இன்றைய எழுத்தாளர் பலர் மானசீக குருவாக கருதுவது பாலகுமாரன் அவர்களைத்தான். நண்பரும் பதிவருமான 'வீடு திரும்பல் மோகன் குமார்' குமுதத்தில் பாலகுமாரனின் பேட்டி வெளியாகி இருந்தததாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தேன்.உடல் நலம் குன்றி உயிர்பிழைத்து எழுந்ததை திறந்த மனதுடன் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் முற்றிலும் குணமடைய வாசகர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.
*********************************************************
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் டீசலை திருட்டுத் தனமாக குறைந்த விலைக்கு விற்பது உண்டு.லாரி டிரைவர்கள் இதை வாங்கிப் பயனபடுத்திக்கொண்டு கணிசமான தொகையை தங்களுக்கு தேற்றிக் கொள்வார்கள்.
மேலும் டீசல் டாங்கர் லாரிகளில் டீசலின் அளவை சரிபார்க்க அளவுகோலை பயன்படுத்துவார்கள்.கொஞ்சம் டீசலை எடுத்து விட்டாலும் லாரியை வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் அது விரிவடைந்து முன்பிருந்த அளவையே காட்டும் இதை பயப்படுத்தி இந்த டிரைவர்கள் இந்த டீசலை விற்று காசு பார்ப்பார்கள்.
***************************************************************************************
இரும்புக் குதிரையின் நாயகன் விஸ்வநாதனிடம் அவன் மனைவி தாரிணி இத்தனை விஷம் கூடாது உங்களுக்கு என்று சொன்னதும் அமைதியுடன் எவற்றிற்கெல்லாம் விஷம் உண்டு எவற்றுக்கு கொம்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்குகிறான்.
அதன் விளைவாக எழுந்த கவிதை
குதிரை சொல்லும் ஏழாம் வேதம்
அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக;
கீச்சுப் பூனைகளும் கொண்டதிங்கே
கூறிய நகமும் பல்லும்;
யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் இங்கே கல்லாய் ஓடு;
பச்சோந்தி நிறத்தை மாற்றும்;
பல்லிவால் விஷத்தை தேக்கும்;
குதிரைகள் மட்டும் இங்கே
கொம்பின்றிப் பிறந்ததேன்?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விஷமில்லை;
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதைப் பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.
***********************************************************************************
பாலகுமாரனின் குதிரை வேதம் தொடரும்

நல்ல பகிர்வு. புத்தகத்தினை மீண்டும் படிக்கத்தோன்றுகிறது. :)
பதிலளிநீக்குஅருமை ! நன்றி ! (த.ம. 1)
பதிலளிநீக்குநல்ல பகிர்வு அருமை
பதிலளிநீக்குஇது தான் கடைசி பாடம் என நினைக்கிறேன் சரியா ஐயா?
பதிலளிநீக்குகுமுதம் படித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி
மிக்க நன்றி. ஆவலுடன் படித்தேன். நல்வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாகராஜ் சார்!
பதிலளிநீக்குஅருமை நண்பரே (TM 4)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்!
பதிலளிநீக்கு//செய்தாலி said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//மோகன் குமார் said...
பதிலளிநீக்குஇது தான் கடைசி பாடம் என நினைக்கிறேன் சரியா ஐயா?
குமுதம் படித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி//
இன்னும் மூன்று கவிதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நீள் கவிதை.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்குமார்
//kovaikkavi said...
பதிலளிநீக்குமிக்க நன்றி. ஆவலுடன் படித்தேன். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
மிக்க மகிழ்ச்சி௧தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குஅருமை நண்பரே (TM 4)//
வருகைக்கும் சளைக்காத கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!
hey....good....keep it up...
பதிலளிநீக்குவிருப்புடன் பிறந்த குதிரை
பதிலளிநீக்குகொம்பில்லை விஷமில்லை;
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதைப் பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்கு
சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.//
குதிரை ஏழாம் பாடம் மிக அருமை.
பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
2FBADB66CB
பதிலளிநீக்குTakipçi Satın Al
Footer Link Satın Al
Para Kazandıran Oyunlar
Stumble Guys Elmas Kodu
Kaspersky Etkinleştirme Kodu
C7F280AF17
பதிலளிநீக்குGörüntülü Sex
Whatsapp Şov
Görüntülü Show Uygulamaları