கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் .
இப்போதெல்லாம் அலுவலகங்கள் ,பள்ளிகளில் கணினிப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு நாள் கணினி இயங்காவிட்டாலும் ஏதோ வேலைகள் பல தடை பட்டு நின்று விடுகின்றன.மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அலுவலர்கள்,சுய தொழில் புரிவோர், என அனைவருக்கும் கணினியின் தேவை இருக்கிறது. வேலைகளை விரைந்து முடிக்க கணினி உதவுகிறது. வோர்ட் எக்சல் பயன்பாடுகள் அத்தியாவசியத் தேவையாகி விட்டன. பல்வேறு தகவல்கள்,புள்ளி விவரங்கள், கணக்கீடுகள் கையாள்வதற்கு எக்சல் மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகிறது . சில நண்பர்கள் என்னிடம் எக்சல்லில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை என்னிடம் கேட்பது உண்டு. தெரிந்தவரை விளக்கி பதில் சொல்வேன். (எனக்கும் அரைகுறையாகத்தான் தெரியும் என்று அவர்களுக்கு தெரியாது). தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அவை உதவியாக இருக்கும். என்று நம்பி கேள்வி பதில் வடிவில் எக்சல் எனக்குத் தெரிந்த அடிப்படை எக்சல் குறிப்பு ஒன்றை தந்திருக்கிறேன்.
கேள்வி: எக்சல்லில் கிடைமட்டத் தலைப்புகளின் கீழ் பல்வேறு தகவல்களை ஒன்றன் கீழ் ஒன்றாக தொடர்ந்து தட்டச்சு செய்யும்போது அல்லது பட்டியலின் கீழ் வரிசைகள் செல்ல செல்ல திரையில் தலைப்பு மறைந்து விடுகிறது. நூற்றுக்கணக்கான வரிசைகள் உள்ள பட்டியலில் ஸ்க்ரோல் செய்து தலைப்பை அறிய வேண்டியதாகிறது. தலைப்பு மட்டும் அப்படியே இருக்க ஏதேனும் வழி உள்ளதா?
பதில்: உள்ளது . பயன்படுத்துவது எச்செல் 2007 எனக் கொள்வோம். எக்சல் ரிப்பனில் View என்பதை க்ளிக் செய்தால் அதில் Freeze pane என்ற பட்டனை காணலாம். எந்த வரிசையை தலைப்பாகக் கொள்ள வேண்டுமோ வேண்டுமோ அதன் கீழ் வரிசையை தேர்ந்தெடுத்து Freeze பட்டனை அழுத்தினால் எத்தனை வரிசை அடித்தாலும் தலைப்பு அப்படியே இருக்கும் , திரையின் அளவை தாண்டிய பின் மேற்புறத்தில் உள்ள தலைப்பு வரிசையை தேவை எனில் Unfreeze செய்து பழைய நிலைக்கே கொண்டு வந்து விடலாம்
உதாரணத்திற்கு இதோ தலைப்பு தலைப்பு நிலையாக உள்ள எக்சல் சீட்
உள்ளே க்ளிக் செய்து ஸ்க்ரோல் செய்தோ, அல்லது Slide bar ஐ நகர்த்தியோ பாருங்கள் தலைப்பு மட்டும் அப்படியே இருப்பதை காணலாம்
( வேண்டுமானால் மேலுள்ள எக்சல் கோப்பை கறுப்புப் பட்டையின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்து இறக்கம் செய்து கொள்ளலாம்)
இதனால் என்ன பயன் ?
1.தகவலை வேறு தலைப்பின் கீழ் மாற்றி தட்ட்டச்சு செய்வதை தவிர்க்க முடியும் .
2. மிகப் பெரிய பட்டியலில் கடை சி வரிசையை பார்க்கும்போது அதில் உள்ள உள்ளீடு எந்த தலிப்பின் கீழ் உள்ளது என்ற ஐயம் ஏற்பட்டால் திரும்ப ஸ்க்ரோல் செய்து மேலே சென்று தலைப்பை பார்க்கவேண்டும். இதனை தவிர்க்க Freeze pan பயன்படும்
****************************************************************
அடுத்த கணினிக் குறிப்பில் பதில் அறியப் போகும் கேள்வி?
ஒரு தலைப்பின் கீழ் பல பக்கங்கள் கொண்ட விவரங்களை பிரிண்ட் எடுக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வதில்லையே! அப்படி அவர்வேண்டுமெனில் ஒவ்வொரு பக்கத்துக்கும் தலைப்பை தட்டச்சு செய்யாமல் வரவழைக்க எக்சல்லில் வழி உள்ளதா?
தெரியாதவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்கவும்
*****************************************************************************
கற்றுக் குட்டியின் முந்தைய கணினிக் குறிப்புப் பதிவுகள்
*******************************************************************************
பிடித்தவர்கள் லைக்கும் செய்யலாம்
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
யாவருக்கும் பயன் பெறும் தகவலை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தகவல் களஞ்சியமா மாறியிருக்கு.... பல்வகைப் பதிவுகளைக் காணக்கூடியதாய் இருக்கே வலையில்...
பதிலளிநீக்குஅதாவது என்னவெனில் நாங்களும் ப்ளாக்கை தூசு தட்டியுள்ளோம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்தமைக்கு மகிழ்ச்சி. மீண்டும் வலைப்ப் பதிவுகள் தொடருங்கள். வரவேற்கிறோம். ஆரம்பத்தில் சிட்டுக்குருவி என்றபெயரில் எழுதி வந்தீர்கள் அல்லவா? பிறகு இன்னொரு சிட்டுக்குருவி வலைப் பதிவு இருந்ததால் மூத்தவரான அவருக்கு விட்டுக் நீங்கள் விட்டுக் கொடுத்து பெயரை மாற்றிக் கொண்டது நினைவு இருக்கிறது. வாழ்த்துகள்
நீக்குமிக உபயோகமான பதிவு! கணினி பழகுனர்களுக்கு வழிக்காட்டி!
பதிலளிநீக்குத ம 2
உபயோகமான குறிப்புதான். எங்கள் நிலைமை வேறு.
பதிலளிநீக்குகற்றது கையளவு ,கணினியில் நான் கற்க வேண்டியது கடலளவு,ஒரு துளியை உங்கள் மூலமாய் கற்றேன் :)
பதிலளிநீக்குபலருக்கும் பயன் தரும்...
பதிலளிநீக்குபயனுள்ள குறிப்புகள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் அறிவுபகிர்வு பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குகோ
சிந்தனைகள் தொடரட்டும். வாழ்த்துக்க.
பதிலளிநீக்குகோ
பயனுள்ள பதிவு பலருக்கும் உதவியயானது தொடர்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குத.ம.7
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பயனுள்ள பதிவு. எனது வலைப்பூவுக்கும் வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.
பலருக்குப் பயன்படும். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குsir , அடுத்த டிப்ஸ் :)
பதிலளிநீக்குDC04A51DC9
பதிலளிநீக்குkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek
A3010387F9
பதிலளிநீக்குhacker bulma
hacker bul
tütün dünyası
-
-