‘தலைவரை அமாவாசை அன்னிக்கு கைது பண்ணீட்டாங்களாமே?’
‘ஆமாம்! நிலா அபகரிப்பு
வழக்கு போட்டிருக்காங்களாம்.’
|
|
|
‘சங்கீத வித்வானை
எம்.பி ஆக்கினது
தப்பா போச்சு?’
‘ஏன்?’
‘லோக்சபாவில கச்சேரி பண்ண சான்ஸ் கேட்டு நச்சரிக்கிறாராம்’
|
‘ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு தெரிஞ்சுபோச்சுங்கிறதுக்காகவா
இவ்வளவு கவலைப்படற?’
‘எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? அவர் எப்படியாவது உங்களுக்கு என்ன கல்யாணம்
பண்ணி வச்சுடுவார்.’
|
|

|
' உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'.
சமையல் காரரே நீங்கதானே!
|
என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல. வேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு தலைவர் சவால் விடராரே?
கறுப்புப் பணம் கறுப்பு கலர்ல
இருக்கும்னு நினைச்சிக்கிட்டு
இருக்காரு.
|
|
|
"அந்த நிருபர் கிட்ட அமைச்சர்
என்ன கேக்கறார்?."
"அவர் இப்ப அமைச்சரா
இருக்காரா இல்லயான்னு
தெரிஞ்சிக்கிறார்."
|
சிரித்தேன் இரசித்தேன்..
பதிலளிநீக்குசகோதரா மேலே போட்ட படத்தைப் பார்த்ததுமே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. என்ன சிரிப்பா! சிரிங்க.....சிரிங்க....சிறந்த மருந்தல்லவோ!...வாழ்த்துகள்!.....
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
கருத்திட்ட முனைவர் குணசீலன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குகருத்து தெரிவத்து ஊக்கப் படுத்தியதற்கு வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குலோக்சபாவும், உப்பா சர்க்கரையாவும் பிரமாதம்!
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com