என்னை கவனிப்பவர்கள்

சனி, 4 மே, 2013

அந்த எண் எது?இது உங்களுக்கில்லை. தைரியமா வாங்க!


  பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டுவிட்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் வாண்டுகள் அட்டகாசம் ஆரம்பித்திருக்கும் எப்போதும் கம்ப்யூட்டர் விளையாட்டு, டிவி என்று  பொழுது போக்கிக் கொண்டிருப்பார்கள் சில  குழந்தைகள். நமக்கு தொந்தரவு தராமல் எது செய்தாலும் சரின்னு விட்டு விடாமல் அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். வெளியிலும்  ஓடி ஆடும் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லுங்கள். விழுந்துடுவார்கள் என்று பயப்படாதீர்கள்.. சின்ன சின்ன சுற்றுலா அழைத்து செல்லுங்கள் சினிமாவிற்கு போகாமல் இருத்தல் நலம்.. 

   அவர்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வேலை கொடுங்கள். புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்லலாம். அவர்களுடைய மூளைக்கு வேலை கொடுக்கிற விதமாக சில புதிர் கணக்குகளைக் கொடுங்கள். 

  அப்படி ஒரு எளிமையான ஒரு கணக்கை சொல்கிறேன். இதை எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கலாம். உங்கள் தம்பி தங்கைகள்,குழந்தைகள்,பேரன் பேத்திகள் இந்த வயதில் இருந்தால் அவர்களுக்கு இந்த புதிராக சொல்லி கண்டு பிடிக்க சொல்லுங்கள் சரியான விடை சொன்னால் பாராட்டுங்கள். சின்ன பரிசு ஏதாவது கொடுங்கள்.கண்டு டிக்க முடியவில்லை என்றால் குறிப்புகள் கொடுத்து முயற்சி செய்ய சொல்லுங்கள் . இவை அவர்களது சிந்தனை திறனை வளர்க்கும். 
(புதிர்ல ஆர்வம் இல்லாதவர்கள் கடைசியில இருக்கிற கொசுறு செய்தியை படிச்சிட்டு எஸ்கேப் ஆகலாம்)

இதோ அந்தப் புதிர் கணக்கு
அந்தப் பையன் ஓடி வந்தான் தன் அக்காவை நோக்கி,
"அக்கா! அக்கா!நான் ஒரு ஒரு அதிசய நம்பரை கண்டு பிடிச்சிருகேன்."

"அப்படியா! வெரிகுட்! என்ன அது சொல்லு!"

"நான் சொல்ல மாட்டேன்.  நீங்க தான் சொல்லணும்.
அந்த எண்ணை எந்த இரண்டு இலக்க எண்ணாலும் பெருக்கினாலும் இரண்டிலக்க எண்ணை இருமுறை பக்கத்தில பக்கத்தில எழுதி இருக்கிற மாதிரி இருக்கிற  நான்கு இலக்கஎண்ணா இருக்கும்.

"புரியலடா!தெளிவா சொல்லு"
"அதாவது 91 இருக்குன்னு வச்சுக்கோ அதை அந்த எண்ணால் பெருக்கினால் 9191 ன்னு கிடைக்கும்..புரியுதாக்கா? 10நிமிஷம்தான் டைம் .அதுக்குள்ள அந்த எண் என்னன்னு கண்டு புடிச்சி சொல்லணும். கேல்குலேட்டர் பயன்படுத்தக்கூடாது ஓ.கே யா? 
அக்கா  விடை கரெக்டா பத்து நிமிஷத்துகுள்ள சொல்லிட்டாங்களா? 
உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா நீங்களும் சொல்லலாம்?



*****************************************************************************************
இது  எளிமையான கணக்கு இதை விட கொஞ்சம் கடினமான புதிரை அடுத்த  வாரம் பாக்கலாம்...
கொசுறு : நமது சக வலைபதிவர் அற்புதமான மரபுக் கவிஞரான அருணா செல்வம் வெண்பாவுக்கு வித்தியாசமான ஈற்றடிக்கு வெண்பா எழுதி அவருடைய குருநாதரிடம் பாராட்டு பெற்றிருக்கிறார். அவர் கொடுத்த ஈற்றடி 

"சம்போடு ராமாநு சம்"

  நானும்  இந்த ஈற்றடிக்கு இரண்டு  வெண்பாக்கள் அவருடைய கருத்துப் பெட்டியில் எழுதி இருக்கிறேன். 
  ராமானுசம் என்று  சொன்னதும் கணிதமேதை  என் நினைவுக்கு வந்தார் 
  பேராசிரியர்  ஹார்டிதான் ராமானுஜனின் கணித திறமையை உலகுக்கு வெளிப் படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிததுதான்.
அவர் ஆங்கில வார்த்தைகளுடன் தமிழில் ராமானுஜத்தைப் பார்த்து சொல்கிற மாதிரி ஒரு   வெண்பா  தீவிர தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். (சும்மா படிச்சிட்டு மறந்துடுங்க! )

ஹார்டிநான் நம்புகிறேன் உன்னை; கணிதத்தில்
ஹார்டென்று ஏதுமில்லை; உன்திறமை நம்பாதோர்
'கம்'போட்டு மூடுவார் அவர்வாயை; இக்கடின
'சம்'போடு ராமானு சம்


ஹார்ட்-கடினம்
கம்--GUM
சம்-SUM-கணக்கு
ஹிஹிஹி

இன்னொரு  வெண்பா.
இலையினைப் போட்டுவிட்டு நிற்காதே சும்மா
விலையிலா அன்போ டழைக்கவே வந்துநான்
தெம்போ டமர்ந்தேன்; முதலில் துளிபாய
சம்போடு ராமாநு சம்

**************

27 கருத்துகள்:

  1. யோசித்து யோசித்து மண்டை குழம்பிப் போனது நண்பரே...
    விடையை பார்த்து தெரிந்துகொண்டேன்..
    அருமையான புதிருக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  2. அருமை. அங்கு சென்று தெரிந்து கொண்டு விட்டேன். ஆனால் அங்கே ஏனோ என்னால் follow கொடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. விடுமுறையில் குழந்தைகளுக்கு நல்ல பொழுது போக்கு, பெரியவர்களுக்கும் நல்ல புதிர் விடுவித்தல் நல்ல பயிற்சி.
    நன்றி. என் பேரக்குழந்தைகளுக்கு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இது நல்லாயிருக்கே...! குழந்தைகளிடம் சொல்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. அருமையான புதிரோடு கூடிய வெண்பாக்கள். வெண்பா வடிக்க என்னாலெல்லாம் முடியலை. சாதமே வடிக்க முடியறதில்லை. சூடு தாங்கலை. இதிலே வெண்பாவுக்கு எங்கே போறது? இரண்டாம் வெண்பா பிடிச்சது. பாயசம் வரதாலேயோ? :))))))

    பதிலளிநீக்கு
  6. எந்த இரண்டு இலக்க எண்ணையும் 101- ஆல் மல்ட்டிப்பிள் பண்ணும் போது அதே எண் நான்கு இலக்கமாக வரும். ( உங்க விடை பார்த்து பிட் அடிக்கலைங்க.. என்ன சொல்லியிருக்கிங்கன்னு எட்டி பார்த்தேன்.. ) ஏதோ கணக்கு படிச்சதால கணக்குல பெரிய புலி இல்லைன்னாலும் எலிங்க... எலி...( விடைய தோண்டியாவது எடுத்துருவோம்ல...) ஹி... ஹி..!


    //ஹார்டிநான் நம்புகிறேன் உன்னை; கணிதத்தில்
    ஹார்டென்று ஏதுமில்லை; உன்திறமை நம்பாதோர்
    'கம்'போட்டு மூடுவார் அவர்வாயை; இக்கடின
    'சம்'போடு ராமானு சம்
    //- வெண்பா சூப்பர்.. (ஸ்கூல் படிக்கும்போதே வெண்பாவுல கலக்கினவங்களாச்சே)

    // ஹார்ட்-கடினம்
    கம்--GUM
    சம்-SUM-கணக்கு
    ஹிஹிஹி // -- இந்த மீனிங் எல்லாம் புரிஞ்சிக்கமாட்டோம்னு முடிவு பண்ணிட்டிங்களா போங்க சகோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடை கண்டு பிஹ்ச்சதுக்கு வாழ்த்துக்கள் பி.எஸ்.சி கணிதம் ஆச்சே. நீங்க கண்டுபிடிக்காம இருப்பீங்களா.எல்லோருமே கண்டு பிடிக்க முடியும் கொஞ்சம் பொறுமை தேவை அவ்வளவுதான்

      நீக்கு
  7. சுவாரசியமான புதிர் சார்.... கொஞ்சம் காலம் இதை வைத்தே நான் பொழுதை போக்கிவிடுவேன்

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5 மே, 2013 அன்று PM 11:56

    முரளி அண்ணாவுக்கு,

    நமஸ்காரங்கள்.

    மசாலாப் பால் செய்யும் போது அதில் மஞ்சள் தூள் போடலாமா ? உங்கள் பதிவில் நீங்கள் ஒருமுறை எழுதியதாக ஞாபகம்.

    அனந்தகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள்தூள் என்ன மிளகாதூள் கூட போடலாம். யாருக்கு
      குடுக்கறோங்கதைப் பொறுத்து இருக்கு. ஹிஹிஹி
      சாரி சும்மா சொன்னேன்
      நீங்கள் ஜாலியா கேட்டிருந்தா இது பதில்

      சீரியஸா கேட்டிருந்தா "தெரியாது."

      நீக்கு
  9. வெண்பா அருமை. ஹார்டியையும் இராமானுசத்தையும் இணைத்து எழுதியிருந்தது மனதிற்கு மகிழ்வினைத் தந்தது. நன்றி

    பதிலளிநீக்கு
  10. முதல் வெண்பா சுவை. இரண்டாவது வெண்பா பிழை :-)
    புதிர் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஐயா!
      முதல் சீரில் தளைதட்டியதை சரி செய்து விட்டேன். வேறுபிழைகள் என்னவென்று என் சிற்றறிவிற்கு எட்டவில்லை.அல்லது முழுவதும் பிழையா?
      முடிந்தால் சரி செய்கிறேன். அல்லது அதை எடுத்து விடுகிறேன்.தயவுசெய்து சுட்டிக் காட்டவும்.
      தங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகளே என்னை சரி செய்து கொள்ள உதவும்

      நீக்கு
    2. நசிகேத வெண்பா என்ற அற்புதமான வெண்பா தொடரை எழுதியவர் தாங்கள். நான்வெண்பாவின் நுணுக்கங்கள் இலக்கணங்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்தவனல்ல கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நன்றி

      நீக்கு
  11. பன் வித மேக்ஸ் என்பார்கள்.கணிதம் இரு விளையாட்டு என்பதற்கு எடுத்துக்காட்டாய் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்.

    கணக்கென்றால் என்றும் கசக்கும் எனக்கு!
    மணக்கின்ற நற்மலர் வெண்பா! - நுணுக்கம்
    அறிந்து சரிசெய்த அப்பாதுரை ஆய்வால்
    அறியாமை போகும் அறிந்து!

    வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895