முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாய்க் கொள்
நம்பிக்கைச் செடியை
நட்டு வை
உழைப்பு என்ற
நீரை ஊற்று
நாணயம் என்ற
நல்லுரம் இடு
உறுதி என்ற
வேலி போடு
எதிர்ப்பு என்ற
களைகளை
எச்சரிக்கையுடன்
அகற்று
பொறுமையாய்க்
கவனத்துடன்
காவல் இரு
பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!
ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்

*********
Super
பதிலளிநீக்குT.M + 1
கில்லர்ஜி நீங்க திரும்ப போடணும் உங்கட ஓட்டு விளவில்லை.
நீக்குஇனியா! கில்லர்ஜி நான் இணைப்பதற்கு முன்பாக தமிழ்மணத்தில் பதிவை இணைத்து விட்டார். இணைப்பதற்கும் ஒட்டு போடுவதற்கும் ஒரே வழிமுறையே அதனால் ஒட்டு போட்டதாக நினைத்திருக்கக் கூடும் .
நீக்குவணக்கம் சகோ இனியா அவர்களுக்கு.....
நீக்குசெல் மூலம் இணையவில்லை ஆகவே பிறகு வந்து ஓட்டு போட்டேன் நாங்களெல்லாம் அரசியல்வாதி கிடையாது சொன்ன வாக்கு தவற மாட்டோம் தெரியுமுள்ள...
சூப்பர்
பதிலளிநீக்குதம 1 தானே இது எப்படி சாத்தியம் 0 வில தானே இருக்கு.
நன்றி இனியா. தமிழ் மணத்தில் இணைத்தும் முதல் ஓட்டை நாம் போட்டால்தான் ஒன்று என்று காட்டு. பொதுவாக எனது ஓட்டை ஒரு நாள் கடந்த பிறகும் ஏழு ஓட்டுகளுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே போடுவேன்.
நீக்குஅய்யா கவிதை அருமை... தன்னம்பிக்கைத் தலைவா!
நீக்குஅதை உஙக்ள் தமிழ்மணப்பதிவிலும் கையாள்வது அருமை.
தொடரட்டும் கற்றுக்கொண்டேன் நன்றி த.ம ப்ளஸ் 1
ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநம்பிக்கை விதையை விதைக்கிறது.
///முன்னேறியவர்கள்
பதிலளிநீக்குசொன்னதை
முன் மாதிரியாய்க் கொள்///
முன்னேறியவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்ற உண்மையை சொல்லுவதே இல்லையே அப்புறம் எப்படி பின் பற்றுவது
அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
வெற்றி பெற தாங்கள் கூறியுள்ள சில வழிகளை நான் கடைபிடித்து, வெற்றி கண்டுள்ளேன். நல்ல தன்னம்பிக்கையினைத் தருகிறது. உங்களது பதிவு. அண்மையில் நாட்டாணியில் நாங்கள் சமணர் சிலையைக் கண்டுபிடித்தற்கும் இதுபோன்ற நம்பிக்கையே உதவி செய்தது. எங்களது பயணத்தைப் பற்றி அறிய எனது வலைப்பூவினைக் காண வாருங்கள். http://ponnibuddha.blogspot.com/
பதிலளிநீக்குஉரமும் வேலியும் ரொம்பவே முக்கியம்...
பதிலளிநீக்குஆம் ! மனிதனின் முழுமுதல் மூலதானம் தன்னம்பிக்கை தான் !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
ஆம்
பதிலளிநீக்குஎல்லாம் உன்
தன்னம்பிக்கையில்
உந்துதலை ஊக்குவிக்கும் வரிகள்.
பதிலளிநீக்குதலைப்பையும் முடித்த வரிகளையும் படிக்க தத்துவார்த்துவமான வரிகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவெற்றி பெற வேண்டுமா? நம்பிக்கையூட்டும் வரிகள்!
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது!
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்...
-நன்றி.
த.ம. 8.
வெற்றி பெற வேண்டும் என்னும் மனநிலைமுக்கியம் அது இருந்தால் வழிகள் தானே திறக்கும்
பதிலளிநீக்குபடமும் பதிவும் உபயோகமானவை. அடிக்கடி இப்படி போடுங்க பாஸ் !
பதிலளிநீக்கு#கவனத்துடன்
பதிலளிநீக்குகாவல் இரு#
சரியாக சொன்னீர்கள் காவல் இல்லேன்னா வெற்றிக் கனியை வேறு யாராவது பறித்து விடக்கூடும் :)
வணக்கம்
பதிலளிநீக்குமுரளி அண்ணா
நல்ல உவமை மிக்க கவி மூலம் மனித வாழ்க்கையை சொல்லியுளீர்கள் ..... இரசிக்க வைக்கும் வரிகள். பகிர்வுக்கு நன்றி த.ம11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெற்றியின் சூத்திரத்தை
பதிலளிநீக்குசூளுரைக்கும் சுகமான கவிதை!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கவிதை அண்ணாச்சி.
பதிலளிநீக்குஅருமையான தன்னம்பிக்கை கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமையான கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅருமையான கவிதை வரிகள். நம்பிக்கை ஊட்டும் வரிகள்! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குBC6A2ED8DC
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
Coin Kazanma
Pokemon GO Promosyon Kodu
Pubg Hassasiyet Kodu (Sekmeyen Hassasiyet Kodu)
0413112E18
பதிலளிநீக்குtiktok takipçi
chita swivel accent chair