என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 13 நவம்பர், 2014

பின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி?

கற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்.




       வலைப்பூவோ முகநூலோ ட்விட்டரோ எதுவாக இருப்பினும் நாம் பதிவு செய்தவற்றை நிறையப் பேர் பார்த்தால்தான் மகிழ்ச்சி.என் கடன் பதிவு செய்து கிடப்பதே பார்ப்போர் பார்க்கட்டும் பார்க்காவிட்டால் போகட்டும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை  என்றும் நான் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்றும் ஒரு சிலர் சொல்வதுண்டு.  அது ஒப்புக்கு சொல்லப் படுவதே அன்றி வேறில்லை. ஆனால் அவர்களுக்கும் நமது பதிவுகள் படிக்கப் படவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்யும் . 

       யாருமே வராத ஓட்டலுக்கு யாருக்காக மாவாட்டுவது? (எவ்வளவு நாள்தான் டீக்கடை உதாரணத்தையே சொல்வது). நாம் இருக்கிறோம் இணையத்தில் எழுதுகிறோம் என்று தெரிவிப்பது புதியவர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு பல வழிகளை கடைபிடிக்கிறோம். திரட்டிகளில் இணைப்பது .பிறரின் பதிவுகளில் கருத்திடுவது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் ட்விட்டர்களில் இணைப்பு  கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. சிலர் பிறருடைய கருத்துப் பெட்டியில் தன பதிவை படிக்க வருமாறு அழைப்பு விடுப்பதை பார்க்க முடியும்.அப்போது தன பதிவின் url ஐ ( உதாரணம் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html) காப்பி செய்து பின்னூட்டத்தில் இட்டு வைப்பர். தன பதிவுக்கு வருகை தந்தவரின் வலைபதிவிற்கு செல்ல அந்த முகவரியை தேர்ந்தெடுத்து காப்பிசெய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டினால் அந்தப் பதிவுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் இவற்றை செய்வதற்கு சோம்பல் பட்டோ அல்லது செய்யத் தெரியாமலோ சிலர் இருக்கக் கூடும். அவர் எளிதாக நமது வலைப்பதிவை அடைய வழி என்ன? பின்னூட்டத்தில் க்ளிக் செய்தால் பதிவை அடையும் வண்ணம் இணைப்பு இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? அதற்கான வழி ஒன்றை கூறுகிறேன். இது பெரும்பாலோருக்கு தெரிந்ததுதான் என்றாலும் ஒரு சிலருக்காவது பயனுள்ளதாக இருக்கும்
     ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும் . இதை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட ந(ண்)பர் நமது பதிவைப் படித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தால் அவருடைய வலைப்பதிவு பின்னூட்டத்தில் இதைப் உபயோகப்படுத்தலாம் . அடிக்கடி இதனை விளம்பரம் போல நாம் இடும் ஒவ்வொரு பதிவுக்கும் இதனைசெய்வதை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள் . எரிச்சல் அடையக் கூடும.அதனால்இடம்பொருள்அறிந்து இதனை பயன்படுத்துதல் சாலச் சிறந்தது 

   இப்போது வழிமுறையை பார்ப்போம். இந்த  குட்டி HTML நிரலை பயன் படுத்தலாம்  

<a href="உங்கள் பதிவின் முகவரி">பதிவின் தலைப்பு</a> 

இதை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொள்ளுங்கள் 

உதாரணத்திற்கு எனது இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  என்ற பதிவுக்கு  இணைப்பு கொடுக்க விரும்புவதாகக் கொள்வோம்.
இதன் url முகவரி 
http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html
பதிவின் தலைப்பு: இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  
மேற்கண்ட நிரலில் நீல வண்ணத்தில் உள்ள பதிவின் முகவரிக்கு பதிலாக என்ற இடத்தில் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html என்பதையும் பச்சை வண்ணத்தில் உள்ள பதிவின் தலைப்பு என்பதற்கு பதிலாக  இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்பதையும் இட வேண்டும் 

பதிவுக்கான இணைப்பு நிரல் இப்படி இருக்கும் 

<a href="http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html">இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்</a> 

இதை அப்ப்டியே காப்பி செய்து நண்பருடைய பின்னூட்டப் பெட்டியில் பேஸ்ட் செய்து பப்ளிஷ் செய்யுங்கள் . 
இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்ற தலைப்பு மட்டும் இணைப்புடன் கருத்துப் பெட்டியில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் . நிரலில் உள்ள   மற்ற குறியீடுகள் எழுத்துக்கள் அதில் இடம் பெறாது .இதைக் க்ளிக் செய்து பதிவை  எளிதாக அடையலாம் 

நண்பரின் பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லி விட்டு  அது தொடர்பாக உள்ள உங்களது பதிவையும் இணைப்போடும் குறிப்பிடலாம் 
உதாரணமாக "இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்" என்ற பதிவுக்கு கீழ்க்கண்டவாறு பின்னுட்டமிட்டிருந்தார் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் .


அவர் தன்னுடைய தோசைப் பதிவின் இணைப்பையும் எனது பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம் 

கருத்துப் பெட்டியில் கீழ்க்கண்டவாறு 

 நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? <a href="http://engalblog.blogspot.in/2014/08/140804-1.html">தோசையாயணம்</a> 



என்று  டைப் செய்து பப்ளிஷ் செய்தால் 



கருத்து மேலுள்ளவாறு தோன்றும். இதில் இணைப்புப் பகுதியான தோசையாயணம்  மட்டும் மாறுபட்டு  காட்சி அளிக்கும் . அதைக் க்ளிக் செய்தால் அந்தப் பதிவுக்கு நேரடியாக சென்று விடும்.
இதை சோதித்து ப் பார்க்க  எனது இட்லி தோசை தத்துவங்கள்  பக்கத்திற்கு செல்லவும் 

குறிப்பு  



  • இந்த நிரலில் மேற்கோள்குறி <   > / போன்ற குறியீடுகள் விடுபட்டுவிடக் கூடாது.
  • இந்த மாதிரி நிரலை அப்படியே காப்பி செய்து கருத்துப்பெட்டியில் பேஸ்ட் செய்து விட்டு உங்கள் பதிவின் தலைப்பையும் URL ஐயும் அதில் ரீப்ளேஸ் செய்து கொள்ளலாம்.
  • பதிவின் முகவரியை பதிவின் அட்ரஸ் பாரில் இருந்து நிரலில் பேஸ்ட் செய்து கொள்ளலாம் அவ்வாறு செய்யும்போது http:// கூடுதலாக இடம்பெற்றுவிட்டால் இது வேலை செய்யாது.


கொசுறு:
நான் பொதுவாக எனக்கு பின்னூட்டமிட்டவரின் வலைப் பதிவிற்கு செல்ல வேண்டுமென்றால்  பின்னூட்டத்தில் அவர் பெயரை க்ளிக் செய்தால் அவரது PROFILE பக்கத்திற்கு செல்லும் . அதன் வழியாக அவரது வலைப் பக்கத்திற்கு செல்வது என் வழக்கம் . என்னைப் போன்று பலரும் செல்ல கூடும். ஆனால் பல வலைப் பதிவர்கள் கூகிள் +  கம்மென்ட்டுக்கு மாறி இருக்கிறார்கள் . இதனால் அவர்களுடைய பெயரை க்ளிக் செய்தால் அவர்களுடைய கூகிள் + 
பக்கத்திற்க்கு செல்லும் அதில் அவர்கள் பகிர்வு செய்த பிறருடைய பதிவுகளும் இடம் பெற்றிருக்கும். இதில் அவரது சமீபத்திய பதிவை கண்டறிவதில் சற்று இடர்பாடு உள்ளது . எனவே கூகிள்+ அதிகம் பயன்படுத்துபவர்கள் தவிர இதரர் பழைய ப்ளாக்கர் கம்மென்ட்ஸ் செட்டிங்க்சில் இருப்பது நல்லது  என்பது எனது கருத்து 

                                                       **************************

எச்சரிக்கை:  முரளி!ஏதோ மதுரை வலைப் பதிவர் விழாவில் தொழில் நுட்பப் பதிவர்னு சொல்லிட்டாங்க. அதுக்காக  இப்படி எல்லாமா ஜுஜுபி  பதிவ போட்டு படுத்தறது 



********************
இதர கற்றுக் குட்டிப் பதிவுகள் 






  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?




  • 47 கருத்துகள்:

    1. அய்யா நீர் புலவர்தான்... மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததல்ல... நீர் நீரே ஒரிஜினலாக எழுதியதுதான் என்று புரியவைத்தமைக்குத்தான் மதுரையில் கிரீடம்! அதை இந்தப் பதிவிலும் நிரூபித்திருக்கிறீர்கள்... நன்றி இப்ப இந்தப் பதிவுல கத்துக்கிட்டதை செஞ்சு காட்டவா? இதுதான் தீட்டுன மரத்துல கூர்பாக்குறது இல்ல?
      'புதிய மரபுகள்' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி> சரியா?

      பதிலளிநீக்கு
    2. puthiyavarkalukum theriyathavarkalukkum nichaiyam uthava kudiya pathivu sir. ithu pondru kurippukal avvapothu neram kidaikkumpothu eluthungal sir.

      பதிலளிநீக்கு
    3. பயனுள்ள தகவல். நன்றி.

      பதிலளிநீக்கு
    4. அட!! அப்படியா சங்கதி இந்த காப்பி பேஸ்ட் பண்ணிக்கிறேன்(""முதலில் எனக்கு காபி போட்டு கொடுங்கம்மா"நிறை. நான்"சத்தமா பேசாத செல்லம் முரளிஅண்ணா காதில் விழுந்துடப் போகுது:()
      கடமைகள் பின்னே அழைகின்றன. நான் விடை பெறுகிறேன் அண்ணா!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. பதிவைத்தான் பண்ணக் கூடாது இந்த கோடிங் காப்பி பண்ணிக்கலாம். அதுக்காகத்தானே எழுதி இருக்கேன்.

        நீக்கு
    5. பயனுள்ள பகிர்வு
      வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    6. அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ ! http://www.jokkaali.in/2014/11/blog-post_13.html
      முயற்சி செய்திருக்கிறேன் ,சரியா முரளி தரன் ஜி ?
      த ம 4

      பதிலளிநீக்கு
    7. நான் கூட பின்னூட்டத்தில் எப்படி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று யோசித்தது உண்டு. இப்போது தெரிகிறது. இதற்கு உதாரணமாக என்னுடைய பின்னூட்டத்தை எடுத்துக் கொண்டு என்னை கௌரவப் படுத்தியதற்கு நன்றி! இந்த HTML எங்கே இருக்கும்?

      பதிலளிநீக்கு
    8. மிகவும் உபயோகமான பதிவு சகோதரரே!
      நானும் இங்கு காண்பித்ததைப் பிரதி செய்துவிட்டேன்!
      மிக்க நன்றி!

      அருமை! வாழ்த்துக்கள்!

      பதிலளிநீக்கு
    9. பயனுள்ள தகவலுக்கு நன்றி!

      நீங்கள் சொல்வது போல பழைய ப்ளாக்கர் கம்மென்ட்ஸ் செட்டிங்க்சில் இருப்பதுதான் நல்லது என்ற உங்களது கருத்தினை நானும் ஆதரிக்கிறேன்.

      த.ம.6

      பதிலளிநீக்கு
    10. புதிய பதிவர்களுக்கு மிகவும் உதவும்...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. புதியவர்களை சென்றடயும் நோக்கத்துடன்தான் பதிவிடப் பட்டது
        நன்றி டிடி

        நீக்கு
    11. பதிவு எனக்கு நிச்சயம் உதவும் மூங்கில் காற்று.
      ஆனால்..... ஒவ்வொரு முறையும் வெட்டி ஒட்ட வேண்டுமா?

      நான் டீயுப் லைட்டுங்க....(

      பதிலளிநீக்கு
    12. உண்மையிலேயே நீங்கள் தொழில் நுட்பப் பதிவர்தான் ஐயா
      மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா

      பதிலளிநீக்கு
    13. இதைப்போல இணைப்பு கொடுப்பது பற்றி யாரிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். காப்பி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளுகிறேன். (உங்கள் அனுமதியுடன்!)
      நன்றி முரளி.

      பதிலளிநீக்கு
    14. வேர்ட்ப்ரெஸ் -இலும் இதே போல செய்ய முடியுமா? முயற்சி செய்துவிட்டு வருகிறேன்.

      எனக்கு சரியாக வரவில்லை. இதோ இணைப்பு எப்படி செய்வது என்று சொல்லமுடியுமா?

      http://ranjaninarayanan.wordpress.com/2014/11/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-2/

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தாரளமாக செய்யலாம். வோர்ட் பிரேசில் இயல்பான ஒரு அனுகூலம் உள்ளது . பின்னூட்டம் இடுபவரின் பெயரை க்ளிக் செய்தால் அவரது ப்ளாக்கிற்கு சென்று விடும். அனால் குறிப்பிட பதிவுக்கு இணைப்பு தர வேண்டுமென்றால் மேற்கண்ட வழிமுறையே பின்பற்றலாம். HTML ஐ ப்ளாகர், வோர்ட் பிரஸ் கம்மெண்ட்சில் இரண்டும் ஆதரிக்கின்றன

        நீக்கு
    15. கொசுறு கருத்தினை நானும் ஆதரிக்கின்றேன் அண்ணாச்சி

      பதிலளிநீக்கு
    16. நல்ல உபயோகமான தகவல் சகோ. உங்கள் அனுமதியுடன் காப்பி செய்து கொள்கிறேன்.நன்றி.

      பதிலளிநீக்கு
    17. பயன் தரும் பதிவு
      சிறந்த பகிர்வு
      தொடருங்கள்

      பதிலளிநீக்கு
    18. மிகவும் பயனுள்ள தகவல்! ரஞ்சனி மேடம் சொல்லியிருப்பது போல் எங்களுக்கும் அந்தப் பிரச்சினை இருக்கின்றது! அறிந்து கொண்டோம்! மிக்க நன்றி!

      பதிலளிநீக்கு
    19. இதை யார் கிட்டயாவது கேட்டு தெரிஞ்சிக்கணும்னு இருந்தேன்... பதிவாவே எழுதிட்டீங்க... அடுத்தடுத்து நம்ம கமெண்ட்ல வரும்....

      பதிலளிநீக்கு
    20. வணக்கம்
      அண்ணா
      யாவரும்அறிய வேண்டிய விடயம் விளக்கிய விதம் சிறப்பாக உள்ளது.
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு
    21. என் பெயரைக் கொண்ட தளம் என்னை ஆச்சர்யப் படுத்தியது. நானும் சென்னையில் இருப்பதால் மேலும் ஆச்சர்யம். நானும் சுமாராக எழுதுவேன் என்பதால் என்ன சொல்வதென்பது புரியவில்லை. பார்க்க என் பக்கம் T.N.Murali
      நன்றி
      முரளி

      பதிலளிநீக்கு
    22. அன்பு தமிழ் உறவே!
      வணக்கம்!

      இன்றைய வலைச் சரத்தின்,
      திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
      வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.


      சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
      வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
      வாழ்த்துகள்!

      வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
      உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
      உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
      தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

      நட்புடன்,
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspot.com

      (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

      பதிலளிநீக்கு

    நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
    கைபேசி எண் 9445114895