என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நிறம் வெளுத்துப் போகும் நிஜம்



பதிவுலகைப் பற்றி நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. கவிதையாக எழுதினால் என்ன?அதுவும் குறள் வடிவத்தில் எழுதினால் என்ன?  என்று தோன்றியதன் விளைவே  இந்தப் பதிவு.  எப்போதும் போல் சகித்துக் கொள்ளவும். ஹிஹிஹி 


  1.    கூகுள் வழங்கும்  வசதிகள்- செந்தமிழில்
        வாகாய் பதிவுகள் செய் 

  2.     கற்க  கணினி கசடற- கற்றுப் 
        பதிக தமிழில் பதிவு  


  3.     தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
        தொடர்ந்து பதிவு இடல்

  4.     முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
        பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
         
  5.     சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
        வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

  6.     தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
        நிறம்வெளுத்துப் போகும் நிஜம்

  7.     பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
        உன்பதி வும்களவு போம்

   8.          வயலில் விதைப்பார் விதைகள்       அதுபோல் 
               வலையில் விதைப்பாய் பதிவு 

   9.          எல்லை இலையே எழுதவா!       பதிவுலகம் 
                நல்ல பயிற்சிக் களம்   

  10.    கதவு திறந்து அழைக்கும் இணையம் 
         பதிவு பயனுறச் செய். 

**************



படித்து விட்டீர்களா?




46 கருத்துகள்:

  1. ஹா...ஹா...ஹா... எல்லாமே ரசிக்கும்படி உள்ளன.

    பதிலளிநீக்கு
  2. வலைக் குறளை ரசித்தேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. முரளி,

    அறியாத தகவல்களை பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றீ!

    த.ம.2014!

    பதிலளிநீக்கு
  4. பதிவுகள் பற்றிப் பதிவு சிறப்பே!
    அதிலும் குறட்பா அழகு!

    அருமை முரளி, அதில்ஒன்றே ஒன்று
    பெருமைக் குறைவாய் பிழை!

    “சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
    வலைக்கழகு சேர்க்கும் வடிவம்“

    ஈற்றசை மட்டும் இடிக்கிறதே அச்சீர்க்கு,
    மாற்றசை தந்தால் மகி்ழ்வு

    இனியேதும் சொற்பிழை இல்லை, முரளி!
    கணினியம்மன் செய்திடுவாள் காப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. template என்பதற்கு வேறு பொருத்தமான வார்த்தை எனக்கு தோன்றவில்லை. இன்றைக்குள் மாற்றி விடுகிறேன். இல்லையெனில் குறளையே மாற்றி விடுகிறேன்.

      நீக்கு
    2. வடிவு என்ற சொல்லை பயன்படுத்தினால் பொருந்துமா. சரியா என்பதை தெரிவிக்கவும் ஐயா!

      நீக்கு
    3. பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
    4. வடிவு சரியாகவே இருக்கும் என்று தோன்றுகிறது முரளி அய்யா.
      வடிவு என்பது முற்றியலுகரம் அதைக் குறட்பாவின் ஈற்றசையாக்க இயலாது எனினும், “கண்ணாரக் காணக் கதவு“ எனப் பழந்தமிழ்ப் பாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள் ( பூட்டுவில் பொருள்கோள் உதாரணப் பாட்டாகப் பள்ளியில் படித்த நினைவிருக்கிறதா?) தங்களின் வெளிப்படை கலந்த பெருந்தன்மைக்கு என் வணக்கமும், நன்றியும் அய்யா.

      நீக்கு
  5. நல்ல முயற்சி! (நிலவன் அண்ணா! இப்போ சந்தோசமா இருக்குமே?)
    எனக்கு நாலாவது குறள் ரொம்ப பிடிச்சிருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நாலாவது குறள் பிடிச்சதுன்னு தெரிஞ்சு போச்சு. அதன் படியே நன் நடந்து கொள்கிறேன்.

      நீக்கு
    2. நானும் இப்படி திருத்துபவள் தான். அது எனக்கு எழுதியது போல இருந்தது சொல்லவந்தேன்! உள்க்குத்தெல்லாம் இல்லை பாஸ்!

      நீக்கு
  6. நல்லா இருக்குங்க முரளிதரன்....அதிலும்
    எல்லை இலையே எழுதவா பதிவுலகம்
    நல்ல பயிற்சிக் களம்

    அருமையான குறள்...

    பதிலளிநீக்கு
  7. மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்
    http://yppubs.blogspot.com/2014/04/blog-post.html
    என்றவாறு எனது தளத்தில்
    தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான வலைக்குறள்கள்! இலக்கணமுடன் எழுதியது இன்னும் மிகச்சிறப்பு! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. ஆஹா வலையுலக வள்ளுவரே குறள் சூப்பர் திருவள்ளுவர் இருந்தால் என்ன சொல்வார் தன் வாரிசு என்று மகிழ்ந்திருப்பரோ!
    தொடர வாழ்த்துக்கள் ...!
    என் வலைதளப்பக்கம் வாருங்கள் புதிய முயற்சி அங்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு மூன்றாவது குறள் பிடித்திருக்கிறது. ஏழாவது குறள் எல்லோருடைய அனுபவத்தையும் சொல்லுகிறது.
    அருமையான முயற்சி. தொடருங்கள். 1330 குறள்கள் வரட்டும்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. கற்க கணினி கசடற- அது தேவையா
    வலையில் பதிவெழுத.?

    பதிலளிநீக்கு
  12. நல்ல முயற்சி. பாராட்டுகள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான முயற்சி.பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  14. //3. தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
    தொடர்ந்து பதிவு இடல்

    4. முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
    பின்னூட்டம் பார்த்துத் திருத்து.//

    மிகவும் ரஸித்தேன்.

    பதிலளிநீக்கு

  15. வணக்கம்!

    கணினியை எண்ணிக் கவிபடைத்தீர்! மின்னும்
    அணியினை அள்ளி அளித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு முயற்சி! திருவள்ளுவரே இருந்திருந்தால் கூட உங்களை வாழ்த்தி மெச்சியிருப்பார்! ஐயோ என்ன இது எனக்குப் போட்டியாக நிறைய பேர் கிளம்பியிருக்காய்ங்களோ என்று கூட நினைத்திருக்கலாம்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. மூங்கில் காற்றாக நவீன குறளிசை !!

    பதிலளிநீக்கு
  18. அட.... அசத்திட்டீங்க போங்க. எல்லா [நவீன] குறளும் அருமை. இன்று முதல் இளைய வள்ளுவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுவீராக. நா.முத்துநிலவனின் கருத்து அருமை. 2, 3, 4, 6 ஆகிய குறள்கள் அருமை. என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895