என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, October 1, 2014

பாவம் செய்தவர்கள்

     
    அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மின்சார ரயிலில்  கூட்டமில்லை. இருக்கைகள் காலியாகவே இருந்தன. வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"  என் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது. 

    கணவன் மனைவி , ஒரு சிறுவன், ஒருபெண் குழந்தை (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம்)  கொண்ட சிறு குடும்பம் என் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.தனக்கு ஜன்னலோர இடம் வேண்டுமென்று அடம் பிடித்து அமர்ந்த சிறுவன் அதன் பயனை அனுபவிக்காமல் செல்போனில் கேம் விளையாட ஆரம்பித்து விட்டான்.அந்தப் பெண் குழந்தையோ  நிறைய இடம் இருந்தும் தந்தையின் மடிமேல் அமர்ந்தது . அதன் துறுதுறு பார்வையும் சுறுசுறு  செயல்களும், கலகல மொழிகளும் அந்தப் பெட்டியில் இருந்த சொற்ப பேர்களையும் ஈர்த்தது. புத்தகக் கவிதையில் இருந்து அந்தக் குழந்தைக் கவிதையின் பக்கம் என் கவனம் திரும்பியது.

   தன்னையும் தன கணவனையும் சற்று  நேரம் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அந்தப் பெண் கேட்டாள் "என்னடி! இப்படி லூசு மாதிரி  பாத்துகிட்டே இருக்கே! '

"உன்னை விட அப்பா அழகா இருக்கார்மா" என்று அதிர்வெடியை சிரித்துக்கொண்டே வீசியது அந்த பிஞ்சுக் குழந்தை"

    பொது இடத்தில் இப்படி சொல்லிவிட்டாளே என்று முகம் முழுவதும் கோபம் லேசாகப் பரவ கணவனைப் பார்த்தாள் அந்த மங்கை.  கொஞ்சம் பெருமிதம் அடைந்தாலும் மனைவியின் மன ஓட்டத்தை அறிந்த கணவன் தன சுட்டு விரலை குழந்தையின் வாய் மீது வைத்து மூடினான். அம்மாவின் கோபம் உணர்ந்த குழந்தை, தாவி சென்று அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதனப் படுத்த முனைந்து . கோபம் கரைந்து போனதை அறிந்து துணிவு கொண்ட குழந்தை அம்மாவின் கன்னத்தை கிள்ளியது . தடுத்தும் கேளாமல் நெற்றியில் வைத்திருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டது. என்ன நினைத்ததோ அதை எடுத்து மூக்கில் வைத்துப் பார்த்து "எப்படி இருக்கு" என்று தலையை ஆட்டி ஆட்டி கேட்டது.

"இது எதுக்குடி? நீ  பெரிய பொண்ணா வளர்ந்ததும் உனக்கு மூக்கு குத்திடலாம்"

"ஐயய்யோ!  வேணாம், மூக்கு குத்தினா வலிக்கும். நான் குத்திக்க மாட்டேன். ஸ்டிக்கர்தான் வச்சுக்குவேன். அப்பா! அம்மாகிட்ட சொல்லு  என்று செல்லமாய் சிணுங்க,

"சரிடா கண்ணு" என்ற கணவனைப்பார்த்து "இப்படியே செல்லம் கொடுத்தா உருப்பட்டா மாதிரிதான்" என்று மனைவியின் முகமொழி கூறுவதுபோல் தோன்றியது 

    அதற்குள் செல்போன் ஒலிக்க தந்தையின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆன் செய்து தந்தையின்  காதில் வைத்தாள் .பேசி முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்தாள். பின் மொபைலை நோண்டி கேமராவை கண்டறிந்து விதம் விதமாக செல்பி எடுத்தாள். அதில் தான் அம்மா அப்பா அண்ணனுடன்  இருக்கும் படத்தை மீண்டும் மீண்டும் காட்டி மகிழ்ந்தாள். 

"டேய்!  இங்க பார்டா"  என்று குட்டித் தங்கை அழைப்பதை  கண்டு கொள்ளாமல் இன்னும் செல்போனில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் சிறுவன் .

நான் லேசான பொறாமையுடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் 

"சே! பெண்குழந்தை இல்லாதவர்கள், பாவம் செய்தவர்கள்" 

**********************************************************************************

ஆச்சர்யக் கொசுறு : குழந்தை மம்மி டாடி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை 


************************************************

எச்சரிக்கை: 

   பல்வேறு காரணங்களால் நான் வலைப் பதிவு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இக் காலக்கட்டத்தில் பதிவுலகம் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைத்ததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும்  எழுத வந்துவிட்டேன். என்ன செய்வது? சகித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஹிஹிஹி 


25 comments:

 1. samipathil pala murai ungal blogg pakam vaanthu paarthen sir. enga ungalin pathivu ennoda -board l display aakaliyonu pinnartaan therinthatu july la irunthe pathivukal eluthuvathai niruthi irunthirkal.

  mindum ungalin varukai makalchiyai tharukirathu.

  ReplyDelete
 2. கொஞ்சம் லேட்டா வந்தாலும் ஒரு டச்சிங்கான பதிவுடன் அமர்க்களப் படுத்திட்டீங்க

  ReplyDelete
 3. இப்போது பலரும் வெளியுலகத்தை வேடிக்கை பார்க்க மறந்து செல்போனில் புதைந்து விடுகிறார்கள்.. இதனாலேயே பலரும் பல ஆச்சரியத்தை தவற விட போகிறார்கள்...

  அந்த குட்டிபாப்பா சேட்டைகள் அழகு

  ReplyDelete
  Replies
  1. மிக மிகச் சரியே! செல்ஃபோன் வெளி உலக ஆச்சரியத்தை அனுபவிக்க விடாமல் தவற வைக்கின்றது! அதை மக்களும் உணர்வதில்லையே! பெரியவர்கள் குழந்தைகளை பழக்கலாமே!

   Delete
 4. கடைசி வரிப் பொறாமையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்! :)))

  ReplyDelete
 5. அப்போ நானும் பாவம் செய்தவனா.? ஆனால் எனக்குப் பேத்தி இருக்கிறாளே..! ஒரு ஹிந்திப் படத்தில் ஒரு கதாபாத்திரம் ‘மேரி பாஸ் மா ஹைன்’ என்று சொல்வது நினைவுக்கு வந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. உங்க கணக்குப் படி நானும் பாவம் செய்தவன்தான் ,சிறு வயதில் பெண் குழந்தையின் சேட்டைகளை நானும் ரசித்ததுண்டு !
  த ம வோட்டு போட முடியலே ,இணைக்கவும் முடியலே ,சரி செய்யுங்கள் சகோ !

  ReplyDelete
  Replies
  1. நன்றி பகவான்ஜி. இப்போதைக்கு போட முடியாது . தமிழ் மனம் மனது வைக்க வேண்டும்.

   Delete
 7. அருமையான அனுபவம் ...

  ReplyDelete
 8. குழந்தைகள் உலகம் அழகுதான்... அதிலும் பெண் குழந்தைகள் இன்னமும் அழகு...எங்களைப் பாவம் செய்தவர்கள்னு சொல்லிட்டீங்களே...

  ReplyDelete
 9. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 10. நல்ல அனுபவம்....வாழ்த்துகள்

  ReplyDelete
 11. உண்மைதான் ஐயா
  பெண் குழந்தை இல்லாதவர்கள் பாவம் செய்தவர்கள்தான்
  எனக்கு ஒரு பெண் இருக்கிறார்

  ReplyDelete
 12. குழந்தைகள் செய்கைகள்
  ஒவ்வொன்றும் அழகு தான்...
  அருமையான நிகழ்வுகளை
  எங்கள் கண்முன் படைத்தீர்கள்...
  ==
  காலம் சில நேரங்களில் தடைபோட்டுவிடுவது
  நிதர்சனமே நண்பரே...
  தொடர்ந்து எழுத முயற்சியுங்கள்..
  நானும் அப்படியே...

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நடக்க ஆயிற்று நன்றி மகேந்திரன்

   Delete
 13. மீண்டும் தங்களைக் காண மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது! நண்பரே! ம்ம்ம் பெண் குழந்தை இல்லாதவர்கள்...ம்ம்ம்ம் என்ன சொல்ல ஆனால் குழந்தைகள் உலகமே தனிதான்......

  நல்ல அனுபவம் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வலைச் சரத்தில் என்னைப் பற்றி எழுதி இருந்தீர்கள் நன்றி சார்

   Delete
 14. அப்ப நீங்க வர்ரீங்க...!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895