என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 12 மே, 2016

தேர்தல் ஸ்பெஷல்-சிரிப்புக்கு பஞ்சமில்லை


தேர்தல் ஸ்பெஷல் 
என்னதான் கற்பனையா ஜோக் எழுதினாலும் நம்ம அரசியல்வாதிகள் ஒரிஜினலா பண்ற காமெடிக்கு ஈடு இணை இல்லதான். அதோடு சேர்ந்து இதையும் ரசிக்க  முடியுதான்னு பாருங்க . 
"சிரிப்பு வந்தா சிரிக்கணும்,"
"சிரிப்பு வரலன்னா "
"அப்பவும் சிரிக்கணும் "


என்ன ஆச்சர்யம்! போன தேர்தல்ல  நம்ம தொகுதியில நின்னு ஜெயிச்சவர் பேரும், இந்த தடவ நிக்கறவர்  பேர், இனிஷியல் எல்லாம்  ஒண்ணா இருக்குண்ணே

யோவ்! அவர்தான் இவர். அஞ்சு வருஷமா தொகுதி பக்கம் தலை காட்டாததால அடையாளம் 
தெரியலதலைவரே! கட்சித்தீவை 
மீட்போம், கட்சித் தீவை 
மீட்போம்னு மேடைக்கு மேடை சொல்றீங்களே,நம்ம கட்சிக்கு சொந்தமான தீவை யாராவது அபகரிச்கிட்டாங்களா?

அடப் பாவி அது கட்சித் தீவு இல்லடா கச்சத் தீவுஅட! நம்ம தலைவரோட பேச்சுக்குகூட   ஒருத்தன் கை தட்றானே

 பேச்சுக்கு தட்டல. அவன் தூரமா  இருக்க தன்னோட ஃபிரண்டை கைதட்டி  வீட்டுக்கு போலாம்னு கூப்பிடறான்தலைவர் கட்சியை  பிரிச்சவங்களை பத்தி ரொம்ப விரக்தியா பேசிட்டார

அப்படியா?

ஆமா! கழக உடன் பிரிப்புகளேன்னு பேச்சை ஆரம்பிச்சார்
நோட்டால ஒட்டுபோடறவங்கள தடுக்கறது எப்படி?

500 ரூபா 1000 ரூபா நோட்டாலதான்*********************************************************
தேர்தல் ஸ்பெஷல்  பிற பதிவுகள்
 • தேர்தல் ஸ்பெஷல்-சிரிப்புக்கு பஞ்சமில்லை
 • தேர்தல் ஸ்பெஷல்-ஓட்டல்ல வேட்டு
 • Excel tips-தலைப்புள்ள முதல் வரிசையை    நிலையாக வைக்க ...
 • எம்.எல்.ஏ.ஆகிறாள் சரிதா-தேர்தல் ஸ்பெஷல்
 • ******************************************************************************************************  15 கருத்துகள்:

  1. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே!

   பதிலளிநீக்கு
  2. சிரிக்கிறீங்களா நல்லா சிரியுங்கள் அடுத்தவாரத்தில் இருந்து அரசியல் தலைங்க சிரிப்பாங்க. நாம ஜோக்குதான் எழுதி சிரிக்கிறோம் ஆனால் அவங்க நம்மை ஜோக்கரா ஆக்கி சிரிப்பாங்க

   பதிலளிநீக்கு
  3. அரசியல்வாதிகளின் ஒரிஜினல் காமெடியைப் பற்றிய நகைச்சுவை மிகவும் அருமை.

   பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமை
   இரசித்துச் சிரித்தோம்
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  5. சுயேச்சை வேட்பாளர்கள் தரும் வாக்குறுதிகளைப் பார்த்தால் ,இன்னும் நிறைய சிரிப்பு வருது ஜி :)

   பதிலளிநீக்கு
  6. அருமை ஐயா.கடைசியில் உண்மையை அழகாக சொன்னீர் 500 1000 நோட்டுல தான் நோட்டாவை தடுக்கனும்.இரசித்தேன் சிரித்தேன் நன்றி ஐயா.

   பதிலளிநீக்கு
  7. இடுக்கண் வருங்கால் நகுக. தேர்தலே சிரிப்பாய் ஆகக் கூடாது

   பதிலளிநீக்கு
  8. அனைத்தும் இரசித்தேன்

   பதிலளிநீக்கு
  9. அனைத்தும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   பதிலளிநீக்கு

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895