கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்
Excel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி?
Excel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி?
அரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள், கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர் மிகக் குறைவாகவே இருப்பார்கள். எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.
தேவை இருக்கும்போதுதானே தேடுதல் தொடங்குகிறது? நிறைய தடவை எக்செல்லில் பல்வேறு அட்டவணைகள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது.
மைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட எழுத்துக்களாக மாற்றும் வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.
நமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில add inகள் கிடைத்தது.
ஒவ்வொரு முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது.
மைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட எழுத்துக்களாக மாற்றும் வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.
நமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில add inகள் கிடைத்தது.
அவற்றில் ஒன்று
கஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண் வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல விஷயங்களை DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார்).
இதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.
SureshAddin.xla பதிவிறக்கம்
DIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.dq.winsila.com/
1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும்
2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க
3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக் செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே கொடுக்கவும்
இப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.
add in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்
add in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்
ஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக A1 செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்
அதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்
=rswords(A1)
இப்போது Rupees Fifteen Thousand Four Hundred Fifty Two And Paise Sixty Only
என்று மாறுவதை காணலாம்
A2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும் தெரிவதை பார்க்கலாம்.
A1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்
உதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால்
Rupees Ninety Eight Thousand Seven Hundred Sixty five and Paise Fifty Only என்று வந்து விடும்.
இதன் மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும்
வேறுசில Add in களும் உண்டு .
பயனுள்ளதாக இருந்ததா? உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.
எச்சரிக்கை: தமிழில் இது போல செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமைந்தால் பதிவிடுவேன்.
**************************************************************************************************************
கருத்துரைகள் உட்பட தினமும் எங்கெங்கு எந்தெந்த தளம் வாசிக்கிறேன் என்பதை Ms-Excel & Ms-Word மூலம் தினப்படி தானாகவே சேமித்துக் கொள்ளும் படி (Macro) செட் செய்து வைத்துள்ளேன்... (அந்தந்த File-களை Open-செய்து வைக்க வேண்டும்...!)
பதிலளிநீக்குஅவற்றை எல்லாம் வெளியிட வேகம் விவேகம் தொடரில் முடிவாகத் தான் வரும்... வரலாம்...! (எப்படி புரிய வைக்கிறது என்று தான் எனக்குப் புரியவில்லை... ஹிஹி...!
எதற்கும் கீழ் உள்ள தளம் "உதவுதா...?" என்று சொல்லுங்கள்...
http://therinjikko.blogspot.in/search?q=excel
இல்லையெனில் contact +91 9944345233 (or) dindiguldhanabalan@yahoo.com
நீங்கள் வல்லுநர் ஆயிற்றே! வலைதளத்தில் பல மாய ஜாலங்கள் புரிகீர்களே!
நீக்குநீங்கள் சொல்லும் தளத்தை உடனே பார்க்கிறேன். உங்கள் அளவுக்கு தொழில் நுட்ப அறிவு எனக்கில்லை. உங்கள் மேக்ரோ ரெக்கார்டிங்கை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மேக்ரோ பற்றி எளிமையான பதிவு ஒன்றை ட்ராப்டில் வைத்திருக்கிறேன்.
நன்றி
தமிழ் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம-2
நன்றி உஷா
நீக்குமிகவும் பிரயோசனமுள்ள பதிவு இது, மிக்க நன்றி...
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ சார்
நீக்குநல்ல பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி விமலன் சார்
நீக்குதமிழில் கற்று தன் அறிவை வளர்த்து கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் ,பகிர்வுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
பதிலளிநீக்குநன்றி மதுரை தமிழன்
நீக்குமிக உபயோகமான பதிவு TNM!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
நீக்குஇயற்கை தங்களுக்கு புதிய அறிவு வளத்தை கொடுக்கட்டும். அதன் பயன் எங்களுக்கும் இன்று போல் என்றும் கிடைக்கும்.
பதிலளிநீக்குநன்றி முருகபூபதி .
நீக்குஉங்கள் வலைப பக்கத்திற்கு வந்தேன். உங்கள் மகள் அதிக மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்துக் கருத்து தெரிவிக்க முயற்சி செய்தேன். உங்கள் கம்மென்ட் பிளாக்கர் கமெண்ட்ஸ் ஆக மாற்றினால் எளிதில் கருத்திட முடியும். கூகிள் + கமெண்ட்ஸ் செட் அப்பில் உள்ளது முடிந்தால் மாற்றவும்
தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளாதா?
பதிலளிநீக்குநிச்சயமாக செய்ய முடியும்.. முஹம்மட். .சாதாரணமாக காசோலின் அகலம் A4 தாளின் அகலத்திற்கு சமமாக இருக்கிறது. காசோலையை XEROX கொள்ளுங்கள் .அதில் முயற்சித்துப் பாருங்கள்
நீக்குபெயர் தேதி தொகை ஆகியவை காசோலையில் இருக்கும் தொலைவை அளந்து கொண்டு wORD இல் அதற்கேற்ப பேஜ் செட் அப் செய்து பிரிண்ட் எடுக்க முடியும்
ஒரு மாதிரியை விரிவாக இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.
புதிய தகவல்,பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி தினேஷ் சுந்தர்
நீக்குநன்றி தினேஷ்
நீக்குமிகவும் பயனுள்ள பதிவு. இதை மற்ற கரன்சிகளுக்கும் பயன்படுத்த முடியுமா? மைக்ரோசாஃட் இந்த வசதியைப் பற்றி யோசிக்காதது ஆச்சர்யம். நன்றி.
பதிலளிநீக்குமற்ற கரன்சிகளுக்கு இதை பயன் படுத்த முடியாது. ஒவ்வொரு கரன்சிக்கும் ADD IN கள் இணையத்தில் கிடைக்கக் கூடும். அல்லது கொஞ்சம் முயற்சி செய்தால் எக்செல்லில் நாமே உருவாக்கிக் கொள்ளலாம்
நீக்குமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...
பதிலளிநீக்குஇன்னும் நிறைய உங்களிடமிருந்து கற்று கொள்ள விரும்புகிறேன்
நன்றி கதிர்
நீக்குநானும் ரொம்ப நாளா எக்சல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..ஆனால் முடியவில்லை..நல்லதொரு பதிவு.
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பவே உதவும் பதிவு இது.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பதிவு அய்யா. நன்றி
பதிலளிநீக்குvery useful, thanks
பதிலளிநீக்குkalakal Murali nandri
பதிலளிநீக்குதங்கள் மூலம் தமிழ் நண்பர்களுக்கு மீண்டும் சென்றேன்..
பதிலளிநீக்குஇதப் பதிவு மிகுந்த பயனுள்ள பதிவு
ஒரு ஆண்டுக்கு முன் நண்பர் மதன் (ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) இத நிரலை மிகுந்த சிரமப்பட்டு எழுதினார். அவரது பள்ளியில் மாற்று சான்றிதழ் கூட கலர் பிரின்டவுட்தான். டேட்டா பர்த் இப்படி எழுதினார்.
அவரது சிரமம் இன்னும் எளிதாகி இருக்கும் இது தெரிந்திருந்தால்...
நன்றிகள்..
http://www.malartharu.org/2014/05/the-godzila-film-review.html