என்னை கவனிப்பவர்கள்

புதன், 23 அக்டோபர், 2013

புஷ்பாமாமியின் புலம்பல்கள்!ஜாக்கிரதைடா!ஜாக்கிரதை!

'விஸ்வநாதா! நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ. ஜாக்கிரதையா நடந்துக்கோ பேப்பர்ல வர்ற நியூஸ் எல்லாம் பாத்தா பயமா இருக்கு. போன் பண்ணு. ....."
புஷ்பா  மாமியின் குரல் வீட்டுக்குள் இருப்போரையும் வெளியே எட்டிப் பார்க்க வைத்தது.
மாமி தன உறவினர் யாரையோ ஏற்றிவிட எங்கள் பகுதியின் மெயின் ரோடில் ஆட்டோவிற்காக காத்திருந்தது தெரிந்தது. ஒரு ஆட்டோ வந்தது. மீட்டர் போடுவியா என்று கேட்டார்.
அவன் "முடியாது"  என்றான்
விடாப்பிடியாக"ஆட்டோல கட்டாயம் மீட்டர் போடனும்னு கவர்ன்மென்ட் சொல்லுதே! நீ ஏன் மீட்டர் போட மாட்டேன்னு சொல்ற"
"எங்களுக்கு கட்டுப்படியாகாது.அதுக்கப்புறம் ரெண்டு முறை பெட்ரோல் விலை ஏறிடிச்சு. அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?"
'அதெல்லாம் எனக்கு தெரியாதுமீட்டர் போடறதா இருந்தா வா!இல்லன்னா போய்க்கிட்டே இரு." என்றார் மாமி
அவன் போய் விட்டான்.
கூட இருந்த இளைஞன் விஸ்வநாதன் "சித்தி பரவாயில்ல நான் போய்க்கறேன். நீங்க போங்க!" என்றான்
மாமி விடவில்லை காத்திருந்து மீட்டர் போடும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்தார்.
"முரளி, இப்போ ஆட்டோல ஏத்தி விட்டேனே அவன் என் அண்ணன் பையன் விஸ்வநாதன். புதுசா ஹையர் செகண்டரி ஸ்கூல்ல வாத்தியாரா சேரப் போறான். அதனாலதான் அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்தேன்."

"அப்படியா மாமி! ரொம்ப சந்தோஷம்" என்று எப்போதும் போல் ஒரிரு வார்த்தைகளில் ரியாக்ஷன் கொடுத்தேன். மாமி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார்.
:"இந்த காலத்தில வாத்தியார் வேல செய்யறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. .பேப்பர்ல படிச்சிருப்ப யே போன வரம் தூத்துக்குடியில இரு இன்ஜினியரிங் காலேஜ் ப்ரின்சிபாலை  மூணு ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து கொலை பண்ணிட்டாளாமே! காலம் எப்படி இருக்கு பாத்தியா! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பையன் டீச்சரை கொலை பண்ணான். இப்போ கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம பிரின்சிபாலை கொன்னுட்டான்களே. எப்படி வந்தது இந்த கொலை வெறி " அதுக்குதான் விஸ்வநாதன் கிட்ட சொல்ல்கிட்டிருந்தேன்." நீ பாடம் சொல்லிக் கொடுக்கப் போறது +2 பசங்க. அதுவும் கோ-எஜுகேஷன் .பசங்களை யாரையும் கண்டிக்காதே. அடிச்சி கிடிச்சு வச்சுடாதே.அதுவும் குறிப்பா பொம்பளை பசங்க கிட்ட எப்பவுமே டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு படிக்காட்டி போறாங்க அதுக்காக கண்டிக்காதே. திட்டாதே ன்னு"
" ஆமாம் மாமி. அடிக்கிறது மட்டும் இல்ல மன ரீதியா  பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் தப்புதான்."

"திட்டினாலோ அடிச்சாலோ தற்கொலை செஞ்சுக்கற பசங்க ஒரு  பக்கம் இருக்கு. ஆனா  கொலை செய்யற அளவுக்குப் எப்படி போனாங்கன்னு தெரியல. காலேஜை விட்டு சஸ்பென்ட் செஞ்சதை அவமானமா நினைச்ச இந்த பசங்க இப்போ கொலைகாரங்க பட்டத்தோடதானே காலமெல்லாம் இருக்கணும்?"

"காலேஜ் பஸ்சில கேர்ள்சை கிண்டல் பண்ணதால இவங்களை சஸ்பென்ட் பண்ணிட்டாரு.பேரன்ட்சயும் கூப்பிட்டு அவமானப் படுத்தி இருக்காரு."
"அதுக்காக கொலபண்றது  சரியா?.திட்டமிட்டே பண்ணி இருக்காளே! இதுக்கு கடுமையான தண்டனை கொடுத்துத் தான் ஆகணும் முன்னெல்லாம் பிள்ளைங்களை ஸ்கூல்ல சேக்கும்போது கண்ணு ரெண்டு மட்டும் விட்டுடுங்க. மத்தபடி நீங்க அடிச்சி உதைச்சாவது பையனை படிக்க வையுங்கன்னு வாத்தியார்கிட்ட பெத்தவங்க சொல்லிட்டு போவாங்க. இப்ப அந்த மாதிரி எதிர்பாக்க முடியாதுதான். இருந்தாலும் கத்துக் கொடுக்கிற குருவை  கொலை பண்ற அளவுக்கு போய்ட்டாளே! இதுதான் கவலையா இருக்கு. பையன் இஞ்சினியரா ஆவான்னு கனவு கண்டுகிட்டு இருந்த பெத்தவங்களை நினைச்சி பாத்திருந்தா இந்த தப்ப செஞ்சிருப்பான்களா? அந்த பிரின்சிபாலும் கண்டிப்புங்கற பேர்ல பசங்களை ரொம்ப மோசமா நடத்துவாரான்றதை நானும் பத்திரிகையில படிச்சேன். படிக்கிற பசங்களை தன்னோட பிள்ளைங்க மாதிரி நடத்தனும்னு அவருக்கு ஏன் தெரியாம போச்சு? "

"இதெல்லாம் இப்ப இருக்கறவங்களுக்கு ஒரு பாடம் மாமி".  

"நிறைய காலேஜுல சில  அநியாயம் நடக்கத்தான் செய்யுது.ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் வாங்கறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அபராதம் போடறது. பசங்களை மெரட்டறதுன்னு. எல்லாரும் எப்போதும் ஒரே மன நிலையில இருக்கமாட்டாங்க. ஆசிரியர்களின் (ஏன் பெற்றோரோர்களின்) வார்த்தைகளோ செயல்களோ  .தற்கொலை செய்து கொள்ளவோ செஞ்சுக்கவோ , தவறான செயல்கள் செய்யவோ தூண்டறதா  இருக்கக் கூடாது. குழந்தைகளையும் புரிஞ்சிக்க முடியல. பெரியவங்களையும் புரிஞ்சிக்க முடியல..."
"சரியா சொன்னீங்க. ஸ்கூலை பொறுத்தவரை டீச்சர் கையில பிரம்பு பிரம்பு வச்சுக்கறது குற்றம். மாணவர்களை அடிச்சா அவர்களே கம்பளையின்ட் பண்றதுக்கு போன் நம்பர் கூட கொடுத்திருக்காங்க. இதையும் மீறி  ஏதாவது  நடந்து கிட்டுதான் இருக்கு."

" என்னமோ போ! பேப்பரை படிக்கறதுக்கே பயமா இருக்கு. அரசியல் விளையாட்டு, படிப்பு, சமூகம்னு ஏதுவா இருந்தாலும் முக்காவாசி மோசமான நியூசாத்தான் இருக்கு. இந்தக் கொலை செய்தி வந்த பேப்பர்ல அதே பக்கத்தில இதே மாதிரி ஏராளமான மோசமான செய்திதான் அந்த பேப்பரை கொடுத்தனுப்பறேன் பார்......."

மாமியின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது  எனக்கு வந்த அலைபேசி அழைப்பு அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது. புஷ்பா மாமி அவருக்கு பட்டதை சொல்லி விட்டுப் போய் விட்டார்.

 இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்
பின்னர் அவர் கொடுத்தனுப்பிய 11.10.2013 தினமலர் 11ம் பக்கத்தை பார்த்தேன்.
அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சில செய்திகளின் தலைப்புகள் 


  1. இன்ஜினியரிங் கல்லூரி முத்ஜல்வர்வெட்டிக் கொலை; மாணவர்கள் வெறித்தனம்
  2. நகராட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு. வருகை பதிவேடு கிழிப்பு 
  3. பெண் பலாத்காரம் மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு
  4. கொலையில் முடிந்த தகாத உறவு 10 ம் வகுப்பு மாணவன் சிக்கினான் 
  5. மகளை கற்பழித்த காமுகனுக்கு 14 ஆண்டு ஜெயில் 
  6. ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி.
  7.  கந்து வட்டிக்காரர் கொலை மிரட்டல் 
  8. இரு ரயில் இன்ஜின்கள் மோதிய விபத்து தடம் புரண்ட இஞ்சினால் தண்டவாளமும் சேதம் 
  9. காதல்  விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை 
  10.  
     இந்த சூழ்நிலையில வாராவாரம் பாசிடிவ் செய்திகளை தேடி வெளியிட்டு வரும் எங்கள் ப்ளாக்  ஸ்ரீராமுக்கு அவார்டுக்கு பரிந்துரைக்கிறேன்.
    **********************************************************************************
    பள்ளி   மாணவன் ஆசிரியையை கொன்றபோது எழுதியது
    தம்பி!  ஏனிந்தக் கொலைவெறி  
    *************************************************************
    புஷ்பா  மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா?
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்  
    புஷ்பா மாமியின் ஆவேசம்!
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு? 
    அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்  
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்  
    புஷ்பா மாமியின் எச்சரிக்கை  
    ***********************************************************************************
    படித்து  விட்டீர்களா?
    ஒரு தந்தையின் கடிதம்

    52 கருத்துகள்:

    1. இனி ஆசிரியர்கள் எல்லோரும் பையனின்
      வளர்ச்சி குறித்து அக்கறை கொண்டால்
      அவருக்கு நல்லதில்லை எனத்தான் படுகிறது
      சமுகத்தின் இன்றைய ஒட்டுமொத்த கவலையை
      அருமையாகப் பதிவு செய்துள்ளமைக்கு
      மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உண்மைதான் பல ஆசிரியர்கள் நமக்கேதற்கு வம்பு என்று இப்போதெல்லாம் தவறுகளை கண்டிப்பதில்லை

        நீக்கு
    2. ஒரு அடி அடித்துவிட்டால் அட! இவ்வளவுதானா என்று அதுவே பழகிவிடும். இதை ஏன் சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்வதில்லை என்பதுதான் விசித்திரம். தன்னம்பிக்கையில்லாத, தாழ்வு மனப்பாண்மையுள்ளவர்களே இத்தகைய தண்டனையை பிறருக்கு அளிப்பதில் ஒரு இன்பத்தை காண்கின்றனர் என்று நினைக்கிறேன்.

      பதிலளிநீக்கு
    3. மோசமான நிகழ்வுகளை நோக்கி போய் கொண்டிருக்கிற இந்த தலைமுறையை பற்றி ஆராய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நம் முன் தலைமுறையினர் பெற்றோர்களுக்கு கொடுத்த மரியாதையும், காட்டிய பயமும் இப்போது இருக்கிறதா..? கண்டிப்பு இருந்தாலும் அப்போது அவர்களுக்கு பொறுமைதான் இருந்திருக்கிறது வன்முறை எண்ணம் எழவில்லை...! பெற்றோர் வளர்ப்பில் குறைபாடும், ஊடகங்களும் வன்முறையை எழுப்பி விடுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. யாரும் யாரையும் எதுவும் கேட்க கூடாது அவங்கவங்க விருப்பபடி இருக்கனும் என்ற மனோபாவம்தான் இளையோரிடம் இருக்கிறது. சமுதாயம் நோக்கியுள்ள பிரச்சினைகளில் தனிமனித ஒழுக்கமும் சேர்ந்து வருங்காலத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

      புஷ்பா மாமி ரொம்ப நாளைக்கு பிறகு வந்து யோசிக்க வச்சிட்டு போய்ட்டாங்க...!

      த.ம-1

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. வேலை இடையே இணைய பக்கம் வந்த போது உங்கள் பதிவுக்கு முதன் முதலாய் கருத்திடும் வாய்ப்பு கிடைத்தது... அதனால் த.ம--1 என்று குறிப்பிட்டு விட்டேன்... அதற்குள் இணைய இணைப்பு கட் ஆகி resend செய்வதற்குள் இரண்டு கருத்துரைகள் வந்து விட்டிருக்கிறது...த.ம -2 சரி!

        நீக்கு
      2. அதனால் என்ன த.ம குறிப்பிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
        தனி மனித ஒழுக்கக் குறைபாட்டிற்கு சரியான தீர்வு இது வரை கண்டறியப்படவில்லை. பெற்றோரின் வளர்ப்பும் கவனிப்பும் ஒரு காரணமே. இது மட்டுமன்றி வேறுபல காரணிகளும் உள்ளன.நன்றி

        நீக்கு
    4. இந்தக் கொடூரங்கள் மாற முதலில் பல விசயங்களில் பெற்றோர்கள் மாற / திருந்த வேண்டும்...

      பதிலளிநீக்கு
    5. எல்லாமே சிந்திக்க வேண்டிய விஷயம் தான். நம்மோட ஆசிரியர்கள் தெய்வத்துக்கு சமம்னு குழந்தைகளுக்கு புரியணும், நம்ம நம்பி வந்துருக்குற இந்த இளைய தலைமுறையினர் தன்னோட குழந்தைகள் மாதிரின்னு ஆசிரியர்களுக்கும் புரியணும்...

      பதிலளிநீக்கு
    6. இதெல்லாம் இப்ப இருக்கறவங்களுக்கு ஒரு பாடம் தான்..
      கற்றுக்கொண்டால் சரி..!

      பதிலளிநீக்கு
    7. சிந்திக்க வேண்டிய விசயம். நம் பிள்ளைகளை நாம எப்படி வளர்க்கிறோம்ன்னு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துட்டு.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. எல்லோருமே உளவியல் அறிந்து வளர்க்கக் கூடிய சாத்தியம் இல்லை. மனது கேடோதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன.கொஞ்சம் சிந்திப்பவந்தப்பித்துக் கொள்கிறான். தன்னிலை மறப்பவன் துன்பம் அனுபவிக்கிறான்.

        நீக்கு
    8. கல்வி முறையில் சீர்கேடுகள் மலிந்துவிட்டன. நல்ல கல்வி நிளையங்கள் என்று சொல்லிக்கொள்பவை நல்ல மாணவர்களைத் தேடி எடுத்துக் கொள்கிறார்கள். சுமாரான மாணவர்கள் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் dedication என்பது ஆசிரியர்களிடம் குறைந்து கொண்டு வருகிறது. பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதில் குறியாய் இருக்கிறார்கள். பெற்றதுகளிடம் quality time செலவு செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் கேட்கப் போனால் ஜெனரேஷன் காப் என்று பதில் வரும். நிலைமை கவலை அளிப்பதாகவே இருக்கிறது. பகிர்வு அவசியமானது. வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா! புகழ்பெற்ற பள்ளிகளும் கல்லூரிகளும் நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து விடுகின்றன. அவர்களை வைத்துக்கொண்டு அளிப்பது சிறப்பான கல்வியல்ல.கல்விப் பின்புலம் இல்லாத மாணவர்களுக்கு அளிக்கப் படும் கல்வியே போற்றத் தக்கது

        நீக்கு
    9. தனிமனித ஒழுக்கம் மிக அவசியம், பெற்றோர் குழந்தைகள் உறவு முறை, ஆசிரியர், மாணவன் உறவு முறை எல்லாம் சீர் பட்டால் தான் இந்த நிலைமைகளை தவிர்க்கலாம்.
      அன்பும், கனிவும் எல்லோர் இடத்திலும் இருந்தால் இவை நடைபெறாது..

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உண்மைதான். கண்டிப்பும் சில நேரங்களில் தேவையாகத் தான் இருக்கிறது

        நீக்கு
    10. செய்தி தாளை திறந்தாலே கொலை கொள்ளை ,கற்பழிப்பு என்ற தகவல்கள்தான் அதிகம்! புஷ்பா மாமி மூலம் நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

      பதிலளிநீக்கு
    11. அனைவரும் சிந்தித்து கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்.

      பதிலளிநீக்கு
    12. இப்படி செய்திகள் இல்லையென்றால் தான் நாம் வருந்த வேண்டி இருக்கும் அப்படி போய்கிட்டுருக்கு நாடு ... என்ன குற்றம் குறையாது என்றாலும் தடுக்காவது முனையலாம் ...

      பதிலளிநீக்கு
    13. தேர்வினை மையமாகக் கொண்ட பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டமய்யா

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. என்ன செய்வது மாற்று முறை சரியாக அமைவதில்தான் குழப்பம் உள்ளது
        நன்றி ஐயா

        நீக்கு
    14. செய்தித் தாளை திறந்தாலே மோசமான செய்திகள் தான் தெரிகிறது..... கல்லூரி முதல்வர் கொலை - நினைத்தாலே கஷ்டமாகிவிடுகிறது.... எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் நமது இளைஞர்கள்?

      பதிலளிநீக்கு
    15. வணக்கம் அய்யா,
      வருங்கால இளைய சமுதாயம் என்ன ஆக போகிறதோ எனும் கவலை தான் மனதில் தொற்றிக்கொள்கிறது. இளைய மாணவ சமுதாயத்திற்கு வழிகாட்டுதல்களையும், விழுமியங்களையும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடக்க வகுப்பிலிருந்தே கொடுக்க வேண்டும். மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும். பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வதும் அவசியம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

      பதிலளிநீக்கு
    16. அடடே! அப்புசாமி-சீதாப்பாட்டியை நினைவு படுத்தும் புஷ்பா மாமி! (பாதி நிஜம் மீதி கற்பனை தானே கதைகள்?) அருமையான கலைத்தன்மையுடன் படிக்கவைக்கும் நடையில் கல்விப்பிரச்சினை இல்லையில்லை ஒரு சமூகப்பிரச்சினை அலசல்! மிகவும் அருமை முரளி அய்யா! ஆமா நீங்க அந்த “உமா டீச்சரைக் கொலைசெய்த இர்ஃபான்கான்“ என்னும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதுபற்றிய எனது கடடுரை பார்த்தீர்களா? நேரம் இருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன் -http://valarumkavithai.blogspot.in/2012/03/blog-post_10.html
      வணக்கமுடன், உங்கள் நண்பன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்கள் பதிவையும் படித்து விடு நிச்சயம் எனது கருக்க்த்தைக் கூறுகிறேன் ஐயா!அது பற்றி நானும் ஒரு கவிதை எழுதி இருந்தேன் ஐயா! !தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?

        நீக்கு
      2. புஷ்பா மாமி ரொம்ப நாளாக புலம்பிக் கொண்டிருக்கிறார்., உந்தையபுலம்பல்களின் இணைப்புகள் பதிவில் கொடுத்திருக்கிறேன் ஐயா

        நீக்கு
    17. சமகாலச் சூழலை
      வெளிப்படுத்திய அழகைப் பாராட்டுகிறேன்.
      பெற்றோர்களும் ஆசிரியர்களும்
      பொறுப்புணர்வோடு செயற்படுவதே நன்று!
      எப்படியிருப்பினும்
      "இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர்வெட்டிக் கொலை; மாணவர்கள் வெறித்தனம்" என்பதை ஏற்கமுடியாது. அதாவது, இனிமேல் இவ்வாறு நிகழக்கூடாது.

      பதிலளிநீக்கு
    18. புஷ்பா மாமி ரொம்பவே யோசிக்க வைத்து விட்டார்கள்...
      தொடருங்கள்.

      பதிலளிநீக்கு
    19. யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. காரணம் சமுதாயமே கெட்டுதான் போயிருக்கிறது tha.ma 5

      பதிலளிநீக்கு
    20. ஆமாம்.... விச்சு ஏன் அத்தையைச் சித்தின்னு கூப்புடறான்? ஙே!!!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. யாராவது கரெக்டா கண்டு பிடிக்கறாங்களா ன்னுங்கலான்னு பாத்தேன். ஹிஹிஹி

        நீக்கு
      2. சித்தி வீட்டில வளந்ததால பழக்க தோஷத்தில அப்படி சொல்லிட்டான், ஹிஹி டீச்சர் தப்பை கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. மார்க்கை குறைச்சிடாதீங்க

        நீக்கு
    21. அந்தக் காலத்தில் 'கண்ணு ரெண்டை மட்டும் விட்டு விட்டு...' வசனம் சொல்லப்பட்டது என்றால் அப்போதிருந்த ஆசிரியர்கள் 100 க்கு 95 பேர் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள், மாணவர்கள் நலனில் முழு அக்கறை கொண்டவர்களாக இருந்ததுதான்.

      இப்போது வேறு வேலை கிடைக்கும்வரை எந்தப் படிப்புப் படித்தவரும் ஆசிரியர் வேலையில் சேர்வதும், (சில இடங்களில் ஆசிரியருக்கு அந்த மாணவர்களை விட ஓரிரு வயதே அதிகமாக இருக்கும்) எந்த ஆசிரியரும் நிரந்தரமில்லாமல், இந்தச் சம்பளம் போதாமலோ, வேறு நல்ல வேலை கிடைத்ததோ மாறிக் கொண்டே இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை ஒரு புறம். இவர்களுக்கு மாணவர்களைப் புரிந்து கொள்ள எது நேரம்?

      'எங்கள்' பாஸிட்டிவ் செய்திகள் குறித்த சிலாகிப்புக்கு நன்றி. இதே உணர்வுகள்தான் எங்களையும் அதைத் தொடங்க வைத்தது.

      துளசி கோபாலின் சந்தேகம் சிரிக்க வைத்தது!

      பதிலளிநீக்கு
    22. இந்த காலத்தில் ஆசிரியர்கள் இன்னம் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலமாகவுள்ளது..ஆனால் இப்போதான் ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து விலகி நிற்கிறார்கள். தன் வேலை போர்ஷனை முடிப்பது என்பதான இயந்திரத்தனமாக இருக்கிறார்கள் என்பதை நான் மன ஆலோசனை கொடுக்கச் செல்லும் பள்ளிகளில் உணர முடிந்தது

      பதிலளிநீக்கு
    23. வணக்கம் மூங்கில் காற்று.

      நீங்கள் அனைவரும் ஆசிரியரின் இடத்தில் இருந்து பேசி இரக்கிறீர்கள்.
      நான் மாணவர் இடத்திலிருந்து சொல்கிறேன்.
      நான் படிக்கும் பொழுது எங்களிடம் அன்பை மட்டும் காட்டி
      தட்டிகொடுத்து வளர்த்த ஆசிரியர்கள் இன்னும் என் மனத்தில்
      சம்மனம் இட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன நல்வழிகள்
      இன்னும் என் காதுகளில் ஒலித்து நல்வழி படுத்துகிறது.

      அதே சமயம்... அதிக கோபப்பட்டு அடித்து கற்பித்த ஆசிரியரும்
      இன்றும் மனத்தில் இரக்கிறார்கள். அவர்களும் இன்று மனத்தில் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் அது இன்று.

      அன்று கண்டித்து அடித்த ஆசிரியர் என் மனத்தில் பயத்தையும் கொபத்தையும் மட்டுமே வரவழித்தார்களே அன்றி மறியாதையை வரவழிக்கவில்லை.
      அவர்களின் மேல் அன்றிருந்த கோபத்தில் அவரின் படத்தைப் பேப்பரில் வரைந்து அதன் கீழ் அவரின் பெயரை இட்டு கோபத்துடன் மிதித்து இருக்கிறேன்.
      அன்று அந்த அளவிற்கு தான் என் கொபத்தை வெளிபடுத்த முடிந்தது. தவிர அவ்வளவே தெரிந்தது.
      இன்று போல் அன்று எந்த வன்முறை காட்சிகளையும் பார்த்ததில்லை. காதால் கேட்டதும் இல்லை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை.
      அன்று பெற்றோர்களுக்கு ஆறு ஏழு குழந்தைகள் இருந்தன.
      இன்று ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கிறது.
      அவர்களை நல்வழி படுத்த தான் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
      அவர்களிடம் ஆசிரியர்கள் அன்பாகப் பேசி நடத்தினால் என்ன குறைபட்டு விடப் போகிறார்கள்?
      என்னைப் பொறுத்தவரை.... இந்த வன்முறைக்கெல்லாம் காரணம் ஆசிரியர்கள் தான் காரணம் என்பேன்.
      ஆசிரியர்கள் திருந்தினால் மாணவர்களின் சமுதாயம் நிச்சயம் ஒழுங்கு படும்.

      நன்றி.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. ஆசிரியர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் முரட்டுத் தனமானவர்கள் என்பது சரியல்ல. முரட்டு தந்தைகளை விட முரட்டு ஆசிரியர்கள் மிகக் குறைவானவர்களே . மோசமாகமும் முரட்டுத் தனமாகவும் மாணவர்களை நடத்துபவர்கள் மிகச் சிலரே! எப்போதுமே அன்பாக நடப்பது என்பது ஞாநிகளுக்குக் கூட சாத்தியமில்லை. உண்மையை சொல்லுங்கள் உங்கள் குழந்தையை நீங்கள் அடித்ததோ திட்டியதோ இல்லையா? அப்படி செய்யும்போது குழந்தைகளுக்கும் கோபம் வருவதும் இயல்பானதே. ஆனால் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு செல்வதுதான் வேதனை. அன்பினால் உலகம் திருந்தி இருக்கும் என்றால் புத்தன், இயேசு அன்பை போதித்தபோதே திருந்தி இருக்க வேண்டும். இல்லையே ஏன்? சில சமயத்தில் காட்டப்படும் கூடுதல் அன்பே குற்ற செயலகளுக்கு காரணமாகிவிடுவது உண்டு. இதில் கண்டிப்பு என்பதை கொடுமைப்படுத்துவது,துன்புறுத்துவது என்று பொருள் கொள்ள வேண்டாம் அதை எப்போதும் நான் ஆதரிப்பதில்லை.

        நீக்கு
    24. கண்டிப்பதோ, தண்டிப்பதோ எதுவானலும் அது அவனுடைய நன்மைக்காக என்பதை மாணவன் உணரும்படி ஆசிரியர் முதலில் பக்குவமாக செய்ய வேண்டும்
      அப்படி செய்து விட்டால் இத்தகைய நிலை வராது !இது நான் கண்ட அனுபவம்! அன்று!
      இன்று எப்படியோ?

      பதிலளிநீக்கு
    25. புலம்பல் ஆனாலும் அர்த்தமுள்ள புலம்பல் ...தொடருங்கள் !
      த.ம 9

      பதிலளிநீக்கு
    26. வணக்கம்

      வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
      http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு

    நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
    கைபேசி எண் 9445114895