என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?


நான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து என்னைப்  போன்று இருப்பவர்களுக்கு உதவக் கூடும் என்றே இதை பகிர்கிறேன்.(கொஞ்சம் கற்பனை கலந்து)
ஏற்கனவே கீழுள்ள இரண்டு பதிவுகளுக்கும் கிடைத்த வரவேற்பே இந்த பதிவு எழுத காரணமாக அமைந்தது
காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற
இவ்விரண்டு பதிவுகளில் மாதிரியாக நான் உருவாக்கி இணைத்த Excel கோப்புகளை தினமும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்
 நண்பர் சொன்னார். "முரளி! நீதான் என்னை காப்பாத்தணும்.உன்னை  நம்பி சவால் விட்டிருக்கிறேன்..'" என்றார்.
"என்ன சவால் ஒன்னும் புரியலையே! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே" நண்பரை கேட்டேன்.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆபீஸ்ல ஒரு பெரிய ஒரு தகவலை தொகுத்து ஸ்டேட்ஆபிசுக்கு அனுப்பனும். அது என்னோடபொறுப்பு. எங்க ஆபீஸ்ல ரமேஷ்னு ஒருத்தர்தான் கம்ப்யூட்டர்ல இந்த வேலை எல்லாம் செய்வார். எக்சல்ல ஒர்க் பண்றதுக்கு அவருக்கு மட்டும்தான்  தெரியும். வோர்ட்ல பக்கம் பக்கமா அடிக்கறவங்க இருக்காங்க அவங்க எல்லாம் எக்சல்னு சொன்னாலே பயந்து ஓடறாங்க. இவரை நம்பி இருக்கறதாலே ரொம்ப அலட்டிக்குவார். தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு அலட்சியம் வேற. ஆனா அவரால ரெண்டுநாளா நாளா இந்த வேலையை முடிக்க முடியல.  நான் கூப்பிட்டு திட்டிட்டேன். அவரோ இது சாதரண வேலை   இல்ல. இதை யாராலையும் சீக்கிரமா முடிக்க முடியாது.நான் வேண்ணா சாலஞ் பண்ணறேன்னு சொன்னார். எனக்கு உன் ஞாபகம் வந்தது. நானும் சவால் விட்டேன். நான் பண்ணி காமிக்கிறேன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சனிக்கிழமைதானே! ஆபீசுக்கு வந்துடு"
"என்ன சார் இப்படி பண்ணீட்டிங்க. என்ன வேலைன்னே தெரியலையே. நானும் எனக்கு தெரிஞ்சத வச்சு  சும்மா வெட்டி பில்ட் அப் குடுத்துக்குட்டிருக்கேன்"
"அதெல்லாம் தெரியாது. உன்னால முடியும் வா! பாத்துக்கலாம்"
நம்மள  சிக்கல்ல மாட்டி விட்டுட்டாரே.இதை செய்யலைன்னா நம்ம இமேஜ டேமேஜ் ஆகிடுமே" என்று நினைத்த வாறே போனேன்.
சனிக்கிழமை என்ற போதும் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ அவசர வேலை போல.
என்னை வரவேற்ற நண்பர் கம்ப்யூட்டர் ஆசாமியிடம் அழைத்துப் போனார்.
"ரமேஷ் இவர்கிட்ட சொல்லு."
ரமேஷ் என்னைப் பார்த்த ரமேஷ் இரு இகழ்ச்சிப் புன்னகை புரிந்தார்.
"நீங்க சாப்ட்வேர் தெரிஞ்சவரா? என்றார்
"இல்லை."
"ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் பண்ணி இருக்கீங்களா?
"இல்லை"
" பிராக்டிகல தெரிஞ்சிவச்சுருப்பீங்க போல இருக்கு" என்னால் இதை நிச்சயமாக செய்ய முடியாது என்ற முடிவுக்க வந்தவர் போல் தோன்றியது.
 "என்ன சார் பண்ணனும் "
கணினியில் ஒரு எக்சல் கோப்பை திறந்து காண்பித்தார்
" இதுல 5000க்கும் மேல  அட்ரசஸ் இருக்கு. ஆனா ஒவ்வொண்ணும் தனித்தனி காலத்தில இருக்கு.பேர் ஒரு செல்லுல இருக்கு. வீட்டு நம்பர் பக்கத்து செல்லுல இருக்கு. தெருபேர், ஊர்,மாவட்டம், மாநிலம் பின் கோடுன்னு அடுத்தடுத்த செல்லுல இருக்கு. இது எல்லாம் ஒரே செல்லில் கொண்டு வரணுமாம். எப்படி முடியும? மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு செல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே! 5000 த்துக்கும் மேல இருக்கிறதை எப்படி ஒரே நாளில் செய்வது. நீங்க என்னவோ செஞ்சுடுவீங்களாமே. உங்க நண்பர் சவால் விட்டிருக்கார். எங்க செஞ்சு காட்டுங்க  பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு கணினியை விட்டு எழுந்து எனக்கு இடம் கொடுத்தார் 
என்னடா இது வம்பாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் இது போன்று செய்ததில்லை என்பதால் உடனே தீர்வு கிடைக்கவில்லை. முயற்சித்துக் கொண்டிருந்தேன்
நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன். நீங்க ட்ரை பண்ணிக்கிட்டிருங்க என்று சொல்லி விட்டு வெளியே போனார் ரமேஷ்.
நண்பரோ எப்படியாவது வழி கண்டுபிடிங்க என்றார். 
நிச்சயம் எக்செல்லில் இதற்கு வழி இருக்கும் என்றே தோன்றியது.(அப்போது நான் இணையம் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை)
சிறிது நேர முயற்சிக்குப் பிறகு பலன் கிடைத்தது. 
இரண்டு வழிகள் கிடைத்தன. ஒன்று Concatenate என்ற Function ஐ பயன் படுத்துவது. இன்னொன்று வெறும் "&" பயன்படுத்துவது


மேற்கண்ட படத்தை பாருங்கள் A2 செல்லில் Raja என்ற பெயர் உள்ளது B2 இல் வீட்டு எண்ணும் அடுத்தடுத்து தெருவின் பெயர் ,இடம் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களும் உள்ளன. இவற்றை இணைக்க கடைசி விவரத்தில் (H2) பக்கத்து செல்லில் கிளிக் செய்து
 = குறியீட்டை டைப் செய்து பின்னர் இணைக்கவேண்டிய முதல் செல்லை கிளிக் செய்யவேண்டும்பின்னர் & குறியீட்டை டைப் செய்து அடுத்த  செல்லை கிளிக் செய்ய வேண்டும்ஒவ்வொரு சேலை கிளிக் செய்யுமுன் & டைப் செய்ய வேண்டும்
அந்த FORUMLA இப்படி இருக்கும்
=A2&B2&C2&D2&E2&F2&G2 இப்படி  FORMULA  BAR இல் காட்சியளிக்கும்
இப்போது H2செல்லில் இந்த Formula வை டைப் செய்தால் இந்த செல்களில் உள்ளவை இணைக்கப் பட்டு ஒரே செல்லில் முகவரி காட்சி அளிக்கும். முகவரி விவரங்களுக்கு இடையில் ஒரு கமா குறியீடு அமைய வேண்டும்னில் FORMULA இப்படி  இருக்க வேண்டும்
 =A2&","&B2&","&C2&","&D2&","&E2&","&F2&","&G2
 அமைய வேண்டுமெனில் ஆனால் இதில் ஒரு குறைபாடு உண்டு பெயர் வீடு எண்,தெருவின் பெயர் போன்றவை ஒவ்வொரு வரியாக அமையாமல் தொடர்ந்து அமையும்.  இவை தனித்தனியான அமைய.Char(10) என்றFunction( அதாவது ஒரு செல்லுக்குள் புது வரிகளை அமைக்க) ஐ பயன் படுத்த வேண்டும்.(சாதரணமாக அடுத்தடுத்த வரிகளில் text அமைய வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து Alt+Enter விசையை பயன் படுத்துவது வழக்கம்)

=A2&","&CHAR(10)&B2&","&","&C2&","&CHAR(10)&D2&","&CHAR(10)&E2&","&CHAR(10)&F2&","&CHAR(10)&G2 
 என்ற பார்முலாவை உள்ளீடு செய்தால் முகவரி அழகாக படத்தில் உள்ளது போல் கிடைக்கும். இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகவரி இணைக்கப்பட்ட செல்கள் Wrap text Format இல் அமைய வேண்டும்.
அதற்கு  ரிப்பனில் Home Tab இல் Wrap Text பட்டனை பயன் படுத்தலாம் அல்லது
 செல்லை வலது கிளிக் செய்து Format Cell தேர்ந்தெடுத்து Alignment Tab இல் Wrap text செக் பாக்சில் டிக் செய்யவேண்டும் .


 ஒரு முறை பார்முலா அமைத்து விட்டால் மற்ற விவரங்களுக்கு ட்ராக் செய்து விடலாம்.
Concatenate பயன் படுத்தி  எப்படி text ஐ இணைப்பது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம் (இப்போதைக்கு இல்லை)
இந்த முறையை பயன் படுத்தி  விவரங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தேன். நண்பர் மகிழ்ச்சி அடைந்து  அதற்குள் வெளியே சென்றிருந்த ரமேஷ் திரும்பி வந்தார்.
அவரால் நம்ப முடியவில்லை. நண்பர் ரமேஷைப் பார்த்து நான் சவாலில் ஜெயிச்சிட்டேன். என்றார்.
ரமேஷின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்றாலும் நன்றி சொன்னார் ஏதாவது தவறு கண்ணில் படுகிறதா என்று பார்த்தார். கடைசியாக இணைக்கப்பட்ட முகவரிகள் அனைத்தையும் செலேக்ட் செய்து வேறு ஒரு ஷீட்டில் காபி செய்தார். அங்கே பேஸ்ட் செய்ய #REF! என்று பிழை அறிவிப்பு  இருந்தது.
சரியா  வரலையே சார். என்றார்.
நான் சொன்னேன் ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும்  செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும்.  என்றேன். அவ்வாறே செய்ய சிக்கல் தீர்ந்தது. சவாலில் வென்ற நண்பர் அனைவருக்கும் S.K.C வாங்கி கொடுத்தார்.
இதற்கான மாதிரி Excel பைலை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்
அல்லது  கீழே உள்ள படத்தில் Down Arrow வை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.



****************************************************************

குறிப்பு: இது மாணவர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணிகளுக்கு எப்போதேனும் பயன்பட வாய்ப்பு உண்டு


1.காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
2.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற..


**************************************************************************************


29 கருத்துகள்:

  1. பலருக்கும் பயன் தரும்...

    // ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும் செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும்... //

    $ யை பயன்படுத்திப் பாருங்கள்... (copy, paste & others) வேலை இன்னும் எளிதாகும்...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    தங்களுக்கும் தங்களின் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    முரளி(அண்ணா)

    தொழில்நுட்ப பதிவு விளக்கம் அருமை வாழ்த்துக்கள்......

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. உபயோகமான தகவல். இதே போல pivot tables. நிறைய பேருக்கு தெரிவதில்லை....

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல் அய்யா. அனைவருக்கும் நிச்சயம் பயன்படும். இத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு பதிவில் உங்கள் தன்னடக்கம் இருக்கிறதே! என்னவென்று சொல்வது. தொழில்நுட்பம் சார்ந்த தங்கள் சிந்தனைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் அய்யா...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் பயனுள்ள பதிவு மூங்கில் காற்று.

    நானும் முயற்சிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமை.TNM.. நிச்சயம் இது எனக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
  8. நான் வைத்திருக்கும் வண்டியின் பெயர் TVS 50 XL SUPER. ஆனால் கம்ப்யூட்டரில் MS OFFICE EXCEL பக்கம் செல்வது கிடையாது. சிக்கலான வேலை. எளிமையான MS WORD போதுமே என்ற எண்ணம்தான்.

    MS OFFICE EXCEL பற்றிய தங்களது குறிப்புகளுக்கு நன்றி! மறுபடியும் படித்தால்தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன்..
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. Great Murali, without formal training you have achieved this means, it should be appreciated. Keep it up.

    Balaji
    www.aniyayangal.com

    பதிலளிநீக்கு
  11. தொழில் நுட்ப பகிர்வுக்கு நன்றி முரளிதரன் சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. தீபாவளி நேரத்துலயும் தீயா வேலை செய்யறீங்க போல.. என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயன்படும் பதிவு..தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  13. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. சூப்பர். அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான தகவல்கள் நண்பரே..
    பகிர்வுக்கு நன்றி.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  16. அலுவலக பணியாளர்களுக்கு உபயோகமான தகவல் பகிர்வு! நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. அலுவலகம் மற்றும் பள்ளி-கல்லூரியில் பணியாற்றுவோருக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள தகவல் அய்யா. அனுபவக்கல்வி அல்லவா? ஏட்டுச் சுரைக்காயை வென்று விடடது! தங்கள் வெற்றிகள் தொடரவும், அதுபோலவே பதிவுகள் தொடரவும் வாழ்த்துகள் அய்யா. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பகிர்வுக்கு மிக்க நன்றி .இனிய தீபவாளி வாழ்த்துக்கள் சகோதரரே .

    பதிலளிநீக்கு
  19. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வர்வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

  20. மகிழ்வு தரும் செயற்பாட்டுப் பதிவிது.

    தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

    பதிலளிநீக்கு
  21. அருமை, இதே பங்சன் நான் அலுவலகத்தில் பயன்படுத்துகிறேன். Microsoft இதற்கென்றே ஒரு தனி பார்முலா கொடுத்திருக்கிறார்கள். அது CONCATENATE. கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் & பங்சன் மிகவும் எளிதானது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. முதலில் Concatenate பயன் படுத்துவது எப்படி என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அதைவிட இது இன்னும் எளிது என்பதால் எழுதினேன். வேறு ஒரு நேரத்தில் அதையும் எழுதுவேன். நன்றி ஸ்கூல் பையன்

      நீக்கு
  22. எச்செல்ல்லை இன்னும் தெரிந்துகொள்ள உதவியாய் உள்ளது.நன்றிங்க நண்பரே

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895