என்னை கவனிப்பவர்கள்

சனி, 3 நவம்பர், 2018

உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்

நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா? அப்படி எனில் ஒரு சிறிய சவால்.  இதன் கடைசியில்
  கணினித் துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தபோதும் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ்.ஆஃபீஸ் பயன்பாடு அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்களிலும் இன்றுவரை ஆக்ரமித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. அதும் Word,Excel, Power point பயன் படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அதற்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.
ஆவணவங்கள் தயாரிப்பதற்கு வோர்டும், தகவல்களைப் பெற்று தொகுக்க எக்செல்லும் தனி மென்பொருள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இன்று வரை வரப் ப்ரசாதமாகத் திகழ்கின்றன.

Stand up காமெடியில் ஒரு மென்பொருள் ஊழியர் கூறுவார். ”நான் CTS ஆஃபீசில் பணி புரிவதாக என் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் கூறுவார். ஆனால் நான் உண்மையில் இங்கு எம்.எஸ் ஆஃபீசில் பணிபுரிகிறேன் என்பார்”. பெரிய மென்பொருள் நிறுவனங்கள் கூட எம்.எஸ் ஆபீசை நம்பி இருக்கின்றன என்பதே உண்மை நிலை
   எனக்கு எக்சல்லில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதன் பிரம்மாண்டம் என்னை வியக்க வைக்கக் கூடாது.அதன் பயன்பாடுகள் பல அனைவராலும் பயன்படுத்தப் படுவதில்லை  ஒவ்வொரு முறையும் எக்சல்லில் நுழையும்போது புதிதாக ஏதாவது ஒன்று கிடைக்கிறது. அதனால் இன்றுவரை எக்சல்லில் கற்றுக் குட்டியாகவே இருகிறேன். அட இவ்வளவு நாள் இதனைப் பயன்படுத்தாமல் போனோமே என்று வருந்தியதுண்டு. சில நேரங்களில் சில பணிகளை செய்ய வெகு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதனை எக்சல்லில் எளிதாக செய்ய வழி இருக்கும். ஆனால் நாம் அறிந்திருக்க மாட்டோம்

  நான்  எனக்குத் தெரிந்த நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட விஷயங்களை கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் பகிர்ந்து வந்திருக்கிறேன். தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அது நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

போட்டி இதுதான்

      அலுவலகத்தில் நிறைய தகவல்கள் அடங்கிய எக்சல்  அட்டவணை ஒன்றை உயர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தகவல்களை உள்ளீடு செய்த பின்பும் அன்ப்புவதற்கு தாம்தம் செய்தார் எழுத்தர். காரணம் கேட்டதற்கு 1000 க்கும் மேற்பட்ட வரிசைகளும் 10000 மேற்பட்ட செல்கள் அடங்கிய அட்டவணயில் சில செல்கள் காலியாக இருந்தன. அவற்றை  காலியாக விடாமல்  விடாமல் NIL என்று நிரப்பித்தான் அனுப்ப வேண்டும். காலி செல்கள் சீராக இருந்தால் அவற்றை எளிதில் நிரப்பி விடுவேன் ஆனால் அவை ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் செல்களை தேடித் தேடி நிரப்ப வேண்டி இருக்கிறாது அதனால் தாமதம் ஆகிறது என்றார்.

நான் எக்சல் அட்டவணையை பார்த்தேன். இதனை செய்வதற்கு எக்சல்லில் நிச்சயம் ஏதாவது வழி இருக்கும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே இவ்வேலையை எளிதாக்க வசதிகள் இருப்பதை கணடறிந்தேன். உடனே அதனை பயன்படுத்தி NIL ஐ  காலி செல்களில்  ஒரே நிமிடத்தில் கட்டங்களில் நிரப்பினேன். 
எப்படி?.

உதாரணத்திற்கு ஒரு சிறிய அட்டவணையைத் தருகிறேன். அவற்றில் காலி இடங்களை NIL என்று எளிதில் நிரப்புவதற்கான  எளிய வழி என்ன?  நான் எப்படி நிரப்பி இருப்பேன் அல்லது நான் செய்ததைவிட எளிமையான வழிகளும்  உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.  அவற்றை தெரிவித்தால் நானும் தெரிந்து கொண்டு பயன் அடைவேன்.


மேலே வலது புற்த்தில் ஊள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்தும் முயற்சித்துப் பார்க்கலாம்.

சரியாக சொல்பவர்களுக்கு
தொடர்புடைய பிற பதிவுகள்

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

முதலில் வந்ததோடு சரியான விடை சொன்ன மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துகள். வேறு யாரேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்கு விடையை தற்காலிகமாக மறைத்து வைக்கப்படும்.


11 கருத்துகள்:

 1. மிக எளிது

  முதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
  அதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்

  பதிலளிநீக்கு
 2. நன்றி முரளி,

  நன்றி மதுரை...

  இன்று நான் ஒரு புதிய விஷயம் தெரிந்து கொண்டேன். இது தவிர வேறு வழிகளும் உண்டு என்று பதிலில் தெரிய வந்தால் அவற்றையும் குறித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. Find and Replace மூலம் சுலபமாகச் செய்ய முடியும்.

  Excel-ல் தான் எத்தனை எத்தனை வசதிகள். தெரிந்து கொள்ள இதில் நிறையவே உண்டு.

  பதிலளிநீக்கு
 4. கணின்யில் பதிவுகள் எழுதுவது மட்டுமே தெரியும் மற்றவை க்ரீக் அண்ட் லாட்டின்

  பதிலளிநீக்கு
 5. துளசிதரன்: கணினி அறிவு மிகவும் குறைவு. கற்றதுண்டு. ஆனால் அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை என்பதால். இப்போது அறவே பயன்படுத்துவது இல்லை. தெரிந்து கொள்கிறேன்..

  கீதா: அட! புதியதொரு விஷயம் கற்றுக் கொள்ள உதவும். எனக்கு எக்செல்லில் சிலது செய்திருந்தாலும் அத்தனை அறிவு இல்லை. தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

  மிக்க நன்றி. மதுரைத் தமிழனுக்கும் நன்றி. அவரும் கணினியில் நிறைய டெக்னிக்கல் விஷயங்கள் விளையாடுபவர் ஆயிற்றே....

  காத்திருக்கிறேன் விடைக்கு

  பதிலளிநீக்கு
 6. விடையினை அறியக் காத்திருக்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
 7. கேள்வி எழுப்பியவரே பதில் கூறுவார் என்ற நம்பிக்கையுடன் உங்களுடைய அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. நான் கம்பியூட்டர் படிப்பு படிக்கவில்லை , ஏதோ ஒட்டிக்கொண்டிருக்கிற மனுஷி நான் . விடை அறிய ஆவலாக இருக்கிறேன் , இது சில சமயங்களில் எனக்கு உதவும்

  பதிலளிநீக்கு
 9. Hi Murali,

  Select all Blank cells.
  Enter any Value and Ctrl + Enter

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895