(50000 பாக்கெட் மணி கேட்ட அம்மணி)
கடந்த இரண்டு வார நீயா நானா நிகழ்ச்சியில் மனதை பாதித்த இரு விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாக்கெட் மணி பற்றிய நீயா நானா பார்த்திருப்பீர்கள். அப்பொழுது இனைய இணைப்பின்மை காரணமாக இந்தப் பதிவை வெளியிட முடியவில்லை. காலம் கடந்த பதிவானதால் சுருக்கம் மட்டும்.
இந்த நிகழ்ச்சியில் கோபி நாத் கேட்ட கேள்விக்கு ஒரு கல்லூரி மாணவி சொன்ன பதில் பார்த்த அனைவரையும் நிச்சயம் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். அந்த கேள்வி "உனக்கு அதிக பட்சம் எவ்வாவு பாக்கெட் மணி தேவைப்படும்? அதற்கு அந்த மாணவி தயக்கம் சிறிதும் இன்றி சொன்ன பதில் 'மாதம் 50000 இருந்தால் போதும். குறைந்த பட்சம் 15000 மாவது தேவை'.
ஏழை விவசாயிகளைப் பற்றியோ அரை வயிறு கால் வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடும் ஏழைகளைப் பற்றியோ ஏன்? அரசாங்கத்தில கூட மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில வேல செய்பவர்களைப் பற்றியோ கேள்வியாவது பட்டிருக்குமா அந்தப் பெண்?
ஏழை விவசாயிகளைப் பற்றியோ அரை வயிறு கால் வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடும் ஏழைகளைப் பற்றியோ ஏன்? அரசாங்கத்தில கூட மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில வேல செய்பவர்களைப் பற்றியோ கேள்வியாவது பட்டிருக்குமா அந்தப் பெண்?
கையில் அதிகமாகப் பணம் புழங்குவது ஒரு வித அசட்டு தைரியத்தைக் கொடுக்கிறது என்பதற்கு இந்தப் பெண் ஒரு உதாரணம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தன்னைத் தன் தோழிகள் கண்ணைக் கட்டி காரில் அழைத்துச் சென்று பிறந்த நாள் கொண்டாடியதை பெருமையாகச் சொன்னார். பெற்றோர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. பல அசம்பாவிதங்கள் நடப்பதற்கு நாமே வாய்ப்பளிப்பது போல் உள்ளது இந்த நிகழ்வு.
அந்த மாணவியைப் பார்த்து பரிதாபப் படத்தான்முடிந்தது. இந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயமும் ஏற்பட்டது. அவசர அவசியத் தேவைகளுக்கு அவர்களாக சம்பாதிக்கும் வரை பாக்கெட் மணி தேவைதான்.ஒரு வரை முறை இல்லாமல் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி எதிர்பார்க்கும் பிள்ளைகளைக் கண்டு கவலைப் படுவது நியாயமானதே. உண்மையாகவே இவ்வளவு பாக்கெட் மணி பெற்றோர்கள் கொடுக்கிறார்களா என்பது நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. நீயா நானா மிகைப் படுத்துகிறதோ?
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் கூட தினந்தோறும் 5 ரூபாய் பத்து ரூபாய் பாக்கெட் மணி கொண்டுவருவது உண்டு. பெற்றோரின் கவனிப்பு இல்லாத அந்தக் குழந்தைகள் எதையாவது வாங்கி சாப்பிடுவதற்கு அதை பயன் படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் பணக்கார பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதை கட்டுப்பாடின்றி தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்கிறார்கள்.அதைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் அதேபோல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். முந்தைய தலை முறையினரைவிட இந்தத் தலை முறை நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பதை பெருமையாகக் கூட கருதுகின்றனர் என்று சிறப்பு விருந்தினர் சொன்னது குறிப்பிடத் தக்கது.
எச்சரிக்கை: இந்த நிகழ்ச்சியைப் பார்த்த கல்லூரி மாணவ மாணவியர் இன்னும் அதிகமான பாக்கெட் மணி கேட்கக் கூடும்
**************************************************************************************************************
கடந்த வார நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது.
"எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க" என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது.இதை அந்தக் கவிஞன் கேட்க நேர்ந்திருந்தால் அவரது மன நிலை என்னவாக இருக்கும்?
ஒருவர் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும் அதனை பொருளாக மாற்றத் தெரியா விட்டால் குடும்பத்தில் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க இயலாது என்பதற்கு கவிஞர் விக்ரமாதித்யன் உதாரணம். இப்படி இன்னும் எத்தனை இலக்கிய வாதிகள் இருக்கிறார்களோ.
இதோ விக்ரமாதித்யனின் ஒரு கவிதை
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
நேரத்துக்கு இரை;
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு;
தூக்க சுகத்துக்கு தடையில்லை;
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை;
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்;
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து;
ஆதியில் ஒரு நாள்,
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்;
இந்தக் கூண்டுப் புலிகள்!
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
நேரத்துக்கு இரை;
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு;
தூக்க சுகத்துக்கு தடையில்லை;
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை;
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்;
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து;
ஆதியில் ஒரு நாள்,
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்;
இந்தக் கூண்டுப் புலிகள்!
************************************************************************************************
