காதலைத் தேடி அலையும் கல்லூரி மாணவனின் கவிதை?
காதலெனும் மந்திரத்தை உதடுகளும் உச்சரிக்க
காதல் செய் என்று உள்மனமோ நச்சரிக்க
காதலுக்கு பகை உண்டென்று நண்பர்களும் எச்சரிக்க
காதலெனும் தோட்டத்தில் நான் நுழைந்தேன் பூப்பறிக்க!
வண்ண வண்ண பூக்களெல்லாம் எதிர் வந்தோர் கையில்
மொட்டுகூட இல்லை நான் எடுத்து வந்த பையில்
அழகான பூக்களெல்லாம் அடர்ந்த முள்வேலிக்குள்
மீதமுள்ள பூவெல்லாம் பறித்து விட்டார் காலைக்குள்!
பூ ஒன்றும் காணாமல் நான் வாடினேன்
நம்பிக்கை இழக்காமல் நான் தேடினேன்
எனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும்
பறிக்கநான் வருவேனென்று எனக்காகக் காத்திருக்கும்!.
*************************************************************
இதையும் படிச்சி பாருங்க!

எளிமையான அர்த்தமுள்ள கவிதை
பதிலளிநீக்குஎனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும்
பதிலளிநீக்குஎன்னைப்போலவே பேசுறீங்களே....!
நல்ல கவி வரிகள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
28019F9094
பதிலளிநீக்குBeğeni Satın Al
Telafili Takipçi
Başkasına Takipçi Gönderme