என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

குடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து


(  வடிவேலு சினிமாவில அதிக பாக்க முடியலியே . அந்தக் குறைய போக்கறதுக்க ஒரு பழைய ஜோக் ஒன்ன வச்சு  ஒரு  ReMix  .சினிமா காட்சியா கறபனை பண்ணிக்குங்க. சிரிக்கறதுக்காக மட்டுமே.   )

நீண்ட நாட்களுக்குப் பிறகு டீக்கடைக்கு வந்த வடிவேலு  ஒரு டீ சொல்லி விட்டு  பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் 
டீக்கடைக்காரர்"அண்ணே! உங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கே. வடிவேலு மாதிரியே இருக்கீங்க"
"அடப் பாவிங்களா அதுக்குள்ள மறந்துட்டீங்களா? வடிவேலு மாதிரி இல்ல. வடிவேலுவேதாண்டா. நான் என்ன செஞ்சேன்னாலும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தீங்களேடா இன்னைக்கு  கண்டுக்க மாட்டேங்கறீங்களே. தமிழனுக்கு மறதி அதிகம்தான் . அதுக்காக இப்படியா" 
"அடடே! நீங்களாண்ணே! எங்கண்ணே போயிட்டீங்க! என்ன அதிசயம்! உங்களை மாதிரியே ஒருத்தர் எலி படத்தில நடிச்சிருக்காருண்ணே. தெரியுமான்ணே"
"படுபாவி! அதுவும் நான்தாண்டா. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"
"அது விவேக் ஜோக்குண்ணே! நீங்க சொன்ன நல்லா இருக்காது."
"என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே!"
"இது... இது... இதானே நீங்க .ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க." என்று சொல்லி விட்டு  யாருக்கோ போன் பேச ஆரம்பித்தார் 
 "பேசிக்கிட்டே இருக்கியே! தம்பி! டீ இன்னும் வரல" என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்க ஆர்மபித்தார்  வடிவேலு 

"மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் ஓயாது: இளங்கோவனை சந்தித்தபின் விஜயகாந்த் அறிவிப்பு"

    "அட! பரவால்லியே! பேப்பர்ல காலங்காத்தால இப்படி சிரிக்க வச்சிட்டானே. பேப்பர்ல முதல் பக்கத்துல கார்ட்டூன் போடுவான் இப்ப ஜோக்கெல்லாம் போடறானே?"
 "வணக்கம்ணே" குரல் கேட்டு பேப்பரில் இருந்து முகத்தை திருப்பினார் வடிவேலு 
  பழைய நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். "இவனுங்க எப்படி வந்தானுங்க"அவர்களைக் கண்டதும் வடிவேலு கோபத்துடன்  முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
"டீக்கடைக்காரர் போன் பண்ணாருண்ணே! வந்துட்டோம்"
"இத்தனை நாள் நான் எங்க  இருக்கேன் எப்படி இருக்கேன்னு கூட கண்டுக்கல. போங்க டா போங்க "
"அண்ணே அது காலத்தின் கட்டாயம்"
"தொ பார்ரா வசனம்.....
       
 “டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு. (Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!
  “அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கண்ணே! எங்களுக்கு உங்களை விட்டா யாருண்ணே இருக்காங்க!
          “சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே  சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!
   “என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யணும் கிளம்பி போய்ட்டிருக்கோம்.
அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்லதுன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே? 
 “போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம விஜயகாந்த் அண்ணன் கூட சாராயக் கடைகளை மூடச் சொலி போராட்டம் பண்றாரே. நாமளும் ஏதாவது பண்ணனும்ணே."
"நீங்களும் போராட்டம் பண்ணப் போறீங்களா"
"அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுண்ணே! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.
நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா
அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.  
“நானா? நான் எதுக்குடா?
எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க!நீங்க வித்தியாசமா ஏதாவது பண்ணி பழைய உங்க பெருமையை மீட்கனும்னே அதுதான் எங்க ஆசை.  எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம்  உங்க கிட்ட இருக்கு!
  வடிவேலு யோசித்து நீங்க சொல்றது சரிதான்டா! நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி மக்களை நம்ம பக்கம் பாக்க வைப்போம்".
வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம். நாளைக்கு தலைப்பு செய்திகள்ல உங்க பேருதான் வரப் போவுது 
"சரி!  வாங்க ஆரம்பிச்சிடுவோம்."
அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
 “அடேய்! என்னடா  பண்ணற
 தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?
    “ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?
 “அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?
வடிவேலு ,"அவங்களை நினைச்சு ஏன் குடிக்கற"
"அவங்கள சரியா காப்பாத்த முடியலையேன்னு குடிக்கிறேன்" 
"நீ குடிகிறதாலதான் அவங்கள காப்பாத்த முடியல"
"இல்ல!  அவங்கலை சரியா காப்பாத்த முடியலையேன்னுதான்  குடிக்கிறேன்"

இப்படி சொன்னா எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு
நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!, 
      'இந்தாங்கன்னே!

நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
        
   வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, அண்ணன் இப்ப என்ன செய்யப்போறேன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய்  குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடு!
"அது எதுக்குண்ணே!"
 "எடுறா! அதை எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடு.  போட்டுட்டயா? இப்ப என்ன  நடக்குதுன்னு பாரு.
அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க 
          
 “அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை  யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய தத்துவத்தை  இவ்வளோ எளிமையா சொல்லீட்டீங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”

 “ நில்லுடா... நில்லுடா இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டானே.  பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?

ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒண்ணுமே புரியலயே?

மடப் பசங்களா! இது கூட புரியலையா? உங்களுக்கு எப்படி புரியும் ஜாமீன் கேட்டு மார்க்கெட்டுக்கு போனவங்களாச்சே! சாராயத்தில விழுந்த  பூச்சி துடிதுடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா  நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? புரிஞ்சதா இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?

பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.

“சரி போலாம் வாங்க  ரெண்டு நாள்  கழிச்சி அந்த பய எப்படி இருக்கான்னு பாக்கலாம் .

 இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.

சரி! சரி! வீட்ல யாரு இருக்கா பாரு?

“என்னண்ணே! அவனோட பொண்டாட்டி கையில தொடப்ப கட்டயோட  வருது?

என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
“ஹூம் முன்னயே பரவாயில்லங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப என்னடான்னா நிறைய குடிக்கிறாரு? ஆமாம், நீங்க யாரு?

உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத  காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். பய அசந்து போய்ட்டான் இல்லை . சொல்லுங்கடா  தங்கச்சிகிட்ட.?

ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா  குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, 'என்  வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.  சாராயம் குடிச்சா  வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்துபோகும்னு நீதான்  சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு  வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு....  

 வேணாம்மா...... நான் சொன்னது வேற, அவன் புரிஞ்சிக்கிட்டது வேற. டேய் சொல்லுங்கடா?  ஓடிட்டீங்களா?  என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!அவ்வ்வ்வவ்வ்வ்வ் 

******************************************************************************

என் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க 



21 கருத்துகள்:

  1. இந்த ஜோக் ஏற்கெனவே கேட்டிருக்கேன்...இருந்தாலும் வடிவேலு பாணியில் அருமை...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    முரளி அண்ணா.

    வடிவேல் பணியில் அசத்தி விட்டு நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வடிவேலு நடிக்க ஒரு குறும்படமே மனத்திரையில் ஓடியது :)

    பதிலளிநீக்கு
  4. தெரிந்த ஒரு ஜோக்கை வடிவேலு ஸ்டைலில் விளக்கமா எழுதி சிரிக்க வச்சிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  5. ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்......செம நண்பரே! வடிவேலுவுக்கு எங்க போனாலும் பிரச்சனைதான்...."நல்லது செஞ்சாலும் என்னைய ரொம்ப கெட்டவன்னு சொல்லிட்டாங்க..அவ்வ்வ்வ்வ்" என்று அழுவாரோ...ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  6. ஏற்கனவே கேட்ட ஜோக்தான். வடிவேலுவே சொல்வது போல் அவரைவெச்சே காமெடி எழுதறீங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவேலு அனைவரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர். அவரது வசனத்தை பயன்படுத்தாத ஆட்களே இல்லை.இந்த காமெடி காட்சி அவருக்கு பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.

      நீக்கு
  7. கடைசிவரை அருமையாக இருந்தது நண்பரே வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  8. வடிவேலு சொல்வது போல எழுதியது நன்று.

    பாவம்.... மேலிருந்து கீழே பாதாளத்தில் விழுந்து விட்டார்....

    பதிலளிநீக்கு
  9. அருமை ஐயா
    வடிவேலுவைத் தங்களின் எழுத்தில் மீண்டும் கண்டேன்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    வடிவேலுவை மீண்டும் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்தேன்... அச்சு அசலாக...!

    "மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் ஓயாது: இளங்கோவனை சந்தித்தபின் விஜயகாந்த் அறிவிப்பு"

    "அட! பரவால்லியே! பேப்பர்ல காலங்காத்தால இப்படி சிரிக்க வச்சிட்டானே. பேப்பர்ல முதல் பக்கத்துல கார்ட்டூன் போடுவான் இப்ப ஜோக்கெல்லாம் போடறானே?"

    படித்து... சிரித்து மகிழ்ந்தேன்..!

    நன்றி.
    த.ம. 8

    பதிலளிநீக்கு
  11. வைகைப் புயலின் ரீ எண்ட்ரியை வரவேற்கிறோம்!
    விரைவில் கதை இலாகாவில் இருந்து தங்களுக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம் அய்யா! அருமை "சிரி சிரி வுவ்வா!
    த ம 9
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  12. ரசித்தேன்! வடிவேலு கதாநாயகனாய் நடிக்கும் ஆசையை விட்டு விட்டு பழையபடி வந்தால் நிறைய மக்கள் ரசிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  13. கவுண்டமணி செந்தில் ஜோக்ல பாத்த மாதிரி ஞாபகம்...

    பதிலளிநீக்கு
  14. தங்களது ரசனையை அதிகம் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முன்பே கேள்விப்பட்ட கதைதான்...
    இது வடிவேலு பாணி...
    இரசித்தேன்...!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895