முந்தைய பகுதி -1
கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை. சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதைக் குறை கூறி இப்படி தலையங்கம் எழுதியதாம்.
"ஏற்கனவே மக்கள் வரிச் சுமையால் அவதிப் படுகிறார்கள்.அப்படி இருக்க மதிய உணவு போடுவதற்கு என்று மேலும் ஒரு வரி எவ்வளவு சிறியதாயினும் முதுகெலும்பை முறித்துவிடும். சமுதாயத்தின் பொருளியல் நிலையை வளர்த்தால் மற்றதெல்லாம் சரியாகி விடும் " என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது
ஆனால் மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. காமராஜர் சொன்னபடி விரிவாக பல்வேறு கூறுகளை ஆராய்ந்து திட்டம் தீட்டினார் இயக்குநர் நெ.து.சு.
கல்வித் துறைக்கு தீட்டப்பட்ட பிற திட்டங்களை ஏற்றுக்கொண்ட உயர் அலுவலர் குழு மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் தயக்கம் காட்டியது. அவர்களுக்கு உரிய விளக்கங்களை அளித்தார் இயக்குநர்.
விளக்கத்தை கேட்ட திரு வர்கீஸ் என்ற அலுவலர் "உங்கள் திட்டம் சிறப்பானதுதான். மாநிலம் தழுவிய அளவில் இப்படி ஒரு திட்டம் இந்தியாவில் எங்கும் நடத்திய படிப்பினை இல்லை. அதிக செலவு பிடிக்கும் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை இந்திய அரசு கொடுக்கும் என்ற உறுதி இல்லை . நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பகல் உணவு திட்டத்தை மட்டும் ஒத்தி வைக்கலாமென்று இக் குழு பரிந்துரைக்கும் . அதற்கு இசையுங்கள் அடுத்த ஆண்டு யோசிப்போம் ' என்றார்.
நெ.து.சு சம்மதிக்க வில்லை. விடாப்பிடியாக, "பள்ளிகளில் அதிகமான பேர்கள் சேர வேண்டும் என்று தலைவர்கள் நினைக்கிறார்கள் . அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு மதிய உணவு இன்றியமையாதது
"சேர்க்கைக் குறியீட்டை அப்படியே வைத்துக் கொண்டு வெற்றி பெற ஏழை பிள்ளைகளுக்கு சோறு போடுவது ஒன்றே வழி
"மேலும் இலவச பாடநூல்,எழுதுபொருள் போன்றவை அதிக அளவில் உதவாது என்பதை கண்கூடாக கண்டிருக்கிறோம்.எனவே தயவு செய்து மதிய உணவு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று வாதாடினார் நெ.து.சு
குழுவினரோ தொடர்ந்து வெவ்வேறு காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்தனர் . ஆனாலும் இயக்குநர் சளைக்கவில்லை கடைசி துருப்புச்சீட்டை வீசினார் " இது முதலமைச்சரின் திட்டம் இதை நிறைவேற்ற வேண்டும் என்று முழுமனதாக நினைக்கிறார். தனியார் பள்ளி நிர்வாகிகள் மாநாட்டில் நாடறிய அறிவித்துள்ளார். அதற்காக புது வரி கூட போடலாம் என்றுகூட தெரிவித்தார் . முன்னதாக என்னிடமும் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு திட்டம் தீட்டச்சொன்னதும் அவரே"
மேலும் "நீங்கள் இது பற்றி ஒருமித்த கருத்து கொண்டிருப்பதால் திட்டத்தை கைவிட குழு கருதுகிறது, ஆனால் இயக்குநர் அடம் பிடிக்கிறார் என்று அறிக்கையில் எழுதி விடுங்கள் அது போதும் " என்றார் அழுத்தமாக
இதற்கு பலன் கிடைத்தது .
"இது தொடர்பான முடிவை அமைச்சரவைக்கு விட்டு விடுவோம் அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதன் படி செய்வோம் . இதை இயக்குநர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் " என்றார் நிதிச் செயலாளர்.
திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை விட இதுமேல் என்று இசைந்தார் நெ.து.சு சில வாரங்களில் அமைச்சரவை கூடியது. கல்வித்துறை திட்டங்கள் பற்றி ஆலோசனை தொடங்கியது
நிதிச் செயலர் தொடங்கினார், "கல்வித்துறை திட்டங்கள் சிறப்பாக தீட்டப்பட்டுள்ளன. தனித் தனியாக பார்க்கும்போது குறையேதும் இல்லை. புதிய திட்டமான பகலுணவு திட்டம் பற்றி மட்டும் நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்கவேண்டும் . இப்படி ஒரு திட்டத்தை எந்த மாநில அரசும் செய்ததில்லை. பல்லாயிரக் கணக்கான சிற்றூர்களில் சோறு போடுவதை கண்காணிக்க முடியுமா?. அதற்கு எவ்வளவு பெரிய அமைப்பு தேவை எவ்வளவு செலவாகும்? செலவுத் தொகை ஆண்டுக்காண்டு பெருகிக் கொண்டே போகுமே . பல சிக்கல்கள் கொண்ட இத் திட்டத்தை தொடங்குவதற்கு பதில் ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்துவதும் விரைவு படுத்துவதும் போதுமானது என்ற கருத்தே நிலவுகிறது ." என்று முதலமைச்சரிடம் சொல்லிவிட்டு திட்டத்தைப் பற்றி இயக்குநரை விளக்கச் சொன்னார்.
நெ,து சு நிதானமாக திட்டத்தை விளக்கினார் . அதன் அவசியத்தை வலியுறுத்தினர் ".................... இத் திட்டம் இருந்தால்தான் சேர்க்கை குறியீட்டை எட்ட முடியும், இல்லாவிட்டால் பழையபடி தொடக்கப் படிப்பும் ஏழைகளுக்கு எட்டாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது." என்று முடித்தார். அமைச்சரவைக் குழுவுக்கு தலைமை தாங்கிய காமராசரோ, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமோ வேறு அமைச்சர்களோ வாய் திறப்பதற்கு முன்பாக அங்கு இருந்த மூத்த செயலாளராகிய வருவாய்த் துறை செயலாளர் ஆர்.எம்.சுந்தரம் குறுக்கிட்டார்
"இது இன்று எனக்கு சம்பந்தம் இல்லாதது என்றாலும் ஒரு காலத்தில் இத்தகைய திட்டத்தோடு எனக்கு தொடர்பு இருந்து. நான் லேபர் கமிஷனராக இருந்தபோது நலத்துறை பள்ளிகளில் இருந்த பகல் உணவு திட்டத்தை கண்காணித்திருகிறேன். அப்பள்ளிகளில் போட்ட பகல் உணவால் கான்ட்ரக்டர்கள் பிழைத்தார்கள் , ஆசிரியர்கள் பிழைத்தார்கள். மாணவர்க்கு கிடைத்த பலன் கொஞ்சமே. ஓராயிரம் பள்ளிகளில் விரயம் ஆவதைப் பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாமென்று சொல்வது என் கடமை . இத் திட்டத்தை கைவிடுவதே நல்லது." என்று முடித்தார்.
உடனே காமராசர். "இயக்குநர் இதை குறித்துக் கொள்ளட்டும் விரிவான ஆணை பிறப்பிக்கையில் மறந்து விடாமல் இதையும் ஆணையில் சேருங்கள் . கான்ட்ரேக்ட் முறையில் நடத்தக் கூடாது. வேறு வழியை யோசித்து சொல்லுங்கள் "
என்று சொன்னதும் மீண்டும் சுந்தரம் சொன்னார் பாருங்கள்! அதைவிட ஆசிரியர்களை இழிவு படுத்த முடியாது என்பது சந்தேகமே
"மாணாக்கர்கள் சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்களே சாப்பிட்டு விடுவார்கள் . மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்" என்றார்.
முதலமைச்சர், கருணை மனதுடைய காமராசர் இயக்குநரைப் பார்த்து சொன்னார் " உங்கள் திட்டத்தில் ஞாபகமாக ஒரு விதி சேர்த்துவிடுங்கள் . ஆசிரியர்களும் பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.அந்தக் கூடுதல் செலவு நியாயமானது ஏற்றுக் கொள்வோம்."
ஒப்பிட்டுப் பாருங்கள் கற்றுத் தேர்ந்த சுந்தரம் ஐ.சி.எஸ் இன் குறுகிய மனமும் படிக்காத மேதை காமராசரின் பரந்த மனதையும்.
இறுதியாக கொள்கை அளவில் பகல் உணவு திட்டம் ஏற்கப் பட்டது.
திட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக இயக்குநர் அவர்கள்
தூத்துக்குடியில் ஒரு ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் ".... தமிழ் நாட்டு கிராமப் பழக்கம் என்ன? பயிரிட்டு அறுவடை செய்து பின்னர் முதல் அளவை சாமிக்கும், இரண்டாம் அளவை ஊர்க் காவலர்க்கும் மூன்றாவது அளவை உறவினர்களுக்கும் ஒதுக்குவது வழக்கம். இதில் சிறு மாறுதல் செய்யுங்கள் மூன்றாவது அளவையை பள்ளி அன்னதானத்துக்கு என்று மாற்றுங்கள் ஏழை மாணவர்கள் பசியாற உண்டு உங்களை வாழ்த்துவார்கள்.." என்று கூற அது ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு பொது மக்கள் மத்தியிலும் செய்தி பரவியது. கோவில்பட்டிக்கு அருகில் நாகலாபுரம் என்ற ஊர் மக்கள் மதிய உணவுதிட்டத்தை செயல்படுத்த முனைந்தனர். இச் செய்தி காமராஜரின் காதுக்கு எட்டியது . இயக்குநரின் அருமையான பேச்சைப் பாராட்டியதோடு மேலும் பல ஊர்களுக்கு சென்று திட்டத்தை தொடங்கும்படி முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று பணித்தார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் கல்வி அமைச்சர் சி சுப்பிரமணியம் அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆர்வம் இல்லை. அதே சமயத்தில் எதிர்க்கவும் இல்லை . அவர் நெ.து.சு அவர்களிடம் "உங்கள் நிலை தர்ம சங்கடமானது . முதலமைச்சர் சொன்னதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். நீங்கள் சொல்வதற்காக பல ஊர்களில் ஊர்க்காரர்களைக் கொண்டு தொடங்குவார்கள். அப்புறம் மூடிவிடுவார்கள். உங்களுக்கு பழி வந்து சேரும் . இருந்தாலும் தொடங்குங்கள் ஆனால் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்." என்று அறிவுரை கூறினார் .
கல்வி அமைச்சரின் வார்த்தைகள் கலக்கமூட்டின என்றாலும் முயற்சிகளைத் தொடர்ந்தார் .
கோவில் பட்டிப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் காமராசர் . அப்போது பலர் இயக்குநர் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு மதிய உணவு போடுவதற்கான ஆயத்தங்களை செய்து வைத்திருப்பதாகவும் இயக்குநர் வந்து தொடங்குவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முதல் அமைச்சரே இருக்கிறார் அவரே தொடங்கி வைக்கலாம். ஆனால் இயக்குநருக்காகக் காத்திருக்கிறோம் என்று சொன்னதும் சிறிதும் கோபப் படவில்லை காமராசர். சென்னைக்கு வந்ததும். " நெ. து. சுவை அழைத்து நிறைய ஊர்களில் பள்ளிகளில் மதிய உணவு போட ஏற்பாடு செய்து விட்டு உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். உடனே சென்று தொடங்கி வையுங்கள். அதைப் பார்த்து இன்னும் பல ஊர்களுக்கும் இத்திட்டம் பரவும் என்றார் அமைதியாக .
எவ்வளவு பெரிய திட்டம் இதற்கு முன்னோடியான அவர் திறந்து வைக்காமல் தன்னை அனுப்ப நினைக்கும் காமராசரின் பெருந்தன்மையைக் கண்டு நெஞ்சாம் நெகிழ்ந்தார் நெ.து சு.
"ஐயா, இத் திட்டத்தை தங்கள் தொடங்கி வைப்பதே முறையானது .தக்க ஏற்பாடுகளை செய்து விட்டு தங்களை அழைக்க நினைத்தேன். தாங்கள் முந்திக் கொண்டு என்னை அனுப்புகிறீர்கள்.தயவு செய்து நீங்கள் வந்து மதிய உணவு மையங்களை திறந்து வைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். பலமுறை வற்புறுத்திய பின்னே காமராஜர் இசைந்தார்.
முதலில் பாரதி படித்த எட்டயபுரம் மன்னர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் காமராஜரைக் கொண்டு பகலுணவு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது , ஆனால் எதிர்பாரா விதமாக முதலமைச்சர் சென்னையில் இருக்கவேண்டி இருந்ததால் இயக்குநரையே அனுப்பினார். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஊர்ப் பள்ளிகளில் பகலுணவு தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன .அடுத்த நாள் வருவதாக காமராசர் தெரிவித்தார்.
முதல் மையம் தொடங்கப் பட்டது. அடுத்த நாள் முதல் நிகழ்ச்சியாக ஒரு பாலத்தை திறந்து வைத்து விட்டு அக் கூட்டத்தில் பேசினார் முதலமைச்சர் காமராஜர். அங்கு பாலம் பற்றியோ போக்கு வரத்து பற்றியோ அதிகம் பேசவில்லை .அவரது எண்ணம் முழுவதும் ஏழைக் குழந்தைகளில் கல்வி மீதே இருந்து .
"....... யாருக்காக விடுதலை பெற்றோம் கடையரும் கடைத்தேறவே விடுதலை. அது எப்படி சாத்தியமாகும் கல்வி இல்லாமல் .... பிள்ளைகள் வயிறு காய்ந்து கிடந்தால் படிப்பு எப்படி வரும் . பள்ளிக்கு வருகிற ஏழை பிழைகளுக்கு சோறு போட்டால் , நாம் தவறவிட்ட படிப்பு, வரும் தலைமுறைகளுக்காவது கிடைக்கும்.... எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை எனக்கு வேறு இருப்பதாக நான் கருதவில்லை, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஊர் ஊராக வந்து பகல் உணவு திட்டத்துக்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன்" என்று உணர்ச்சி பொங்கக் கூற கூட்டம் தன்னை மறந்து எழுப்பிய கைதட்டல் ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது.
இவ்வண்ணம் மூவாயிரம் ஊர்களில் பகலுணவு திட்டம் தொடங்கியது.தனது எண்ணம் ஈடேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். "பொது மக்களால் எது செய்ய முடியும் என்று தெரிந்து அதை அவர்களிடம் சொல்லத் தெரிந்தவர்" என்று நெ.து.சுவை மனமார பாராட்டினார் காமராசர். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர் .
வேலூர் நகராட்சிப் பள்ளிகளில் பகலுணவு திட்டம் செயல் படுத்த வேண்டுகோள் விடுக்கப் பட்டது . நோட்டீசில் நெ.து.சு.வின் பகல் உணவு திட்டத்திற்கு உதவுங்கள் என்று அச்சடிக்கப் பட்டிருந்தது,
அது முதல்வரின் கவனத்திற்கு வந்தது . அந்த நோட்டீசை பார்த்தார் காமராஜர் . நெ.து.சு திட்டம் என்று அடிக் கோடிடப் பட்டிருந்தது.
முதலமைச்சர் கோபம் கொள்ளவில்லை மாறாக, "பகல் உணவு திட்டம் நடக்கிறது.அரசு அதற்கு பொறுப்பேற்கவில்லை. செலவு செய்யவில்லை. தடுக்கவும் இல்லை.இயக்குநருக்குக் கட்டுப்பட்டு நடத்துகிறார்கள். அப்புறம் அவர் பெயரில் நடந்தால் எப்படிக் கசந்து கொள்ளலாம்" என்று நிதி அமைச்சர் காதில் விழும்படி கூறினார்.
காமராஜரின் உயர்ந்த உள்ளத்தை என்னென்பது. இப்படியும் ஒருவர் இருக்கமுடியுமா?
இன்னும் பல்வேறு நடைமுறைகளுக்குப் பின் 01.11.1957 முதல் பகல் உணவுத் திட்டம் அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாகிவிட்டது .
இன்னும் இத்திட்டம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 57 ஆண்டுகளுக்குப் பின் நிலை எப்படி இருக்கிறது? இன்று மதிய உணவு சத்துணவாக மாற்றம் பெற்றுள்ளது, தினந்தோறும் முட்டை வழங்கப் படுகிறது, நகர்ப் புறங்களில் சத்துணவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும். இன்றும் இதை நம்பி வரும் ஏழைக் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பல்லாயிரம் பேரை பள்ளிக்கு வரவழைத்த பெருமை காமராஜர் தொடங்கிய பகலுணவு திட்டத்தையே சாரும்.
அதை உறுதியாக செயல்படுத்திய டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் .
நன்றி: நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்"
அதை உறுதியாக செயல்படுத்திய டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் .
நன்றி: நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்"
*******************************************************************
பின்குறிப்பு: இது சுவாரசியம் இல்லாத பதிவாக இருக்கக் கூடும் . ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
முதல் பகுதி
பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன் 1
முதல் பகுதி
பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன் 1

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குசிறந்த பதிவு
நன்றி ஐயா
நீக்குபதிவில் சுவாரசியம் இல்லாவிட்டால் என்ன ஐயா
பதிலளிநீக்குதமிழ் நாட்ட இளைஞர்களினை தலையெழுத்தையே மாற்றிய நிகழ்வல்லவா
காமராசர் இல்லையேல் இன்றைய நிலைமை எப்படி இருந்திருக்கும்
நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறதல்லவா
நன்றி ஐயா
ஆம் ஐயா
நீக்குதம 1
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமதிய உணவு திட்டம் என்றாலே எனக்கு பெருந்தலைவர் காமராஜரோடு நெ.து.சுந்தர வடிவேலு அவர்களும் நினைவுக்கு வருவார். இருவருமே இன்றைய சத்துணவுக்கு முன்னோடிகள். நெ.து சுந்தரவடிவேலுவைப் பற்றி ஒரு பதிவு எழுதவும். மக்கள் மறந்த வரலாற்றை வலைப் பதிவினில் எழுத பொருத்தமானவர் நீங்கள்தாம்.
த.ம.1
கரந்தையாரும் நானும் ஒரே சமயத்தில் வாக்களித்ததில் எனது வாக்களிப்பு என பின்தங்கி விட்டது என்று எண்ணுகிறேன். த.ம.2 என்று எடுத்துக் கொள்ளவும்.
நீக்குபரவாயில்லை ஐயா அப்படிக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை..நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று அறிவேன்.
நீக்குஏதேச்சையாக இணைத்தில் கிடைத்த நினைவலைகள் என்ற நூலைப் படித்தேன் அதன் பாதிப்பே இந்தப் பதிவு
நீக்குஇது சுவாரஸ்யம் இல்லாத பதிவா? முரளி... அப்படிச் சொல்லாதீர்கள். படிக்கும்போது சில இடங்களில் கண்கள் கலங்காத குறை. இது மாதிரி மனிதர்களை அரசியல் இனி சந்திக்குமா? பாராட்டுகள் முரளி.
பதிலளிநீக்குஅண்ணா!தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு#அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்#
மறக்கக் கூடாததும்கூட.
வணக்கம்
பதிலளிநீக்குமுரளி (அண்ணா)
கல்விக்கண்னை திறந்த நாயகன் பற்றிய வரலாற்றை படிக்க படிக்கமனம் சலிப்படையவில்லை மிக அருமையாக கூறியுள்ளீர்கள்
த.ம5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுவாரஸ்யத்தை விடுங்க... படிக்காத மேதையின் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்... நன்றி...
பதிலளிநீக்குபிள்ளைகளோடு சேர்ந்து சத்துணவு பணியாட்களும் இத்திட்டத்தால் பயனடையுறாங்க. எங்க ஊர்ல பாமாயில் 50ரூபாய், து.ப-45 ரூபா, அரிசி -5 ரூபா, முட்டை 3ரூபாய்க்கு சத்துணவு பணியாட்களால் விற்கப்படுது.
பதிலளிநீக்கு#அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.#
பதிலளிநீக்குநானும் இதனை வழி மொழிந்து வாசகர் பரிந்துரைக்கு பரிந்துரைக்கிறேன் !
த ம 7
காமராஜரின் மதிய உணவு திட்டம் பற்றி தெரியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவிய அற்புதமான பதிவு.
பதிலளிநீக்குபல்லாயிரம் பேரை பள்ளிக்கு வரவழைத்த பெருமை காமராஜர் தொடங்கிய பகலுணவு திட்டத்தையே சாரும்.
பதிலளிநீக்குஅதை உறுதியாக செயல்படுத்திய டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் .//
அருமையாக சொன்னீர்கள்.
கல்வி தந்தை, தன்னலமற்ற தலைவர், கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கும், டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கும், நன்றிகள் பல.
சிவாகாசியில் பள்ளியில் படிக்கும் போது காமராஜர் கையால் பென்சில் , ரப்பர் வாங்கியதை மறக்கவே முடியாது.
நல்ல பதிவை தந்த உங்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇப்போது காமராஜர் இருந்தால் உயர்வு தாழ்வினை ஒழித்துக்கட்ட அனைவருக்கும் சம உணவு கல்வி, யூனிஃபார்ம். போன்றவை இலவசமாக வழங்கினால் சிறார்கள் மனதில் ஏற்ற தாழ்வு எண்ணங்கள் முளை விடாது என்று வலியுறுத்த முயன்றிருப்பேன் என்று தோன்றுகிறது. கல்வியை வியாபாரிகளிடம் இருந்து மீட்க வேண்டும். என் சில பதிவுகளில் நான் எழுதி வருவதன் சுருக்கமே பின்னூட்டமாகி இருக்கிறது. எழுதத் தூண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்று வெற்றி நடை போடும் சத்துணவு திட்டத்தின் முன்மாதிரியான இந்த அருமையான திட்டம் நிறைவேற காமராசரும் நெ.து,சுவும் உழைத்தமைக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை! இது அன்றைய சூழலை அப்படியே படம் பிடிக்கும் அற்புதமான சுவாரஸ்யமான பதிவுதான்! நன்றி!
பதிலளிநீக்குநல்ல செய்தி மட்டுமல்ல பலரும் அறியாத உண்மைகள்! அறியச் செய்தீர் நன்றி!
பதிலளிநீக்கு"பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்!.." - அந்த அளவுக்கு மனிதநேயம் ஐயா காமராஜர் அவர்கள் மனதில் ஒளிர்ந்திருக்கின்றது..
பதிலளிநீக்குபெருந்தலைவர் அவர்களையும் திரு நெ.து.சு. அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுளோம்.
இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..
பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்
பதிலளிநீக்குஇவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துருக்காவிட்டால் நம்மைப் போன்றவர்கள் இந்த நிலைமைக்கு வந்து இருப்போமா? என்பது சந்தேகமே?
பதிலளிநீக்குபெருந்தலைவரைப் பற்றிய பல அரிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். நன்றி.
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட ஒரு பெருந்த்தலைவர் இனி வருவாரா? சாத்தியமில்லை!
பதிலளிநீக்குஇப்போதும் இருக்கின்றார்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், விளம்பரம் செய்து கொண்டு!
இது சுவாரசியமில்லாத பதிவாய் இருக்கலாம் என்று எப்படிச் சொல்வீர்கள் நண்பரே! இது எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு.....இப்போது ஆள்பவர்கள் உட்பட....அவர்கள் மறந்திருந்தால் இப்பதிவைப் படித்து மனதில் பதிய வைக்கட்டும்!
மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
பதிலளிநீக்குநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images
பதிலளிநீக்குவணக்கம்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எங்கள் முரளிதரன் சங்கத் தமிழினிமை
பொங்கும் தமிழனெனப் போற்று!
அன்பு முரளிதரன் ஆய்ந்த கருத்தெல்லாம்
இன்புறச் செய்யும் இனிப்பு!
வல்ல முரளிதரன் வண்ண வலைப்பதிவின்
செல்ல மகனெனச் செப்பு!
நண்பர் முரளிதரன் நன்மூங்கில் காற்றானார்
பண்ணின் இனிமை படைத்து!
இன்தேன் முரளிதரன் ஈடில் தமிழாகப்
பொன்போல் வாழ்க பொலிந்து!
கன்னல் முரளிதரன் கற்கண்டுப் பாக்களையே
என்றும் பொழிக இனித்து!
வெல்க முரளிதரன் மேன்மை நெறியேற்று
மல்க புகழுடன் மாண்பு!
இனிய முரளிதரன் எல்லாம் அடைந்து
கனிபோல் சுவைவளம் காண்!
சீரார் முரளிதரன் செந்தமிழ் காக்கின்ற
பேரார் பெருமைப் பெருக்கு!
இசைசேர் முரளிதரன் என்றென்றும் வாழ்வில்
விசையுடன் காண்க விழா!
முத்தொளிர் நெஞ்சன் முரளிதரன் செம்மலர்தேன்
கொத்தொளிர் நெஞ்சனெனச் கூறு!
மூங்கிலிசை காற்று முரளிதரன் காண்கவே
பூங்குவளைக் காடாய்ப் புகழ்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
22.07.2014
[என் வலையில் இக்கவிதையைப் பதிவிட்டுள்ளேன்]
மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்தவர் காமராஜர் என்று ஒற்றை வரிச் செய்தியாய் அறிந்ததை, அந்த திட்டத்துக்காக காமராஜரின் போராட்டம், அவரது நிர்வாகத் திறன் என அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்ற மிக சுவாரஸ்யமான நடையில் கொடுத்துள்ளீர்கள். பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !
http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html
( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )
***இது சுவாரசியம் இல்லாத பதிவாக இருக்கக் கூடும் . ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.***
பதிலளிநீக்குஎப்படியோ கடைசியாக வழிதவரி வந்து வாசித்துத் தெரிந்துகொண்டேன். பகிர்தலுக்கு நன்றி :)
அய்யா,
பதிலளிநீக்குவணக்கம். முதல் முறையாகவே உங்களின் தளத்திற்கு வருகிறேன்.
“காமராஜரைப் பத்தித் தானே சொல்லப்போறார் “ என்ற என் அலட்சியம் எங்கோ போனது.
//இது சுவாரசியம் இல்லாத பதிவாக இருக்கக் கூடும்// என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதன் காரணம் விளங்கவில்லை.
தங்களுடைய பழைய பதிவுகளையும் நிச்சயம் படிப்பேன்.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி!
பிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2 = திரு டி.என்.முரளிதரன் அவர்களின் அருமையான, நெகிழ வைக்கும் பதிவு.
பதிலளிநீக்குஎனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி நண்பர்களே.
ஒரு பெரும் எந்திரத்தின் சிறு பற்சக்கரங்கள் மாதிரி அதிகாரிகள்..
பதிலளிநீக்குஉழைப்பு முடித்ததும் தூக்கிப்போட்டு வேறு வேலை பார்க்க போய்விடுவார்கள்.
நெ.து.சு. போரட்டம்தான் மதிய உணவை சாத்தியப்படுத்தியது என்பது நிறயபேருக்கு தெரியாது. நிறைய விசயங்கள் உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.
இந்த வரிசையில் இறையன்பு, உமாசங்கர், ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்வரன்சிங் என்ற பெரும் பட்டியலை பெருமூச்சோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இவர்களும் பதிவிடத் தகுதியானவர்களே...
எங்கள் ஊரில் மரத்தடியில் அமர்ந்திருந்த குழந்தைகள் எஸ்.எஸ். ஏ முன்னாள் இயக்குனர் விஜயகுமார் அவர்களின் விழிகளில் நீரை வரவழைத்தனர்~!
பொதுவாக அதிகாரிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை ... உம்மைப் போல் பதிவர்கள் எழுதினால்தான் உண்டு
தொடரட்டும் நற்பணி
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-9.html?showComment=1409625104465#c5929268728443619592
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:
வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அண்ணா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
பதிலளிநீக்குhttp://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html
என்ன ஆச்சு நண்பரே? வெகுநாளாக வலைப்பக்கமே காணவில்லையே?
பதிலளிநீக்குதங்களின் கல்வித்துறை அலுவலர் பணியில் தொடர்ந்து எழுதுவது கடினம்தான் எனினும், தங்களின் எழுத்தை எதிர்பார்க்கும் என்போலும் -லட்சக்கணக்கானவர்களின்- எதிர்பார்ப்புக்காகவேனும் எழுதலாகாதா? அலை எப்போ ஓய, தலை எப்போ குளிக்க என்னும் நம் கிராமத்துப் பழமொழியைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். எனது வலைப்பக்க முன்னோடியான தங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன். அன்பு கூர்ந்து அவ்வப்போதாவது எழுதுங்கள்.
பகிர்வுக்கு நன்றி.. யார் சொன்னது சுவாரஸ்யம் இல்லை என்று..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குMany performers are exploring new ways to reach their audience, and some offer exclusive content through various platforms. For those interested, you can find more information about ücretli şov options online. These paid shows often provide a more personalized experience and higher quality production. Always ensure to choose reputable sources to enjoy the best entertainment.
பதிலளிநீக்குWie kann man sicherstellen, dass personenbezogene Daten in Public Clouds geschützt sind? Eine effektive Methode ist die Implementierung der ISO 27018 Norm, die speziell für den Schutz solcher Daten entwickelt wurde. Diese Norm bietet einen Rahmen für Cloud-Anbieter, um die Privatsphäre und Sicherheit von Nutzerdaten zu gewährleisten. Es empfiehlt sich, eine Weiterbildung im Bereich cybersecurity weiterbildung zu absolvieren, um ein tiefes Verständnis für diese Standards zu erlangen. Dabei können Ressourcen wie https://csvisor.de/ hilfreich sein, um aktuelle Informationen und Schulungen zu finden. Zudem sollte man regelmäßig überprüfen, ob die eigenen Systeme den Anforderungen der ISO 27018 entsprechen und gegebenenfalls Anpassungen vornehmen.