தேர்தலுக்கு முந்தைய தினமே ஒரு ஆர்வம் வந்து ஒட்டிக் கொண்டது. தேர்தலின் போது நான் பெரும்பாலும் தேர்தல் பணியில் இருப்பேன். கடந்த முறையும் இம்முறையும் அதிர்ஷ்ட வசமாக தேர்தல் பணி இல்லை. அதனால் பூத்துக்கு சென்று வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது மகிழச்சியாக இருந்தது.. தேர்தல் நாளை எதிர்நோக்கி உறங்க சென்றேன். இரவு மூன்று மணி அளவுக்கு மின்சாரம் கட் ஆனது இன்வர்டர் பழசாகி விட்டதால் இரண்டு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க வில்லை . ஆங்காங்கே காசு குடுக்கறதுக்காக கரண்ட் கட் பண்ணிட்டான் என்ற குரல் கேட்டது. தூக்கம் கெட்டுப் போனது. வழக்கத்தை விட சீக்கிரமே எழும்படி ஆகி விட்டது /எழுந்ததுதான் எழுந்தோம் சீக்கிரம் குளித்து விட்டு ஓட்டு போட கிளம்பி விடலாம் என்று முடிவு செய்தேன்..
புது வீட்டுக்கு மாறி விட்டதால் பூத்ஸ்லிப் கிடைக்கவில்லை. ஏற்கனவே இணையத்தில் வாக்களார் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்ததால் பூத் ஸ்லிப் பற்றி கவலைப் படவில்லை. வாக்காளர் அடையாள அட்டையும் இருந்தது. யாருக்கு ஒட்டு போடுவது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. NOTA வில் கூட போடலாமா என்ற எண்ணமும் இருந்து. ஆனால் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். காரணத்தை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.
வாக்காளர் பட்டியலில் வரிசை எண் பாகம் என் குறித்துக் கொண்டு வாக்குசாவடி நோக்கி நடை போட்டேன். தெருவில் கட்சிக்காரர்கள் ஆங்காங்கே மேசை நாற்காலி போட்டு வாக்களர்களுக்கு பெயர் வரிசை எண் தேடித் தந்து கொண்டிருந்தார்கள். சீட்டும் தந்தார்கள். அந்த ஸ்லிப் களை வாக்கு சாவடிக்கு கொண்டு செல்ல முடியாது. பூத் லெவல் ஆபிசர் தரும் பூத் ஸ்லிப்களை மட்டுமே கொண்டு செல்ல முடியம் .தேர்தல் ஆணையம் எவ்வளோ வசதிகள் செய்து தந்தும் அதனை பொதுமக்களில் பலர் பயன்படுத்த வில்லை என்பது ஆங்காங்கே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியிலில் தேடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை பார்க்கையில் தெரிந்தது. அது எப்படி என் பேர் விட்டுப் போகும். போன பட்டியல்ல இருந்தே என்று கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். லோக்கல் கரை வேட்டிகள் மக்களை கண்டு மறக்காமல் வணக்கம் தெரிவித்தனர். வாக்காளர்களின் கூட்டத்தை பார்க்கும்போது வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாகத்தான் இருக்கும் என்ற தோன்றியது.
ஒரே பள்ளியில் பல பூத்கள் இருந்ததால் தாங்கள் ஓட்டு போட வேண்டிய பூத் எது என்று கண்டறிவதில் ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு பூத்தின் முன்புறம் அந்த பூத்தில் உள்ளடக்கிய தெருக்களின் பெயர்ப் பட்டியல் வைக்கப் பட்டிருந்தது .
வாக்கு சாவடிக்குள் வாக்குப் பதிவு அலுவலர்கள் இருந்தனர்.கையில் கையேட்டை வைத்து படித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் எனது வரிசை எண்ணை சொன்னேன் சரிபார்த்தார். PRO எனப்படும் வாக்கு சாவடி முதன்மை அலுலவர் யார் என கேட்டேன். நான்தான் என்றார் அந்த இளம்பெண் என்றார். பொதுவாக அனுபவமிக்கவர்களையே PRO வாக நியமிப்பார்கள். பொதுவாக PRO க்களுக்கு தொடக்கும் முடிவும்தான் பிரச்சனையை இருக்கும். அதனை சமாளிக்கத் தெரிந்தால் போதும்
இருந்தாலும் தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மற்ற பூத் களில் கூட்டம் அதிகம் இருந்தாலும் எங்கள் பூத்தில் கூட்டம் அதிகம் இல்லாதாதால் எளிதில் வாக்களித்து விட்டு வந்தேன்.
சரி நோட்டாவுக்கு வருவோம். எந்த NOTA என்பதன் விரிவாக்கம்
None Of The Above என்பதாகும் . வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசி வேட்பாளர் போல NOTA இடம் பெற்றிருக்கும். மேலுள்ள யாருக்கும் என் ஒட்டு இல்லை என்பதை உணர்த்துவதற்காக ஒரு பட்டன் வாக்குப் பதிவு இயந்திரத்தில் அமைக்கப் பட்டுள்ளது . யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத மனநிலை இருந்தாலும் நோட்டாவுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். காரணம் நோட்டா வாக்குகளால் எந்தப் பயனும் இல்லை.
ஒரு வேளை நோட்டா வாக்குகள் வேட்பாளர்கள் பெற வாக்குகளை விட அதிகமாக இருந்தாலும் வாக்கு வேட்பாளர்களில் யார் அதிகம் பெற்றிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப் படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது (even if the number of electors opting for NOTA option is more than the number of votes polled by any of the candidates, the candidate who secures the largest number of votes has to be declared elected). வேட்பாளர்களின் வெற்றி தோல்வி இதனால் பாதிக்கப்படாது.
நோட்டா என்பது மக்களின் மனநிலையை வெளிப்படுத்த பதிவு செய்ய வழங்கப் படும் வாய்ப்பு மட்டுமே என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
ஒரு வேளை ஒரு தொகுதியில் ஒரே ஒருவர் மட்டும் போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம் .வேறு எதிர் வேட்பாளர் இல்லாத நிலையில் அந்த ஒரு வேட்பாளரே வென்றவராக அறிவிக்கப் படுவார். அங்கு தேர்தல் நடக்காது. அந்த வேட்பாளருக்கு எதிராக NOTA வை பயன்படுத்த முடியாது. அதாவது பல வேட்பாளர்கள் இருந்தால் இவர்களில் யாரையும் எனக்கு தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்று பதிவு செய்யலாம். வேட்பாளர் ஒருவராக இருந்தால் அவருக்கு வாக்களிக்க முடியாது என்று பதிவு செய்ய முடியாது.
இப்படி இருக்கையில் நோட்டா தேவையா ? என்பது என் கேள்வி
நோட்டா சின்னம் இதுதான்
மேலுள்ள நோட்டாவுக்கான சின்னத்தை வடிவமைத்து கொடுத்தது ஹைதராபாத்தில் உள்ள National Insitute of Design
நன்றி : http://eci.nic.in/eci_main1/current/PN_28102013.pdf
******************************************************************************
முதிய தேர்தல் ஸ்பெஷல் பதிவுகள் படித்து விட்டீர்களா?
********************************************************************************************
நோட்டா பற்றி விபரமாக சொன்னமைக்கு நன்றி நண்பரே ஆனால் ஓட்டு யாருக்கு போட்டீர்கள் என்று கடைசிவரை சொல்லவே இல்லையயயயயயயயயயேேேே
பதிலளிநீக்குநோட்டாவால் ஒரு பயனும் இல்லை என்று போன தேர்தலின் போதே தெரிந்து கொண்டேன், பாராளுமன்றம், இப்போதைய தேர்தலில் புதியவர் ஒருவருக்கே என் வாக்கு பதிவானது. அவரது வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை. ஒரு மாற்றத்திற்கு உதவினால் சரி என்று புதியவர்களுக்கே இரண்டு தேர்தல்களில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். விரிவான விளக்கத்திற்கு நன்றி! இந்த முறை நிறைய இடங்களில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. எங்கள் ஊரில் கூட 90 சதவீதம் பதிவானது.
பதிலளிநீக்குஇந்த செய்தியை பலரது பதிவுகளின் பின்னூட்டங்களில் பகிர்ந்துள்ளேன்
பதிலளிநீக்குநோட்டாவைப் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குஆஹா ஐயா.இதனை தாங்கள் நேற்றைய பதிவில் தந்திருக்க கூடாதா.எனக்கு இந்த வருடம் தான் முதல் ஓட்டுரிமை.எனக்கு யாருடைய ஆட்சியும் பிடிக்கவில்லை என்பதால் எனது ஓட்டை நான் நோட்டாவில் போட்டுவிட்டேன் ஐயா.
பதிலளிநீக்குஇருக்கட்டும் இன்று இது பற்றி தெரிந்துக்கொண்டேன் நன்றி ஐயா.
நீக்குஉங்கள் தொகுதி வேட்பாளர்களில் ஒருவர் கூட சரியான ஆள் இல்லையா? சுயேச்சை வேட்பாளர்கள் கூட சரி இல்லையா?
பொதுவாக நான் இன்றைய ஆட்சி முறையை விரும்பவில்லை அதன் காரணமாக தான் நோட்டா.ஐயா.
நீக்குநான் திட்டமிட்டபடி இந்தப்பதிவுகள் சில நாட்கள் முன்னதாக வந்திருக்கவேண்டும்.எதிர்பாரா அலுவலக வேலைகள மற்றும் சொந்த வேலை காரணமாக பதிவுகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன..
நீக்குபகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குஎந்த் ஒரு நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் இப்படி தேர்தல் பற்றி பயனுள்ள கட்டுரைகள் வரவில்லை...ஆனால் விபரங்கள் தேடி வருபவர்களுக்கு வலைத்தளத்தில் மிகவும் பயன்படும்படியாக தகவல்களை தொகுத்து வழங்கியதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅடுத்த தேர்தலில் உங்களை தமிழக தலமை தேர்தல் அதிகாரியாக நியமிக்க பதிவர்கள் சார்பாக அரசாங்கட்திற்கு வேண்டுகோள்விடுவிக்கிறேன்
பதிலளிநீக்குஹாஹாஹா
நீக்குநீங்கள் முன்வைத்துள்ள கேள்வி சரியான கேள்வியே. இருந்தாலும் ஒரே வாக்காளர் என்ற நிலையிருந்தால் வாக்கு அளிக்கச் செல்லாமல் தவிர்க்க ஒரு வாய்ப்பு உள்ளதே?
பதிலளிநீக்குபலருக்கும் பயன்படும்....
பதிலளிநீக்குபயனுள்ள பதிவிற்கு நன்றி சகோ
பதிலளிநீக்குNOTA பற்றி எனக்கும் என் சகோதரனுக்கும் எனக்கும் பெரிய விவாதமே வந்தது. இப்படி வைத்துக் கொள்வோம். NOTA தவிர எல்லோர்ருக்கும் டெபாசிட் போய்விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நிலை ? பொதுநல வழக்கு தொடரலாமே ? அந்த தொகுதியை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாமே. அரசியல்வாதிகளுக்கு சகாயம் போன்ற கலெக்டர்கள் பரவாயில்லை தானே .இந்தத் தேர்தலில் NOTA வுக்கு மதிப்பில்லாமல் போகலாம். ஆனால் NOTA பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி ,NOTA வுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குஅப்போது தான் அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் வரும்.
தபோதுள்ள விதிமுறையே நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது
நீக்குமுரளி!
பதிலளிநீக்குஇது என்ன 'NOTA' வைப் பற்றிய விளக்கம் புது கதையா இருக்கு! அப்ப [ரூபாய்]நோட்டு கிடைக்காதா வாக்காளர்கள் 'நொந்து' போடும் ஒட்டு இது இல்லையா?
நம்பள்கி சார், நானும் இப்படி இருக்கும்னு எதிர்பாக்கல. தேர்தல் கமிஷன் வெளியிட்ட பிரஸ் நோட்ல இருந்துதான் தெரிஞ்சுகிட்டேன்
நீக்குமறு தேர்தல் நடக்கும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? பின் எதற்கு வீணாக அந்தப் பொத்தான்!
பதிலளிநீக்குஉண்மைதான் சமீபத்தில்தான் இதை நான் அறிந்தேன்
நீக்குThe provision of NOTA option which is an
expression of decision not to vote for the contesting candidates is not relevant in such cases.அப்படின்னு தேர்தல் கமிஷன் சொல்லுது
நல்ல பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குநம் ஓட்டை வீணாக்க கூடாது.
முரளி சகோ எனக்கும் குழப்பம் தான் ஓட்டுப் போடுவதில். எந்த வேட்பாளரும் வீட்டிற்கு வரவில்லை. நானும் முதலில் நோட்டாதான் போட நினைத்திருந்தேன். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நோட்டா பற்றிய அறிக்கைகள் அறிந்த போதும் இங்கு நீங்கள் குறிப்பிட்டிருப்பவற்றை நான் சமீபத்தில் கூகுளில் அறிந்ததும், நோட்டாவினால் பயனில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, முதல்நாள் இரவு அவசர அவசரமாக நெட்டில் வேட்பாளர்கள் பட்டியல் விவரங்கள் எல்லாம் கொடுத்திருந்தார்களே அந்தத் தளத்தில் வாசித்து வாக்களித்தேன். வேறு வழி?
பதிலளிநீக்குகீதா