என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2013

இதுதான் காதலா?


                    எப்படிச் சொல்வேன்
                    உன்னிடம் 
                    என் காதலை?

                    காகிதத்தில் சொல்ல 
                    கவிதையும் கைவரவில்லை 

                    என் பேனாக்களுக்கு 
                    காதல் கனாக்களை 
                    பதிவு செய்யத் தெரியவில்லை

                    வாய்மொழியில்
                    சொல்லலாம் என்றால் 
                    தாய்மொழி கூட 
                    தயவு செய்யவில்லை 

                    எப்படிச் சொல்வேன் 
                    என் காதலின் ஆழத்தை?
                    இப்படி  வேண்டுமானால் 
                    சொல்கிறேன்.

                    தனிமை அறையில்  
                    என்னை அடைத்துவை!

                    உன்னைத் தவிர 
                    நான் நேசிக்கும்
                    நூல்களைக்கூட 
                    என்னிடமிருந்து பறித்துக்கொள்

                    என் கண்களை கட்டிப் போடு 

                    பருக  கொஞ்சம் 
                    தண்ணீர்கூட தராதே 

                    உணவைக் கூட 
                    விட்டுவைக்காதே


                    அறைக்குள்  உள்ள 
                    அத்தனை காற்றையும் 
                    உறிஞ்சி எடு

                    உன் காதலை மட்டும் 
                    என்னுடன் 
                    விட்டுச்  செல் 

                  செல்லுமுன் அறையையும்
                    திறக்க முடியாது 
                    பூட்டிச் செல் 

                    பின்னர்  
                    எத்தனை நாட்கள் 
                    கழித்து வேண்டுமானாலும் 
                    வந்து  பார் 

                    அப்போதும் நான் 
                    உயிரோடிருப்பேன்!


                   *********************************************

42 கருத்துகள்:

 1. அய்யய்யோ... முத்திப் போச்சி...! காப்பாத்துங்க... ஹிஹி... வாழ்த்துக்கள்...

  (அடைத்துவ! - அடைத்துவை !)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஐடியா.தலைப்பை ”அய்யய்யோ... முத்திப் போச்சி”.ன்னு வச்சு இருக்கலாம்.
   நன்றி தனபாலன் சார்

   நீக்கு
 2. கரப்பான் பூச்சிதான் எதுவுமே இல்லாமல் பல நாள் உயிர் வாழும் என படித்திருக்கிறேன். காதலர்களுமா? கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. காதல் ஒரு போதை
  அதற்கு அடிமை ஆனவர்களுக்கு வேறு எதுவும் தேவைப்படுவதில்லை

  பதிலளிநீக்கு
 4. அப்போதும் நான்
  உயிரோடிருப்பேன்!
  பொருள் பொதிந்த வரிகள்!

  பதிலளிநீக்கு
 5. இதுதான் காதலா?
  இந்த வயதிலும் காதலா?
  என்றால் இதுதான் காதல்!

  பதிலளிநீக்கு
 6. அப்படியா இது தான் காதலா ?
  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. இதுதான் காதலா? மிகமிக அருமை.
  காதல் எத்தகைய நிலையையும் வெல்லுமென சொன்னகவிதை.
  அழகு. வாழ்த்துக்கள் சகோ!

  த. ம. 9

  பதிலளிநீக்கு
 8. // பருக கொஞ்சம்
  தண்ணீர்கூட தராதே

  உணவைக் கூட
  விட்டுவைக்கதே


  அறைக்குள் உள்ள
  அத்தனை காற்றையும்
  உறிஞ்சி எடு//
  - அடடா காதலுக்கு எவ்வளவு வலிமை ! அழகான கவிதை!

  பதிலளிநீக்கு
 9. அடடா....
  காதலென்றால்.. இப்படி அல்லவா இருக்க வேண்டும்!!

  வித்தியாசமான சிந்தனை.
  வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

  பதிலளிநீக்கு
 10. நீண்ட நாளைக்குப் பிறகு ஓர் அருமையான காதல் கவிதை.

  பதிலளிநீக்கு
 11. காதல் வேகம் புரிகிறது! அருமையான கவிதைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 12. இந்த வயதிலுமா??? காதல் வாழட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன வயசானவன்னே முடிவு பண்ணிட்டீங்களா. இதுக்குதான் அப்பவே சொன்னாங்க சீரியசான விஷயங்களை எல்லாம் எழுதாதேன்னு.

   நீக்கு
 13. அப்போதும் நான்
  உயிரோடிருப்பேன்!

  mmm....Kaathaaaal Paduththuthu...
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 14. காதலைச் சுவாசிப்பவர்களுக்கு வேறொன்றும் தேவையில்லைதான். நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 15. 1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

  2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

  3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

  4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

  5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

  6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

  7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

  8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

  9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

  10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

  11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

  12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

  13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

  14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

  15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

  16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

  17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

  18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

  19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

  20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

  21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

  22. கோயில் நகரம் – மதுரை

  23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

  24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

  25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)

  26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் சாம்பல்காடு கந்தர்வ கோட்டை.

  27.பண்றிகளே இல்லாத ஊர் புதுக்கோட்டை.

  28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதானாலே திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.

  29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் சேலத்தைச் சேர்ந்தவர்.

  பதிலளிநீக்கு
 16. நல்ல பொது அறிவுத் தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள். தனி வலைப்பூ ஆரம்பித்து எழுதினால் இன்னும் நிறையப் பேருக்கு பயன்படும். வலைப பூ தொடங்க உதிவி தேவைப் படின் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். நண்பரே!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  அண்ணா

  காதலித்துப் பார் கவிதைவரும் என்ற கவிதை அடிக்கேற்ப முத்தான சொற்களை ஒன்றாக சேர்த்து கவிமலை தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
  அருமையாக உள்ளது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 18. திண்டுக்கல் தனபாலன் சொன்னது ரொம்பசரி காதலர்களுக்கு மட்டும்மல்ல உங்களுக்கும் முத்திப்போச்சு என்று நினைக்கிறேன் காதல் என்பது திருமணத்திற்குமுன் வரும் எதிர்பாலின ஈர்ப்புதான்.மனைவியிடம் ஏன் காதல் வரக்கூடாது? சரி சரி நிறையபேருக்கு சண்டைதான் வருகிறது அதற்கு ஒரு தனிபதிவு போடுங்களேன் உங்கள் பெயரையும் புல்லாங்குழலையும் பார்த்தால் நீங்கள் வித்வான் என்று நினக்கத்தோன்றுகிறது

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895