விகடனில் 10 செகண்ட் கதைகள் என்ற தலைப்பில் வெளியாகின்றன. நானும் ஒரு சில கதைகளை அனுப்பினேன் பிரசுரம் ஆகவில்லை . விகானில் வெளியாகும் பல 10 செகண்ட் கதைகள் எனது கதையை விட மோசமாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. சரி விகடன் வெளியிடா விட்டால் என்ன? நமது வலைப்பூ எதற்கு இருக்கிறது. எப்படி எழுதினாலும் சகித்துக் கொள்ள நீங்கள் இருக்கிறீர்கள் கவலை எதற்கு?
சிலகதைகள் ஜோக்குகள் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கே பொருந்தும். இதில் உள்ள இரண்டு கதைகள் அப்படிப்பட்டவைதான். விசாரணை, இறுதி சுற்று படங்கள் வெளியானபோது எழுதப் பட்டவை. அந்த நேரத்தில் வெளியாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்னும் காலம் கடக்கு முன் வெளியிட்டுவிட்டேன்.
விசாரணை
(10 செகண்ட் கதை )
வீட்டுக்கு தெரியாமல் விசாரணை படம் பார்த்துவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டே வந்த வினோத்தை ஒரு போலீஸ்காரரின் கரங்கள் இறுகப்பற்றின. பயந்துபோன வினோத் அதிர்ச்சியுடன் "அப்பா" என்றான்
*************************************************************************
இறுதிச் சுற்று
"இறுதிச் சுற்று வரை உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது" என்ற கணவனின் வார்த்தையை பொய்யாக்கி 108 வது இறுதிச் சுற்றை முடித்து கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினாள் 90 வயது சுந்தரி பாட்டி
*************************************************************************************
ஜீவகாருண்யம்
"தம்பி! , அங்கே எறும்புப் புற்று இருக்கிறது பார்த்து காலை வை" என்ற பெரியவரிடம், இளைஞன் ஏளனத்துடன், "ஐயா!எறும்பு கடித்து நான் சாக மாட்டேன்" என்றான்
"உன் கால்மிதிபட்டு எறும்புகள் சாகுமே!"என்றார் பெரியவர் கவலையுடன்
*****************************************************************************************
