என்னை கவனிப்பவர்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2015

பெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?


பெட்டிக்கடை -10

ஒரு குட்டிப் புதிர்
ஏற்கனவே நீங்கள் கேள்விப் பட்ட புதிர்தான்.ஆனால் கொஞ்சம் மாற்றம் உண்டு
   4  கோவில்கள் அருகருகே உள்ளது .  ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார். கோவிலுக்கும் செல்லும்போது கொஞ்சம் தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். அவரும் அதனைப் போல் இன்னொரு மடங்கு பூக்களை வாங்கி செல்கிறார். உள்ளே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார். அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம்  என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார். முந்தைய கோவிலில் எவ்வளவு பூ வைத்தாரோ அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை. அவ்வாறே 3 வது நான்காவது கோவில்களிலும் செய்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைக்கப் படும் பூக்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இருக்க வேண்டும். மீதமுள்ள பூக்கள் இரண்டு மடங்காக்க்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் . நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு  வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எந்த தாமரைப் பூவையும் முழுதாகத் தான் வைக்க வேண்டும் பிய்க்கக் கூடாது .
உங்கள் வீட்டுப் பெரியவர்கள் இந்த புதிரை மூன்று கோவிலை வைத்து உங்களிடம் சொல்லி இருப்பார்கள். என்னிடமும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் நான் நான்காக ஆக்கி விட்டேன். 
விடை திங்கள் அன்று வெளியிடப்படும் 

ஆர் ஜகன்னாதன் என்பவர் பின்னூட்டத்தில் சரியான விடையை கூறி உள்ளார் ,.அவருக்கு பாராட்டுக்கள் . தற்காலிகமாக அவரது பின்னூட்டத்தை மறைத்துள்ளேன்.

ஜெயதேவ்தாசும் சரியான வழிமுறையில் விடையை கணக்கிட்டு மிக சரியாக  கூறி விட்டார். அவருக்கும் பாராட்டுக்கள் . அவரது பின்னூட்டத்தையும் தற்காலிகமாக மறைத்திருக்கிறேன்.

இருவரின் பின்னூட்டத்தையும் பின்னர் வெளியிடுவேன்.


*********************************************************************

வடிவேலு பார்த்திபன் காம்பினேஷன்  காமெடிகள் பிரசித்தமானவை .குண்டக்க மண்டக்க வென்று கேள்விகள் கேட்டு வடிவேலுவை திணற அடிப்பது நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும்
நம்ம கற்பனையில் ஒரு சின்ன டயலாக்
பார்த்திபன் : ஹலோ எங்க போற?
வடிவேலு:  ( மனதுக்குள் அடடா இவன் கிட்ட மாட்டிகிட்டமே.உண்மை
                        சொல்றதா போய் சொல்றதா ? உண்மையே சொல்லிடுவோம் )                            முடி வெட்ட சலூனுக்கு  போறேன்
பார்த்திபன் : யாருக்கு முடி வெட்ட போற. கையில கத்திரிக்கோல்
                           இல்லையே
வடிவேலு :  ஆஹா ஆரம்பிச்சிட்டானே!,  சாரி! முடி வெட்டிக்க போறேன்'

பார்த்திபன்:  என்னது! முடி வெட்டிக்க போறயா? நீயே வெட்டிக்கறதா 
                             இருந்தா   சலூனுக்கு ஏன் போற.  இங்கயே வெட்டிக்க  
                            வேண்டியதுதானே?

வடிவேலு:  இதை எப்படித்தான்பா சொல்றது அவ்வ்வ்வ்

*******************************************************************************
அரசியலும் நாவடக்கமும்  

கடந்த வாரத்தில் அலுவலகத்துக்கு போகும்போது  வழியில் ஒரு திடீர் ட்ராபிக் அங்கே நாற்சந்தியில் சாவு மேளம் ஒலிக்கும் சத்தம் கேட்க ஏதோ இறுதி ஊர்வலம்  போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். நிழற்குடை அருகே பிணம் ஒன்றை உடல் பாடையில் வைத்திருக்க அருகே நான்கைந்து பேர் அதிரடியாக பறை ஒலித்துக் கொண்டிருக்க இது என்ன நட்ட நடுவில் இப்படி என்று எண்ணிக் கொண்டே  இடத்தை கடந்து சென்று  விட்டேன்  சட்டென்று பொறி தட்டி திரும்பிப் பார்த்தேன். டி.வி எஸ். 50 இல் வந்த ஒருவர் அதன் அருகே வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டு விட்டு தன காலில் இருந்த செருப்ப எடுத்து பட் பட்டென்று கோபத்துடன் அடித்து விட்டு சென்றபோதுதான்   தெரிந்தது. அது ஈ வி. கே.எஸ். சின் உருவக பொம்மை என்பது  பக்கத்தில்  போஸ்டரில் ஈ.வி.கே.எஸசுக்கு கண்டனம் போஸ்டர் ஓட்டப் பட்டிருந்தது. அருகே சில போலீசார் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஈ.வி.கே.எஸ ஏதோ சர்ச்சைக்குரியதை சொல்லி இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. அன்று செய்தித் தாளோ தொலைக்காட்சியில் செய்தியோ பார்க்காததால் அவர் என்ன சொன்னார் என்பது அப்போது தெரியவில்லை. பிறகு அறிந்தேன். யூ ட்யூபிலும் பார்த்தேன்.
      மோடி  ஜெயலலிதா சந்திப்பை ஆபாசமாகப் பேசியதன் விளைவுதான் அது. அவர் பேசியது   கட்சிக்கோ தனி மனிதனுக்கும் இழுக்கைத் தான் தேடித் தரும். ஒரு மூத்த அரசியல் வாதி இது போல் பேசுவது வேதனைக்குரியது. அரசியல் வாதிகள் ஆபாசமாகவும் கட்டுப் பாடின்றியும் கீழ்த் தரமாகவும்  பேசுவதும் புதிதல்ல. இவ்வாறு பேசுவதில் எந்தக் கட்சியினரும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் இது தொடர்ந்து வருவது எந்த அளவுக்கு அரசியல் வாதிகள் தரம் தாழ்ந்து  வருகிறார்கள் என்பதை மெய்ப்பிக்கிறது. அதற்கு எதிர்வினை புரிந்தது இன்னும் மோசம், ஒருவனுக்கு எதிரி அவனது நாக்குதான் என்று சும்மாவா சொன்னார்கள். அரசியல் வாதிகளுக்கும் நாவடக்கத்திற்கும் தூரம் அதிகம்தான் போலிருக்கிறது

*****************************************************************************
சுய பீத்தல்
கடந்த குமுதம் இதழில் எனது ஒரு பக்கக் கதை( இணைப்பு: மதுவுக்கு எதிராக போராடாதே!) ஒன்றை பிரசுரமானதை சிலர் அறிந்திருப்பீர்கள். கடந்த முறை எனது கதை வெளிவந்தபோது மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள்தான் தொலைபேசியில் தெரிவித்தார் இந்த முறையும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். குமுதம் திங்கள் காலையில் வந்துவிடும். இவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அனுப்பிய  பத்து நாட்களுக்குள்   கதை பிரசுரமானது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்குதான்  நன்றி கூற வேண்டும்.

  இது தொடர்பாக இன்னொரு அனுபவமும் உண்டு. கடந்த வெள்ளியன்று மின்சார ரயிலில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். அது அந்த வாரக் குமுதம். அந்தக் இதழில்தான் இந்தக் கதை வந்திருந்தது. எனது கதையை அவர் படிக்கிறாரா மாட்டாரா என்று அறிந்து கொள்ள ஆவலேற்பட்டது. என் ஆவல் அவருக்கு தெரியுமா என்ன? அவர் கடைசி பக்கத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தார். எனது கதையோ 20 பக்கத்தில் உள்ளது.மெதுவாக படித்துக் கொண்டே வந்தார்.அவர் சினிமா செய்திகளையே படிப்பது போல் தோன்றியது. கதைகள் உள்ள பக்கங்களை வேகமாக புரட்டுவதுபோல் தோன்றியது. எனது கதை உள்ள பக்கத்துக்கும் வந்துவிட்டார். மதுவுக்கு எதிராக போராடாதே என்ற தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அந்தப் பக்கத்திலேயே இருந்ததால் கதையை படித்திருப்பார் என்று நானே அனுமாநித்துக் கொண்டேன், அவர் முகத்தை பார்த்தேன் லேசாக புன்னகைத்துக் கொண்டது போல் தோன்றியது. இப்படியாக என் அல்ப ஆசை நிறைவேறியதாக நினைத்துக் கொண்டேன்.

ஒரு வேண்டுகோள்: இந்தக் கதையை வைத்து  டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என்று நான் கூறுவதாக கொள்ள வேண்டாம். இது வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே. குமுதத்தில் வெளியானாலும் ஒரு மைனஸ் ஓட்டை பெற்று தந்துவிட்டது இந்தக் கதை .

இது குமுதத்தில் வெளியான இரண்டாவது கதையாகும் முதல் கதை
என்ன செய்யப் போகிறாய்?
*******************************************************************************
எச்சரிக்கை 
நீங்கள் rubik cube solve செய்திருக்கிறீர்களா?

மின்சார ரயிலில் நான் காணும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கை எப்போதும் என்னை வியக்க வைக்கும். பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் எதையவது விற்றுத்தான் பிழைக்கிறார்கள். பிச்சை எடுப்பதில்லை. சீசன் டிக்கட் கவர்  ஊதுவத்தி புத்தகங்கள்,விளையாட்டுப் பொருட்களில் ஏதேனும் வாங்கினால் அவர்களிடம் இருந்துதான் வாங்குவேன். அப்படி 20 ரூபாய்க்கு வாங்கியதுதான் இந்த கியூப். அதனை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வண்ணம் அமையும்படி முயற்சி செய்து தீர்க்க கற்றுக் கொண்டேன். எந்த நிலையில் இருந்தாலும் இப்போது எல்லாப்பக்கங்களிலும் சரியான வண்ணத்தை கொண்டு வர முடிகிறது. இணையம் மூலம் சில எளிய வழிமுறையை அறிந்தேன். கியூப் புதிரை தீர்க்கும் வழிமுறையை இரண்டு மூன்று பகுதிகளாக எனது வலைப் பக்கத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். 
உங்கள் கருத்து என்ன?


******************************************************************************
புதுக்கோட்டை  நான்காவது வலைபதிவர் திருவிழா 

11.10.2015 அன்று கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான முறையில் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் வருகையை உறுதி செய்யும் விதமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைதளத்தில் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.htmlவெளியிட்டுள்ள படிவத்தை உடனடியாக நிரப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட அழைப்பை எதிர்பாராமல், இவ்விழாவில் பங்கேற்று  தமிழ்ப் பதிவுலகை வளப் படுத்துவதில் நமது பங்கையும் அளிப்போம் .

விரிவான பதிவு விரைவில் 


******************************************************************************

முந்தைய பெட்டிக்கடை பதிவுகள் 

24 கருத்துகள்:

  1. வலைப் பதிவர் திருவிழாவில்
    தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி
    தம =1

    பதிலளிநீக்கு
  2. நல்ல நகைச்சுவை அரசியல்வாதிகள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் அதனால் என்ன மக்களிடம் இவர்களுக்கு மதிப்பு குறந்து விட்டதா ? என்ன அரசியல்வாதிகள் திருந்துவார்களா ? 80 முக்கியமில்லை முதலில் மக்கள் திருந்த வேண்டும் நல்லதொரு அலசல் பதிவு
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. நகைச்சுவை ஹாஹஹ் ..

    அரசியல்வாதிகள் திருந்தவே போவதில்லை...எனவே மக்கள்தான் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைப் புறக்கணித்தால் எல்லாம் தானாக சரியாகிவிடும்...

    க்யூப் புதிர் தொடர் ஆரம்பியுங்கள் ந்ல்லதொரு பதிவாக இருக்கும்...

    வலைப்பதிவர் விழாவிற்கு வருகை பதிந்தாயிற்று...

    பதிலளிநீக்கு
  4. என்னது புதிரா...? பிறகு வரட்டா...? ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லட்டுப் புதிர் படுத்தின பாடுன்னு நினைக்கிறன். இது உங்களுக்குநிச்ச்சயம் தெரிஞ்சிருக்கும்

      நீக்கு
    2. உண்மையை சொல்ல வேண்டுமென்றால்...

      புதிர் என்றாலே சிறு வயதில் இருந்து ஆர்வம்... ஆனால்...

      வீடு மாற்றம் + இணைய இணைப்பு இன்னும் செய்யவில்லை... இருந்தாலும்...

      நண்பரின் இணைய கணினியோடு வருகைப் பதிவை (update) புதுப்பிக்கிறேன்...

      நீக்கு
  5. சிரிக்க
    சிந்திக்க
    சுவைக்க
    என்றெல்லாம்
    பயன்தரும் பதிவிது!

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  6. என்ன, இன்னும் ஒருவரும் புதிருக்கான விடையைச் சொல்லவில்லையா? வெரி பேட்!

    அரசியல் என்றால் இனி அகராதியில் அயோக்யத்தனம், ஆபாசம் என்று பொருள் எழுதுவார்கள் போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர் ஜகன்னாதன் என்பவர் பின்னூட்டத்தில் சரியான விடையை கூறி உள்ளார் ,.அவருக்கு பாராட்டுக்கள் . தற்காலிகமாக அவரது பின்னூட்டத்தை மறைத்துள்ளேன்

      நீக்கு
  7. To first temple initially he takes 15 lotus flowers. He doubles it as instructed and now enters first temple with 30 flowers. Leaves 16 at the feet of the deity. Balance 14 flowers doubled as 28 before entering second temple. Leaves 16 and comes out with 12 flowers. At the third temple he enters with 2x12, 24 flowers. Keeping 16 there comes out with 8 flowers. Doubles it to 16 for the fourth temple.

    பதிலளிநீக்கு
  8. To first temple initially he takes 15 lotus flowers. He doubles it as instructed and now enters first temple with 30 flowers. Leaves 16 at the feet of the deity. Balance 14 flowers doubled as 28 before entering second temple. Leaves 16 and comes out with 12 flowers. At the third temple he enters with 2x12, 24 flowers. Keeping 16 there comes out with 8 flowers. Doubles it to 16 for the fourth temple.

    பதிலளிநீக்கு
  9. To first temple initially he takes 15 lotus flowers. He doubles it as instructed and now enters first temple with 30 flowers. Leaves 16 at the feet of the deity. Balance 14 flowers doubled as 28 before entering second temple. Leaves 16 and comes out with 12 flowers. At the third temple he enters with 2x12, 24 flowers. Keeping 16 there comes out with 8 flowers. Doubles it to 16 for the fourth temple.

    பதிலளிநீக்கு
  10. அரசியல் என்றால் இப்போது இலங்கை, இந்தியாவில் நாவடக்கம் இல்லை என்பதே வருத்துக்குரியவிடயம். பெட்டிக்கடை அழகான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  11. இந்த க்யுப் விளையாட்டு சரியான மண்டை காய்ச்சலா இருக்கும்.., சட்டென விடவும் முடியாது.
    வீட்டுல குழந்தைங்க சுலபமா தீர்க்கிறதா பார்த்தா சில நேரம் பொறாமையாவும் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  12. பல்சுவைப் பதிவு இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  13. கணக்கு எனக்கு ஆமணக்கு:(( ஆனா ரூபிக்ஸ் க்யூப் solve பண்ண சொல்லித்தரேன் என்றிருக்கிறீர்கள். ஆவலா காத்திருக்கேன். படைப்பாளிக்கு படைப்பு அங்கீகரிக்க படுவது எத்தனை மகிழ்ச்சியானது!

    பதிலளிநீக்கு
  14. கியூப் புதிரை தீர்க்கும் வழிமுறையை இரண்டு மூன்று பகுதிகளாக எனது வலைப் பக்கத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

    Sure do it. [will it help our brain function better? #doubt.........]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் சொல்ல முடியாது க்யூபை பயிற்சி மூலம் தீர்க்க முடியும். cube solve செய்பவதற்கு பெரிய மூளை எல்லாம் தேவை இல்லை. . அது ஒரு சுவாரசியமான விளையாட்டு.அவ்வளவே

      நீக்கு
  15. Rubic cube - like to know the trick! If you can divulge your watsapp no. I can share a nice video clip of a boy doing it in short time - blind folded!

    பதிலளிநீக்கு
  16. Rubic cube - like to know the trick! If you can divulge your watsapp no. I can share a nice video clip of a boy doing it in short time - blind folded!

    பதிலளிநீக்கு
  17. 4 கோவில்கள் அருகருகே உள்ளது . ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார்.

    முதல் கோவிலுக்கு செல்லும்போது x தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். எனவே அவர் 2x பூக்களை வாங்கி செல்கிறார். முதல் கோவிலில் y பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார்.

    தற்போது அவர் கையில் உள்ள பூக்களின் எண்ணிக்கை : 2x-y


    அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம் என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார்.

    போய் 2 X (2x-y)= 4x-2y பூக்களை வாங்கி வருகிறார்.


    முந்தைய கோவிலில் y அளவு பூ வைத்தார் அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை.

    கொண்டு போனது - இரண்டாவது கோவிலில் வைத்தது போக மீதம்:

    (4x-2y)- y =4x-3y


    3 வது கோவிலுக்கு செல்லும்போது கையில் உள்ள பூக்கள் : 4x-3y

    அதை இரட்டிப்பாக்கினால் 2 X (4x-3y)=8x -6y

    3 வது கோவிலுக்கும் y பூக்கள் போக மீதி: 8x -6y-y =8x -7y

    நான்காவது கோவில் அவ்வாறே செய்தால்:

    கையில் உள்ள பூக்கள் : 8x -7y
    அதை இரட்டிப்பாக்கினால் 2 X (8x -7y) =16x - 14y

    நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எனவே 16x - 14y என்பது வைக்கவேண்டிய எண்ணிக்கை y க்கு சமமாக இருக்க வேண்டும்.

    16x - 14y =y


    அல்லது,

    16x-15y=0

    x=(15/16)y

    இதில் x-ம், y-ம் முழு நம்பர்களாக இருக்க வேண்டும். y-க்கு 1,2, 3 என போட்டுப் பார்த்தால் 16 வரும்போது தான் இந்த கண்டிஷன் நிறைவேறுகிறது. அப்போது x=15. அதே போல y = 32 என்னும் போது x=30. எனவே 15-ன் மடங்காக 30, 45, 60 .............என்ற எண்ணிக்கையில் அவர் பூக்களை கொண்டு சென்றால் இந்த கணக்கின் கண்டிஷன் எல்லாம் நிறைவேறும்படி இருக்கும். எனவே விடை ஒன்றல்ல, எண்ணிக்கையில் அடங்காத பல விடைகள்!!

    பதிலளிநீக்கு
  18. சரி ,இவர் இப்படி பேசி விட்டாரே என்று அவர் கட்சியுடன் என்றும் கூட்டணி இல்லையென்று சொல்வார்களா ?
    யாருக்கும் வெட்கமில்லை என்று அன்றே சோ சொல்லிவிட்டாரே :)

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் ஐயா! வடிவேலு ஜோக் ரசித்தேன்! புதிர் விடையை இன்று முதலில் படித்துவிட்டேன்! சிந்திக்க தூண்டும் புதிர்! நன்றி!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895