என்னை கவனிப்பவர்கள்

சனி, 4 பிப்ரவரி, 2012

திருமண வாழ்த்து



நான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல்  எனக்கு நினைவு படுத்தியது. ஸ்ரீநிவாசன் பூமா தம்பதியினருக்கு எனது மனமார்ந்த திருமண தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னார்  இந்த வாழ்த்துமடலை இன்னும் நினைவில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.
                      
                  திருமண வாழ்த்து மடல்

மணமகன்: ஸ்ரீனிவாசன்         மணமகள்: பூமா

அகத்தில் அன்புடனே ஸ்ரீநிவாசன் எனும் நண்பர்
முகத்தில் முழு மதியின் தனியழகைத் தான் பெற்ற
பூமா எனும் மங்கை பூக்கரம் பற்றி
தேமாங்கனிச் சுவையோடு தெவிட்டாமல் வாழ்கவே!

இல்வாழ்க்கை இன்று இனிதாய்த் தொடங்கி
நல்வாழ்வு  அமைந்திடவே நல்லோர் ஆசியுடன்
மடையிலா வெள்ளம போல் மகிழ்ச்சி பொங்க
தடையிலா இன்பம் பெற்று தரணியில் வாழ்கவே!

சங்கத் தமிழ்ப் பாடல் சலிக்காத சந்தம் போல்
திங்கள் தருகின்ற இதமான தண்ணொளி போல்
கங்கையிலே பாய்கின்ற வற்றாத வெள்ளம்போல்
மங்கலம் பொங்க என்றும் மகிழ்வோடு வாழ்கவே!

அலைமகள் கலைமகள் மலைமகள் அருளோடு
கலைபேசும் கண்ணாளை காதலாய்க் கைப்பிடித்து
விலை பேச முடியாத செல்வங்கள் பெற்று
நிலையாக இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்கவே!

*************************************************************
இதையும் படியுங்க!

2 கருத்துகள்:

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895