**********************************************************************************************************************
நீங்கள் மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா? நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு மென்பொருள். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது. கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை பதிவிறக்கிக்கொள்ளலாம்.
இதனை பதிவிறக்கி நமது கணினியில் பதிந்து நமது கவிதைகளை இனைய இணைப்பு இல்லாத நிலையிலும் சோதித்துப் பார்க்கலாம். அல்லது நேரடியாக http://www.virtualvinodh.com/avalokita என்ற முகவரிக்குச் சென்று உங்கள் கவிதைகளை உள்ளிட்டு அறிந்து கொண்டு தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்ளலாம்.
10 ம் வகுப்பு படிக்கும்பொழுது திருக்குறளைப் சீர் பிரித்து அலகிட்டு வாய்ப்பாடு எழுதச் சொல்வார்கள். தேர்வில் கட்டாயம் கேட்கப்படும் கேள்வி இது. நான் ஆர்வத்துடன் இதைப் படிப்பேன். திருக்குறள் மட்டுமல்லாது பல்வேறு வெண்பாக்களை சீர் பிரித்து அலகிட்டுப் பார்த்திருக்கிறேன். அப்போது வெண்பா எழுதவும் முயற்சி செய்திருக்கிறேன். வெண்பாவின் கடினமான விதிகளை பின்பற்றி ஒரு வெண்பா எழுதுவது சவாலான செயல். வெண்பாவில் பலவகை உண்டு. அவை பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது என்றபோதும், எனக்குத் தெரிந்த வெண்பா இலக்கணத்தை பயன் படுத்தி சில வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை யாரிடமும் கொடுத்து சரி பார்த்தது இல்லை.
சமீபத்தில் அவலோகிதம் மென்பொருளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
இதோ எனது வெண்பா
எக்காலும் நல்லரிசி எண்ணையும் நாமுண்போம்
வைக்கோலும் வீண்தவிடும் பிண்ணாக்கும் தந்தோம்
தமக்களிக்கும் வெற்றுணவை உண்ணும் பசுவோ
நமக்களிக்கும் சத்துள்ள பால்.
பொருள்: சத்தான அரிசி, எண்ணை போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்வோம். இவை எடுத்ததும் மீதியுள்ள சத்தற்ற வைக்கோல்,தவிடு, பிண்ணாக்கு போன்றவற்றைத்தான் பசு மாட்டிற்குத் தருவோம். சத்தில்லாத உணவை உண்கின்ற பசுவோ மிக சத்தான பாலை நமக்குத் தருகிறது. இந்த வெண்பா மனிதனின் சுய நலத்தையும், பசுமாட்டின் கொடைத் தன்மையும் விளக்குகிறது.
இந்தக் கவிதைக்காக நான் பரிசும் பெற்றிருக்கிறேன்.
இதனை சரி பார்ப்போமா?
படி 1.
என்ற முகவரிக்குச் செல்லவும்
படி 2
அதில் வெண்பாவை உள்ளிட வேண்டும்.
படி 3
'ஆராய்க' என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
படி 4
தளை டேப்பை க்ளிக் செய்தால் நமது செய்யுளில் என்னென்ன தளைகள் வந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம். வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரவேண்டும்.
படி 6
பாடலில் உள்ள மோனை விவரங்களை அறிந்துகொள்ள 'மோனை'
டேபைக் க்ளிக் செய்ய வேண்டும்.
இப்படி நீங்கள் எழதிய வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா,கலிப்பா வகைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வெண்பாவின் பொதுவான இலக்கணங்கள்
1 .கடைசி அடி மூன்று சீராகவும், ஏனைய அடிகள் நான்கு சீராகவும் இருக்கவேண்டும்.
2 . கடைசி சீர் நாள் ,மலர் ,காசு ,பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.
3. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே இருக்கவேண்டும்.
4. எதுகை மோனை அமைய வேண்டும்.
இன்னும் ...
போதும்! போதும்! புதுக் கவிதை இருக்கும்போது இவ்வளவு கஷ்டப்பட்டு மரபுக் கவிதை எழுதனுமா? அப்படின்னு சிலபேர் கேக்கறது காதுல விழுது.
எழுதிப் பாத்தாத்தான் அதனோட சுகம் தெரியும்.
நன்றி: அவலோகிதம்
மேலும் விவரங்கள் அறிய http://www.virtualvinodh.com/avalokita
என்ற வலை தளத்திற்கு செல்லவும்.
***************************************************************************************************************
இதையும் படியுங்க!ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 2
பாடலில் உள்ள மோனை விவரங்களை அறிந்துகொள்ள 'மோனை'
டேபைக் க்ளிக் செய்ய வேண்டும்.
இப்படி நீங்கள் எழதிய வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா,கலிப்பா வகைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வெண்பாவின் பொதுவான இலக்கணங்கள்
1 .கடைசி அடி மூன்று சீராகவும், ஏனைய அடிகள் நான்கு சீராகவும் இருக்கவேண்டும்.
2 . கடைசி சீர் நாள் ,மலர் ,காசு ,பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.
3. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே இருக்கவேண்டும்.
4. எதுகை மோனை அமைய வேண்டும்.
இன்னும் ...
போதும்! போதும்! புதுக் கவிதை இருக்கும்போது இவ்வளவு கஷ்டப்பட்டு மரபுக் கவிதை எழுதனுமா? அப்படின்னு சிலபேர் கேக்கறது காதுல விழுது.
எழுதிப் பாத்தாத்தான் அதனோட சுகம் தெரியும்.
நன்றி: அவலோகிதம்
மேலும் விவரங்கள் அறிய http://www.virtualvinodh.com/avalokita
என்ற வலை தளத்திற்கு செல்லவும்.
***************************************************************************************************************
இதையும் படியுங்க!ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 2
நல்ல பயனுள்ள விஷயங்களை சொல்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே,
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
சீர், அசை என எல்லா மரபு அம்சங்களையும் சரி பார்க்கும் மென் பொருள் பற்றிச் சொல்லியிருக்கிறீங்க.
உங்கள் தளம் வாயிலாகத் தான் அவலோகிதம் மென் பொருள் பற்றியும் அறிந்தேன்.
ரொம்ப நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
பதிலளிநீக்குமென்பொருளை குறித்து பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் பல.
பதிலளிநீக்குமென்பொருளில் மேலும் வேறேதேனும் feaures எதிர்பார்க்கின்றீர்களா ? அப்படி இருப்பின், கூறவும். முடிந்தவரை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.
நன்றி
வினோத்
தங்களுடைய அரிய முயற்சி பாராட்டத்தக்கது. இது போல் தமிழ் மென்பொருளை யாரும் உருவாக்கியதாகத் தெரியவில்லை.நான் யாப்பிலக்கணம் அறிந்தவன் அல்ல.இருந்தாலும் அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஓ சரி.
பதிலளிநீக்குஒரு பா வகையை பொருத்துவதற்கு என்னென்ன சரிபார்க்கப்படுகிறது என்பதை பயன்படுத்துபவர்கள் பார்க்கும் வகையில் ஒரு ரிப்போர்ட்-ஆக வெளியிட்டால் உதவிகரமாக இருக்கும் இல்லையா ?
வெண்பா தப்பினாலும், எதனால் தப்புகிறது என்பதை கண்டுபிடிக்கவும் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சேர்க்க முயற்சிக்கிறேன்.
வி
வணக்கம் சகோ.
பதிலளிநீக்குதிருமிகு.தமிழ் இளங்கோ ஐயா இந்த பதிவின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்கள். அவர்களுக்கு முதலில் என் நன்றி.
பயனுள்ள ஒரு மென்பொருளைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோ. மென்பொருளை உருவாக்கிய வினோத் அவர்களுக்கும் நன்றி. மிகப்பெரிய தமிழ்ப்பணி இது. அவருக்கு என் வணக்கங்களும் பாராட்டுகளும்.
செம செயலி !! நானும் சில பாக்களை முயற்சிக்கலாம்னு இருக்கேன் , பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு