கிணற்றுத் தவளைகள்
குதித்து விளையாடிய தவளை
கிணற்றிடம்சொன்னது
உன்னைவிடப் பெரிய
கடல் இல்லை
வெள்ளம் வந்து
கிணறு மூழ்கியது
வெள்ளத்தில் அடித்து சென்ற தவளைக்கு
இடம் கிடைத்தது
இன்னொரு கிணற்றில்
தவளைக்கு தலைகால் புரியவில்லை
புதிய கிணற்றை பெருங்கடல்
என்று கொண்டாடியது
காலப்போக்கில் தவளைக்கு
கிணறு தாவுதல் சகஜமானது
பிழைக்கத் தெரிந்த தவளை
கிணறுகளை கடல்களாக்கிக்
கொண்டிருந்தது
தவளை மட்டுமல்ல
தன்னையே
கடலாக வரித்துக் கொண்டிருக்கும்
கிணறுகளுக்கும்
ஒரு போதும் தெரியப் போவதில்லை
கடல் என்று ஒன்று இருப்பது
---டி.என்.முரளிதரன்-
**********************************************************************************
முந்தைய பதிவு படித்து விட்டீர்களா?
தமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி?
அருமை... இயற்கை செய்யும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று...
பதிலளிநீக்குநல்ல கருத்து சகோ. இது மனிதர்கள் நமக்கும் பொருந்துமே!
பதிலளிநீக்குகீதா
இது மனிதர்களுக்காக எழுதப்பட்டதுதான்
நீக்குரசிக்க வைத்தன தவளைகள் நன்றி நண்பரே...
பதிலளிநீக்குசிறப்பான கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிந்தனையை தூண்டி விடும் அருமையான கவிதை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
எவ்வித வார்த்தை விளையாட்டுமன்றியும், எளிய நடையில் மிகச்சிறப்பானதொரு கவிதை எழுதலாம் என்பதற்கு இதுவல்லவோ சான்று! வாழ்த்துகள் முரளிதரன்.
பதிலளிநீக்குசுப இராமநாதன்
தன் எண்ணத்துக்கு மாற்றுக் கருத்து இருப்பது கூட அறியாத தவளைகள்!
பதிலளிநீக்குதவளைக்கு ஏன் தவளை என்று பெயர் வந்தது தெரியுமோ? தத்தி தத்தி வளைக்குள் செல்வதால் அது "தவளை" ஆனது .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குஉண்மை ஐயா
பதிலளிநீக்குஅருமை
அருமை
பதிலளிநீக்குமுந்தைய பதிவும் அருமை (ஆய்வு கண்ணோட்டம் )
இவ்வளவு அற்புதமான கவிஞரா நீர் ஆகா
ஏன் தொடர்ந்து
எழுதுங்கள்
இது தவளை அல்ல நண்பரே.. "தறுதலை"!
பதிலளிநீக்கு9485E38375
பதிலளிநீக்குsms onay
En Güvenilir Hisse Senedi Nereden Alınır
Telafili Takipçi
Fake Numara
Aşk Acısı Ne Kadar Sürer