சாவெனும் வடிவம் கொண்டு
காலனும் வந்து சேர்ந்தான்
போவென அவனை விரட்டும்
போராட்டம் ஓய்ந்ததாலே
தாவென உந்தன் உயிரை
தட்டியே பறித்து விட்டான்
ஓ!வென அலறிய ஒலியால்
உலகமே அதிர்ந்ததம்மா
அம்மா என்றழைக்க வைத்தாய்
அச்சமும் கொள்ள வைத்தாய்
அம்மாஉன் பெயரைச் சொல்ல
ஆயிரம் திட்டம் செய்தாய்
சும்மா இருந்த சிலரை
சுலபமாய் உயர்த்தி விட்டாய்
இம்மாநில மக்கள் மனதில்
இமயமாய் உயர்ந்து நின்றாய்
இன்னலே வாழ்க்கை முழுதும்;
இனிமையோ சிறிதே எனினும்
மின்னல் போல் ஒளிரும் முகத்தில்
இடர்களை மறைத்தே வைத்தாய்
கண்ணிலே கனிவும் உண்டு
கடுமையும் அதிலே உண்டு
மண்ணிலே நீயும் இன்று
மகத்தான பெண்ணாய் மறைந்தாய்
நிறைகளால் மட்டும் எங்கள்
நெஞ்சங்கள் நிறைந்த தாலே
குறைகளை சொல்ல நினைத்தும்
குரலது எழும்ப வில்லை
அறையினில் இருந்த போதும்
அனைவரையும் ஆட்டு வித்தாய்
தரையினில் புதைந்தாய் எனினும்
தரணியில் நிலைத்து நின்றாய்
------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல் .
நீக்குஅருமையான வரிகள்.
#நிறைகளால் மட்டும் எங்கள் நெஞ்சங்கள் நிறைந்ததாலே #
பதிலளிநீக்குடாஸ்மாக்கை மறந்து விட்டீர்களே ஜி !
திருமதி இந்திரா காந்திக்குப் பின், நம் காலத்தில் வாழ்ந்த இரும்புப்பெண்மணி.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள் வரிகள் அருமை
பதிலளிநீக்குஆழ்ந்தஇரங்கல்கள்
பதிலளிநீக்குமறைந்தவர் குறைகளைப் பேசாதிருத்தல் நம் மரபு. உங்கள் மனப்பாங்கை வெளிக்காட்டிய பதிவு. பாராட்டுகள்
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்.....
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்!
பதிலளிநீக்குஆம்.குறைகளை சொல்ல மனம் வரவில்லை. தன்னம்பிக்கைப் பெண்மணி .
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅம்மா நினைவிலிருந்து இன்னும் மீளவில்லையா ? அம்மா போய் சின்னம்மா வந்தாச்சு.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்
29E7BAECE8
பதிலளிநீக்குTelegram Show Kanalı
Canlı Cam Show
Skype Show
8270B266FF
பதிலளிநீக்குTakipçi Satın Al
Ücretsiz Oyun Oyna
Google Adres Ekleme