என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 17 மே, 2016

+2 result 2016 -சந்துருவின் டென்ஷன்


இந்த ஆண்டு +2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன கீழ்க்கண்ட முகவரியில் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் முடிவுகளை, 
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in.

தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் , மதிப்பெண்களைப் பற்றி கவலைப் படாதீர்கள் 

இந்தக் குட்டிக் கதையைப் டென்ஷன் இன்றி படியுங்கள் 

         +2 result 2016 -சந்துருவின் டென்ஷன் 
"சந்துரு ரெண்டு இட்லிதான் சாப்பிட்ட, இன்னும் ரெண்டு போட்டுக்கோடா "
"வேணாம்மா! டென்ஷனா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல  ரிசல்ட் வரப்போகுது. எப்படி இருக்குமோ தெரியல .பயமா இருக்கு".

"ரிசல்ட் நல்லபடியாத்தான் வரும். நல்ல பர்சென்டேஜ் கிடைக்கும் கவலைப்படாதே .ராத்திரி பகலா தூக்கம் இல்லாம உழைச்சிருக்க. நீ மட்டுமா கஷ்டப்பட்ட என்னையும் சேத்துதானே கஷ்ட்படுத்தின. ராத்திரி எல்லாம் கொஸ்டீன் பேப்பரெல்லாம் வச்சு  வருஷம் முழுக்க ப்ரிபேர் பண்ணி இருக்கியே. அதுக்கேத்த பலன் இருக்கும்  அதனால் ப்ராப்ளம் எதுவும் இருக்காது கவலைப் படாதடா "

"இல்லம்மா  கொஸ்டீன் வேற இந்த வருஷம் ரொம்ப  கஷ்டமா இருந்தது கிரேஸ் மார்க் வேற போடமாட்டோம்னு சொல்லிட்டாங்க .எவ்வளோ ஸ்பெஷல் கிளாஸ் .எத்தனையோ மாடல் டெஸ்ட்! அத்தனைக்கும் பலன் இருக்குமான்னு தெரியலையே. பிரின்சிபால் வேற ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். மார்க் குறைஞ்சா அவ்வளவுதான்னு 

சரிம்மா நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன் "

"ஏங்க!உங்கள் பையனை பாருங்க +2 ரிசல்டுக்கு இப்படி பயந்துசாகறான்! அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புங்க." என்று கணவனிடம் சொன்னாள் சந்துருவின் அம்மா .

"டேய். சந்துரு ஸ்கூலுக்கா போற? ரிசல்ட் இங்கயே நெட்ல பாக்கலாம் இல்லை.எதுக்கு ஸ்கூலுக்கு போற?

"ஃபர்ஸ்ட் டயம் இல்லியாப்பா?பிரின்சிபால் வர சொல்லி இருக்கார். ஸ்கூல்லயே  பாத்துக்கலாம்னு சொல்லிட்டார் .போகலேன்னா  கண்டபடி திட்டுவார்"

"சரி சரி தைரியமா போய்ட்டு வா . உன் பிரின்சிபால் என்னோட பிரண்டுதான். இந்த வருஷம் விட்டுடுங்க அடுத்த வருஷம் அச்சீவ பண்ணிடுவான்னு சொல்றேன் "

என்று  +2 கணக்கு ஆசிரியராகப் பணியியில் சேர்ந்து முதல் செட் மாணவர்களை தேர்வுக்கு அனுப்பி அனைவரும் நல்ல பெர்செண்டேஜ் எடுத்து பாஸ் செய்யவேண்டுமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் மகன் சந்துருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவன் அப்பா

**********************************************************************



14 கருத்துகள்:

  1. வித்தியாசமான வகையிலான எதிர்பார்ப்பாக முடிவு அமைந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஓரளவு யூகித்தேன்! சிறப்பான கதை!

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் கதை நன்று நண்பரே

    பதிலளிநீக்கு
  4. கவலைகள் பலவிதம் பலருக்கு

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான கதை. முடிவு இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் மாணவர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் இப்போது மாணவர்களைவிட ஆசிரியர்கள் தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதை மிகவும் அழகாக கூறினீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. டுவிஸ்ட் அருமை
    மிகவும் இரசித்தோம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  7. அறிவுரைக் கதையாயிருக்கும் என்று நினைத்தேன். ட்விஸ்ட் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. நினைச்சேன்...ரசித்தேன்.
    இல்லியா பின்னே?
    எழுதின மாணவர்க்கும் எழுதவைத்த ஆசிரியர்க்குமே இது பரிட்சை தானே?
    அப்புறம் நம்ம சந்துரு நல்ல பர்சண்ட்டேஜ் தானே? த.ம.5

    பதிலளிநீக்கு
  9. முதலிலேயே கொஞ்சம் புரிய ஆரம்பித்துவிட்டது நினைப்பும் சரியாகிவிட்டது...அருமை...ஆசிரியர்களுக்கும் டென்ஷந்தான்....அருமை...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895