என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சொல்லுங்கண்ணே!சொல்லுங்க! இதை எழுதியது யார்?

          

நிறையக்  கவிதை படிப்பவரா நீங்கள்? இந்தக் கவிதை எழுதியது யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?


திண்ணையை இடித்து தெருவாக்கு 

      உட்கார் நண்பா நலந்தானா?-நீ 
      ஒதுங்கி வாழ்வது சரிதானா?
      சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன் 
      சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?

      புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி 
      புலம்ப வேண்டாம்-நெல்கூட
      புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது 
      பூமியின் பசியைப் போக்க வில்லை?

      கடலின் நான் ஒரு துளிஎன்று
      நீகரைந்து போவதில் பயனென்ன?
      கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
      காட்டு; உந்தன் தலைதூக்கு 

      வந்தது யாருக்கும் தெரியாது- நீ
      வாழ்ந்ததை உலகம் அறியாது
      சந்ததிகூட மறந்துவிடும் -உன் 
      சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?

      உணவு ஆடை வீடென்று -உன் 
      உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
      மனைவி  மக்கள் வீடென்று -உன் 
      மனதின் எல்லையை சுருக்காதே 

      திண்ணைதானா உன்தேசம்-உன் 
      தெருவொன் றேவா உன் உலகம் 
      திண்ணையை இடித்து தெருவாக்கு -உன் 
      தெருவை மேலும் விரிவாக்கு 

      எத்தனை உயரம் இமய மலை -அதில் 
      இன்னொரு சிகரம் உனது தலை
      எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ 
      இவர்களை விஞ்சிட என்ன தடை?

      பூமிப் பந்து என்ன விலை -உன் 
      புகழைத் தந்து வாங்கும் விலை;
      நாமிப்  பொழுதே புறப்படுவோம்-வா 
      நல்லதை எண்ணிச் செயல்படுவோம் 

*******************************************************
இக் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை அறிய கீழே கிளிக் செய்யுங்கள். அவரது இன்னொரு கவிதையையும் படியுங்கள் 

                 விடை

********************************************************* 

21 கருத்துகள்:

  1. எழுச்சிமிகு வரிகள்....
    அருமையான கவிதைப் பகிர்விற்கு நன்றிகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. வெறும்கை என்பது மூடத்தனம் - நம்
    விரல்கள் பத்தும் மூலதனம்
    கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - நம்
    கைகளில் உலகம் சுழன்றுவரும்
    -என்றெழுதி, நம்காலத்தின் மிகச்சிறந்த, காலஞ்சென்ற கவிஞர் தமிழாசிரியர் தாராபாரதியின் பாடல் வரிகள்.
    அரிய வரிகளை எடுத்துக் காட்டிய நண்பர் முரளிக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. //திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்
    தெருவை மேலும் விரிவாக்கு // போன்ற வரிகள் நினைவில் விட்டு நீங்காது. கவிஞர் தாராபாரதியின் வரிகள் என்பதை சந்தேகத்துனுடனே கருத்திட வந்தேன்.. கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் கருத்துரை தெளிவுப்படுத்தி விட்டது. அந்த அழகான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. தின்னையில்லா தெரு பாழ்!
    த.ம.பிளஸ் 1

    பதிலளிநீக்கு
  5. பகிர்ந்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி!

    நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    முரளி (அண்ணா)

    உங்கள் வலைப்பக்கம் வந்தால் மூங்கில் காற்றின் வாசனை.வீசுது....
    கவிதையின் வரிகள் அழகு....அழகு....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பூமிப் பந்து என்ன விலை -உன்
    புகழைத் தந்து வாங்கும் விலை;
    நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா
    நல்லதை எண்ணிச் செயல்படுவோம்

    அருமையான கவிஞரின் தன்னம்பிக்கை வரிகளை
    பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. எளிமையான அதேநேரத்தில் வலிமையான கருத்து பொதிந்த கவிதை. தற்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறேன். பகிர்தலுக்கு நன்றி.

    //திண்ணைதானா உன்தேசம்-உன்
    உன் தெருவொன் //
    //வந்ததது//

    இது அவசரத்தில் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  9. வந்ததது யாருக்கும் தெரியாது- நீ
    வாழ்ந்ததை உலகம் அறியாது ///சரியாச்சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  10. பல ஆயிரம் கவிதைகளை எழுதி இருக்கும் தாரா பாரதி அவர்கள் தமிழ் கவிஞன் என்பதாலோ என்னவோ ,அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்றே எனக்கும் படும் ,நீங்களும் சொல்லி விட்டீர்கள் !
    த.ம 8

    பதிலளிநீக்கு
  11. உணர்ச்சிகளை தூண்டியெழுப்பும் சிறப்பு மிக்க வரிகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மனதைத் தொட்ட வரிகள்! சிறப்பான கவிதை! பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான வரிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகளும் கவிஞர் தாராபாரதி அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வணக்கங்களும்.
    கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஒண்ணரை Ton எடையுடன் ஓங்கி அறைகிறது.

    பதிலளிநீக்கு
  14. ஒரிஜனலா யாரு எழுதினது என்று நீங்கள் கேட்கவில்லைதானே? அதனால் நீங்கள் தான் இதை எழுதி வெளியிட்டது.

    பதிலளிநீக்கு
  15. பூமிப் பந்து என்ன விலை -உன்
    புகழைத் தந்து வாங்கும் விலை;
    நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா
    நல்லதை எண்ணிச் செயல்படுவோம் ;//
    அருமையான கவிதை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895