நிச்சயம் நடக்காது.அப்படி ஒன்று நடந்தால் கிரிக்கெட்டின் அழிவு காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அர்த்தம்.//

  நம் பழைய அசாரூதினை எனக்கு பிடிக்கும். சச்சின் காலத்திலும் என்னை கவர்ந்தவர் அசாரூதின். அதேபோல தென்னாப்பிரிக்காவின் ஹன்சி க்ரோனியேவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். பிடிப்பு தாண்டி ஒருவித மரியாதை இருந்தது அவர்மேல். உலகின் தலைசிறந்த கேப்டனாக இருந்தவர். இந்திய அளவில் அது போல அசாருதீன். அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இன்றென்ன கிரிக்கெட் அழிந்தா போய்விட்டது. பகாசுர சக்திகள் சாவதற்கு கால நிர்ணயமே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷி

   Delete
 13. ஐ.பி.எல் ஒரு மோசடி! ஒரு காலத்தில் கிரிக்கெட் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்த நான் இப்போது தவிர்த்து வருகிறேன்! எதிர்த்தும் வருகிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ச்வ்வரசியம் குறைந்து விட்டது என்பது உண்மை. அவ்வப்போது ஸ்கோர் தெரிந்து கொள்வதோடு சரி.

   Delete
 14. இதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பவர்களின் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை, match பார்ப்பவர்களின் எண்ணிக்கையை ஒருபோதும் குறைக்கப் போவதில்லை
  . மேலும் நாட்டில் இவர்கள் மட்டும் குற்றவாளி, அரசியல்வாதிகள், ஆள்பவர்கள் எல்லாம் யோக்யர்களா? எல்லோரும் அதே அயோக்யத் தனத்தையே செய்தாலும் மாடிக் கொண்டவர்களை மட்டும் போட்டு கும்மாங் குத்து விடுவது நமக்கு கைவந்த கலை அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்னது போல மாட்டிக கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே!

   Delete
 15. கலக்கிட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி குட்டன்

   Delete
 16. கிரிக்கெட் வெறுத்துப் பல வருடங்கள் ஆகின்றன. :)))

  ReplyDelete
  Replies
  1. பலருக்கும் அதே நிலைதான்

   Delete
 17. வாசித்தேன் என்ன எழுதுவதென புரியவில்லை.
  நாட்டு நடப்பு அறிந்த நிறைவு உண்டு.
  மிக்க நன்றி முரளி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. வணக்கம்
  முரளி(அண்ணா)

  அருமையான பகிர்வு இதுதான் பணம் பலதையும் செய்யும் என்பார்கள் இதற்கு ஏற்றால்போல் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 19. ம்ம்..கிரிக்கெட் வெறும் சூதாட்டம் என்று தெரிந்தும் பார்க்கும் கண்கள் இன்னும் அதை நிறுத்தவில்லை.தேசிய விளையாட்டை ஓரம் கட்டி விட்டு கிரிக்கெட்டை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆடுவதால் தான் இவர்களெல்லாம் இப்படி கிரிக்கெட் ரசிகர்கள் தலையில் நல்லா மிளகாய் அரைக்கிறார்கள்.

  ReplyDelete
 20. கொஞ்சம் கடுமையாகத்தான் விமர்சிச்சு இருக்கீங்க. ஸ்ரீஷாந்த் குற்றவாளியாகவே இருந்தாலும், "பலிகடா" ஆக்கப்பட்டார்னு அவர் "நலம் விரும்பிகளால்" சொல்லப்படும். உண்மையிலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்றால், அதற்கான ஒரு வாய்ப்பை இவர் அளித்தது பெரிய தப்பு. மிகவும் கவனமாக இருந்து இருக்கணும். குற்றவாளியோ, இல்லையோ, கவன்மாக இருக்கவில்லைனு தோனுது. அதுதான் ஸ்ரீஷாந்தின் குற்றம்.

  விளையாட்டை லீகல் சூதாட்டம் ஆக்குவது என்பது வேறு. விளையாடும் வீரரே அந்த விளையாட்டில் சூதாடுவது என்பது வேறு. If he is a IPL player, he should never gamble in IPL or CRICKET ever. But he can gamble in Golf or Tennis or Chess.I hope you understand the difference.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள வருண்,
   நலம்தானே..

   ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்துகிறது. பிசிசிஐயின் தலைவரான சீனிவாசனே CSK அணிக்கும் உரிமையாளராக உள்ளார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

   Delete
 21. கவிதை பொருத்தமாக உள்ளது! நன்று!

  ReplyDelete
 22. கவிதையை கவனித்தவர் தாங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 23. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895