என்னை கவனிப்பவர்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2015

மதுமொழிகள்




அனைத்தும் என் சொந்த சரக்கே!

மதுமொழி 1
குடிப்பழக்கம்
Beer இல் தொடங்கும்
Tear இல் முடியும்

மதுமொழி 2
நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, தந்தையும் மகனும் ஒன்றாகக் குடிப்பது மகள் அப்பாவுக்கு பீர் வாங்கித் தருவது இவை எல்லாம் மதுவுக்கு சினிமா செய்த  சேவை

மதுமொழி 3
சந்தோஷமாக இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான். துக்கத்தில் இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான்.இந்த பலவீனமே மதுவின் காலடியில் மனிதனை விழ வைக்கிறது

மதுமொழி 4
மகிழ்ச்சிக்காக குடிப்பவனுக்கு தெரியாது-அது
மகிழ்ச்சியையே குடிக்கப் போகிறது என்று

மதுமொழி 5
உடுக்கை இழந்தாலும் ஆங்கே உதவாது
குடிக்கப் பழகியவன் கை

மதுமொழி 6
கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதை விட்டுவிட முடிவு  செய்பவன் கடைசியில் விட்டு விடுகிறான் தன் முடிவை 

மதுமொழி 7
ஆபத்தானது மதவாதம்-அதைவிட
ஆபத்தானது மதுவாதம்

மதுமொழி 8
மதுவுக்கு வினோத குணம் உண்டு
குடிப்பவனையும் தள்ளாட வைக்கிறது
குடும்பத்தையும் தள்ளாட வைக்கிறது

மதுமொழி 9
அளவோடு குடிப்பவன் அளவின்றிக் குடிப்பவனை விட உயர்ந்தவன் அல்ல

மதுமொழி 10
குடிப்பழக்கம் சில நட்புகளால் தூண்டப்பட்டு பல நடப்புகளால் தொடரப்பட்டு இழப்புகளை இலவசமாய்  தருகிறது


*********************************************************************



26 கருத்துகள்:

  1. அனைத்தும் பொன்மொழிகள் நண்பரே ரசித்தேன்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. மதுவுக்கு எதிரான சின்ன, சின்ன
    நச் வாசகங்கள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    அனைத்தும் அருமை இரசித்தேன் த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. மதுவை விரட்ட வைத்த வாசகங்கள் அருமை !

    பதிலளிநீக்கு
  5. மதுமொழிகள் நல்ல
    முதுமொழிகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து மது மொழிகள் அருமை... மதுமொழி 9 வில் மட்டும் என்னை நல்லாவே தாக்கிவிட்டீங்க.....ஹும்ம்ம் அழுகையாக வருது அதனால் அதை கன்ட்ரோல் பண்ணி ஒரு பெக் உள்ளே தள்ளிவிட்டுட்டு வந்து உங்களிடம் பேசுகிறேன்

    பதிலளிநீக்கு
  7. மதுமொழி 3 : இவை எல்லாமே சாக்குதான். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி போதையில் மிதக்க ஆசைப்படுகிறான் மனிதன்.

    எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  8. தொட்டான்... கெட்டான்...

    அனைத்தும் உண்மைகள்...

    பதிலளிநீக்கு
  9. ellam arumai sir. silathu erkanave unga fb status la padichi irunthalum, sernthu vechu inga padikka nallaa irukku...

    பதிலளிநீக்கு
  10. மதுமொழிகள் அனைத்தும் புதுமொழிகள். உரியவர்கள் முறையாக கடைபிடிக்கப்படவேண்டியவை. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் சிறப்பு! முகநூலிலும் ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  12. குடிப்பது தவறு என்பதை ஏற்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. அண்ணா!! உங்க சரக்கு எல்லாமே செம கிக்கு. பேருந்தில் எழுதலாம் போல. அவ்ளோ அருமையான விழிப்புணர்வு வாசகங்கள்! கலக்கீட்டீங்க, பாருங்க தமிழன் கலங்கிபோயிட்டார்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழன் கலங்கி போகல சரக்கை கலக்க போயிட்டார் ஹீஹீ

      நீக்கு
  14. இந்த வாரக் குமுதம்[24.08.2015, ப.20] இதழில், ‘மதுவுக்கு எதிராகப் போராடாதே’ என்ற உங்களின் ஒரு பக்கக் கதை வெளியாகியிருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

    சுவையான கதை.

    வாழ்த்துகள். வளர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி ஐயா, நீங்கள் சொல்லித்தான் தெரியும் வாங்கிப் பார்க்கிறேன்.

      நீக்கு
  15. மதுவின் பாதிப்பை அழகிய வரிகளில் சொன்னீர்கள். அருமை !

    பதிலளிநீக்கு
  16. மது மொழிகள் அனைத்தும் "மது" மொழிகளே!!! போராடுவோருக்கு உதவும் மொழிகள்...!!!!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895