என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 15 ஜூன், 2015

'திரி'க்குறள்,'சிரி'க்குறள்

                        


நம்ம இஷ்டத்துக்கு திரிச்சி எழுதினா திரிக்குறள்தானே. பதிவு எழுதி ரொம்ப நாளாச்சா? அதான் 
இதை படிச்சி நொந்து நூடூல்ஸ் ஆனா நான் பொறுப்பு இல்ல. நூடூல்சே நொந்து போய் இருக்கே அதுக்கு என்ன பண்றதுன்னு கேக்கப் படாது 


                          1.  முகநூல் நட்பது நட்பன்று-உண்மை
                                 முகமறிய நட்பது நட்பு


                         2.   இருந்தாலும் லைக்கு  இறந்தாலும் லைக்கு                                                       பொருந்தா  முகநூல் விதி

                         3.   யாகவா ராயினும் செல்காக்க  காவாக்கால்
                               போகுமே செல்போன் தொலைந்து

                          4.  அண்டர்வேர்  போட மறந்தாலும் போகாதே
                               ஆண்ட்ராய்டு போனை  மறந்து

                           5.  குல்பி விரும்பும் குழந்தைக்கும் ஏறியதே
                                செல்ஃபி   மோகம்  தலைக்கு

                            6.  கண்பேசி  கைபேசு    முன்பேதான் போயிற்றே
                                 கைபேசிக் காதல் கரைந்து

                            7.  முகநூல் பழசாச்சு டுவிட்டர் போராச்சு
                                  வகையாய் வாட்சப்பில் மூழ்கு

                            8.  காதணியாய் மாறியதே கைபேசி - சாலையில்
                                   வேதனையாய் போச்சே  விபத்து

                            9.  செல்பேசி இல்லானை  செல்லாத  காசாக்கும்
                                    பொல்லாக் கருவி அது

                            10. அடுத்த அறையில் அகமுடையாள்; அன்போ(டு)
                                     அழைத்துப்  பேசினேன் செல்


*************************************************

தொடர்புடைய பதிவுகள் 



23 கருத்துகள்:

  1. சிரிக்க வைக்கும் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பதிவிட்டு நாளானாலும் நன்றாகவே வந்திருக்கிறீர்கள். காலத்துக்கு ஏற்ற திரிக் குறள்,,,,,!

    பதிலளிநீக்கு
  3. அனைத்துமே அருமை என்றாலும்..
    நான்கு, எட்டாம் திரிகுறள்கள் வெகு அருமை. (நான் பட்டிமன்றத்தில் உங்கள் பேர்சொல்லியே சொல்லக் குறித்து வைத்துக் கொண்டேன்..இப்போதே நன்றி)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    முரளி அண்ணா.
    திருவள்ளுவருக்கு அடுத்த படி நீங்கதான் அண்ணா...படித்துபடித்து சிரித்தேன்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தாலும் நிஜத்தையும் உணர்த்திய குறள்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. இரசித்தேன்! என்ன நீண்டநாள் விடுமுறையா ? நலமா!

    பதிலளிநீக்கு
  7. ஒரு அதிகாரம் தானா ?இன்னும் எதிர்பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  8. அருமையான சிரிக்குறள் ரசித்தேன் ! கோடைவிடுமுறை முடிந்துவிட்டதா??,)))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே அருமை. குறிப்பாக எனக்குப் பிடித்தது
    ஏழும், எட்டும்.

    பதிலளிநீக்கு
  10. திரிக்குறள் கேட்டு திருவள்ளுவர் பெருமிதம் தான் பட்டிருப்பார் ஏனெனில் அவர் இல்லாத குறையை தான் நீங்கள் தீர்த்து விட்டீர்களே. எப்படி என்கிறீர்களா ? நிச்சயம் அவர் இருந்தாலும் நெஞ்சு பொறுக்காமல் இப்படித் தான் எழுதியிருப்பார் எல்லாவற்றையும் மாற்றி நிலைமை தான் அப்படி இருக்கிறதே. தொடரட்டும். மேலும் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  11. தங்களின் நகைச்சுவை உணர்வு நல்ல ஒரு தலைப்பில் பல அழகான சொற்றொடர்களைத் தந்துள்ளது. வித்தியாசமான ரசனை.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய நடப்புகளை
    எழுத்தில் குறளாய்
    அருமை ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  13. இன்று அவர் இருந்து இருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் போலும்,,,,,,,,,,,

    சொறி பிடித்தவன் கையும் செல்பிடித்தவன்
    கையும் சும்மாவே இருக்காது
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மிக சுவை
    நகைச் சுவை

    பதிலளிநீக்கு
  15. ஹஹஹஹ செம நண்பரே! கலக்கிட்டீங்க!!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895