என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, May 7, 2016

Excel tips-தலைப்புள்ள முதல் வரிசையை நிலையாக வைக்க முடியுமா?


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் .

இப்போதெல்லாம் அலுவலகங்கள் ,பள்ளிகளில் கணினிப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு நாள் கணினி இயங்காவிட்டாலும் ஏதோ வேலைகள் பல தடை பட்டு நின்று விடுகின்றன.மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அலுவலர்கள்,சுய தொழில் புரிவோர், என அனைவருக்கும் கணினியின் தேவை இருக்கிறது. வேலைகளை விரைந்து முடிக்க கணினி உதவுகிறது. வோர்ட் எக்சல் பயன்பாடுகள் அத்தியாவசியத் தேவையாகி விட்டன. பல்வேறு தகவல்கள்,புள்ளி  விவரங்கள், கணக்கீடுகள் கையாள்வதற்கு எக்சல் மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகிறது . சில நண்பர்கள் என்னிடம் எக்சல்லில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை என்னிடம் கேட்பது உண்டு.  தெரிந்தவரை விளக்கி பதில் சொல்வேன். (எனக்கும் அரைகுறையாகத்தான் தெரியும்  என்று அவர்களுக்கு தெரியாது). தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அவை உதவியாக இருக்கும். என்று நம்பி கேள்வி பதில் வடிவில்  எக்சல் எனக்குத் தெரிந்த அடிப்படை எக்சல் குறிப்பு ஒன்றை தந்திருக்கிறேன்.

கேள்வி: எக்சல்லில் கிடைமட்டத் தலைப்புகளின் கீழ் பல்வேறு தகவல்களை ஒன்றன் கீழ் ஒன்றாக தொடர்ந்து தட்டச்சு செய்யும்போது  அல்லது பட்டியலின் கீழ் வரிசைகள்  செல்ல செல்ல திரையில்  தலைப்பு மறைந்து விடுகிறது.  நூற்றுக்கணக்கான வரிசைகள் உள்ள பட்டியலில் ஸ்க்ரோல் செய்து தலைப்பை அறிய வேண்டியதாகிறது. தலைப்பு மட்டும் அப்படியே இருக்க ஏதேனும் வழி உள்ளதா?

  பதில்: உள்ளது . பயன்படுத்துவது எச்செல் 2007 எனக் கொள்வோம். எக்சல் ரிப்பனில்  View என்பதை க்ளிக் செய்தால் அதில் Freeze pane என்ற பட்டனை காணலாம். எந்த வரிசையை தலைப்பாகக் கொள்ள வேண்டுமோ  வேண்டுமோ அதன் கீழ் வரிசையை தேர்ந்தெடுத்து  Freeze பட்டனை அழுத்தினால் எத்தனை வரிசை அடித்தாலும் தலைப்பு அப்படியே இருக்கும் , திரையின் அளவை தாண்டிய பின் மேற்புறத்தில் உள்ள தலைப்பு வரிசையை   தேவை எனில் Unfreeze செய்து பழைய நிலைக்கே கொண்டு வந்து விடலாம்உதாரணத்திற்கு இதோ தலைப்பு  தலைப்பு நிலையாக உள்ள எக்சல் சீட் 


உள்ளே க்ளிக் செய்து ஸ்க்ரோல் செய்தோ, அல்லது  Slide bar ஐ நகர்த்தியோ பாருங்கள் தலைப்பு மட்டும் அப்படியே இருப்பதை  காணலாம் 
( வேண்டுமானால் மேலுள்ள எக்சல் கோப்பை கறுப்புப் பட்டையின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்து இறக்கம் செய்து கொள்ளலாம்)
இதனால் என்ன பயன் ?
 1.தகவலை வேறு தலைப்பின் கீழ் மாற்றி தட்ட்டச்சு  செய்வதை தவிர்க்க   முடியும் .
2. மிகப் பெரிய பட்டியலில் கடை சி வரிசையை பார்க்கும்போது அதில்  உள்ள உள்ளீடு எந்த தலிப்பின் கீழ் உள்ளது என்ற ஐயம் ஏற்பட்டால் திரும்ப ஸ்க்ரோல் செய்து மேலே சென்று தலைப்பை பார்க்கவேண்டும். இதனை தவிர்க்க Freeze pan பயன்படும் 
****************************************************************

அடுத்த கணினிக் குறிப்பில் பதில் அறியப் போகும் கேள்வி?
ஒரு தலைப்பின் கீழ் பல பக்கங்கள் கொண்ட விவரங்களை பிரிண்ட் எடுக்கும்போது  ஒவ்வொரு பக்கத்திலும்  தலைப்பு வதில்லையே! அப்படி அவர்வேண்டுமெனில் ஒவ்வொரு பக்கத்துக்கும் தலைப்பை தட்டச்சு செய்யாமல் வரவழைக்க  எக்சல்லில் வழி உள்ளதா? 

தெரியாதவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்கவும்

*****************************************************************************

கற்றுக் குட்டியின்  முந்தைய கணினிக் குறிப்புப் பதிவுகள்
 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
 • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
 • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
 • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
 • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
 •  இன்ட்லியால் ஒரு இன்னல்
 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
 • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது? • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
 • எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?
 •  கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 
 • காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? 
 • விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல் 
 • லேசா பொறாமைப் படலாம் வாங்க! 
 • எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா? 
 • EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?
   


 • *******************************************************************************
  பிடித்தவர்கள்  லைக்கும்  செய்யலாம் 
  15 comments:

  1. வணக்கம்
   அண்ணா
   யாவருக்கும் பயன் பெறும் தகவலை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 1

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
  2. தகவல் களஞ்சியமா மாறியிருக்கு.... பல்வகைப் பதிவுகளைக் காணக்கூடியதாய் இருக்கே வலையில்...

   அதாவது என்னவெனில் நாங்களும் ப்ளாக்கை தூசு தட்டியுள்ளோம்

   ReplyDelete
   Replies
   1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்தமைக்கு மகிழ்ச்சி. மீண்டும் வலைப்ப் பதிவுகள் தொடருங்கள். வரவேற்கிறோம். ஆரம்பத்தில் சிட்டுக்குருவி என்றபெயரில் எழுதி வந்தீர்கள் அல்லவா? பிறகு இன்னொரு சிட்டுக்குருவி வலைப் பதிவு இருந்ததால் மூத்தவரான அவருக்கு விட்டுக் நீங்கள் விட்டுக் கொடுத்து பெயரை மாற்றிக் கொண்டது நினைவு இருக்கிறது. வாழ்த்துகள்

    Delete
  3. மிக உபயோகமான பதிவு! கணினி பழகுனர்களுக்கு வழிக்காட்டி!
   த ம 2

   ReplyDelete
  4. உபயோகமான குறிப்புதான். எங்கள் நிலைமை வேறு.

   ReplyDelete
  5. கற்றது கையளவு ,கணினியில் நான் கற்க வேண்டியது கடலளவு,ஒரு துளியை உங்கள் மூலமாய் கற்றேன் :)

   ReplyDelete
  6. பலருக்கும் பயன் தரும்...

   ReplyDelete
  7. பயனுள்ள குறிப்புகள்! நன்றி!

   ReplyDelete
  8. தங்களின் அறிவுபகிர்வு பாராட்டுக்குரியது

   கோ

   ReplyDelete
  9. சிந்தனைகள் தொடரட்டும். வாழ்த்துக்க.

   கோ

   ReplyDelete
  10. பயனுள்ள பதிவு பலருக்கும் உதவியயானது தொடர்கிறேன் நண்பரே
   த.ம.7

   ReplyDelete

  11. எல்லோருக்கும் பயனுள்ள பதிவு. எனது வலைப்பூவுக்கும் வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

   ReplyDelete
  12. பலருக்குப் பயன்படும். பாராட்டுகள்.

   ReplyDelete
  13. sir , அடுத்த டிப்ஸ் :)

   ReplyDelete

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895