என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 29 மே, 2016

நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா?
தமிழ்மண வாக்கை இங்கு க்ளிக் செய்தும் போடலாம் 
  நரிக்குறவர் பற்றி சமீபத்திய செய்தி ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். நரிக்குறவர் இனம் பழங்குடி மலைசாதியினர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளறது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அவர்களை இவ்வளவு நாள் பழங்குடி இனத்தவர் பட்டியலைச் சேர்ந்தவர் என்றுதான் பலரும் நினைதிருக்கிறார்கள்.  அப்படியானால் அவர்கள் பழங்குடியினர் பட்டியலில்  இல்லையா என்ற ஆச்சர்யம் ஏற்படலாம். ஆம் அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இல்லை. பள்ளிகளில் சேர்க்கப் படும்போது நரிக்குறவர் என்று சொன்னதும்    பல தலைமை ஆசிரியர்கள் நரிக்குறவர்கள் ST  என்றே பள்ளிப் பதிவேடுகளில் எழுதி விடுகின்றனர். ஆனால் நரிக்குறவர்களில் கூட பெரும்பாலோருக்கு தெரியாது அவர்கள் எந்தப் பிரிவில் இருக்கிறார்கள்  என்பது. பலரும் இவர்கள் பழங்குடி இனத்தவர் பட்டியலில் இருக்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எம்.பி.சி பிரிவில் இருக்கிறார்கள். எல்லோர் மனதிலும் இவர்கள் பழங்குடியினர் என்று பதிந்துள்ளபோது அரசுக்கு மட்டுமே ஏன் இவர்கள் பழங்குடியினராகத் தெரியவில்லை.  இவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து  வழங்கப் படாததன் காரணம் என்ன என்பது யாரேனும் சொன்னால் நலம் . 

     இவர்களில் பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து படிப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவே. பலரும் இடை  நின்று விடுகின்றனர். சான்றும் பெற்றுச் செல்வதில்ல்லை . இவர்கள் பள்ளியில்  இருந்து நின்றுவிடுவதற்கு பல காரணங்கள் பல உண்டு .அவர்களுக்காக குடியிருப்புகள் அமைக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் நிலையாக அங்கு தங்குவதில்லை. அவர்களது வழக்கமான நாடோடி வாழ்க்கை கல்வி கற்க தடையாக இருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணரவைப்பார் யாருமில்லை. அவர்கள் இனத்தை முன்னேற்றம் பெறச்செய்ய தக்க தலைவர்கள் வாய்க்கவில்லை. இவர்களில் கல்வி அறிவு பெற்ற மிக சிலரும்   இவர்கள் இனம் கல்வி பெறவேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவதில்லை. சில சமூக நலன் விரும்பிகள் இவர்கள் மீது அக்கறை கொண்டு அவ்வப்போது கோரிக்கைகள் வைப்பது உண்டு.   நிலையாக  ஓரிடத்தில் வசிப்பவர்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. பள்ளிகளில் இந்த மாணவர்கள் கேலிக்கு ஆளாக்கப் படுகின்றனர். நாங்கள் இவர்களை பள்ளிக்கு வரவழைக்க இவர்கள் இருப்பிடத்திற்கு சென்றால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்  மாணவர்கள். எங்க பசங்களை கிண்டல் பண்றங்கலாம் நாங்க ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர் நரிக்குறவப் பெற்றோர். கையில் துப்பாக்கி வைத்திருந்தும் புரட்சி செய்யத் தெரியாத மக்கள் இவர்கள். கல்வி அறிவில் வேறு எந்த சமுதாயத்தையும் விட மிக மிக பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பது கண்கூடு 

  அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டவரை  காணலாம் . பழங்குடியினரைக் காண முடியும். ஆனால் உங்களுக்குத் தெரிந்து அரசு பணியில் எந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த யாராவது இருக்கிறார்களா?. இவர்கள் எம். பி. சி பிரிவில் இருந்தாலும் சமூக அந்தஸ்து தாழ்த்தப்பட்டவர்களை விட குறைவாகவே உள்ளது. நாய்களுக்கு கூட இவர்களைக் கண்டால் ஆகாது . தூரத்தில் வந்தாலே குலைக்க ஆர்ம்பித்து விடும். இவர்கள் அருகில் வரும்போது ஒரு வாடை வீசும் .சுகாதாரமின்மையும், இவர்கள் உணவு முறையும்தான் இந்த வாடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உணவு முறை  அவர்கள் உரிமை என்றாலும் அக்கறை கொண்டு  இவர்களை வழி நடத்த யாருமில்லை

  திரைப் படங்களில் அதிகமாக கேலி செய்யப்படும் சில இனங்களில் குருவிக்காரர் எனப்படும் நரிக்குறவர் இனமும் ஒன்று. மற்றவை  உங்கள் ஊகத்திற்கு. ஒரு படத்தில் வடிவேலு நரிக்குறவராக நடித்திருப்பார். அவர்கள் வாழ்க்கையை பகடி செய்வது போலவே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட படத்தை வெளியிட தடை கோருவது சகஜமாக உள்ளது. ஆன இவர்களுக்காகப் பரிந்து பேச யாருமில்லை. இவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை. காரணம் இவர்கள் நிலையான வாக்கு வாங்கி இல்லை. இவர்களுக்கென்று பெயர் சொல்லக் கூடிய தலைவர் குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் இருக்கிறாரா என்பதை இதுவரை அறிந்தேன் இல்லை.

தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. கல்வி சூழலில் இருந்து விலகிய இனத்தில் பிறந்து சாதனை புரிந்திருக்கிறார் 
நரிக்குறவர்கள் இடையே கல்வியின்மை இல்லை என்ற நிலை வரவேண்டும். கல்வி கற்றால்தான் அடிப்படை சுகாதாரத்தையும், நாகரிகத்தையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை நானும், என்னுடைய பெற்றோர்களும் அவர்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருப்போம்!" என்று கூறும் ஸ்வேதாவின் கனவுகள் ஈடேற வாழ்த்துவோம் 
அவ்வப்போது அரசால் இவர்களுக்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. நரிக்குறவர் களுக்காக கலைஞர் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் வாரியம் தொடங்கப் பட்டுள்ளது. . இதில் பதிவு செய்துள்ள வர்களுக்கு  நலத் திட்ட உதவிகள் பல இருப்பதாக தெரிகிறது. இவர்களில் எத்தனை பேர் இந்த உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. இன்றும், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பாசி மணி ஊசி மணிமாலை கோர்த்து விற்றுக்
கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒரு கம்பில் காந்தத்தைப் பொருத்தி குப்பைகளில் இரும்புப் பொருட்களை சேகரித்தும் செல்கிறார்கள்.. 

  இவர்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. பறவைகள் அணில்கள், முயல் போன்றவற்றை வேட்டையாடி அதனை உணவாகவும் உட்கொள்கிறார்கள். இந்தக் காலத்திலும் மற்ற சமூகத்தோடு ஒட்டி வாழ இயலாதவர்களாகவே 
இருக்கிறார்கள். சில பழங்குடியினர் வெளியுலக தொடர்பு அதிகம் இல்லாதவர்களாக இருப்பார்கள்., இவர்களோ நாகரீக  சமூகத்திற்கு இடையே வசித்தாலும் மாறுபட்ட வாழ்க்கை முறையை உடைய வர்களாக விளங்குகிறார்கள்.  இந்த இன சிறுவர்களின் விளையாட்டு ஆயுதம் உண்டி வில்.(காண்க பெட்டிச் செய்தி) .  நரிக்குறவர்கள் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் துப்பாக்கி பயன்படுத்த எப்படிக் கற்றுக்கொண்டார்கள் வேட்டையாட அனுமதி உண்டா? இதற்கெல்லாம் எப்படி இதற்கு உரிமம் வாங்குகிறார்கள். எப்படி புதுப் பிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். 
  இப்போதெல்லாம் காதில் ஹியர் போனும் கையில் செல்போனும் வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு முன்னோடியாக ரேடியோவையே தன கழுத்தில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே  சென்றவர்கள் நரிக்குறவர்கள். டால்டா டப்பாக்கள் இப்போது இவர்கள் கையில் இல்லை என்றாலும் பெரிய மாற்றம் ஏதும்  இல்லை 
  மின்சார ரயிலில் இவர்கள் பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். இவர்கள் ஒரு போதும் இருக்கையில் அமர்ந்து சென்றதில்லை. கூட்டமாக கீழே  உட்கார்ந்து கொண்டு விதம் 
ஒரு Y  வடிவக் கட்டையில் மேலுள்ளதுபோல ரப்பரை வைத்து  இணைக்கப் பட்டிருக்கும் மத்தியில் தோல் பகுதி இருக்கும். இதில் தான் கல்லை வைத்துப் பிடித்து குறிபார்த்து இழுத்து விடுவார்கள். சிறு கல் அதி வேகமாக சென்று இலக்கை தாக்கும். நரிக்குறவ மக்கள் இதனைப் பயன்படுத்துவதில் கில்லாடிகள்.  சிறுவர்கள் கூட அனாயாசமாக குருவி மைனா அணில்,புறா  போன்றவற்றை குறி தவறாமல் வீழ்த்தி விடுவார்கள்  
பள்ளி வயதில்   என் நண்பர்கள் நரிக்குறவர்கள் வைத்திருக்கும் உண்டி வில்லால் கவரப்பட்டு   அதைப் போலவே y வடிவ மரக்கிளையை தேடி எடுத்து  சைக்கிள் ட்யூபை வெட்டி இணைத்து உண்டி வில் செய்து விளையாடு வார்கள். ஆனால் அது அவ்வளவு உறுதியாக இருக்காது. வேகமாக இழுக்கும்போது பிய்ந்து விடும்   
விதமாக மணிமாலைகள் மாலைகள் வேகமாக  கோர்த்துக் கொண்டிருப்பார்கள். இன்றும் தூளி போல் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு அதில் கங்காரு போல குழந்தைகளை லாவகமாக சுமந்து செல்கிறார்கள்.
  தற்போது இவர்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் எங்கள்  கோரிக்கைகளாலும் முயற்சிகளால்தான்  இது சட்டமானது என்று ஆளுக்கு ஆள்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாள் இதற்கான முயற்சி ஏன் எடுக்கப்படவில்லை எனத் தெரியவில்லை  . வேறு என்ன காரணம் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்கு வங்கி இவர்களுக்கு இல்லை என்பதே.
       நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சில  இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில்  சேர்த்தபின்னராவது நரிக்குறவர் வாழ்வில் விடியல் பிறக்கும் என்று நம்புவோம்.

****************************************************************************


13 கருத்துகள்:

 1. அறியாத தகவலை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.நானும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு நரிக்குறவர் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திவிட்டேன்.பிறகு என்னால் முடிந்த சிறு உதவிகள் கையேடுகள் மற்றும் புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்க சொல்லி சேர்த்துவிட்டேன் ஐயா.அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்பு(350 மதிப்பெண்)வரை படித்தாள் பிறகு திருமணம் செய்து கொண்டாள்.அவளது தம்பி படிப்பபை தொடரவில்லை ஐயா.அவர்களுக்கு கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கவில்லை.எனக்கு அப்போது அவர்களுக்கு புரிய வைக்கும் வயது இல்லை என்பதால் விட்டுவிட்டேன் ஐயா.இனிமேல் யாரேனும் அப்படி குழந்தைகள் இருந்தால் என்னால் முடிந்த வரை அவர்களுக்கு கல்விமுறை பற்றிய ஆலோசனை தந்து ஊக்குவிப்பேன் ஐயா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது முடிந்தவரை முயற்சி செய்வோம்.அவர்கள் இனஹ்தவர்களில் ஒருவர் வீறு கொண்டு எழுந்தால்தான் விடியல் விரைவில் கிட்டும்

   நீக்கு
 2. நானும் ஏற்கனவே அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையில் பாராட்ப்படவேண்டிய நிகழ்வு. தாங்கள் கூறியதுபோல் இதற்காக நன்றி கூறலாம்.

  பதிலளிநீக்கு
 4. நாங்கள் இவர்களின் படிப்பிற்காகச் சில உதவிகள் செய்ததுண்டு. கல்வியின் அருமை பற்றிப் புரிய வைத்து அவர்களின் குழந்தைகள் ஆர்வம் இருந்தவர்களைச்க் ஹேர்த்துவ் விட்டதுண்டு. ஆனால் அது நாங்கள் முன்பு குடியிருந்த பகுதியில். இப்போது அந்தக் கூட்டத்தையும் அங்கு காணவில்லை. இப்போது நாங்கள் இருக்கும் பகுதியில் கூட்டமாக யாரும் இல்லை. ஒருவர், ஒருத்தி மட்டுமே வந்து குப்பைகளைக் குச்சியால் கிளறிக் கொண்டும், பொறுக்கிக் கொண்டும் செல்கின்றனர். அவர்கள் எப்போதேனும் சாப்பாடு கேட்டால் கொடுப்பதுண்டு. மகனைக் கல்லூரியில் சேர்த்த போது கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் (மத்திய அரசி, மாநில அரசு) 4, 5 என்று நினைவு..அதற்கும் கூடுதலாக இருக்கலாம்.. பக்கத்திற்குச் சாதிகள், இனப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது.

  இப்போது மத்திய அரசு கொண்டு வந்தது நல்லதாகப் படுகிறது அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டுமே...நிலையாக இருப்பதில்லையே ஓரிடத்தில்.


  ஸ்வேதாவிற்கு வாழ்த்துகள். அவர் தன் சமுதாயத்தை மத்திய அரசின் இந்த முயற்சியைப் பயன்படுத்தி மாற்ற உதவலாம்...

  பதிலளிநீக்கு
 5. One of my student become a Graduate in (B.Com.- Computer Application) in 2010. Those all blame hindu religion for castewise treatment also treating these people in the same way they get treated, it is not because of the religion but domination is society. Let, this step may bring some change in their lifestyle, socio economic status.

  பதிலளிநீக்கு
 6. சில நேரங்களில் பழங்குடியினரை நம் பாரம்பரியத்தின் எச்சங்கள் என்கிறோம் நரிக்குறவர்களை மெயின் ஸ்ட்ரீமில் கலக்க வைக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 7. முரளி:

  ****உண்மையில் இவர்கள் எம்.பி.சி பிரிவில் இருக்கிறார்கள். ***

  அதாவது இதெல்லாம் கேட்டால்த் தான் கொடுக்கப்படும். நரிக்குறவர்கள்ல இருந்து யாராவது ஒரு எம் பி அல்லது எம் எல் எ இருந்தால், அவர்கள் ஓட்டுக் கனிசமாக இருந்தால், இதை ஏற்கனவே சரி செய்து இருப்பார்கள்.

  கேக்கிற அளவுக்கு ஆள் இல்லைனா, நாயுடுக்கள் கூட "காட்டு நாயக்கன்"னு போட்டு எஸ் டி னு சொல்லி எஸ் டி யாக சான்றிதலிழில் இருந்ஹ்டு கொண்டு வேலை வாங்கிவிடலாம். வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மைதான். இங்கு முற்பட்ட இனத்தை சார்ந்தவர்களில் பெரும்பாலோர் அதன் சலுகை உள்ள வேறு பிரிவை பயன் படுத்துகிறார்கள். முதலியார்,நாயுடு,ரெட்டியார் இனங்களில் FC உண்டு ஆனால் அவர்கள் பி சி என்றே சான்று பெறுகிறார்கள்

   நீக்கு
 8. //கையில் துப்பாக்கி வைத்திருந்தும் புரட்சி செய்யத் தெரியாத மக்கள் இவர்கள்//

  உண்மையான வார்த்தை விரிவான தகவல்கள் தந்தீர்கள் நண்பரே...
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 9. மோடி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குரியது! நரிக்குறவர்கள் பழங்குடி பிரிவில் வருகிறார்கள் என்றே இதுவரை நினைத்து இருந்தேன். அவர்களும் தற்போது விழிப்புணர்வு அடைந்து வருவது பாராட்டுக்குரியது! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. நரிக்குறவர்கள் குழந்தைகள் படிக்க பாடுபட்டு வரும் உதயகுமார் என்ற நல்லாசிரியர் பண்ணைவயல் கிராமத்தில் பாடு பாட்டு படிக்க வைத்து வருவதை படித்தேன். ஏழுவரை படிக்கிறார்களாம் அப்புறம் படிக்க வரமாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார். இனியாவது அவர்கள் நிலை உயரட்டும்.
  ஸ்வேதாவிற்கு வாழ்த்துகள். ஸ்வேதா போல் நிறைய பேர் வரட்டும். தன் இனத்தை உயர்த்தட்டும்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895