என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 9 மே, 2013

+2 தேர்வு முடிவுகள் 2013 -பரபரப்பான நாள்

பெற்றோர்களே!,
   இன்னும் சிறிது நேரத்தில் +2 தேர்வு முடிவுகள்  வெளியாக உள்ளது. முடிவுகளை கீழ்க்கண்ட இணைய தளங்களில் காணலாம். உங்கள் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களின் +2 படிக்கும்  பிள்ளைகளின்  தேர்வு முடிவுகளை பார்க்க நீங்களும் உதவலாம் 

இதோ முடிவுகள் வெளியாக உள்ள இணைய தளங்களின் இணைப்புகள் 
கிளிக் செய்யுங்கள் முடிவுகளைப் பாருங்கள் 
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
   மாணவர்கள் என்ன மதிப்பெண் கிடைக்குமோ என்று பரபரப்புடன் இணையத்தின் முன் காத்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களோ நம் மகன்/மகள் மற்றவர்களை அதிக மதிப்பெண் பெற வேண்டுமே என்று டென்ஷனுடன் இருப்பார்கள். +2 எழுதிய மாணவர்களின் பரபரப்புடனும்  அமைதியின்றியும் காணப்படுவார்கள்.   +2 மதிப்பெண் குறைந்து விட்டால் வாழ்க்கையே தொலைந்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி குழந்தைகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். அதுவும் நடுத்தர குடும்பப்  பெற்றோர்கள்கிண்டி அண்ணா பலகலைக் கழகத்தில் படித்தால்தான் ஜென்ம சாபல்யம் அடையமுடியும் என்பதுபோலவும் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆக முடியும்  என்பது போல   தோற்றத்தை  உருவாக்கி மார்க் குறைஞ்சுபோச்சுன்னா அவ்வளவுதான் என்று குழந்தைகளையும் மிரட்டுவார்கள்.
   ஆனால் +2 மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ஒருவேளை  பிள்ளைகள் குறைவாக மதிப்பெண் பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ திட்டவோ அடிக்கவோ செய்யாதீர்கள்.
   நேற்று முக நூலில் பார்த்தேன். மதிப்பெண் வருவதற்கு முன்பே குறைவாகத்தான் இருக்கும் என்று ஒருமாணவன் தற்கொலை செய்து கொண்டானாம்.
இவையெல்லாம் தவிர்க்கப் படவேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை தருபவை அல்ல. அதையும் தண்டி வாழ்வில் சாதிக்க ஆயிரம் வழி உண்டு.
மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்

**************************************************************************************************

14 கருத்துகள்:

 1. இணைப்புகளுக்கு நன்றி...

  அட... காலை முதல் மின் வெட்டு கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... பர...பர... பரபரப்பு

  மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல என நினைக்க அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தகவலுக்கும் தேர்வு முடிவுகள் பற்றிய விழிப்புணர்வுக்கும் மிக்க நன்றி!
  த.ம-2

  பதிலளிநீக்கு
 3. எச்சரிக்கையுடன் கூடிய பதிவு
  மனம் கவர்ந்தது
  பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 4. வணக்கம்!

  தோ்வைக் குறித்துத் திரட்டிய செய்திக்கே
  ஓா்வாக்[கு] அளித்தேன் உவந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 5. அடுத்து என்ன படிக்கலாம்? வெற்றி நிச்சயம் என பல நாளிதழ்கள், கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் மிணவர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன அய்யா, மாணவர்களை மையப்படுத்தாமல் பெற்றோர்களை மையப்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பெற வேண்டும் என்பதும், பெற்றோர்களுக்கு, சிறப்பான கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றேன் அய்யா.

  பதிலளிநீக்கு
 6. வெற்றி பெற்ற பெறாத அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்ல சேவை. பாஸ் செய்தும் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று ஒரு மாணவி தற்கொலை என்று செய்தி படித்தபோது என்ன சொவது என்றே தெரியவில்லை. பெருமூச்சுதான் வருகிறது.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் சேவை மனப்பாங்கிற்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஆனால் +2 மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ஒருவேளை பிள்ளைகள் குறைவாக மதிப்பெண் பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ திட்டவோ அடிக்கவோ செய்யாதீர்கள்.//

  நன்றாக சொன்னீர்கள்.
  அவசியமான பதிவு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை தருபவை அல்ல. அதையும் தண்டி வாழ்வில் சாதிக்க ஆயிரம் வழி உண்டு.//
  அருமையான கருத்தினை வலியுறுத்தியுள்ளீர்கள் .குழந்தைகளின் மனம் மென்மையானது பெற்றோர்கள் தான் எதிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எமது அன்புச் செல்வங்களின் உயிரைப் பறித்த பாவிகளாய் வாழ் நாள் முழுவதும் துயரப் பட வேண்டி வரும் ! சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .மாணவர்கள் தாம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப்
  பெறவும் என் வாழ்த்துக்கள் இங்கே .

  பதிலளிநீக்கு
 11. பரபரப்பான பதிவுதான்.
  பகிர்விற்கு நன்றி மூங்கில் காற்று.

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா11 மே, 2013 அன்று 5:21 AM

  வணக்கம்
  முரளி(அண்ணா)

  மணவர்களுக்கு பயனுள்ள பதிவு பரபரப்பான சூழ்நிலையில் மிக முக்கியம் வாய்ந்த பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா11 மே, 2013 அன்று 2:41 PM

  //மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை தருபவை அல்ல. அதையும் தண்டி வாழ்வில் சாதிக்க ஆயிரம் வழி உண்டு.//
  இதை உணர்ந்து கொண்டால் தேவையற்ற தற்கொலைகளுக்கு முடிவு கட்டி புதுச் சாதனைகள் படைக்கலாமே

  பதிலளிநீக்கு
 14. உங்கள் துறை நிச்சயம் எல்லோருக்குமே இப்போது பேதியை வரவழைத்து விட்டதுதான் உண்மை நண்பரே

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895