"வெற்றிகள் பழங்கதை! தோல்விகள் தொடர்கதை!"
"தோல்வியே அடுத்த தோல்விக்கும் முதல் படி"
இதெல்லாம் யாருக்கு! அட இந்திய கிரிக்கெட் டீமுக்குத் தானே பொருத்தமா இருக்கும். ஆஸ்திரேலியா நம்மள உண்டு இல்லன்னு ஆகிட்டாங்களே! அனேகமா கூடிய சீக்கிரம் இந்தியர்களுக்கு எல்லாம் கிரிக்கேட்மேல வெறுப்ப வரவச்சுடுவாங்க போல இருக்கே. அப்படியாவது மற்ற விளையாட்டுக்கள் மேல ஆர்வம வருதான்னு பாக்கலாம்.
உலகக் கோப்பை ஜெயிச்சி இன்னும் ஒருவருஷம் கூட ஆகலே. கோப்பை வின் பண்ணப்ப எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தோம். இந்த மாதிரி சமயத்தில எல்லாம் பழங்கதைய பேசி ஆறுதல் அடையறதுதானே நம்ம வழக்கம். அதையே இப்பவும் செய்வோம்
(கடந்த ஆண்டு இந்திய உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாட சிவாஜி படத்தில வர்ற பல்லேலக்கா மெட்டில ஒரு பாட்டு எழுதினேன்.அதைப்பாடி வீடியோவா YouTube ல போடணும்னு நினைச்சோம். சில காரணங்களால அது முடியாமப் போச்சி. அந்தப் பாட்டு வரிகள மட்டும் உங்களோட பகிர்ந்துக்கிறேன்.படிச்சிப் பாருங்க முடிச்சவங்க பாடிப் பார்த்து ஆஸ்திரேலியாவிடம் கேவலமா தோத்து போனதை மறந்து மனச தேத்திகோங்க)
(Chorus)
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்! போற்றுகிறோம்
சட்டென சொல்லு
உலகக் கோப்பை வென்றவர் நாமே சட்டென சொல்லு
பாரடா! பாரடா திறமை பாரடா!
பாரிலே பாரிலே ஈடில்லை கூறடா
வெற்றியை பற்றியே சுவைத்தது நாமடா
நில்லடா! நில்லடா! நிமிர்ந்து நில்லடா!
பல்லவி
ஏ!பல்லேலக்கா! பல்லேலக்கா விளையாட்டுக்கா வீரத்துக்கா
ஆதரவு அத்தனையும் கிரிக்கெட்டுக்கா
பல்லேலக்கா! பல்லேலக்கா! கேட்டுக்கோப்பா ஒட்டு மொத்த எங்க ஒட்டு தோனியோட கூட்டணிக்கா
தோனியின் சிக்சரும் நைன்ட்டி ஒன் ரன்களும் மறந்து போகுமா?
கோலி யின் ஓட்டமும் காம்பீரின் ஆட்டமும் மறக்க முடியுமா?
நம்ம சூப்பர் ஸ்டாரு
கட்டி போட்டு வச்ச தாரு?
நம்ம ஃபைனல் கிரிக்கெட் ஜோரு!
நினைச்சிடு நினைச்சிடு நினைச்சிடு நினைச்சிடு
நினைச்சிடு நினைச்சிடு நினைச்சிடு நினைச்சிடு
நினைச்சிடு நினைச்சிடு மகிழ்ச்சியில் திளைத்திடு
அடி அடி அடியென அடித்திட்ட ரன்கள்
மடமட மடவென ஏறிய ரன் ரேட்டும்
பற பற பறவென பறந்திட்ட பந்தும்
பிடி பிடி பிடியென பிடித்திட்ட காட்ச்சுகள்
சட சட சடவென சரிந்திட்ட விக்கெட்
கிடுகிடு கிடுவென ஏறிய டென்ஷன்
கடகட கடசெய்திட்ட பீல்டிங்
விறுவிறு விறுவென நடந்திட்ட மேட்ச்சும்
மனதிலிருக்குது மெய் மெய் மெய்
சரணம்
கிராமத்துக் குடிசையைத்தான் கொஞ்ச நேரம் எட்டிப் பாருடா
அங்கயும் டிவியில உலகக் கோப்பை கிரிக்கெட் தானடா
அழுமூஞ்சி சீரியல்கள் நிறுத்தி
சச்சினோட ஆட்டத்தைத்தான் பாத்தோம்
சேவக் பேட்டில் பட்டுவிட்டால் பந்து
விண்ணோடு முட்டிக்கொள்ள போகும்
பறவை போலாகும்
ஆஸ்திரேலியா குவாட்டர் பைனலில் அடங்கி போச்சு பாரு
பாக்கிஸ்தானும்தான் செமி பைனலில் சரண்டர் ஆச்சு பாரு
(பல்லேலக்கா)
**************************************************************************************
**************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895