பெரிய முள்ளின் புலம்பல்
சிறியவளே!
வட்டக் கூட்டுக்குள்
அடைப்பட்டுக் கிடக்கும்
வழியில்லா முட்கள் நாம்
என்று வருந்துகிறாயா?
முட்களுக்கும் வலி உண்டு
என்பதை உலகம்
அறியவா போகிறது?
இருக்கட்டும்
வருத்தம் தொலைத்து விட்டு
என் வார்த்தைகளைக் கேள்!
நமக்கு
இடம் கொடுத்தது
என்பதற்காக
எத்தனை நாள்
இந்த
கடிகார எண்களையே
சுற்றி வருவது?
மனிதனுக்கு
மணிகாட்டுவதும்
சொல்லும்போது
சோர்வின்றி
அவனை
எழுப்புவது மட்டுமா
நம் வாழ்க்கை?
உன்னை பலமுறை
சந்தித்து மன்றாடியும்
நீ என்னை
துரத்துவதையே
தொழிலாகக்
கொண்டிருக்கிறாய்
மணிக்கு
ஒருமுறை,
ஒரு நொடி மட்டுமே
உன்னோடு ஒட்டி இருக்க
சம்மதிக்கிறாய்!
நாம் கொஞ்ச நேரம்
நின்று போனால்தான் என்ன?
காலம் நிற்கவா போகிறது?
நாம்
காலம்தான் காட்டுகிறோமே தவிர
காலமே நாம் அல்ல
என்பதைப் புரிந்து கொள்வாய்
இப்போது
மணி பன்னிரண்டு!
இப்பொழுதாவது
நம் இயக்கத்தை
நிறுத்திக் கொள்வோம்!
மனிதன் நம்மை
மறுபடி
இயக்கும் வரையாவது
நாம்
பிரியாமல்
இணைந்திருப்போம்!
********************************************
படித்து விட்டீர்களா?
ஒரு நொடி மட்டும் இருவரும் ஒருவராகிப்போனோம் என்ற சொற்றொடர் நன்கு உணர்ந்து எழுதியதைப் போல் உள்ளது. நல்ல கவிதை.
பதிலளிநீக்குநன்றி ஐயா உடனடி வருகைக்கும் கருத்துக்கும்.
நீக்குவைகறை மேகங்கள் கவிதைத் தொகுப்பிலும் இப்படி ஒரு வேண்டுகோள் இருக்கும் ....
பதிலளிநீக்குஆனால் காமம் பேசும் ...
இங்கே காதல் பேசும் முட்கள்....
அருமை தொடர்க
தம +
. அப்படியா? வைரமுத்து கவிதை என்றால் நன்றாகத் தான் இருக்கும் தேடிப் படித்துவிடுகிறேன் .நன்றி கஸ்தூரி ரங்கன்
நீக்கு/// மனிதன் நம்மை
பதிலளிநீக்குமறுபடி
இயக்கும் வரையாவது
நாம்
பிரியாமல்
இணைந்திருப்போம்!///
ஆகா அருமை ஐயா
நன்றி
தம +1
ரசித்தேன் முரளி ஜி...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குமணிக்கு ஒருமுறை இணைகிறீர்களே....அது போதாதா....?
பதிலளிநீக்குகடிகாரம் ஓடாவிட்டால் காலம் ஓடாமலே இருக்குமா. முட்களின் ஆசையை நிறைவேற்ற மனிதன் முயல்வதில்லை. இணையும் போது இணையட்டும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு இளைப்பாறும் நேரத்தில் ஒன்றி இருக்கட்டுமே
பதிலளிநீக்குஹிஹி டிஜிட்டல்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை! அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅட நல்ல சிந்தனை அருமை அருமை! ரசித்தேன். மனிதன் நம்மை
பதிலளிநீக்குமறுபடி
இயக்கும் வரையாவது
நாம்
பிரியாமல்
இணைந்திருப்போம்!
தொடர வாழ்த்துக்கள்...! ஆமா ஒரு முறை என் தளத்தை வந்து பாருங்கள். நன்றி !
\\\\\\மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது மட்டும்//////
ஆஹா!!! கடிகார காதல் !! செம! செம!
பதிலளிநீக்குஅருமையான வரிகள் அ;துவும் இறுதி பாரா வரிகள்! அருமை!
பதிலளிநீக்குஅருமை சகோ..
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி அண்ணா.
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம9
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுற்றும் உலகம் தன்னோடு சுற்றும் கடிகாரம்! அருமை!
பதிலளிநீக்கு# மனிதன் நம்மை
பதிலளிநீக்குமறுபடி
இயக்கும் வரையாவது #
இதுக்கு நேரமில்லாமல் மனிதன்,டிஜிடல் நேரத்திற்கு மாறிவிட்டானே :)
கடிகார முட்கள் பேசுவதாய் ஒரு கவிதை. அருமையாக இருந்தது நண்பரே. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு2D9B250902
பதிலளிநீக்குkiralık hacker
hacker kiralama
tütün dünyası
hacker bulma
hacker kirala
697C4056F9
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
Online Oyunlar
Osm Promosyon Kodu
Avast Etkinleştirme Kodu
1F87830427
பதிலளிநீக்குsteroid sipariş
Webcam Show
steroid al