என்னை கவனிப்பவர்கள்

சனி, 8 நவம்பர், 2014

புதிய தலைமுறையில் என் படைப்பு

புதிய தலைமுறை 13 நவம்பர் 2014 இதழ்

      வழக்கமாக  வெள்ளிக்கிழமைகளில்  ரயில் நிலைய புத்தகக் கடையில் புதிய தலைமுறை வார இதழ் வாங்கிப் படிப்பது வழக்கம். இந்த வாரம் அவசரமாக ஓடிவந்து ரயிலில் ஏறியதால் வாங்க இயலவில்லை. மாலையிலும் மறந்தநிலையில் நான் வீட்டுக்குள் நுழையும்போது புதிய தலைமுறை  எங்கள் வீட்டுக்குள்  அமர்ந்திருந்தது.சந்தா கட்டி இருப்பேன் அதனால் வந்திருக்கிறது என்று  வீட்டில் நினைத்துக் கொண்டார்கள் ..எனக்குப் புரிந்துவிட்டது..செப்டம்பர் மாதத்தில் கடிதம் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது புதிய தலைமுறை . அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். எனது கடித்ததை தேர்ந்தெடுத்திருப்பார்கள் . அதனால் அனுப்பி இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆம் அதுவே உண்மையானது ..  எனது கடிதம் பிரசுரமாகி இருப்பதை அறிந்தேன். அதற்காகவே புத்தகத்தை அனுப்பி இருந்தார்கள். பொதுவாக படைப்புகள் பிரசுரமானால் பிரதியை இலவசமாக அனுப்பி வைப்பது மரபு. அதன்படி  புதிய தலைமுறை எனக்கு பிரதியை அனுப்பி வைத்திருந்தது.  இப்போது எல்லா பத்திரிகைகளும்  அப்படி செய்கின்றனவா  என்று தெரியவில்லை. முன்பு குமுதத்தில் எனது கதை இப்படியும் இருக்க முடியுமா?-)  பிரசுரமான போது எனக்கு புத்தகம் அனுப்பப் படவில்லை. ஆனால்  750 ரூபாய் சன்மானமாக அனுப்பி வைத்தது குமுதம் இணையத்தில் எழுதியதன் மூலமே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இப்போது புதிய தலைமுறையில் எனது படைப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. முடிந்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

புதிய தலைமுறை 13.11.2014 இதழில் வெளியான  கடிதம் உங்களுக்கு பரிச்சயமானதுதான்."சரோஜாவிலதான் ரோஜா இருக்குடா" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கடிதம்
ஏறகனவே திடம் கொண்டு போராடு சீனு நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கடித்ததை சில மாற்றங்கள் செய்து அனுப்பி இருந்தேன், அது நிச்சயம் தேர்ந்தெடுக்கப் படும் என்ற நம்பிக்கை இருந்தது/ காரணம் முன்பு அதற்கு நீங்கள் அதற்கு  அளித்த ஆதரவுதான்.

   மூன்று ஆண்டுகளாக வலைப்பூவில் எழுதி வருகிறேன்.சில நேரங்களில் இப்படித் தோன்றும்.நாம் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறோம்? இதனால் என்ன நன்மை? இப்படி இணையத்தில் நேரத்தை செலவழிப்பது சரியா? ஒரு வேளை வலைப்பூவில் எழுதவில்லை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அந்த நேரம் செலவிடப் பட்டிருக்கக் கூடும்.

  சிறுவயதில் இருந்து கண்டதையும் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தானும் எழுத வேண்டும் என்ற ஆசை உருவாகி விடுகிறது. சிலருக்கு சரியான களம் அமைந்து விடுகிறது. அல்லது தங்களது விடாமுயற்சியால் அத்தகைய சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் தேடிப்போகாதவர்களுக்கும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் களமாக வலைப்பூக்கள் உள்ளிட்டவை உதவுகின்றன. பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு வெளியாகுமா வெளியாகாதா என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தில் நம்மை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. நாம் என்ன எழுதினாலும் எப்படி எழுதினாலும் பார்ப்பதற்கு படிப்பதற்கு ஒரு நூறு பேராவது இருக்கிறார்கள்.
 எழுதுபவர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாக இணையம் அமைந்துள்ளது.தங்கள் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு அது துணைபுரியவும் செய்கிறது 

இணையத்தில் எழுதுபவர்கள் பெரும்பாலும் போழுதுபோக்குக்காகவே எழுதுகிறார்கள்.  ஓரளவிற்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் செய்கிறது. என்றாலும் முன்னணிப்  பத்தரிகைகளில் நம் படைப்புகள் இடம் பெறும்போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது..

எனது வலைப்பக்கத்திற்கு வருகை வந்து  ஊக்கப் படுத்திய்வர்களுக்கும் ஆலோசனை தந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 


இணையத்தில் பலர் மிக சிறப்பாக எழுதுகிறார்கள்..நீங்களும் உங்கள் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள். நிச்சயம்.உங்கள் திறமை அறியப்படும் . 
நன்றியும் வாழ்த்துக்களும் 

---------------------------------------------------------------------------------------------------------

53 கருத்துகள்:

  1. ரீமிக்ஸ் என்றாலும் கலக்கல் ,வாழ்த்துகள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஏற்கெனவெ குமுதம், இப்போது புதிய தலைமுறை... அப்படிப் போடுங்கள்..
    வலைப்பதிவர் இலக்கிய இதழ்களில் பிரபலமாக வாழ்த்துகள்
    நீங்கள் அதற்குத் தகுதியானவர்தான் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் முரளி.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  4. பிரபல வலைப்பதிவரின் எழுத்துகளை வெளியிட்ட புதிய தலைமுறை இதழுக்கு பாராட்டுக்கள்

    முரளி உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  6. அண்ணா!
    வாழ்த்துகள்! நான் புத்தகம் வாங்கி அதில் படிக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  7. பத்திரிகைகளில் நம் பெயர் பார்க்கும்போது ஒரு சந்தோஷம்தான். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  8. நான் தொடக்கத்தில் ராணி தேவி குமதம் போன்றவற்றில் எழுதி வந்தேன்.
    இங்கே வந்த பிறகு எப்போதாவது தான் அனுப்பினேன்.
    உண்மையில் நம் பதிவு பத்திரிக்கையில் வெளி வந்த போது ஒரு வித மகிழ்ச்சி் தான்.

    வாழ்த்துங்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  9. இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  10. மூங்கில் காற்றுக்கு மயங்கும் மூத்தவன்(வயது) வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வலைப் பதிவெழுத வந்த நாள் முதல் தங்களின் வாழ்த்தும் கிடைத்து வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா!.நன்றி நன்றி

      நீக்கு
  11. சாதனை பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள்..
    ஒரு சந்தேகம்
    வாழ்த்துகள்
    வாழ்த்துக்கள்
    எது சரி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் தான் சரி என்று படித்ததாக ஞாபகம்
      பொதுவாக பன்மையைக் குறிக்கும் வார்த்தைகளில் க் இடம் பெறாது என்று நினைக்கிறேன்.தமிழாசிரியர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும் ஆனால் பலரும் வழக்கத்தில் வாழ்த்துக்கள் என்றே குறிப்பிடுகின்றனர்

      நீக்கு
  12. தங்களின் முந்தைய பதிவையும் பார்த்தேன்.
    அருமை அய்யா!
    வாழ்த்துகள் .
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.. இணையத்தில் எழுதுபவர்கள் பலரும் வெகுஜன பத்திரிகைகளை விட நன்றாகவே எழுதுகிறோம்.. ஆனால் வெகுஜன பத்திரிகைக்கு முயலாததன் நோக்கம், அங்கு இங்கிருப்பது போல் ”எதையும் பயமில்லாமல் எழுதலாம்” என்கிற சுதந்திரம் இருக்காததால் என்று நான் நினைக்கிறேன்.. அதுவும் போல இங்கு நாம் நினைத்த போது மட்டும் எழுதலாம், ஆனால் அங்கு அவர்களின் டிமாண்ட்டிற்கு ஏற்றவாறு எழுத வேண்டும்.. ஆனாலும் நீங்கள் சொல்லியிருப்பது சரி தான்.. நாமும் வெகுஜன பத்திரிகைகளுக்கு முயலலாம்..

    மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. மேலும் பல படைப்புகள் வெளிவர இறைவனை வேண்டுகிறேன் :)

    பதிலளிநீக்கு
  14. எழுதுவதும் வாசிப்பதும் எக்காலகட்டத்திலும் வீண் போகாது. அன்புகூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள், வாசியுங்கள். துணைக்கு நாங்கள் இருக்கிறோம். முதன்முதலாக என் வாசகர் கடிதம் ஆங்கில நாளிதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல கடிதங்கள் பல இதழ்களில் வந்துள்ளன. இராஜராஜன் 1000ஆவது ஆண்டு விழாவின்போது தினமணியில் முழுதாக ஒரு பக்கத்திலும், இந்த ஆண்டு தமிழ் தி இந்து இதழில் செல்பி தொடர்பாக தலையங்க எதிர்ப்பக்கத்திலும் வந்த கட்டுரைகள் நான் எழுதியனவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகக் கூறுவேன். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. அருமை! அருமை!

    மேலும் ஓங்கட்டும் உங்கள் திறமையும் புகழும்!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் முரளி!

    பதிலளிநீக்கு
  17. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. வலைப் பதிவில் என்னதான் எழுதினாலும் பத்திரிக்கையில் வந்தால்தான் ‘ மவுசு’ போல் இருக்கிறதே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் சார்! இப்படி நம் பதிவுகள் அச்சில் வரும்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது! தொடர்ந்து உங்கள் எழுத்துக்கள் பிரசுரமாக வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  21. உங்கள் விமர்சனத்தின் ரசிகன் நான். ஆழ்ந்து வாசிப்பனுபம் உள்ள உங்களைப் போன்றவர்கள் இன்னமும் உயரம் தொட வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன். வாழ்த்துகள். இதுவும் ஒரு வித அங்கீகாரம் தான்.

    பதிலளிநீக்கு
  22. நானும் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குமுதம், கல்கண்டு, மாலைமதி, ராணி முத்து, கல்கி, கோகுலம், குங்குமம், குங்குமச் சிமிழ்,
    பாக்யா, ரத்னபாலா (முதல் கவிதை) மற்றும் பல மாதப் பத்திரிகைகளில் எழுதியுள்ளேன்.

    இவற்றில் சில பத்திரிகைகள் தவிர மற்றவை மாதிரிப் பிரதி அனுப்புவதில்லை.
    சுமார் ஓராண்டுக்கு முன் புதிய தலைமுறையில் ஒரு வாசகர் கடிதம் பிரசுரமானதற்கு, அன்பளிப்பு பிரதி அனுப்பியிருந்தார்கள்.

    தங்களுக்கு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. இவை தொடர எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே,,,
    எமது மதுரை பதிவு காண வருக.. தங்களது புகைப்படம் அனுப்புகிறேன் தொடர்பு கொள்க....

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துகள்
    தங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துகள்
    தங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள்!.. பத்திரிக்கைகள் பக்கம் வருவது மகிழ்ச்சி... பத்திரிக்கைகள் எனும் போது தனி அடையாளம் கிடைக்கிறது...!

    பதிலளிநீக்கு
  27. உங்களின் எழுத்து புதிய தலைமுறையில் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி... உங்கள் வளர்ச்சி தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  28. உங்களது இந்தக் கடிதத்தை ரொம்பவும் ரசித்துப் படித்திருக்கிறேன். சில மாற்றங்களுடன் புதிய தலைமுறை இதழில் வந்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துகள் முரளி.

    பருவ இதழ்களுக்கு எழுதும் முயற்சி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துக்கள் நண்பரே! மிகவும் சந்தோஷம்!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895