என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 2 ஜூன், 2013

குடும்ப சிந்தனை இல்லாதவர் சுஜாதா-திருமதி சுஜாதாவின் பேட்டி

     வாழும்போது பரபரப்பாக பேசப்படுபவர் பலர்.  அவர்களில் இறந்து பின்னரும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் சிலர். அந்த வரிசையில் இடம் பிடித்துவிட்டார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. நேற்றே இணையத்தில் பரபரப்பு தொடங்க ஆரம்பித்தது விட்டது.  முகநூலில் கசிந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு  ஜெயமோகனுக்கு சுஜாதாவின் ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்தை , வருண் "சுட்டி'க்காட்டினார்.  முக நூலில் அந்த  செய்தி சுஜாதா ரசிகர்களிடையே  கலக்கத்தை  உண்டாக்கியது. இந்த செய்தியை கேள்விப் பட்ட அவரது ரசிகர் ஒருவர்,உறவினராகவும் இருக்கக் கூடும் அவர் தவித்த தவிப்பு நமக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது. சுஜாதாவின் மனைவியின் பேட்டி தினகரனில் இன்று வெளியாக  இருப்பதையும் அந்த பேட்டி சுஜாதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கப் போகிறது அதை தடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில்  ஜெயமோகனிடம் வேண்டுகோள் விடுத்தார் ரசிகர் ஒருவர்.  ஜெயமோகனுக்கு அந்த செய்தி ஆச்சர்யம் அளிக்கவில்லை.  நான் அப்போதே சொன்னேன் அவரை ஒரு முறை அவர் வீட்டில் பார்த்தேன். நாமம் போட்டுக் கொண்டிருந்தார். அதை சொன்னபோது யாரும் நம்பவில்லை என்ற ரீதியில் பதிலளித்திருந்தார். 
அப்படி  திருமதி சுஜாதா பேட்டியில் என்னதான் சொல்லி இருந்தார்? 
தினகரனில் அந்த பேட்டியைப் பார்த்ததும் சற்று அதிர்ச்சி ஏற்பட்டது உண்மைதான்,
  ஏற்கனவே ஒரு முறை பேட்டியில் ஒரு முறை சுஜாதாவின் மனைவி தன கணவரைப் பற்றி அதிகம் எங்களுடன்கூட பேசமாட்டார் எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார் என்று சொல்லி இருப்பதாக ஞாபகம். 
   "அவர் எப்போதும் தனி உலகில் சஞ்சரிப்பார் என்றும் மனைவி குழந்தைகள் என்று நினைவு அவருக்கு இருந்ததில்லை என்றும், குடும்பத்தை தாண்டி பெண்கள் வெளியே வரக் கூடாது என்று நினைப்பவர்  என்றும்  "இந்தக் காலமா இருந்தா நான் அவரை விட்டு பிரிஞ்சி இருப்பேன்" என்றும் பலவித விஷயங்களை சொல்லி அதிர வைத்தார். அந்த பேட்டியில் ஒரு இடத்தில் கூட சுஜாதாவைப் பற்றி நிறைவாகச் சொல்லவில்லை திருமதி சுஜாதா. ஆயிரம் கதைகள் எழுதியும் அன்பைக் காட்டத் தெரியாதவராகவே வாழ்ந்தார் என்று அவர் கூறி இருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் இறப்புக்குப் பின்தான் தான் மகிழ்ச்சியோடு இருப்பது போல தெரிவிப்பதாக அமைந்துள்ளது. எந்தப் பிரபலத்தின் மனைவியும் இவ்வளவு குறைகளை கணவர் மீது அதுவும் இறந்தபின்னர் சொன்னதாக கேள்விப் பட்டதில்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தில் இருந்து இதற்கு மறுப்பு வெளியாகலாம்.

  ஆனால் இப்போது நன்கு படித்த அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று  அவர் சிந்திக்க இயலாதவராக இதைக் கூறி  இருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.   அறியாமையிலோ ஆற்றாமையினாலோ சொன்ன விஷயங்களை  இப்படி வெளியிடுவது  சரிதானா? என்று கேட்கிறார் முகநூலில் தன் கவலையை வெளியிட்ட அந்த வெளிநாட்டு  ரசிகர். இது தொடர்பாக திருமதி சுஜாதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசி இருக்கிறார்.அப்போது திருமதி சுஜாதா"எந்த பத்திரிகை என்ன  பேட்டின்னு கூட விசாரிக்காம சும்மா பேசிக்கொண்டிருந்தேன் கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" என்றாராம்  
    எந்த மனைவியுமே தன் கணவனை விட்டு பிரிந்து விட்டால் கூட நன்றாக இருக்கும் அல்லது இவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நம் வாழ்வு இன்னும் நன்றாக இருந்திருக்கும்  என்ற எண்ணம்  எப்போதாவது ஒரு முறையாவது  ஒரு பெண்ணுக்கு தோன்றக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.
     அதை இப்போது வெளிபடுத்தப் பட்டுள்ளதால் சுஜாதாவின் பிம்பம் இதனால் சிதையக் கூடும் என்று அவரது தீவிர ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். படைப்பையும் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கும் நமது வழக்கமே இதற்கு  காரணம். என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் புகழ் இதனால் குறைந்துவிடாது என்றே தோன்றுகிறது. புகழ் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தை கவனிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இது அவரது திறமைக்கோ, படைப்புகளின் புகழுக்கோ பெரிய குறைபாட்டை  ஏற்படுத்தி விடாது..

   எழுத்துகளில் நவீனம் காட்டுபவர்கள் வாழ்க்கையிலும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நாத்திகராகவோ அல்லது ஆத்திகராகவோ தன்னை காட்டிக் கொண்டதில்லை என்றாலும்  அவர் ஆழ்வார் பாசுரங்களின் மீது  காட்டிய ஆர்வம் அவரை ஆத்திகராகவே உணரச் செய்தது.
    குறிஞ்சி மலர் என்ற புகழ் பெற்ற நாவலை ( நான் படித்ததில்லை கேள்விப்பட்டதோடு சரி) எழுதிய நா.பார்த்த சாரதியின் மீது சில ஆண்டுகளுக்கு முன்  அவர்மீது குற்றசாட்டு எழும்பியது. அவர்கள் வீட்டில் கருவேப்பிலை செடி இருந்ததாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வந்து கருவேப்பிலை பறித்து செல்வார்களாம். அடிக்கடி இது போல் தொந்தரவு செய்ததால் கோபம கொண்ட நா.பா. கொதிக்கும் வெந்நீரை கொண்டு வந்து கருவேப்பிலை செடியின் மீது கொட்டி விட்டாராம். இந்த செய்தி குமுதத்தில் வந்தது என்று நினைக்கிறேன். மென்மையான பாத்திரங்களை படைத்த நா.பா அப்படி செய்திருபபார் என்பதை வாசகர்களால் நம்ப முடியவில்லை. பின்னர் அவருடைய வாரிசுகள் இதே செய்தி தவறு என்று மறுப்பு தெரிவித்ததாக நினைவு.
  அதே நிலைதான் இப்போது சுஜாதாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது.

    பணமும் புகழும் சம்பாதித்த சுஜாதாவின் நிலையே இது என்றால் தன் குடும்பத்தைக் கூட காக்க முடியாத சூழலில் இருந்த பாரதியின் நிலை எப்படி இருந்திருக்கும். செல்லம்மாவின்  மனமும் உண்மையில் பாரதியை வெறுத்திருக்குமோ/ 

   புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,   கூட தன் மனைவிக்கு சுதந்திரம் தரவில்லை என்று எங்கேயோ படித்த ஞாபகம். பள்ளி வயதில் படித்ததால் சரியாக நினைவில் இல்லை. உண்மையா என்றும் தெரியவில்லை.
    
   இது பிரபலங்களுக்கு  மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு பாடம். பணமும் புகழும் சம்பாதித்து லட்சக்கணக்கான வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக வலம்வந்த சுஜாதாவே மனைவியிடம் நல்ல பெயர் முடியாதபோது வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின்  எதிர்காலம் என்ன? கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிவிட்டுத்தான் சென்றுவிட்டது இந்த பேட்டி.

*******************************************************************************************

40 கருத்துகள்:

 1. சுஜாதா இறந்தபோது ஆனந்தவிகடன் பேட்டியிலும் திருமதி, சுஜாதாவைப் பற்றி நிறைவாக சொல்லவில்லை...!

  பதிலளிநீக்கு
 2. //பணமும் புகழும் சம்பாதித்து லட்சக்கணக்கான வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக வலம்வந்த சுஜாதாவே மனைவியிடம் நல்ல பெயர் முடியாதபோது வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின் எதிர்காலம் என்ன? //

  எதுவுமே அளவுக்கு அதிகமானால் பிரச்சனை தான்.....

  பதிலளிநீக்கு
 3. வெளி உலகில் பிரபலாமானவர்கள் பாடு வீட்டில் இப்படித்தான்!
  மனைவியின் பெயரிலேயே எழுதிக் கூட மனைவியிடம் நல்ல பெயர் வாங்க முடியவில்லை என்பது பரிதாபம் தான்.
  இவையெல்லாம் எழுத்தாளர் சுஜாதாவின் புகழை குறைக்காது.

  கடைசியாக ஒரு கேள்வி கேட்டீர்களே அது!

  பதிலளிநீக்கு
 4. ஆக அந்தளவு "புரிதல்" இருந்திருக்கிறது...

  பதிலளிநீக்கு
 5. முரளி,

  //வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிவிட்டுத்தான் சென்றுவிட்டது இந்த பேட்டி.//

  உங்களைப்போன்றவர்களுக்கு தான் அந்த பயமெல்லாம் வரும் :-))

  எதையாவது எழுதியே தீரனும் என வலைப்பதிவு,முகநூல்,துவித்தர்னு எழுதினால் அப்படியான நிலை வரத்தான் செய்யனும் :-))

  சுஜாதா என்னமோ உத்தமோ உத்தமர் போலவே பேசிட்டு இருக்கீங்க, காசு கொடுத்து வாங்கி படிச்சிங்களா ,அத்தோட கிளம்புங்க. கோடம்பாக்கம் போய் மீடியா டிரீம்ஸ்ல சுஜாத என்ன கிழிச்சார், அவர் என்ன செய்தார்னு ,பழைய மீடியா டிரீம்ஸ், பெண்டா மீடியா ஆளுங்களை கேட்டால் சொல்லுவாங்க, மோசடி வழக்கில் உள்ள போக வேண்டியவர், "பார்ப்பண" லாபியால் வெளியில் இருந்தார்,இப்போ அவர் மனைவி பேட்டிக்கே உத்தமருக்கு ஏற்பட்ட களங்கம்னு குதிக்கிறிங்களே :-))

  உண்மைய சொன்னா ரொம்ப நாறும், நீங்கலாம் ,ஹிட்ஸ் கு பதிவுனு போட்டு எழுதுவதே வேலைனு இருப்பதால் ரொம்ப யோசிப்பதில்லை :-))
  (இப்படி சொன்னது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம்,ஆனால் உண்மை இதான்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. why bring caste into this? It shows your culture

   நீக்கு
  2. மிஸ்டர் வவ்வாலு உங்கட கமெண்ட்களையும் ப்ளோக்ல இடையிடையே அடிக்கிற சுயதம்பட்டங்களையும் பார்த்தா நீங்க எதோ பெரிய சமூக சீர்திருத்தவாதி எண்டும் உங்கட ப்ளாக் ஏதோ பேஸ்புக் ரேஞ்சுல இருக்கிற நினைப்புல இருக்கிறா போல இருக்கு.இந்த நினைப்புல இருக்கிறதால தான் நீங்க திரட்டிகளில பதிவுகளை இணைக்கிறதில்ல போல.கொஞ்சம் நிஜவுலகுக்கு வாங்க.மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முதல் உங்கள திருத்தி கொள்ளுங்க.இந்த கமெண்ட்டக் கூட ஒழுங்கான முறையில அடிச்சிருக்கலாம் இப்படி மட்டவங்கள நோண்டி ஆக்கித் தான் நீங்க ஹிட்ஸ் வாங்குறதா முன்பு ஜெயதேவின் ஒரு பதிவில படிச்ச ஞாபகம்.இப்ப எனக்கும் அப்பிடி தான் தோணுது

   நீக்கு
  3. மிஸ்டர்/மிஸ், டினேஸு ஸுந்தரு,   நான் எப்போ சுய தம்பட்டம் அடிச்சேன்,அதை எப்போ நீர் பார்த்தீர்னு சொல்ல முடியுமா?

   ஃபேஸ்புக் என்பது பல்லாயிரம் பேர் பயன்ப்படுத்தும் சமூகவலைத்தளம், என் வலைப்பதிவு நான் மட்டுமே பயன்ப்படுத்தும் ஒன்று,நான் எப்படி ஒரு தனிப்பட்ட வலைப்பதிவு வைத்துக்கொண்டு ஒட்டும்மொத்தமா ஒரு சமூக வலைத்தளம் போல கிரெடிட் எடுத்துக்க முடியும், வித்தியாசம் புரியுதா?

   நான் என்னை திருத்திக்கிறது இருக்கட்டும் நீர் உம்மை திருத்திக்கொள்ளும், எனக்கு அட்வைஸ் பண்ண எப்படி முன் வருகிறீர்? எனக்கு அடுத்தவங்களுக்கு அறிவுறை சொல்ல தகுதி இல்லைனு சொல்லும் உமக்கு எனக்கு அறிவுரை சொல்ல தகுதி இருக்கா?

   //மட்டவங்கள நோண்டி ஆக்கித் தான் நீங்க ஹிட்ஸ் வாங்குறதா முன்பு ஜெயதேவின் ஒரு பதிவில படிச்ச ஞாபகம்.இப்ப எனக்கும் அப்பிடி தான் தோணுது//

   நாளைக்கே உம்மை அரைலூசுனு ஜெயதேவர் சொன்னால் அதனை நான் நம்பலாமா?

   அடுத்தவர் சொன்னார் அப்போ அப்படித்தான்னு நீர் நம்புவீர் அப்படியானால் உம்மை எவனாவது அரைலூசு என சொன்னால் நானும் நம்பிடுவேன்:-))

   நீரே திரட்டியில் இல்லைனு சொல்லிட்டீர் அப்புறம் ஹிட்ஸ் வாங்கி என்ன செய்யப்போறேன்? அலெக்சா ரேங்கில் வரக்கூட .காம்னு டொமைன் மாத்த ஜாவா ஸ்கிரிப்ட் சேர்க்கனும்,இல்லைனா வெளிநாடில் இருந்து ஹிட்ஸ் வராது :-((

   இம்முறை உம்மை போனாப்போவுதுனு விடுறேன் ,அடுத்த முறை இப்படி ஊடால வந்தா கொண்டே பூடுவேன் சொல்லிட்டேன் :-))

   நீக்கு
  4. பேர பார்த்தாலே ஆம்பிளை எண்டு தெரியுது தானே பிறகென்ன ஒரு மூளைகெட்ட கேள்வி.உண்மையா நான் தான் மிஸ்டர்/மிஸ் அப்படி போடிருக்கொனும்.வவ்வால் என்ற பெயரில் எந்த பாலும் இல்லையே.நான் பிளாக்கர் இல் இணைவதற்கு முதலே உமது பதிவுகளை படித்திருக்கேன்.நீரே உம்மை நோன்டியாக்குவது போல Indirect ஆய் ஒரு பதிவில் குறிப்பிடிருந்தீர்.இறுதிப் பதிவிலும்”சமூக அக்கறை உள்ள வவ்வால் இதை பார்த்துகொண்டிருந்தாரா? என்று சமூகம் கேட்காது” என்று குறிப்பிட்டிருந்தீர்.இவையெல்லாம் என்ன? மேற்கூறிய கமெண்ட் அறிவுரை கிடையாது எனக்கு தோன்றியதை சொன்னேன் அவளவு தான் .பேஸ்புக் கிற்கு எப்படி ஒரு விளம்பரம் தேவையில்லையோ அது போல் உமது ப்ளாக் இற்கும் ஒரு விளம்பரம் தேவையில்லை என்று நீர் நினைக்கிறீர் என்று தான் குறிப்பிடடேன்,ஜெயதேவ் அவ்வாறு கூறி பலகாலம் ஆனால் சிலகாலமாக அப்படி எனக்கு அவர் கூறியது சரியாயிருக்கும் போல் தோன்றியதால் தான் போட்டேன்.மற்றபடி அவர் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்பவன் கிடையாது.

   நீக்கு
 6. இது உண்மையாக இருந்தால் சுஜாதா மனைவியைப் பாராட்டுகிறேன். என்றைக்கோ சொல்லியிருக்கலாம், இருந்தாலும் தன் மனதில் புதைந்த குப்பையை எறியத் துணிந்தமைக்கு என் பாராட்டுக்கள்.

  எழுத்து பிடித்திருக்கிறது என்பதற்காக அவதாரம் போல் கொண்டாடுவது ஆச்சரியமாக இருக்கிறது - மனைவியின் பேட்டி வெளியாவதைத் தடுக்கும் எண்ணமா? ஒரு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட எண்ணத்தை வெளியிட தடைசெய்யத் துடிக்கும் இந்த ரசிகரின் முட்டாள்தனம் என்னை பல நாட்களுக்குச் சிரிக்க வைக்கும்.

  அதே போல் 'எனக்குத் தெரியும் சுஜாதாவின் ஹைட்' என்போர்களின் முட்டாள்தனமும்.

  சுஜாதா தனி வாழ்வில் எப்படி இருந்தால் என்ன? அவர் எழுத்துப் பிடித்திருக்கிறதா - தொடர்ந்து படிக்க வேண்டியது. இல்லையா.. தொலைக்க வேண்டியது.

  அதைவிட்டு அவர் மனைவியைப் பற்றி அவதூறாக எண்ணுவதும் எழுதுவதும் அநாகரீகம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. அந்தம்மா கொடுத்த பேட்டி ரொம்ப எதார்த்தமானது. கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை இல்லாமல் எப்படி இருக்கும்??? கணவனைப் பற்றி மனைவி தன் அம்மாவிடம் குறை சொல்வது நடக்கிறதில்லையா? சுஜாதா ஒரு எம் சி பி னு கண்டுபிடிக்கிறது அம்புட்டு கஷ்டமா?

  இதில் என்ன காமெடினா இவரு சுஜாதானு பேரில் எழுதியதாலே பெண்ணை மதிப்பவர், பெண்ணியவாதி னு பொய் சொல்லிக்கிட்டு திரிஞ்சவனுகளுக்கு எல்லாம் முகத்தில் அறை விழுந்து இருக்கு.

  இந்த எல் எ ராம், பொறுக்கி பொன்னம்பலம் முத்துக்குமார் லாம்(இவன் தி க காரனை கண்டமேனிக்கு திட்டுறதே இந்தப் பண்டாரத்துக்கு வேலை!) என்ன செய்றாணுக? என்னவோ ஊர் உலகத்திலே நடக்காததை என்னவோ எழுதிப்புட்டாப்புல பொலம்புறானுக! They can not accept any facts or WHAT?

  அந்தாளு ஜெயமோகன், இதான் சாண்ஸ்னு தான் சுஜாதாவைப்பற்றிச் சொன்னது சரி என்கிறதைத்தான் ஊது ஊதுனு ஊதித்தள்ளுறான். அந்தாளுக்கு சுஜாதா புகழ் நாறினால் என்ன? அந்தாளு சொன்னது சரினு சொல்லணும் அம்புட்டுத்தான். இதிலே சுஜாதா இவருக்கு ஹீரோவாம்! :))))

  நான் என்ன சொல்றேனா Just learn about other side of Sujatha and live with it!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கேயும் வந்துட்டியா ...நான் சொல்லல ஒனக்கு இந்த வாரம் இத வச்சு தான்னு...

   நீக்கு
  2. வாடா இணையதள சண்டியர் "சு"னா! ஆமா, நீ எங்க இங்க, வந்த? வந்தா, உன் கருத்தை சொல்லிட்டுப் போகணும்! புரியுதா??!! அதேண்டா அனானியாவே உங்க சண்டையர்த்தனத்தை காட்டுறீங்க? ஒருவேளை, இன்னொரு ரூபத்தில் "பெரிய மனுஷன்" போர்வையில் பதிவுலகில் வாழும் "பதிவுலகப் பொறுக்கியா" நீ?

   நீக்கு
  3. எனக்கு பட்டம் குடுக்கறது இருக்கட்டும் ....இவ்ளோ பேசுறியே...அந்தம்மா பேட்டி இவ்ளோ பெரிய இணையத்துல பரவலா இல்ல..எவனும் சண்டக்குசு உட்டாக்கூட எங்கிருந்தாலும் ஓடி வர்றீயே ??அந்த பேட்டிய எடுத்து போடுறது..ஒன்னயெல்லாம் நெனச்சாலே பாவமா இருக்கு தம்பி..

   நீக்கு
  4. ***sunaaJune 3, 2013 at 11:17 PM

   எனக்கு பட்டம் குடுக்கறது இருக்கட்டும் ....இவ்ளோ பேசுறியே...அந்தம்மா பேட்டி இவ்ளோ பெரிய இணையத்துல பரவலா இல்ல..எவனும் சண்டக்குசு உட்டாக்கூட எங்கிருந்தாலும் ஓடி வர்றீயே ??அந்த பேட்டிய எடுத்து போடுறது.. ஒன்னயெல்லாம் நெனச்சாலே பாவமா இருக்கு தம்பி..****

   எதுக்கு கஷ்டப்பட்டு எவன் எவனையோ நெனச்சுக் பாவப்படுற? ஊரைப்பத்தி நினைக்காதே முண்டம்! உன்னைப்பத்தி நினை! It is as simple as that moron!

   நீக்கு
  5. ***AnonymousJune 3, 2013 at 11:54 PM

   வருணாடா நீயி? பொறம்போக்கு நாயி.ஏண்டா தே-மவனே!எவன் கேள்வி கேட்டாலும் குறுக்க பூந்து பதில் சொல்லுறியே-நீ என்ன முரளிதரனுக்கு 'அந்த வகைல' குடுக்கிறவனா? இல்லே, நீதான் அவனா? பார்ப்பனன் மாதிரி எழுத்து நடை. ஆனா, பறயன விடக் கேவலமா 'மனுஷாளுங்களோட' நடந்துக்குற பன்னாடயாடா நீ? மூடிக்கிட்டு இருடா பன்னி.***

   இதை நீ அடிவாங்கிய "ஐ டி"லயே வந்து சொல்லியிருக்கலாமே? நாங்கல்லாம் உங்க அல்லாவுக்கே அல்லா! அனானியா வந்தா எங்கே அறை வாங்கினவன்னு எங்களுக்கு தெரியாதா என்ன? அடுத்தமுறை அல்லாட்ட உனக்கு மூளை ஒண்ணு வேணும்னு வேண்டிக்கோ! அது இல்லாதனால எல்லாருக்கும் தொந்தரவு பாரு! :)))

   வந்துட்டான் அனானி வேடத்திலே பழிவாங்க! :)))

   நீக்கு
  6. well said வருண்.

   இணையத்துல penis murthy பற்றிக் கூடத்தான் பரவலா விவரம் இல்லே.. அதுக்காக அதைப் பத்தி எழுதினா சண்டைக்கு வருவதா ஆகுமா SUNAA? அந்தம்மா பேட்டி கிடைச்சா இன்னும் விவரமா வருமுன்னு தோணுது.

   நீக்கு
 9. //புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கூட தன் மனைவிக்கு சுதந்திரம் தரவில்லை என்று எங்கேயோ படித்த ஞாபகம். பள்ளி வயதில் படித்ததால் சரியாக நினைவில் இல்லை. உண்மையா என்றும் தெரியவில்லை.//

  20, 25வருடங்கள் கூட இருக்கலாம்..பாரதி தாசனின் மனைவி திருமதி.பழனியம்மாள் பொதிகையில் பேட்டி கொடுக்கும் போது கணவரைப் பற்றி குறையே பட்டுக்கொண்டார்.
  தன்னை தவிர வேறு யாரும் அவருக்கு மனைவியாக இருந்திருக்க முடியாது என்றும் கூறிப்பிட்டார்.வீட்டில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியாமல் 10 பேருக்கு சாப்பாடு போட சொல்லுவார் என்று தன் மனக்குறையைக் கொட்டினார்.

  உண்மையைச் சொன்னால் அனேகமாக சென்ற தலைமுறைக்கும் அதற்கு முன்னிருந்த அனைத்துப் பெண்களுக்கும் இக்குறை இருக்கும்.குழந்தைகளை தூக்குவது கூட தெரியாத ஆண்கள் அதிகம். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை ஏதுவும் பெரிதாக இருக்காது.அதெல்லாம் பெண்களின் வேலை..அது போலவே பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றால் வீட்டை நிர்வாகிக்கும் வேலை அவர்கள் தலையிலும் விழலாம்.
  (இப்பொழுது பெண்கள் வீதிகளில் குழந்தைகளை தூக்கி நான் பார்க்கவில்லை..கணவர்கள் கையில் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.)

  நடிகர் சிவக்குமார் இதையே பெருமையாக கூறி மனைவியை பாராட்டி இருக்கின்றார்.வீட்டுப் பிரச்னை எதுவும் என்னிடம் வராமல் என் மனைவி பார்த்துக் கொண்டதால் என்னால் இந்த உயரம் வர முடிந்தது என்று இன்றும் பேட்டி கொடுகிறார்...

  வெறுமனே சுஜாதா மனைவி கூறிய பிரச்னையாக பார்க்காமல் அன்றைய சமுதாய அமைப்பு அவ்வாறே இருந்தது..நவீன காலத்திற்கேற்ப update செய்து கொண்டாலும் மனதில் ஏறிய சமுதாயப் பதிவுகள் மாறுவது கடினமே யாருக்கும்..

  ந.ஜெ.ஜெய புஷ்ப லதா.

  பதிலளிநீக்கு
 10. ****ந.ஜெ.ஜெய புஷ்ப லதா.***

  I am not going to deny or defend Bharathidasan. There are other instances where BD has been seriously criticized too.

  My quest is, How does it justify Rangarajan's attitude as Correct?! All it tells is that We have got more hypocrites and MCPS even before. One another was BD It will never make Sujatha as "gentleman" ever! You better get that!

  பதிலளிநீக்கு
 11. இது பிரபலங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு பாடம். பணமும் புகழும் சம்பாதித்து லட்சக்கணக்கான வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக வலம்வந்த சுஜாதாவே மனைவியிடம் நல்ல பெயர் முடியாதபோது வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிவிட்டுத்தான் சென்றுவிட்டது இந்த பேட்டி.//

  அருமை வேறென்ன சொல்ல ?

  பதிலளிநீக்கு
 12. இது என்னய்யா தில்லாலங்கடி வேலையா இருக்கு. சுஜாதா மனைவி உங்ககிட்ட வந்து பேட்டி குடுத்தாங்களா? எங்கேயோ பத்திரிகைல குடுத்த பேட்டிய வச்சு நாலு வரி சேர்த்துபுட்டா, அதெல்லாம் பதிவாய்டுமாய்யா...? நீங்க செஞ்சா அது சரி...இதையே அடுத்தவன் செஞ்சா அதுக்குப் பேரு காப்பி, பேஸ்ட்டாய்யா...?

  கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள், புதிர்கள் போன்ற புனைவுகளைத் தவிர மற்ற எல்லாமே ஒரு விதத்துல காப்பிதான்யா. செய்தியை,தகவல்களை புனைய முடியாதுய்யா..ஒன்றிலிருந்து இன்னொன்றாய் அது பரிணமிக்கும். விமர்சனங்களும் அப்படித்தான்யா.

  தமிழ்மணத்தில உள்ள பதிவுகளில் புனைவுகளைத் தவிர மற்றவை எல்லாமே காப்பி ரகம்தான்யா. பலபேரு கட்டுரை எழுதுறோம்னு சொல்லி, மொழிமாற்றம் செய்துக்கிட்டு இருக்கானுவ. இன்னொரு ரகம், மதத்தை இழுத்து சண்டை புடிச்சிக்கிட்டிருக்கானுக.

  ஒரு புதியவன் பிரபல்யமாவதையோ, ஓர் இஸ்லாமியன் முன்னுக்கு வருவதையோ இங்கேயுள்ள பெரும்பாலான பதிவர்கள் விரும்புவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறதய்யா.நல்லவனைக் கெட்டவனாகக் காட்டிக் கொடுப்பதோடு 'போட்டும் கொடுக்கும்' இந்த வக்கிரபுத்தி எப்போதுதான் ஒழியுமோ...?

  ஹமீது நாளிதழ்களைப் பார்த்து காப்பி பேஸ்ட் பண்ணாருன்னு உங்களால நிரூபிக்க முடியுமா...? சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வரலாமென்று போய்த் திரும்பினால், இங்கே நமக்கெதிராக மோசமான அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

  ஒரு சவால்...ஏதாவது ஒரு தலைப்பில் நானும் நீங்களும் சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ எழுதிப் பார்க்கலாமா...அதனை ஒரு பொதுத் தளத்தில் தீர்ப்புக்கு விடுவோமா..?

  பார்க்கலாமா, யார் வெற்றியாளர் என்று...?

  அன்புடன்,

  எஸ்.ஹமீத்

  (முன்னாள் 'இதயத்தின் ஒலி' பதிவர் )

  பதிலளிநீக்கு
 13. ஹமீது: உனக்கு என்ன வேணும் இப்போ?! சும்மா சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் கண்ட பதிவுலையும் வந்து ஒளறக்கூடாது! நீ பெரிய புடுங்கினா, யோக்கியன்னா இருந்துட்டுப்போ! எதுக்கு இங்கே வந்து ஒப்பாரி வைக்கிற?

  எங்கேயிருந்துப்பா வர்ராணுக இந்த லூசுப்பயலுக?! சம்மந்தா சம்மந்தம் இல்லால் வந்து பெரிய புடுங்கி, க்ரியேட்டர் பதிவெழுதிக் கிழிச்சுடுவேன்னு ஒளறிக்கிட்டு!

  பதிலளிநீக்கு
 14. ம்ம்ம் நான் இதை இப்போது தான் படித்தேன்

  பதிலளிநீக்கு
 15. வீட்டை மறந்துட்டு வெளில எவ்வளாவுதான் சாதிச்சாலும் இந்த கதிதான்

  பதிலளிநீக்கு
 16. நாம் ரசித்தது, படித்தது எல்லாம் சுஜாதாவை தானே. ரெங்கநாதனை அல்லவே?
  அவரது குடும்ப விசயங்களைப் பற்றிப் பேசுவது சரியா என்று தெரியவில்லை,அவரது மனைவியும், வீட்டு விசயங்களை வெளியில் பேசியிருக்கத் தேவையில்லை என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 17. ஒன்றை இழந்தால் தான்
  மற்றொன்றைப் பெற முடியும்!

  பதிலளிநீக்கு
 18. என்னைப் பொறுத்தவரை சுஜாதா ஒரு சிறந்த எழுத்தாளர் அவ்வளவு தான்.

  பதிலளிநீக்கு
 19. சுஜாதா ஒரு நல்ல எழுத்தாளர். அவர் மீதான எழுத்து பிம்பம் எந்த விதத்திலும் இது போன்ற செய்திகள் குறைக்காது. அவர் தனிப்பட்ட விதத்தில் இது போன்றிருந்திருப்பது தவறு. அவரவர் இந்த செய்தியை தனி மனித அவதூறாக செய்வது வருத்தம் தருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது சுஜாதாவைப் பற்றிய செய்தியே அல்ல நீங்களும் பிறரும் சொன்னாற்போல் அவர் எப்படி இருந்தார் என்பது நமக்குத் தெரியவும் தெரியாது, இந்தப் பேட்டியை வைத்து முழுமையாக judge செய்யவும் முடியாது.

   ஆனால், ஒரு பெண் இது போன்ற கருத்தை இத்தனை காலம் பொறுத்து வெளியிட்டிருக்கிறார் என்றால் அந்தக் கருத்துக்கான மதிப்பை வழங்க வேண்டும், மாறாக அவர் கருத்து பல ஆதர்சங்களைக் குலைக்கிறது என்ற பார்வையில் editorial எழுதுவது சரியா என்ற சர்ச்சையில் எல்லாம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது :)

   நீக்கு
 20. //இது பிரபலங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு பாடம். பணமும் புகழும் சம்பாதித்து லட்சக்கணக்கான வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக வலம்வந்த சுஜாதாவே மனைவியிடம் நல்ல பெயர் முடியாதபோது வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிவிட்டுத்தான் சென்றுவிட்டது இந்த பேட்டி.//

  ஹாஹாஹா, ரசிச்சுச் சிரிச்சேன், முரளிதரன். எங்கள் ப்ளாகிலே விவாதம் சூடு பறக்குது! :)))))

  பதிலளிநீக்கு
 21. ஒரு நல்ல விமர்சனத்தை பதிவு செய்து இருக்கின்றீர் . இந்த சமூக அமைப்பு எதோ ஒரு பிரபலங்களின் பின்னல் ஓடிக்கொண்டு இருக்கிறது ஒருவர் யார்க்காக வாழ்ந்தார் எந்த கண்ணோட்டத்தோடு வாழ்ந்தார் அறிஞ்சர் எண்ணின் இவரின் அறிவுத்திறன் பெரும்பான்மை மக்களுக்காக இருந்ததா அல்லது வரட்டுத் தனமான மேல்தட்டு சிந்தனையா என பார்க்கவேண்டும் . சமூகத்தில் சுஜாதா போன்ற படைப்பாளிகள் யாருக்காக எண்ணப் படைத்தார்கள் ...இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை எப்படி எனும் இருந்து விட்டுப் போகட்டும் அனால் சமூகத்திற்கு மாற்றத்திக்கு என்ன பங்களிப்பை செய்தார்கள் சிந்திக்க வேண்டியது நமது கடமையாகிறது ....

  பதிலளிநீக்கு
 22. அப்பப்பா! என்ன ஒரு பதிவு!..என்னவகையான கருத்துப் பதிவுகள்!.
  ஆழமாக வாசித்தேன் .மிக்க நன்றி.....
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 23. திருமதி சுஜாதா அவர்களின் ஆதங்கம் உணரப்படவேண்டியது. அலசப்படவேண்டியதல்ல என்பது என் கருத்து. இத்தனை நாள் கழித்து ஏன் சொன்னார் என்பது அர்த்தமற்றக் கேள்வி. இத்தனைக் காலம் கழித்துதான் அவர் எண்ணங்களை அச்சேற்றும் தருணம் அவருக்கு வாய்த்திருக்கிறது. இந்த வாய்ப்பு இன்னும் பத்து வருடங்கள் கழித்துக் கிடைத்திருந்தால் அப்போது அவரது மனக்குமுறல் வெளியாகியிருக்கும். வாழ்நாள் வரை கிடைக்காது போனால் அவர் எண்ணங்களும் இறுதிவரை வெளிவராமலேயே போயிருக்கும். பிரபலத்தின் மனைவி என்பதால் பரபரப்பை உருவாக்குகிறது பதிவு. இவரைப்போல் எத்தனை மனைவியர் தங்கள் ஆதங்கத்தை அடுக்களைக்குள்ளேயே அடைத்துவைத்திருக்கிறார்களோ...

  இறுதி வரிகள் சிந்திக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 24. கீதமஞ்சரியின் கருத்து நன்றாக இருக்கிறது.. நான் சொல்ல நினைப்பதும் அதுவே.

  பதிலளிநீக்கு
 25. வீடு என்பது முதல் முக்கியம்...

  தா.ம.௨

  பதிலளிநீக்கு
 26. //படைப்பையும் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கும் நமது வழக்கமே இதற்கு காரணம். என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் புகழ் இதனால் குறைந்துவிடாது என்றே தோன்றுகிறது. புகழ் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தை கவனிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இது அவரது திறமைக்கோ, படைப்புகளின் புகழுக்கோ பெரிய குறைபாட்டை ஏற்படுத்தி விடாது.. //

  Perfect !!

  கண்ணதாசன் ஒருமுறை இப்படி கூறியிருந்தார் , "ஒரு எழுத்தாளன் எழுதுவதை பின்பற்றுங்கள் எழுத்தாளனை பின்பற்றாதீர்கள்" இப்போ எனக்கு இதுதான் ஞாபகம் வருது !!

  பதிலளிநீக்கு
 27. Its one side of the coin where the other side is no more to reply. So it has no value for us to judge and why should we judge?sujatha's writtings can be discussed so elobarately which was put publicly. This issue is a kind of peeping into other s bathroom when it is willfully kept open. I think its not our business. Read Sujatha, dont peep into his bath room.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895