தூரத்தில்
நகர இயலாத அளவு
கூட்டத்தோடு வரும்
நகரப் பேருந்தைக்கண்டு
உள்ளதை சொன்னார்கள்
'இந்த பஸ்
ரொம்ப மோசம்'
எப்படியோ உள்ளே ஏறி
உன்னைப் பார்த்ததும்
உள்ளத்தைச் சொன்னார்கள்!
'இந்த பஸ்
ரொம்ப வாசம்'
நீ ஏறியதில்
பேருந்துக்கும்
பேரின்பம் போலும்!.
மேடு பள்ளங்களில்
ஏறி இறங்கி குதித்தாட
எங்கள் இதயமும் சேர்ந்தே...
அண்ணல்கள் அனைவரும்
உன்னையே நோக்க
நீ யாரை
நோக்கப் போகிறாய்?
உன் பார்வைக் கதிர்வீச்சால்
எந்த இதயத்தை
தாக்கப் போகிறாய்?
உன் சுட்டு விரல் நீட்டி
எங்களில்
ஒருவரைக் காட்டு!
உன்னிடம்
இதயப் பரிமாற்றம் செய்ய!
அந்தப் பேரின்பப் பேரிடரில்
சிக்கித் தவிக்கப் போகிறவர்
யார்?
அது
தெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்.
*********************************************************

ஐயோ.....
பதிலளிநீக்குஅழகாக இருக்கிறது காதலுக்கான தவிப்பு
தினசரி நடப்பு இதுதானே!அழகு
பதிலளிநீக்குஓஹோ...பஸ் பயணத்துல உங்க முன்னாடி இருந்தது யாரு..? பின்றீங்க...
பதிலளிநீக்குஇயல்பான கவிதை! இனிய நடை!கருத்து வளம்!அமைந்த அருமையாக உள்ளது!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
த ம 3
அட அட அட கலக்குறீங்க பாஸ். இதுக்குத்தானே பஸ்ல போறதே
பதிலளிநீக்குஅந்தப் பேரின்பப் பேரிடரில்
பதிலளிநீக்குசிக்கித் தவிக்கப் போகிறவர்
யார்?
அது
தெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்.//
அருமை அருமை
படுகிறவர்கள் கைபட்டால்
யதார்த்தம் கூட அழகிய கவியாகுமென்பதற்கு இதுதான் சான்று
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்துக்கள்
tha.ma 4
பதிலளிநீக்குதொடரட்டும் பயணங்கள். அருமை.
பதிலளிநீக்குசொந்த அனுபவம் போல் இருக்கே ஹி ஹி ஹி (TM 6)
பதிலளிநீக்கு//அது
பதிலளிநீக்குதெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்.//
நிலமையை அழகாக சுட்டிக்காட்டியது அருமை!
பரிமாற்றமும்,பயணங்களும் சரியான நேர கோட்டு நிகழ்வாகவே வாழ்வில்/
பதிலளிநீக்குபார்வை ஒன்றே! கவிதைக்கு இல்லை வயது!
பதிலளிநீக்குஅட்டகாசமான அழகுக் கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று காதலுக்கு காத்திருக்கும் இளைஞன் ஒருவன் எழுதும் கவிதை
பதிலளிநீக்கு//
காலையில் வந்து வாசித்து சென்றேன் நண்பரே...
கவிதைக்கு முன்னுரை முதல் முதலாய் பார்க்கிறேன்...மலரும் நினைவுகள் தரும் கவிதை..
''..அது
பதிலளிநீக்குதெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்...''
ஆகா காதல் படுத்தும் பாடு!....
வாலிபக் குறும்பு.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
//உன்னைப் பார்த்ததும்
பதிலளிநீக்குஉள்ளத்தைச் சொன்னார்கள்!
'இந்த பஸ்
ரொம்ப வாசம்'
// ஹா ஹா ஹா அருமை சார்
//அது
தெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்.
// இதுவும் உண்மை தான்
படித்துப் பாருங்கள்
தல போல வருமா (டூ) பில்லா டூ
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html
தொடரட்டும் பயணங்கள்... கவிதையும் தான்!
பதிலளிநீக்கு//சிட்டுக்குருவி said...
பதிலளிநீக்குஐயோ.....
அழகாக இருக்கிறது காதலுக்கான தவிப்பு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை... பயணங்கள் முடிவதில்லை...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்... (த.ம.10)
சென்னை பித்தன் அய்யா அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு//கோவை நேரம் said...
பதிலளிநீக்குஓஹோ...பஸ் பயணத்துல உங்க முன்னாடி இருந்தது யாரு..? பின்றீங்க..//
அதுக்கெல்லாம் நமக்கு குடுத்து வக்கல சார்.
இயல்பாகத் தோன்றிடும் எண்ணங்களை அழகிய
பதிலளிநீக்குகவிதை வடிவில் தந்த விதம் அருமை!...மேலும்
தொடர வாழ்த்துக்கள் .
3965819C
பதிலளிநீக்குForum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
3CB3538C
பதிலளிநீக்குAliağa
Mudanya
Darıca
Karasu
İçmeler
Ürgüp
Menderes
Burhaniye
Seyhan