என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014 எப்படி?

   

   கடந்த ஞாயிறு  மூன்றாம் ஆண்டு வலைப் பதிவர் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வலைச்சரம் சீனா அவர்கள்,தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்கள்,திண்டுக்கல் தனபாலன்,தமிழ்வாசி பிரகாஷ் மதுரை சரவணன் உள்ளிட்ட மதுரை பகுதி வாழ் பதிவர்களின் அரும் உழைப்பிலும் சக பதிவர்களின் ஒத்துழைப்பினாலும் பதிவர் சந்திப்பு என்றும் நினவு கூறத் தக்க வகையில் சிறப்பாகவே நடந்தது. என்னைப் பொறுத்தவரை இது முக்கியமான நிகழ்வு . ஏனென்றால்  என்னையும் ஒரு தொழில் நுட்ப வலைப் பதிவர்(தப்பா லிஸ்ட்ல சேத்துட்டாங்களோ) 'வந்தே மாதரம்'சசிகுமார்,'ப்ளாகர் நண்பன்' அப்துல் பாசித், 'கற்போம்' பிரபு கிருஷ்ணா,திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களுக்கு இணையாக   எனக்கும்  ஒரு  சால்வையும போட்டு கேடயமும் கொடுத்தனர்... நிறையப் பேர் நிச்சயம் குழம்பிப் போய் இருப்பார்கள் இவனுக்கு எதுக்கு இதெல்லாம் என்று.. 

      இதற்கான நிபந்தனை சில தொழில் நுட்ப பதிவுகளாவது எழுதி இருக்க வேண்டும். வலைப்பூ தொடர்பாக மற்றவர்களுக்கு உதவி இருகவேண்டும் என்பதே..  . என்பெயரை தனபாலன் மற்றும் ஸ்கூல் பையன் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. இருப்பினும்   தமிழ்வாசி பிரகாஷுக்கு ஐயம் ஏற்பட , வலைப்பூ நுட்பம் சார்ந்து நான் எழுதிய சில பதிவுகளை மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.அனுப்பி வைத்தேன். நான் கணினி படித்தவன் அல்ல. பயன்பாட்டு அனுபவத்தைக் கொண்டே யாரேனும் ஒருவருக்காவது பயன் தரும் என்று இணைத்தே கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புக்கள் என்ற தலைப்பில் அவ்வப்போது எழுதுவது உண்டு. அவற்றை ஒரு மாணவன் சக மாணவனுக்கு உதவும் அடிப்படையில்தான் பதிவிட்டேன். குறைந்து இருபது பேருக்காவது புதிய வலைப்பூ அமைத்தல், திரட்டிகளில் இணைத்தல், விட்ஜெட் சேர்த்தல், பேக் அப் எடுத்தல் போன்றவற்றில் உதவி இருகிறேன்.. திண்டுக்கல் தனபாலன் என்னை விட பலருக்கும் உதவி செய்தவண்ணம் இருக்கிறார். மற்ற தொழில் நுட்பப் பதிவர்கள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இப்படி செய்பவர்கள் இன்னும் பலரும் இருக்கலாம்.அவர்களை கௌரவப் படுத்தியது,  ஏராளமான அனுபவமும் திறமையும்   இருந்தும் தொழில் நுட்பம் அதிகம் அறியாமை  காரணமாகவும் எழுத முடியாமல் இருப்பவர்க்கும் வலைப் பக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதன் மூலம் நல்ல பதிவுகள் உருவாவதற்கு இந்த தொழில்நுட்பப் பதிவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.என்ற  வகையில்தான்.

விழாவைப் பற்றி நிறையப் பேர் விளக்கமாக படங்களுடன் எழுதி விட்டார்கள் எனினும்

சுருக்கம் 
 • முந்தைய தினம் வந்தவர்கள் தங்குவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்ததன
 • முன்னமே அறிமுகமான பல பதிவர்களை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.  புதியவர்களோடும் பேசிக் கொண்டிருந்தது நிறைவாக இருந்தது.. வருவார்கள் என்று நினைத்த ஒரு சிலர் வராதது ஏமாற்றமளித்தது.
 • மேடை வடிவமைப்பு அற்புதமாக இருந்தது
 • வசந்தமண்டபம் மகேந்திரன் கவிதைத் தமிழில் நிகழ்ச்சி தொகுத்தளித்தார்.
 • சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
 • அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த சிறப்பு அழைப்பாளர் தா.கு சுப்பிரமணியம் உடல் நலமின்மை காரணமாக வரவில்லை.. அதற்கு பதிலாக கவிஞர் முத்து நிலவன் உரையாற்றினார்.
 • இன்னொருசிறப்பு அழைப்பாளர் இந்திரா சவுந்திரராஜன் அவர்கள் நீண்ட நேரம் பேசினார்.பேசிய கருத்துக்கள் தொழில் நுட்பத்திற்கு  எதிராகவும் குறை கூறும் வகையிலும் அமைந்திருந்தது   சற்று ஏமாற்றமாகத்தான்  இருந்தது .
 • பிற்பகலுக்குப் பின்னும் வந்திருந்தோர் விழா முடிவடையும் வரை அமைதி காத்து தங்கள் பண்பை வெளிப்படுத்தினர்.
 • குடந்தையூர் சரவணன் அவர்களின் சில நொடி சிநேகம் குறும்படம்  வெளியிடப்பட்டது.
 • நான்கு நூல்கள் வெளியீடு நடந்தது..அவற்றில் மூன்று புதுக்கோட்டைப் பகுதி பதிவர்களுடையது.. பெரிய அளவு புத்தக மாதிரி அனைவரையும் கவரந்தது
 • நூல் வெளியீட்டில் வாழ்த்துரை வழங்கியோர் சிறப்பாக பேசினர்.
 • கோவை ஆவி சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்தார்.
 • அடுத்த வலைப் பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் என அறிவிக்கப் பட்டது 
 • திருமணத்திற்கு செல்பவர்களுக்கு தாம்பூலப் பை வழங்குவது போல வந்திருந்த அனைவர்க்கும் பர்ஸ் ஒன்றை பைக்குள் வைத்து கொடுத்தனர்.

     கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த  வலைப்பதிவர் சந்திப்பை மட்டுமே பலரும் குறிப்பிடுகிறார்கள் என்றும்  அதற்கு முன்னர் நடந்த சந்திப்புகளை  குறிப்பிடுவதில்லை என்று ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். அதற்கான விவாதங்கள் இப்போதுதான் ஓய்ந்து இருக்கிறது.  இந்த மூன்று வலைப்பதிவு திருவிழாக்களுக்கு முன்னதாக ஈரோடு பதிவர்கள் சந்திப்பு,நெல்லை கோயம்புத்தூர் சென்னை என்று  பதிவர் சந்திப்புகள் அவ்வப்போது  நடைபெற்று வந்துள்ளன என்பதைஅறிய முடிகிறது. சந்திப்பு சிறிய அளவோ? பெரிய அளவோ? மகிழ்ச்சி தரக் கூடியது என்பதில் ஐயமில்லை.

    வட்டார அளவில் குழுக்களாக அல்லாமல்  தமிழ் வலைப்பதிவர் அனைவரும் ஒரே குழுமமாக செயப்பட வேண்டும். அதனை ஒரு அமைப்பாக பதிவு செய்து முறையாக  செயல்படவேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வந்தார் மூத்த பதிவர் புலவர் இராமனுசம் அவர்கள். அதனாலேயே தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்ற பெயரில் தமிழ்ப் பதிவர்கள் ஒருங்கிணைக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் 2012 இல் முதல் பதிவர் சந்திப்பு நடந்தது... முடிந்தவரை கவனத்துடன் அனைத்து மாவட்ட பிரபல  பதிவர்களையும் தொடர்பு கொண்டு விழா நடத்த  முடிவு செய்தனர். புலவர் அவர்களின் தலைமையில், கவிஞர் மதுமதி,பட்டிக்காட்டான், மோகன்குமார், அரசன்,ஆரூர் மூனா செந்தில், அரசன்,மெட்ராஸ்பவன் சிவகுமார் உள்ளிட்ட நான் அறிந்த மற்றும் அறிந்திராத  பலரும் ஆர்வத்துடன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். உள்ளூர், வெளியூர் அயல்நாடு வாழ் பதிவர்கள் என்று ,பலரும் தானாக முன்வந்து நிதி அளிக்க முன் வந்தனர். கணக்கு வழக்குகளும் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டது. விழா நல்லபடியாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைப்பை உருவாக்க   சீனியர் பதிவர்களோடும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.,  ஒருசிலர் ஆதரவு தெரிவித்தனர். இதில் பிரச்சனைகள் வரும் .இது தேவையற்ற வேலை என்றும் பலர்  கருத்து தெரிவித்தனர்.. சங்கம்  நடத்த நிதி தேவைப்படும். பொறுப்பாளர்கள் தேவை;   நிதி கையாளப்படும்  இடங்களில் சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடும் என்றும் வாதிட்டனர். ஏற்கனவே நாங்கள் முயன்று தோற்றிருக்கிறோம், என்றும் அச்சுறுத்தினர்.

    புலவர் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. இப்படியே நாட்கள் கடக்க அடுத்த 2013 வலைப்பதிவர் சந்திப்பும் திட்டமிடப் பட்டது. அப்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார் புலவர். அதன் நடைமுறைகளுக்கான செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். ஏற்கனவே முந்தைய விழாவின் நோக்கமே இதற்கும் அடிப்படையாக அமைந்ததால் இதனை இரண்டாம் ஆண்டு வலைப் பதிவர் திருவிழா என்று குறிப்பிட்டனர். இவ்விழாவும் சிறப்புறவே நடந்தேறியது. இப்பதிவர் விழா பொதுவானது; வட்டார ரீதியாகக் கொள்ளாமல்  ஒட்டு மொத்த அமைப்பின் சார்பாக எந்த மாவட்டத்திலும் கொண்டாடலாம் என்ற கருத்து முன் வைக்கப் பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கொண்டாட எந்த  மாவட்டத்தினரும் விருப்பம் தெரிவிக்கலாம் என்ற போது மதுரை மாவட்டம் என்று அறிவிக்கப் பட்டது.
   அதன் விளைவாக மதுரையில் இந்த வலச்சரம் சீனா அவர்கள் மற்றும்  ரமணி அவர்களின் வழி காட்டுதலோடு மூன்றாம் ஆண்டு வலைப் பதிவர் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு நல்லமுறையில் கொண்டாடப் பட்டது. 

    கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் வந்திருந்த புதுக்கோட்டை பதிவர்கள்  இச்சந்திப்பின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அடுத்த பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் நடத்த விருப்பம் தெரிவிக்க அவ்வாறே அறிவிக்கப் பட்டது. கவிஞரும் பட்டிமன்றப்  பேச்சாளருமான முத்துநிலவன் அவர்கள் விழாக்கள் நடத்துவதில் அனுபவம் மிக்கவர். தமிழ் வலைப்பூக்களை வளர்க்க வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் உடையவர்.  ஏற்கனவே புதுக்கோட்டையில் இரண்டு முறை பதிவர் பட்டறைகள் நடத்தி வலைப்பூக்கள் எழுத ஊக்கம் கொடுத்தவர். 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நோக்கத்துடனும்  இணையத்  தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயல்படுபவர். அச் சந்திப்பு அசத்தலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்

     மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வந்திருந்தோர் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் சற்று குறைவாக இருந்ததது போல் தோன்றியது. கடந்த இரண்டு  சந்திப்புகளின்போது  நிறையப் பதிவர்கள் தங்கள் தளத்தில் விழா பற்றிய பகிர்வுகள் செய்து அழைப்பு விடுத்தனர். ஆனால் இம்முறை விழா தொடர்பான பதிவுகள் அதிகம் எழுதப் படவில்லை என்றே நினைக்கிறேன். திண்டுக்கல் தனபாலனும், தமிழ்வாசி பிரகாஷ் போன்றோர் மட்டுமே பதிவுகள் இட்டு உற்சாகப் படுத்தினர்.. உதாரணமாக  சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இந்த  ஆண்டு ஒரே ஒரு பதிவுதான் எழுதினேன். முந்தைய இரண்டு விழாக்களுக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டிருந்த வீடு திரும்பல் மோகன்குமார் போன்றவர்கள் நிறைப் பதிவுகள் எழுதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். இம்முறை விழா நடந்ததது  பற்றி அவருக்கு தெரியுமா தெரியாதா என்று கூட தெரியவில்லை.. இன்னும் நிறையப்பதிவர்கள் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக நிகழ்வுகள் பற்றி எழுதி இருந்தால் கலந்து கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.( சீனு! நீ ஒரு (முன்)பதிவு கூட போட்ட மாதிரி தெரியலையே! (எப்பூடி? நல்லா போட்டு குடுத்துட்டனா? ))

அப்படி இருந்தும் மூன்றாவது வலைப் பதிவர் திருவிழாவை குறிப்பிடத் தக்க அளவுக்கு வெற்றிகரமாக  நடத்திக் காட்டிய விழாக் குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    
********************************************************************************
தேவைப் பட்டால் படியங்கள்!

 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
 • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
 • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
 • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
 • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
 •  இன்ட்லியால் ஒரு இன்னல்
 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
 • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
 • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா? • 27 கருத்துகள்:

  1. விழா சிறப்பாக அமைந்தது சந்தோஸம் நேரலையில் உங்களை பார்க்கும் வசதி கிடைத்தது இணையத்தில் கடல் கட்ந்து. சந்தோஸம்.

   பதிலளிநீக்கு
  2. பதிவர் சந்திப்பை படமே போடாமல் எழுத்திலேயே அழகாய் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்!தங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி !
   த ம 2

   பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா என்ன ஒரு வில்லத்தனம்... வழக்கமா நான் ரொம்பவே விரிவா ஒரு முன்பதிவு போடுவேன், இந்தமுறை போடா இயலவில்லை. சாக்குபோக்கு இருந்தாலும் சொல்ல மனம் வரவில்லை... இந்த முறை போடாததற்கு இம்போசிசன் புதுக்கோட்டை சந்திப்பின் போது எழுதி விடுகிறேன் :-)

   பதிலளிநீக்கு
  4. வணக்கம்
   அண்ணா
   நிகழ்வை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் நேரலை நிகழ்ச்சியை பார்த்து இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  5. மிக அழகான விரிவான தொகுப்புரை! நேர்த்தியாகவும் ! விழாவை பார்த்தது போன்று! மிக்க ந்னறி நண்பரே!

   பதிலளிநீக்கு
  6. அன்று மதுரையில் நடந்த வலைப் பதிவினர் சந்திப்பு நிகழ்ச்சியினை, ஒரு அறிக்கை போல தொகுத்து சமர்ப்பித்து விட்டீர்கள். சகோதரருக்கு நன்றி! உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
   த.ம.3

   பதிலளிநீக்கு
  7. சிறப்பாக விரித்துரைத்த
   தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014
   நிகழ்வுகள் நன்று.
   தங்கள் தொழில் நுட்பப் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
   அவை தரமான பதிவுகளே!
   வாழ்த்துகள்
   தொடருங்கள்

   பதிலளிநீக்கு
  8. இந்திராசவுந்தர்ராஜன் கருத்துகள் பற்றி வேறெங்கேயோ கூட இதே போலக் கருத்தைப் படித்தேன்.

   பதிலளிநீக்கு
  9. பதிவர் சந்திப்பு விழாவில் தங்களை எல்லாம் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது ஐயா
   இதுபோன்ற விழாக்களில் அனைத்துப் பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும்
   நன்றி ஐயா

   பதிலளிநீக்கு
  10. சுருக்கமாக இருந்தாலும் பகிர்வு மனதிற்கு நிறைவு... நன்றி...

   அடிக்கடி புதுக் கோட்டைக்கு வர வேண்டியிருக்கும்...! தயார் செய்து கொள்ளுங்கள்... நன்றி...

   பதிலளிநீக்கு
  11. நிகழ்சிகளை கண்முன் நிறுத்தியமைக்கு நன்றி ! நேரலை ஒலிபரப்பு பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் !

   பதிலளிநீக்கு
  12. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. விழாவுக்கு வந்த -நான் உட்பட- பிற பதிவர்கள் சொல்லாத பல செய்திகளை, ஆக்கபூர்வமான சில யோசனைகளைப் புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்து நடத்தும்போது கவனத்தில் கொள்வோம் முரளி. நன்றி (உங்கள் பாணியில் படங்களை மட்டும் தொகுத்துத் தனியாப் போடுவீங்கதானே?)

   பதிலளிநீக்கு
  13. திருவிழா பற்றி சிறப்பான கோணத்தில் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.!

   பதிலளிநீக்கு
  14. பதிவர் திருவிழா சிறப்பாக முடிந்ததை உங்கள் பாணியில் எழுதி இருப்பது பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
  15. இந்த முறை நானும் வரவில்லை! சுருக்கமாக விழா நிகழ்வுகளை விவரித்தவிதம் அருமை! நீங்களும் சிறப்பாகவே தொழில்நுட்ப பதிவுகள் எழுதுகிறீர்கள்! உங்களை கவுரவித்ததில் மிகவும் மகிழ்ச்சியே! நன்றி!

   பதிலளிநீக்கு
  16. பாரபட்சமற்ற நடு நிலையான அருமையான
   விரிவான பதிவர் சந்திப்புக் குறித்த பதிவுக்கு
   மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   பதிலளிநீக்கு
  18. விழா மிகவும் சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி...

   பதிலளிநீக்கு
  19. விழா சிறப்பாக நடந்தது தெரிந்து மகிழ்ச்சி. நானும் வருவேன் என பதிவு செய்திருந்தாலும், வர இயலாத சூழல்.

   அடுத்த வருடம் நிச்சயம் சந்திக்கலாம்...

   பதிலளிநீக்கு
  20. நல்ல பகிர்வு நண்பரே,,,, தங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.

   பதிலளிநீக்கு
  21. மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழாவிற்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தும் வரமுடியாத சூழல். இத்தனைக்கும் மதுரைக்கு போகவர உறுதி செய்யப்பட பயனசீட்டுகள் கிடைத்து ரொம்பவும் மகிழ்ச்சியில் இருந்தேன்.
   விழா பற்றிய ஒவ்வொருவரது பதிவினைப்படிக்கும் போதும், அடடா மிஸ் பண்ணிவிட்டோமே என்று தோன்றுகிறது.
   அடுத்தமுறை....!

   பதிலளிநீக்கு
  22. சிறப்பான விமர்சனம் மூங்கில் காற்று!

   விழாவை நேராக கண்டு களித்தது போல் இருந்தது உங்களின் பதிவு. அருமை.
   த.ம. 13

   பதிலளிநீக்கு
  23. விரிவான தொகுப்பு...
   பல மாதங்களுக்கு முன்பே உங்களின் தொழிநுட்ப பதிவு படித்த ஞாபகத்தால் தான் ஸ்கூல்பையனிடம் போன் நம்பர் கேட்டேன்.. அவரோ கான்பிரன்ஸ் போட்டுட்டார்.... :-)

   பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர்கள் திருவிழா குறித்த தங்கள் கருத்துக்களை எளிமையாகவும், அழகாகவும் பதிவிட்டமைக்கு நன்றி.

   - சித்திரவீதிக்காரன்
   http://maduraivaasagan.wordpress.com/2014/11/04

   பதிலளிநீக்கு

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895