என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்!

இது சூப்பர் ஹிட் தானே? ஒத்துக்கறீங்களா?

என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது. சில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்கு ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாது.

       என்னடா  என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா?. உண்மையைத்தான் சொல்றேன். பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா? அது எப்படித்தெரியும்?. எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.
    
 பதிவு போடும்போதெல்லாம் என் மனைவிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறதுக்காக ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு இன்னுமா எழுந்திருக்கலன்னு  ஒரு ஹிட். வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்கன்னு சொல்லி ஒரு ஹிட்.

 என்னமோ பெரிசா பதிவு போடறேன்னு   நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே  அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு  கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட்.   இந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவுதான்னு கோவமா ஒரு ஹிட்.  இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட  பாக்கல   போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்

       இப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.

       இனிமேலாவது புரிஞ்சிக்கோங்க . நாந்தான் இனிமே தமிழ் பதிவுலகின்  ப(தி)வர் ஸ்டார்

 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா இன்னும் பல பதிவுகளை போடுவேன்னு சொல்லி எச்சரிக்கிறேன்.
*************************************************************
இதையும் படியுங்க!

22 கருத்துகள்:

  1. தமிழ் பதிவுலகின் ப(தி)வர் ஸ்டார்

    வாழ்த்துகள்.. மேலும் பல ஹிட் பெற பாரட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் hit வாங்கலாமா? அருமை!

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்.. மேலும் பல ஹிட் பெற பாரட்டுக்கள்..

    vetha.Elangathilakm.

    பதிலளிநீக்கு
  4. Word Verification ஐ இன்னும் எத்தனை வருஷம் வச்சிருக்கப்போறீங்க?

    பதிலளிநீக்கு
  5. அய்யா கருத்துக்கு நன்றி. நானா word verification வச்சிக்கல. default ஆக இருக்குன்னு நினைக்கிறேன். கருத்து போடறவங்களுக்கு இப்படி ஒரு தடங்கல் இருக்கங்கறதை கவனிக்கத் தவறிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி.உடனே ரிமூவ் remoov பண்ண முயற்சி செய்யறேன்.

    பதிலளிநீக்கு
  6. word verification ரிமூவ் செஞ்சிட்டேன்! உங்களால நிறைய விஷ்யங்கள செட்டிங்க்ஸ்ல போய் பாத்து தெரிஞ்சுகிட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பதிவுக்கு ஏத்த சரியான படம் செலெக்ட் பண்ணி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  8. செமயா ஹிட் வாங்குவீங்க போல... ப.மு. , ப.போ , ப.பி நல்லா இருக்கு..இது யாருக்கோ நீங்க விட்ட ஹிட் மாதிரி இருக்கே...(பாஸ் திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க வில்லையா??)

    பதிலளிநீக்கு
  9. என் அனுபவத்தை அப்படியே படம் பிடிச்சி காட்டினதுபோல இருக்கு!

    பதிலளிநீக்கு
  10. ஹை! கவிதை வீதி இந்தப் பக்கம் எட்டி பாத்துடிச்சி!

    பதிலளிநீக்கு
  11. ஹல்லோ விச்சு சார்! கதை அங்கையும் அப்படித்தான் போகுதோ?

    பதிலளிநீக்கு
  12. அருண்மொழி சார், நம்ம படம் தான் உங்க வீட்டிலும் ஓடுதோ?

    பதிலளிநீக்கு
  13. இனிமே பதிவு போடும் போது ஹெல்மெட்டும், பாடி ஆர்மரும் போட்டுகிட்டா சேதாரம் கொஞ்சம் குறையும்.

    பதிலளிநீக்கு
  14. பாவம் நீங்க!
    எனக்கு அந்த நிலை இல்லை! ஆனா..?
    நான் பதிவு எழுதிகிட்டோ, மறுமொழி எழுதிகிட்டோ
    இருந்தாதான் வீட்டில் மற்றவர்களுக்கு நிம்மதி!
    வயதாகி விட்டதல்லவா...?
    காரணம் உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்....!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895