என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, October 15, 2013

தயங்காம கை கழுவுங்க!-300வது பதிவு 300 வது பதிவு
    இன்று( 15.10.2013)  உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற்கு கொண்டாட வேண்டும்? கை கழுவுவது  அவ்வளவு முக்கியமா?
உலகில் 2 மில்லியன் குழந்தைகள் டயரியா போன்ற  வயிற்றுப் போக்கு மற்றும் நுரையீரல் தொற்றுக்களால் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. முறையாக சோப்பை பயன்படுத்தி கைகள் கழுவுவதன் மூலம் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். இதன் முக்கியத்துவம் உணரப் பட்டதால் PPPHW (PUBLIC-PRIVATE PARTNERSHIP FOR HAND WASHING என்ற அமைப்பு 2008 முதல் ஒரு இயக்கமாக மாறி கைகழுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உருவாக்க  முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றே உலக கைகழுவும் தினம் கொண்டாடுதல். 

இந்த அமைப்பில், உலக வங்கி, யூனிசெப்,(United Nations International Children Emergency fund) மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று கை கழுவும் தினம் கொண்டாட முடிவு செய்யப் பட்டது
முக்கியமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தை உணர்த்துவதை இவை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய நாளில் பள்ளிகளில் மதிய உணவு உண்பதற்கு மாணவர்கள் மாணவர்கள் ஆசிரியர் முன்னிலையில் சோப்பு போட்டு கைகழுவும் திருநாளாக கொண்டாடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் கைகளை எவ்வாறு முறையாக சோப்பை பயன்படுத்தி கைகழுவ பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன. சுகாதாரமற்ற சூழலில் வாழும் அடித்தட்டு  மக்கள் இதனை உணர்ந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் நோய்க்கு ஆட்படாமல் தடுக்கவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த நல்ல பழக்கத்தை உருவாக்குதன் மூலம் எதிகால சமுதாயத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பப் படுகிறது.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவை எடுத்து உண்பதற்கு  கைகளே பயன்படுத்தப் படுகின்றன. சரியாகக் கழுவப் படாத கைகள் கிருமிகளின் தாயகமாக விளங்குகிறது. வயிற்றுப் போக்கு டைபாயிட் காலரா போன்ற தொற்றுக்களுக்கு ஆதாரமாக விளங்குவது மனித மலம். ஒரு கிராம் மனித மலத்தில் சுமார்  1கோடி வைரஸ்களும்,10 லட்சம் பாக்ட்டீரியாக்களும் வாசம் செய்து கொண்டிருக்குமாம். இவை பல்வேறு விதங்களில் மலத்திலிருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவினாலும் எப்படியோ கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு  உண்ணும்போதோ விரல்களை வாயில் வைக்கும் போதோ ஜாலியாக உடலுக்குள் நுழைந்து தன வேலையை காட்டத் தொடங்குகிறது. அசுத்தமான தண்ணீர் வழியாகவும், ஈக்கள் மூலமாகவும் இந்த நுண்ணுயிரிகள்   பரவும் என்றாலும். என்றாலும் குறிப்பிடத் தக்க அளவு கைகளுடன்தான் இந்தக் கிருமிகள் கைகோர்த்துக் கொள்கின்றன

எப்போதெல்லாம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்?
 1. மலம் கழித்த பின்பு 
 2. சாப்பிடுவதற்கு முன் 
 3. சமைப்பதற்கு முன் 
 4. உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன் 
 5. உணவு பரிமாறுவதற்கு முன் 
 6. குழந்தைகள் மலம் கழித்த பின்அதை சுத்தம் செய்த பின் 
 7. வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் 
 8. கழிப்பறைகளை  சுத்தம் செய்தபின் 
 9. மருத்துவமனை சென்று வந்த பின்
 10. அசுத்தமான இடங்களில் கை வைத்த பின் 
எப்படிக்  கழுவ வேண்டும் ?
வெறும் நீரால் நீண்ட நேரம் கை கழுவினாலும் கையில் உள்ள நுண்கிருமிகள் கையை விட்டு செல்வதில்லை. விடாப் பிடியாக கண்ணுக்குத்தெரியாமல் ஒட்டிக கொண்டிருப்பவற்றை அகற்ற  சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கைகளை கழுவ வேண்டும்  நகங்கள் அழுக்கை சேமிக்கும் கிடங்காதலால் அதை அவ்வபோது வெட்டிவிட வேண்டும்.நகங்கள் இருந்தால் சோப்பு போடும் போது  அங்கேயே கிருமிகளும் அழுக்கும் தங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு
 • கைகளை  நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பு அல்லது சோப்பு கரைசலை தடவ வேண்டும் 
 • உள்ளங்கைகளை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்
 • விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்க வேண்டும்
 • வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையிலும், இடது கை விரல் நுனிகளை வலது உள்ளங்கையிலும் வைத்து தேய்க்கவேண்டும் 
 • கைகளில்  சோப்பு நுரை குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும் . 
 • பின்னர் கைகளை சோப்பு நுரை போகும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்                 
 • குழந்தைகள் என்றால் முழங்கை வரையிலும் , பெரியவர்கள் என்றால் மணிக்கட்டு வரையிலும் நன்கு கழுவ வேண்டும்        
 • விலை உயர்ந்த சோப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண சோப்பே போதுமானது.
இதோ இந்தப் படத்தில் உள்ளது போல் சோப்பு போட்டு கைகளை கழுவுவது சரியான முறையாகும்.
  ஆசிரியர்கள் மட்டுமல்ல .பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக கை கழுவும் பழக்கத்தைகற்றுத் தர வேண்டும். அவர்களிடம் சொல்வதை விட நாம் தேவைப்படும் சமயங்களில் கை கழுவும் பழக்கம் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கும் தானாகவே வந்து விடும்.
****************************************************************************************

300 பதிவுகளை சகித்துக் கொண்டு  ஊக்கமும் ஆதரவும் தந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த  நன்றி

****************************************************************************************

52 comments:

 1. பயனுள்ள தகவல்கள். 300வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. thakavalukku nantri!
  300 vathu pathivirku vaazhthukkal...

  ReplyDelete
 3. 300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதுரைதமிழன்

   Delete
 4. வணக்கம்
  முரளி (அண்ணா)
  சுகாதாரம் சம்மந்தம்மான பதிவு நன்று 300வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. 300 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிவு பயனுள்ள பகிர்வு. கைகளில் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருந்தால் கை கழுவுதலுக்கு அர்த்தம் மிகும்! இல்லா விட்டால் நக இடுக்குகளில் இன்னும் அழுக்கு சேர்ந்துகொண்டே இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை உண்மை அதையும் சேர்த்து விடுகிறேன்

   Delete
 6. 300 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
  எப்படி கை கழுவ வேண்டும் என்பதனை நன்றாக விளக்கினீர்கள்.
  “ கை கழுவுதல் “ தமிழ் நாட்டில் வேறொரு பொருளிலும் எடுத்துக் கொள்ளப்படும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா! இதைப் பற்றி நான் எப்போதோ எழுதிய கவிதை ஒன்று உண்டு. அதை கடைச்யில் குறிப்பிட நினைத்தேன். வரிகள் மறந்து விட்டதால் அதை குறிப்பிடவில்லை.

   Delete
 7. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயகுமார் சார்

   Delete
 8. 300வது பதிவுக்கு வாழ்த்துகள். இன்று கை கழுவும் தினமா!? ரைட்டு.

  ReplyDelete
 9. தகவல் பயனுள்ளவை...

  300...! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. தலைப்பை பார்த்ததும் அரண்டு போனேன் ...300வது பதிவைப் போட்டுவிட்டு ஏன் கை கழுவ சொல்லவேண்டும் ?வாழ்த்துக்கள் !
  த.ம 4.

  ReplyDelete
 11. விழிப்புணர்வு உருவாக்கும் பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  300 வது பதிவுக்கு இனிய் வாழ்த்துகள்....!

  ReplyDelete
 12. தரமான பயனுள்ள பதிவுகளாக
  முன்னூறு பதிவுகள் தருவது என்பது
  உண்மையில் இமாலயச் சாதனையே
  சாதனைகள் ஆயிரம் ஆயிரமாய்த் தொடர
  எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. 300வது பதிவு முத்தான பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. ரொம்ப நல்ல பதிவு... யூஸ்புல்லா இருந்துச்சு

  ReplyDelete
 15. முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். கை கழுவுதல் பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளது. குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே பழக்கப்படுத்தி விட வேண்டும்.

  ReplyDelete
 16. பயனுள்ள தகவல்கள். இதுவரை இப்படி ஒரு தினம் கொண்டாடப்படுவது நான் அறியாத செய்தி ! 300வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. 300 வது பதிவு நச்சுனு இருக்கு.

  ReplyDelete
 18. 300வது பதிவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. கை கழுவுவதில் இத்தனை முக்கியத்துவமா?

  இனி கை கழுவும் இடத்தில் சோப்பும் இருக்கும்.

  300 ஆவது பதிவுக்குப் பாராட்டு; மேலும் சாதனைகள் நிகழ்த்த வாழ்த்து.

  ReplyDelete
 20. `வணக்கம் அய்யா.
  300 ஆவது பதிவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
  பயனுள்ள தகவல் அய்யா. நமக்கு தெரிந்த ஆனால் கடைபிடிக்க மறந்த விடயத்தை நன்றாகப் பதிந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 21. கழுவுங்க நல்லாவே கழுவுங்க ... 300க்கு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 22. சில தனியார் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கு வரும் பார்வையாளர்கள் அவர்கள் கொடுக்கும் (கிருமி நாசினி) திரவத்தை கைகளில் தேய்த்த பிறகே குழந்தைகளை தொட அனுமதிக்கிறார்கள்.

  ReplyDelete
 23. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் முரளிதரன்!

  ReplyDelete
 24. அவசியமான பதிவு முரளி சார், இன்றைய நிலையில் பலருக்கும் தேவைப்படும் பதிவு

  ReplyDelete
 25. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 26. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  நல்ல விழிப்புணர்வு பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 27. 300வது பதிவுக்கு வாழ்த்துகள் சார்

  ReplyDelete
 28. 300 வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 29. மூன்று சதங்கள், பல்கி பெருகட்டும்.

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 30. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. 300 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 300 விரைவில் 3000 ஆகட்டும்!

  ReplyDelete
 31. 300வது பதிவுக்கு வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.வாழ்த்துகள். நண்பா

  ReplyDelete
 32. நல்ல பயனுள்ள பதிவு. 300வது பதிவுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றி.

  ReplyDelete
 33. 300 ஆவது பதிவிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. நல்லதொரு பதிவு! 300வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 35. I will follow these instruction henceforth, thanks.............

  ReplyDelete
 36. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..! நல்ல விஷயம்!

  ReplyDelete
 37. நல்ல பதிவு.300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. 300ஐ கைகழுவ விட்டுட்டீங்களே.. வாழ்த்துகள்!!

  ReplyDelete
 39. 300 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கை கழுவது பற்றி சில சோப் விளம்பரங்கள் பார்த்ததுண்டு. கை கழுவும் தினம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்நடை முறையில்கை கழுவுதல் என்பதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு .சரியா.? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. தெரிந்த விஷயமாக இருந்தாலும் அடிக்கடி யாராவது நினைவுபடுத்தினால்தான் நாம் தொடர்ந்து செய்வோம்...வாழ்த்துச் சொல்லும் அளவுக்கு வயதில்லாவிட்டாலும் பெரியமனதுடன் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 41. இன்று நேரம் கிடைத்து உங்கள் தளம் முழுக்க தொடக்கம் முதல் ஓரளவிற்கு வாசிக்க முடிந்தது. நிச்சயமாக ஒரு அக்கறையும் அவசியம் கருதியே பல பதிவுகள் எழுதியிருக்குறீங்க. வாழ்த்துகள். 1000 வரைக்கும் கொண்டு வந்துடுங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜோதிஜி சார். தங்களைப் போன்றவர்களின் ஆதரவுதான் நான்கு ஆண்டுகளாக எழு தஊக்கம் கொடுத்தது.இப்போது 389 இல் இருக்கிறேன்.தமிழ்ப் புத்தாண்டு அன்று 400 பதிவைத் தொட முயற்சி செய்வேன்.

   Delete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895