சென்னை
மாவட்ட கல்வித் துறை சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்கள் திங்கள் அன்று அனுப்பப்பட
உள்ளதாகவும் பொருட்களை கொண்டு வந்து மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கும்படியும் வாட்ஸ் ஆப் மூலம் முந்தைய தினம் மாலை தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும்
வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக விருப்பம் உள்ளவர் நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடப் பட்டிருந்தது.. பொருட்கள் வரச்சற்று தாமதம் ஆனது. அதற்குள் சிறிய மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு.
புறந்தள்ளிவிட்டு
கையும் பேசியுமாக களம் இறங்கினர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அப்போது மணி 11.00 க்கு
மேல் ஆகி விட்டது . அடையார், திநகர், எழும்பூர், மைலப்பூர் திருவல்லிக்கேணி ராயபுரம்,
பெரியமேடு புரசைவாக்கம் ஜார்ஜ் டவுன் பெரம்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்
எங்கு தட்டினால் உடனே திறக்கும் எங்கு சிறிது நேரம் தட்ட வேண்டும் என்பதை அறிந்து தொலைபேசித்
திரையில் விரல்களால் தட்ட ஆரம்பித்தனர்.
ஆச்சர்யம்!
அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் தனித் தனிப் பள்ளிகளாகவும் இணைந்தும்
வரத் தொடங்கி விட்டன. வாட்டர் பாட்டில்கள்
அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய்ஆடைகள் போர்வைகள் மெழுகு வர்த்திகள் பிஸ்கட், ப்ரட் பாக்கெட்டுகள்
பாத்திரங்கள் மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் என் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து
குவித்தனர்.
மிகக்
குறுகிய காலத்தில் பள்ளிகளுக்கு தெரிவித்து அவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின்னர்
கடைகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை வாங்கி
அவற்றை ஒரிடத்தில் வைத்து பேக் செய்து அதன் மீது பெயர் எழுதி ஒரு வண்டியில் ஏற்றி தலைமை இடத்திற்கு கொண்டு சேர்த்த
வேகம் அசாதரணமானது. நிச்சயம் எண்ணிப் பார்க்காதது
. எப்படி சாத்தியமாகப் போகிறது என்று நினைத்தது
சாத்தியமானது.
இதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கொடுக்கப்
பட்ட அவகாசத்திற்குள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்/ஆசிரியைகளின் செயல்பாடுகள்
பாராட்டுக்குரியன . அடையார் வட்டாரத்தில் உதவி பெறும் பள்ளிகள் சார்பாக 85,000 மதிப்பிலான
நிவாரணப் பொருட்களும் நர்சரி பள்ளிகள் சார்பாக ரூ65000 மதிப்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்
பட்டன. இதே போல சென்னையில் உள்ள பத்து சரகங்களிலும் நிவாரணப் பொருட்கள் குறுகிய நேரத்தில்
பெறப்பட்டுள்ளன
இது தொடக்கக்
கல்வி மட்டுமே. இது மட்டுமல்லாது அரசு, உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக்
பள்ளிகளும் நிவாரணப் பொருட்களை ஆச்சர்யமூட்டும் வகையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
இவை அனைத்தும் கஜா புயல் பாதிப்பின் அளவைப் பார்க்கும்போது சிறு
துளியே . தேன் துளி சிறிதென்றாலும் இனிக்காமலாபோகும்? எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு
நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அனைத்து சென்னை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள்
அருமை
பதிலளிநீக்குநல்ல விஷயம் சகோ. சிறுதுளி பெருவெள்ளம்..இது கஜாவுக்கல்ல உங்கள் எல்லோரது சேவைக்கும்...இப்படி பல ஊர்களிலிருந்தும் பெறப்படும் உதவிகள் அனைத்தும் சேரும் போது.,...அணில் தன்னால் இயன்ற சிறு உதவி செய்தது போல....பாராட்டுகள்.
பதிலளிநீக்குமக்கள் எல்லோரும் விரைவில் மீண்டு இயல்பு நிலை வந்திட வேண்டும்....
கீதா
நேரத்தில் உதவி ஞாலத்தினும் பெரிது
பதிலளிநீக்குசிறு துளிதான் பெருவெள்ளமா மாறும். வாழ்த்துகளுடன் வணக்கங்கள்
பதிலளிநீக்குஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குபாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குபெருமுயற்சிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு