என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கிணற்றுத் தவளைகள்


                                           கிணற்றுத் தவளைகள்

 குதித்து விளையாடிய தவளை 
கிணற்றிடம்சொன்னது
உன்னைவிடப் பெரிய
கடல் இல்லை

வெள்ளம் வந்து 
கிணறு மூழ்கியது
வெள்ளத்தில் அடித்து சென்ற தவளைக்கு 
இடம் கிடைத்தது  
இன்னொரு கிணற்றில் 

தவளைக்கு தலைகால் புரியவில்லை
புதிய கிணற்றை பெருங்கடல்
என்று கொண்டாடியது

காலப்போக்கில் தவளைக்கு
கிணறு தாவுதல் சகஜமானது

பிழைக்கத் தெரிந்த தவளை 
கிணறுகளை கடல்களாக்கிக் 
கொண்டிருந்தது

தவளை மட்டுமல்ல 
தன்னையே 
கடலாக வரித்துக் கொண்டிருக்கும் 
கிணறுகளுக்கும் 
ஒரு போதும் தெரியப் போவதில்லை 
கடல் என்று ஒன்று இருப்பது


---டி.என்.முரளிதரன்-
**********************************************************************************

 முந்தைய பதிவு படித்து விட்டீர்களா?
தமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி?




12 கருத்துகள்:

  1. அருமை... இயற்கை செய்யும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்து சகோ. இது மனிதர்கள் நமக்கும் பொருந்துமே!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைத்தன தவளைகள் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு

  4. சிந்தனையை தூண்டி விடும் அருமையான கவிதை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  5. எவ்வித வார்த்தை விளையாட்டுமன்றியும், எளிய நடையில் மிகச்சிறப்பானதொரு கவிதை எழுதலாம் என்பதற்கு இதுவல்லவோ சான்று! வாழ்த்துகள் முரளிதரன்.

    சுப இராமநாதன்

    பதிலளிநீக்கு
  6. தன் எண்ணத்துக்கு மாற்றுக் கருத்து இருப்பது கூட அறியாத தவளைகள்!

    பதிலளிநீக்கு
  7. தவளைக்கு ஏன் தவளை என்று பெயர் வந்தது தெரியுமோ? தத்தி தத்தி வளைக்குள் செல்வதால் அது "தவளை" ஆனது .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  8. அருமை
    முந்தைய பதிவும் அருமை (ஆய்வு கண்ணோட்டம் )
    இவ்வளவு அற்புதமான கவிஞரா நீர் ஆகா
    ஏன் தொடர்ந்து
    எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  9. இது தவளை அல்ல நண்பரே.. "தறுதலை"!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895