என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, May 20, 2013

இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்!

   நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக்  கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்

  எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்  படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள்.

   இப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார்?. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்பற்றி  ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த  இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர்,

  அப்படி என்னதான் செய்தார் இவர்? வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது?
  மகாராஷ்டிரா  மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகிள் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து  கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ 

இதோ இந்த புகைப்படங்களை பாருங்கள்

  சிறந்த தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,அண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல்   ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார்.

  தனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்
 1. ஷ்ரம்தான்-அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக  இலவசமாக தருவது
 2. கிராமத்தில் ஆடு மாடுகள்  நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது
 3. மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது
 4. கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது
 5.  குடும்ப கட்டுப்பாடு 
    முதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர். 94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது  மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும்  ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும்  தன்னிறைவு அடையவும் இது உதவியது. கிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது. இதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டது.

  நீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப் பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன்   திட்டமிட்டு செயல் படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும்  பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.
 
  பெரிய அளவில் தொழில் நுட்பங்களோ  முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுய உழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை  இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம். வேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால்  கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற  குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன.

   இது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை  இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.

  ஒரு கூட்டு முயற்சியால்  சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி  வழிகாட்டிய  பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர்.
  ஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார்.
   நாட்டுக்கு இப்படி ஒருவர் கிடைப்பாரா? கிடைத்தாலும் விடுவார்களா? 

*****************************************************************************************************************
கொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு 
அதன் முகவரி


60 comments:

 1. இந்த மாதிரி பல நல்ல முயற்சிகளை நான் வட நாட்டவரிடம் பார்க்கிறேன். பாராட்டுக்கள்....பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி முயற்சி செய்பவர்கள் நம்மிடையேயும் உண்டு. அதைக்காண கீழே தந்துள்ள இணைப்பை சொடுக்கவும்.
   http://www.livingextra.com/2012/03/must-read-article.html#ixzz2LAz8uWla
   ஆனால் அவர்களைப் பற்றி யாரும் எழுத்துவதில்லை/பேசுவதில்லை. இருப்பினும் இந்த மாதிரி கிராமம் பற்றி பகிர்ந்துகொண்ட திரு T.N.முரளிதரன் அவர்களுக்கு நன்றி!

   Delete
  2. நீங்கள் கூறியுள்ள பள்ளியைப்பற்றிய செய்தியை நானும் வெளியிட்டுள்ளேன் ஐயா!
   http://tnmurali.blogspot.com/2013/01/neeya-nana-mugangal-2012-vijayvtv.html

   Delete
 2. முன்மாதிரி!வாழ்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி குட்டன்

   Delete
 3. கிராம தலைவர் பொப்பட் ராவ் பாகுஜி பவார் வாழ்க வளர்க!
  இவரை பற்றி படித்தவுடன் நம் கிராமங்களுக்கும் இது போல் தலைவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைத்து விட்டார்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies

  1. இந்த மாதிரி தலைவராக வர நம் பதிவுலகில் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு தகுதி இருக்கிறது. அவர் இது போல ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் ஆசை. நான் சொன்னது சரிதானே?

   Delete
 4. இந்த மாதிரி தலைவர்கள் நம் நாட்டிலும் இருந்து விட்டால் எத்தனை அருமையாக இருக்கும். மக்களும் தலைவர்களும் உணர்ந்து மாற வேண்டும். நல்ல பகிர்வுங்க.

  ReplyDelete
 5. பொப்பட் ராவ் பாகுஜி பவார் அவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்... வாழ்த்துக்கள்...

  ஐந்து வழிமுறைகளில் நான்கும் ஐந்தும் முக்கியம்...

  ஒளிர வேண்டியவர்கள் விளம்பரங்களை விரும்புவதில்லை...

  நல்லதொரு சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 6. . ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

  இன்னும் நிறைய பேர் தோன்ற முன்னோடியாகட்டும் ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஸ்வரி

   Delete
 7. நல்ல மனிதர்களையும், நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்லும்போது இன்னும் நிறைய பேருக்கு இந்த சிந்தனைகள் முன்மாதிரியாய் தோன்றும். உங்கள் பகிர்வின் மூலம் விதைத்துள்ளீர்கள்..! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. யாருங்க இவரு பிழைக்க தெரியாத தலைவராக இருப்பார் போல...


  காங்கிரஸ்காரர்களிடம் ஒரு வருடம் பயிற்சிக்கு அனுப்பிவைங்க... அப்புறம் பாருங்க...

  ReplyDelete
  Replies
  1. அந்த மாதிரி ஆளுங்க வந்து கெடுத்ததுடாமா இருக்கணுமே

   Delete
 9. ////////
  நல்ல மனிதர்களையும், நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்லும்போது இன்னும் நிறைய பேருக்கு இந்த சிந்தனைகள் முன்மாதிரியாய் தோன்றும். உங்கள் பகிர்வின் மூலம் விதைத்துள்ளீர்கள்..! மிக்க நன்றி!
  //////////

  அம்புட்டுதாங்க...

  ReplyDelete
 10. உண்மையில் ஆச்சரியப்படவைக்கும் அற்புதமான தலைவர்.”உலகின் ஏழ்மையான தலைவர்” உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிக்காவை கூட இவர் விஞ்சி விட்டார்.பயனுள்ள தகவல்

  ReplyDelete
 11. nalla thakaval...!

  pakirvukku nantri!

  ReplyDelete
 12. நிறை குடம் ததும்பாது என்பார்கள்.ராவ் பாகுஜி பவார் அவர்களும் ஓர் நிறை குடம்தான். அவசியம் பாராட்டப்பட வேண்டியவர். இத போன்ற விளர்ச்சி பெற்ற கிராமங்களைப் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத்தெரியப் படுத்தப்பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக! நன்றி சார்

   Delete
 13. அருமையான ஒரு கிராமத்தையும் நல்லதொரு தலைவரையும் அறிமுகப் படுத்தி இது மாதிரி நமது நாட்டுக்கும் ஒருவர் கிடைக்க மாட்டாரா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்! அருமையான பகிர்வு ! நன்றி!

  ReplyDelete
 14. கைப் பொம்மையாய் தலையாட்டிக் கொண்டிருக்கும் ஊமையனும், குடும்பத்துக்கு மட்டுமே சொத்து சேர்த்துக் கொண்டிருந்தவனும் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இதையெல்லாம் சட்டை செய்ய மாட்டார்கள்

   Delete
 15. சாராயத்திற்கு ஓட்டுப்போடும் நம் நாட்டில் மதுவிலக்குடன் ஒரு கிராமமா?அவர் பல்லாண்டு வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. கிராமத்த்தின் முன்னேற்றத்திற்கு காரணம் மதுவிலக்குதான்

   Delete
 16. அருமையான இப்படி மனதுக்கு நிறைவு தரும்
  தகவல்களையும் தலைவரையும் அறிவது கூட
  எவ்வளவு அபூர்வமாக இருக்கிறது
  விரிவான அருமையான பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற தகவல்களை தேடித்தான் பிடிக்க வேண்டி இருக்கிறது. நன்றி ரமணி சார்

   Delete
 17. நல்ல மனிதரை நாடறியச் செய்தீர் அவர் வாழ்க பல்லாண்டு!

  ReplyDelete
 18. // சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர். //

  பாராட்டப்பட வேண்டியவர்தான், பொப்பட் ராவ் பாகுஜி பவார். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா! நம் ஊராட்சி தலைவர்களும் இதை அறிந்து கொண்டால் நல்லது

   Delete
 19. பொப்பட் ராவ் பாகுஜி பவார் அவர்கட்கு வாழ்த்துகள்.
  வாழ்க! அவர் நற்பணிகள்.

  ReplyDelete
 20. நல்லவரை நாமும் வாழ்த்துவோம்.இருந்தாலும் நம்மூரிலும் இருக்கிறார்கள் கவனிங்க

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக தேடிப் பிடித்து பாராட்டலாம்.

   Delete
 21. ஒவ்வொரு ஊரிலும் இது மாதிரி ஒருத்தர் இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோண வெச்சிருச்சு. அவரின் நற்பணிகள் தொடர வாழ்த்துவோம். தென்னாட்டின் நிலையை எண்ணிப் பெரு(அனல்)மூச்சு விடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. நேர்மையோடு உள்ளவரை நம் மக்கள் தேர்ந்தேடுப்பார்களா என்பது சந்தேகமே!

   Delete
 22. மனமிருந்தால் மார்க்கமுண்டு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தலைவர்கள் மனம் வைத்தால் நிச்சயம் மாற்றங்கள் கொண்டு வரலாம். நன்றி ஜோதிஜி சார்

   Delete
 23. “நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.“

  என்ன பண்ணுவது மூங்கில் காற்று. நம்மவர்களைப் பற்றி நமக்கே
  நல்ல அபிப்பிராயங்கள் வரமாட்டேங்கியதே.... பயம் தானே வருகிறது!

  அவர்களாவது நல்லா இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ! நன்றி அருணா

   Delete
 24. வாழ்த்தப் படவேண்டிய மனிதர், வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துவோம். நம்மவர் யாரேனும் செய்ய முன்வந்தால் வரவேற்போம்

   Delete
 25. நல்ல மனிதர்.
  மாதிரி மனிதர். இவரைப் பற்றி சில வாரங்களுக்குமுன் 'எங்கள்' பாசிட்டிவ் பகுதியில் பகிர்ந்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பகுதிகளை விரும்பி படித்து வருகிறேன். இதை எப்படியோ கவனிக்கத் தவற விட்டேன். கவனித்திருந்தால் இந்தப் பதிவை தவிர்த்திருப்பேன்.

   Delete
 26. பொப்பட் ராவ் பாகுஜி பவார் சாதனையைப் பார்த்தாவது மற்ற அரசியல்வாதிகள் திருந்தவேண்டும் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி பகவான்ஜி

   Delete
 27. வணக்கம்
  முரளி(அண்ணா)

  இப்படியான நல்ல மனிதரை உங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி இப்படியான நல்லமனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரின் சேவை தொட வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 28. வணக்கம்
  முரளி(அண்ணா)

  இப்படியான நல்ல மனிதரை உங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி இப்படியான நல்லமனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 29. அரசாங்கம் தூங்கினாலும்.. அடியாட்கள்.. இவர்கள் எப்படி தடை செய்யாமல் இருந்தார்கள்?

  ReplyDelete
 30. ஊருக்கு இப்படி ஒருவர் இருந்தால் நாம் எப்பொழுதோ வல்லரசாகி இருப்போம். செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 31. அரசாங்கம் தூங்கினாலும்.. அடியாட்கள்.. இவர்கள் எப்படி தடை செய்யாமல் இருந்தார்கள்?

  பலஇடங்களில் மக்கள் ஒரே புள்ளியில் இணைந்து விடுகின்றார்கள். தென் மாவட்டங்களில் பார்த்துள்ளேன்.

  நன்றி முரளி

  ReplyDelete
 32. நல்ல பகிர்வு. நன்றி

  முரளி TN

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895